ஜி.ரி.இசட் நிறுவனத்தால் யாழ்.பொது நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு.

Jaffna_Libraryயாழ். பொதுநூலகத்திற்கு ஜி.ரி.இசட் நிறுவனம் இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான நூல்களை வழங்கியுள்ளது. இந்த நூல்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று யாழ்.பொது நூலகத்தில் நடைபெற்றது.

ஜி;ரி.இசட் நிறுவனத்தின் சிரேஸ்ட ஆலோசகர் வோல்ரர் ஹெலர் யாழ். நூலக பிரதம நூலகர் எஸ்.தனபாலசிங்கத்திடம் இந்த நூல்களைக் கையளித்தார். ஆங்கில மொழியாற்றலை விருத்தி செய்யக்கூடியதான நவீன நூல்கள் இவற்றிலடங்குகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன் தேசம்நெற் ‘புக் அப்றோட்’ நிறுவனத்தின் நூல்களைப் பெற்று யாழ் பொது நூலகத்திற்கு அனுப்பி வைத்தது. இதனை நூலகவியலாளர் என் செல்வராஜா இணைப்பாளராக இருந்து மேற்கொண்டார். மேலும் யாழ் பொதுநூலகத்திற்கான சர்வதேச நூல் வகைப்படுத்தல் கைநூல்களின் பிரதிகளை கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தினர் தேசம்நெற் ஊடாக அனுப்பி வைத்தனர். இதன் பெறுமதி அப்போது 1000 பவுண்களுக்கும் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • Kumar
    Kumar

    அன்பளிப்பாக யாழ்ப்பாண நூலகத்திற்கு அபரிமிதமாக வழங்கப்படும் இந்த நூல்கள் உரிய முறையில் மக்களின் பாவனைக்கு விரைவில் விடப்பட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //மக்களின் பாவனைக்கு விரைவில் விடப்பட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.//
    இதுவே என் கருத்தும்; அன்பழிப்புகள் தொடரட்டும்: புலம்பெயர் தேசத்தில்கூட பலரிடம் பல புத்தகங்கள் இருப்பதாக சொல்லுகிறார்கள்; அவைகளைகூட அங்கு அனுப்பலாமே;

    Reply