வடக்கில் தற்போது பெய்து வரும் பலத்த மழையினால் விவசாயச் செய்கைகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. நேற்று (Aug 24 2010) நாள் முழுவதும் பலத்த மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வன்னியில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் இம்முறை சிறுபோக நெற்செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர் இவ்வயல்கள் அறுவடைக்குத்தயாரான நிலையில், பெய்த கடும் மழையினால் அறுவடை பாதிப்படைந்துள்ளதோடு, விளைந்த வயல்கள் பலவும் வெள்ளத்தில் மூழ்கியதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வடமராட்சி பருத்தித்துறைப் பகுதியில் வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்த பெருமளவு நிலப்பரப்பு வெள்ளத்துள் மூழ்கி விவசாயிகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related News:
மழையினால் அவதியுறும் மீள்குடியமர்த்தப்பட்ட வன்னி மக்கள்!