பொலிஸ் பணியில் இணைந்து கொள்வதற்காக நான்காயிரத்திற்கும் அதிகமாக தமிழ் இளைஞர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக பொலிஸ் மாஅதிபர் மகிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். இவ்வாறு விண்ணபித்தவர்களில் 340 பேர் பொலிஸில் இணைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டு வருவதாகவும் பயிற்சி நிறைவடைந்ததும் அவர்கள் வடக்கு கிழக்குப் பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமைக்கமர்த்தப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார்.
‘5000 தமிழ்ர்கள் பொலிஸ் படையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்’ என்றும் அதன் முதற்கட்டமாக ஒரு தொகையினருக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் லண்டன் வந்திருந்த பா உ ரஜீவ விஜயசிங்க தேசம்நெற் க்கு வழங்கிய நேர்காணலில் (Sep 18 2010) தெரிவித்து இருந்தார்.
பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவிக்கையில் வடக்க கிழக்கில் மேலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேர்க்கப்படவுள்ளதாகவும், இவர்கள் பரீட்சை ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்படுவர் எனவும், தெரிவு செய்யப்படுபவர்களுக்கு ஆங்கிலம், சிங்களம் ஆகிய இரு மொழிகளும் கற்பிக்கப்படும் எனவும், சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகள் கற்பிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.