எதிரணித் தலைவர்களை இன்று சந்திக்கிறார் ரணில்

ranil.jpgஎதிரணி யிலுள்ள சகல கட்சிகளதும் தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை விசேட சந்திப்பொன்றை நடத்தவிருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவரின் கேம்பிரிட்ஜ் ரெறஸ் அலுவலகத்தில் இன்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெறவிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக வட்டாரம் தெரிவித்தது. எதிரணியிலுள்ள சகல கட்சிகளின் தலைவர்களுக்கும் இந்தச் சந்திப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அரசியல் கட்சிகளுடன் அரசியல் அமைப்புகளையும் ஒன்றிணைத்து அரசுக்கெதிரான பொது வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பது தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது ஆராயப்படவிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்தது.

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அபகீர்த்தி ஏற்படும் விதத்தில் அவரது பட்டம், பதக்கங்களை பறித்தெடுத்தமைக்கு எதிராகவும் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் விதத்தில் அரசின் செயற்பாடுகள் அமைந்திருப்பதற்கு எதிராகவும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொருட்டும் பொது எதிரணி அரசியல் இயக்கத்தை ஆரம்பிப்பதே இன்றைய சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    மேற்குலகின், இந்தியாவின் நச்சரிப்புகளுக்காக ‘தமிழர் உரிமை’க்கான சட்டத் திருத்தத்தை, தகர்த்தெறிய சிங்களவர்களின் முன்னேற்பாடு, தமிழருக்கு விளங்க நாள் எடுக்கும்.

    Reply