ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கு வடக்கு கிழக்கு மக்களுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். சுமார் முப்பது வருடங்களாக வடக்கு கிழக்கு மீனவர்கள் கரையோர மீன்பிடி நடவடிக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கபட்டிருந்தனர். ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகள் பாதுகாப்புத் தரப்பினரால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால், அயல் நாடுகளிலிருந்து வரும் படகுககள் வடக்கு கிழக்கிலுள்ள ஆழ்கடலில் மீன்களைப் பிடித்துச் சென்றன. வடக்கு கிழக்கில் விரைவில் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2013ம் ஆண்டுக்குள் இலங்கையின் மீன் உற்பத்தியை 6 இலட்சத்து 86 ஆயிரம் மெற்றிக் தொன்னாக அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.