மீள்குடியேற்றம், அபிவிருத்திப் பணிகளில் அரசுடன் இணைந்து செயற்படுவதற்காக கூட்டமைப்பினால் நியமிக்கப்பட்ட குழுவின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

Sumanthiran_MP_TNAவடக்கு கிழக்குப் பகுதிகளில் நடைபெறும் மீள்குடியேற்றம் மற்றும். அபிவிருத்திப் பணிகளை கண்காணிப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நியமித்துள்ள ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளன.

இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், சி.சிறிதரன், பொன். செல்வராசா ஆகியோரே நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.

தாம் அனுப்பி வைத்த இவ்வுறுப்பினர்களின் விபரங்கள் ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்கவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்ததும் மீள்குடியேற்றம் மற்றும், அபிவிருத்தி நடவடிக்கைகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

அதற்கேற்பவே தற்போது இதற்காக எழு நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் மற்றும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் அரசுடன் இணைந்து செயற்படுவதற்காக தனியான  பொறிமுறையொன்று ஏற்படுத்தப்படும் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • மாயா
    மாயா

    அரசாங்கம் , வன்னி செல்ல தடை விதித்துள்ளார்கள் என்று சொல்ல முடியாது. இனி என்ன சொல்லப் போறாங்க பார்ப்பம்?

    Reply
  • singam
    singam

    இணைந்து செயற்படுவதற்காகவா அல்லது கண்காணிப்பதற்காகவா ?

    சிறுபான்மை இனங்கள் மத்தியில் ஒரு பலம் பொருந்திய தமிழ் தலைமை உருவாவதை மகிந்த அரசு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. இதுவரையில் இருக்கின்ற சின்ன வீடுகளில் தமிழ் தேசிய கூத்தமைப்பும் இன்னொன்றாகி வருகிறது. இவர்களுள் இருவர் அரசுடன் சேர்வதை தவிர்ப்பதற்கே இந்த முடிவை எடுக்க தாம் தள்ளப்பட்டதாக கூட்டமைப்பின் முக்கிய புள்ளியொருவர் தெரிவிததுள்ளார். ரவூப் ஹக்கீமின் அண்மைய முடிவையும் கவனத்தில் கொள்க.

    Reply
  • சுகுணகுமார்
    சுகுணகுமார்

    ஆ இனி மூன்று மாசம் களிச்சு தான் சம்பந்தர் ஐயா வருவார்!

    http://thesamnet.co.uk/?p=22422

    Reply