சிங்களவர்கள் இல்லாமல் தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லை. தமிழர்களையும் இஸ்லாமியரையும் கீழ்ப்படுத்தி சிங்களவர்கள் நிம்மதியாக வாழ முடியாது : கலாநிதி ஜோசப் சந்திரகாந்தன்

Peace_Children_Drawingஇலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஓர் தேசிய அணியாக, ஒரு சமூகமாக எம்மைச் சுற்றி எந்தவிதமான விமர்சனமும் இல்லாமல் நாம் உருவாக்கிய அரசியல் மாயையில் இருந்து நாம் வெளிவர வேண்டும். எமது குறுகிய தேசியவாதம் எமக்கும் எமது சந்ததிக்கும் அளப்பரிய உயிரிழப்புகளையும், அவய இழப்புக்களையும், சொல்லணாத் துன்பத்தையும், வறுமையiயும், பொருள் இழப்பையும், சொத்து இழப்பையும் ஏற்படுத்தி உள்ளது என்பதை நாம் உணரவேண்டும். 
 
பல நூற்றாண்டுகளாக மிகவும் பழமை வாய்ந்த சமூகங்களாக இலங்கைத் தீவை நாம் பகிர்ந்திருந்தோம். சிங்களவர்கள் இல்லாமல் எமக்கு எதிர்காலம் இல்லை என்ற உண்மையை நாம் மீழ் ஆய்வு செய்துகொள்ளவேண்டும். இதே வேளை தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் கீழ்ப்படுத்திக்கொண்டு வாழ்வது நிரந்தரமான நம்பிக்கை இன்மை என்பதை சிங்களவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். எம்மைப் பிரிக்கின்ற காரணிகளை வைத்துக்கொண்டு போரிடாமல் மனித சமூகமாக எவ்வாறு ஒன்றாக வாழலாம் என்கிற விடயத்தில் நாம் கவனம் செலுத்தல் வேண்டும்.
 
தமிழர்களும் சிங்களவர்களும் இந்தக் கொடுரமான போரில் இறந்து போயிருக்கலாம். ஆனால் மொத்தத்தில் மானிடம் தான் அங்கே கொல்லப்பட்டது. இந்த இருபத்தொராம் நூற்றாண்டில் எமது தலைமுறையின் எதிர்காலத்துக்கென ஊனத்தையும், சிதைவுகளையும் சொத்தாக விட்டுவிட்டு செல்லமுடியாது. தமிழர்கள் மத்தியிலும் சிங்களவர்கள் மத்தியிலும் ஓர் பண்பாட்டு வழமை உள்ளது. அது என்னவெனில் பிணக்குகளால் பிரிந்து நிற்கும் குடும்பங்கள் பல பெரும் பாலும் திருமணத்தில் அல்லாமல் மரணச் சடங்கிலேயே ஒன்று சேருகின்றன.
 
தமிழர் சிங்களவர்கள் ஆகிய இரு பாலாருமே பாரிய சாவுகளையும் முடிவில்லாத மரணச் சடங்குகளையும் கொலைகளையும் அங்கவீனங்களையும் சிதைவுகளையும் பாரிய அழவிலான தனியார் சொத்துக்களையும் தேசிய சொத்துக்களையும் இழந்து உள்ளோhம். கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக எமது அன்புக்குரிய ஆண் பெண் குழந்தைகளையும் இழந்து, நாம் பேணிப் பாதுகாத்த எமது பண்பாட்டு, மத பெறுமானங்களையும் அழுக்காக்கி விட்டோம். இந்த நிலை இனிமேலும் தொடர நாம் அனுமதிக்க முடியாது. எமது மண்ணிலே போரின் இறுதி நாட்களில் நடந்து முடிந்த பாரிய மனித அவலத்தை இந்த சுதந்திர உலகம் எவ்வாறு பார்த்துக் கொண்டிருந்தது என்பதை நாம் அறிவோம். இவர்களுடைய நல் எண்ணத்திலும், தர்மத்திலும் நாம் தங்கியிருக்க முடியாது. எவ்வளவோ விடையங்கள் முக்கியமானவை. ஆனால் அவற்றையும் விட இன்னும் எவ்வளவோ விடயங்கள் அவசியமானவை. பண்பாட்டுரிமை, மொழியுரிமை, பிரதேச உரிமை என்பன அனைத்து இனங்களுக்கும் முக்கியமானவை.
 
ஆனால் அவற்றிலும் பார்க்க உணவு, உடை, சுகாதாரம், இருப்பிடம் என்பன அவற்றையும் விட மிக மிக முக்கியமானவையாகவும் பின்போடப்பட முடியாதவையுமாகும். நேர்டொ (NERDO) அமைப்பு எமது எதிர்பார்புகளை பூர்த்தி செய்யக்கூடிய சேவைகள் செய்யாவிடினும் அதை யாராவது ஆரம்பித்து வைக்கவேண்டும். அனாதை சிறார்களுக்கும், விதவைகளுக்கும் உணவளிக்கவும், அகதி முகாம்களில் சிறுவர்களுக்கு கல்வி வழங்கவும், தடுப்பு முகாம்களிலும் சிறைகளிலும் உள்ளவர்களை சென்று பார்க்கவும் நாம் வெளிநாட்டு நிறுவனங்களை எதிர்பார்க்க முடியாது. எமது சிறார்கள் தான் முதன்மையாகப் பாதிக்கப்பட்டவர்கள். இதற்கு நாம் முதற்படி எடுத்தாக வேண்டும். எமது சார்மனைக்கதிரை விமர்சனம் சிறைச்சாலைகளில் இருப்பவர்களுக்கும், முகாம்களில் இருப்பவர்களுக்கும் எந்த நன்மையையும் தரப்போவதில்லை. உண்மையான மனிதாபிமானச் சேவை செய்பவர்கள் ஊடாகத் தான் நாம் அவர்களைச் சென்றடையலாம்.
 
(கனடிய தமிழ் மன்றத்தில் கலாநிதி ஜோசப் சந்திரகாந்தன். கலாநிதி சந்திரகாந்தன் அவர்கள் ரொறன்ரோ பல்கலைக் கழகத்தில் உயிரியல் விஞ்ஞானத்திலும், சமய கற்கை நெறியிலும் பேராசிரியராக உள்ளதுடன், யாழ் பல்கலைக் கழகத்தில் கிறிஸ்தவ இஸ்லாமிய கற்கைநெறி பீடத்தின் ஸ்தாபகருமாவர்.)

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

 • nantha
  nantha

  இந்த சந்திரகாந்தன் தனது பீடாதிபதிகளின் தொலைபேசி இலக்கங்களையோ முகவரிகளையோ தரத் தயாரா? ஏனென்றால் இந்தப் பெயரில் அங்கு யாரும் இல்லை. அது என்ன இப்போது “வண” வைக் காணவில்லை.

  ஆனால் இந்த நபரும் சிங்களப் பெண்ணை கலியாணம் செய்த இன்னொரு பாதிரியான பிரான்சிஸ் சேவியரும் கனடா கந்தசாமி கோவிலுள் “இந்துக்களுக்கு” ஏடு துவக்கபோன “சமாதான விரும்பிகள்”. புலியுடன் சேர்ந்தவுடன் தங்கள் போர்த்துகீச காலத்து சேட்டைகளை செய்த இந்த நபர் யாருக்கு இப்போது காது குத்த புறப்பட்டிருக்கிறார்?

  தேசம் பதில் தரவும்!

  கத்தோலிக்கர்கள் இப்போது ராஜபக்ஷவின் மனைவி கத்தோலிக்கர் என்றும் “புலிகள் இந்துக்கள்” என்றும் மெதுவாக இன்னொரு “கரடியையும்” விடத் தொடங்கியிருக்கிறார்கள்.

  கத்தோலிக்கர்கள் புலிகளுக்குப் பிள்ளை பிடிக்கும் ஏஜன்டுகளாக மாறியதை இந்த நபர் விளக்கினால் நல்லது. ஜேம்ஸ் பத்திநாதன் போன்ற கத்தோலிக்க பாதிரிகள் முகாம்களில் இருந்த மக்களால் அடையாளம் காணப்பட்டு இராணுவக் காவலில் வைக்கப்பட்டுள்ளதட்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறார்? சிலவேளை அந்த “பாதிரிகள்” செல்வாக்கினால் தப்பி ஓடி விட்டனரா? மவுனம் சாதித்துவிட்டு சில காலங்களின் பின்னர் பத்திநாதன் ரோமில் இருக்கிறார் அல்லது கனடாவில் இருக்கிறார் என்று கதை விடாமல் இருந்தால் நல்லது.

  சாத்தான் வேதம் ஓதும் குரல் தேசம் நெற்றில் வந்தது ஆச்சரியமாகவே உள்ளது.

  Reply
 • Ajith
  Ajith

  Nantha,
  You problem is anti Christianity, anti LTTE and pro Sinhalam (SLFP). I don’t agree with what Dr. joseph Chandrakathan said. That is a different matter. whether he is a Christian or Hindu or Puli or Sinhala racist he is a human being and he has the right to express his views

  Reply
 • nantha
  nantha

  AJITH:
  I always against semi-humans like this Chandrakanthan who is anti-hindu.

  I canot accept a person who hate Hindus and acted against hindus.

  Are you telling here that Hindus must bend to their enemies?

  Reply