தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு தென்னிலங்கையில் வேலை வாய்ப்பும் தமிழ் மக்களின் சந்தேகங்களும் : விஸ்வா

Sritharan_SivagnamTNA_MPTextile_Factory_in_SLகிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பெண்கள் தொழில்பயிற்சிக்கென கண்டிக்கு அழைத்துச்செல்ல மேற்கொண்ட முயற்சியொன்று  தடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகளை உற்பத்தி செய்யும் தனியார் நிறவனம் ஒன்று 40 யுவதிகளை தொழில்வாய்ப்புக்கென அழைத்துச்செல்ல முயன்ற இறுதித் தருணத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக முன்னர் வெளியான செய்தி : தென்னிலங்கை ஆடைத்தொழிற்சாலைகளில் யாழ்.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

கவர்ச்சிகரமான சம்பளம் மற்றும் இலவச இருப்பிட வசதிகள் மற்றும் மேலதிக வசதிகள் செய்து கொடுக்கப்படும் என துண்டுப் பிரசுரங்கள் மூலம் ஏற்கனவே கிளிநொச்சி கிராமங்கள் தோறும் விளம்பர துண்டுப் பிரசரங்களை விநியோகம் செய்து இந்நிறுவனம் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டிருந்தது. இதனை நம்பிய யுவதிகளும் அவர்களது பெற்றோரும் இதற்கு சம்மதித்து யுவதிகளை கண்டியிலுள்ள குறிப்பிட்ட தொழிற்சாலைக்கு அனுப்ப முற்பட்டனர். ஆனால் பொதுமக்கள் சிலரிடம் ஏற்பட்ட சந்தேகங்கள் இறுதி நேரத்தில் நடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு தெரிவிக்கப்பட்டதால். இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, மீள்குடியமர்த்தப்பட்டுள்ள இப்பிரதேச மக்களின் நடைமுறைகள் குறித்தும் விளக்கினார்.

இங்கு மக்கள் மீள்குடியமர்த்தப்படுகின்ற போது, குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை உட்பட்ட விபரங்கள் எடுக்கப்பட்டு, குடும்பப் படங்கள் எடுக்கப்பட்டு மேலும் பல பதிவுகளின் பின்னரே சொந்தக் காணிகளில் குடியமர அனுமதிக்கப்படுகின்றனர்.

கிளிநொச்சிக்குப் பொறுப்பாகவுள்ள சிவில் படைத்தரப்பிடம் அனுமதி கேட்டு இந்நிறுவனம் கடிதம் அனுப்பியதாக தெரிவித்த போதும், படைத்தரப்பிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தையல் இயந்திர இயக்குநர்கள், உற்பத்தி மேற்பார்வையாளர்கள் என இரு வகை வேலைகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்து. பயிற்சிக்காலம் முடிவடைந்த பின்னர் அதி கூடிய சம்பளமாக 14 ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனவும், உற்பத்தி ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 2அயிரம் ரூபாவிலிருந்து ஐயாயிரம் ரூபா வரையில் வழங்கப்படும் எனவும், உற்பத்தித் தரக்கொடுப்பனவாக ஆயிரத்து ஐந்நூறு ருபா கொடுக்கப்படுமெனவும் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிறுவனத்தின் நம்பகத்தன்மை சந்தேகத்திடமானதாக இருந்த காரணத்தினால் இறுதி நேரத்தில் குறிப்பட்ட யுவதிகள் அழைத்துச் செல்லப்படும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது. இவர்களை அழைத்துச் செல்ல கொண்டு வரப்பட்ட வாகனமும் திரும்பிச்சென்றது. குறித்த நிறுவனத்துடன் நாடாளுமன்ற உறுப்பினரும், பொதுமக்களும் விவாதித்துக்கொண்டிருக்கையில்,  அவ்விடத்திற்கு வந்த படையினர் சிலர் குறித்த நிறுவன அதிகாரிகளுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தாகவும் விவாதம் செய்தவர்களிடம் கடும் தொனியில் பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது இவ்வாறிருக்க, வன்னிப்பிரதேசங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இன்னமும் நிறைவு பெறாத வேளையிலும், மீள்குடியேற்றப்பட்ட மக்கள் இன்னமும் கூடாரங்களில் தங்கி வாழும் நிலையில் இருக்கின்ற போதும், அவர்களின் வசதியின்மைகள்; வறுமை நிலைகளைப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்ற பல தரப்பினர் முற்படுகின்றமை தெரியவந்துள்ளது. மீள்குடியேற்றம் உட்பட இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புகள் தொடர்பான நடவடிக்கைகளை அது அரசதுறையிலானாலும் சரி தனியார் துறையிலானாலும் சரி அதனை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் பொறுப்பும் உத்தரவாதமும் மிக அவசியமானதாக உள்ளது.

கண்டியிலும், தென்பகுதிகளிலும் தொழில் வாய்ப்பின்றி பல சிங்கள தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் இருக்கின்ற நிலையில்,  கண்டியைச் சேர்ந்த குறித்த தனியார் ஆடைத்தொழிற்சாலை கவர்ச்சிகரமான ஊதியத்தை விளம்பரப்படுத்தி கிளிநொச்சி பெண்களை வேலைக்கமர்த்த முயல்வதன் உள்நோக்கம் சந்தேகத்திற்கிடமானதாகவே இருக்கின்றது. தென்பகுதிகளின் கிராமங்களில் வாழும் சிங்கள யுவதிகள் கூட கொழும்பிலுள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் வேலைக்கமர்த்தப்பட்டு ஊதியம் போதாமை காரணமாக, பாலியல் தொழில்களில் ஈடுபடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. கொழும்பின் தனியார் மருத்துவமனைகளில் கருக்கலைப்பிற்காக வரும் திருமணமாகாத யுவதிகளில் பெரும்பாலானோர் ஆடைத்தொழிற்சாலைகளில் வேலை செய்வோர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

மலையத்தில் உள்ள இளம்பெண்கள் தொழில் வாய்ப்புகளுக்கென சிலரால் கொழும்பிற்கு ஏமாற்றி அழைத்து வரப்பட்டு பாலியல் தொழில்களுக்கு பழக்கப்படுத்தப்பட்டு, ஈடுபடுத்தப்பட்டு வருகின்றமையும் நடைபெற்று வருகின்றது. வாரம் அல்லது மாதம் ஒரு முறை  பாலியல் தொழிலால் கிடைத்த பணத்துடன் ஊருக்கச்சென்று வரும் இப்பெண்களின் உறவினருக்குக் கூட இது தெரியாமலுள்ளமை கசப்பான உண்மையாகும்.

தென்னிலங்கையின் யுவதிகள் தொழில் வாய்ப்பின்றி அரபு நாடுகளுக்குச் சென்று சீரழிகின்ற செய்திகளும் நாளாந்தம் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், யுத்தத்தால் சகலதையும் இழந்து நிர்க்கதியாகியுள்ள வன்னி மக்களின் வறுமையையும், துன்பங்களையும் பயன்படுத்தி அவர்களை சீரழிவிற்குள் இட்டுச்செல்ல முற்படும் தரப்புகளிடமிருந்து தமிழ் இளைஞர் யுவதிகள் மட்டுமல்ல அவர்களின் பெற்றோரும், சமூகத்தினரும் விழிப்பாக இருக்கவேண்டும் என்பது அவசியமானதாகும்.

Related News:

சிங்கப்பூரில் பலவந்தமாக பாலியல் தொழில்களில் ஈடுபடுத்தப்படும் இலங்கை யுவதிகள்!

பெண்கள் மற்றும் சிறுவர்களை துன்புறுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு

இலங்கையில் 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரையிலான பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

29 Comments

  • கரவை ஜெயம்
    கரவை ஜெயம்

    போரில் தோற்கடிக்கப் பட்டது பயங்கரவாதமேயன்றி, ஒரு மக்கள் கூட்டம் அல்ல என்ற சிந்தனை மாற்றம் சிங்கள் அரசியல்வாதிகளிடம் ஏற்படாவிட்டால் இந்த நிலை தொடரவே செய்யும்..70 களில், வடக்கு, கிழக்கு முழுவதும் (தமிழ் தெரியாத) சிங்கள பொலீசாரின் நடவடிக்கைகள் எவ்வாறு தனிநாட்டுக் கோரிக்கைக்கு வலுவூட்டியது என்பதை இன்றைய அரசியல்வாதிகள் மறந்தால், எதிர்காலத்தில் சமூகங்கள் சமாதானமாக வாழ முடியும் என்ற நம்பிக்கை எழுவதற்கு சிறிதும் சாத்தியமில்லை. பாயங்கரவாத சட்டங்களைப் பயன்படுத்தி, கடும் போரினால் அனைத்தையும் இழந்து நிற்கும் அப்பாவி மக்களை மேலும் (ஆசைகாட்டி) மோசம் செய்வது அக்கிரமம். அரசியல்வாதிகள் மட்டுமன்றி, படித்தவர்களும் இம்மக்களது நன்மைக்காக குரல் கொடுக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் செயல் மிகவும் பாரட்டப் பட வேண்டியது..வன்னி மக்களின் அவலங்கள் சரியான முறையில் வெளிச்சத்திற்கு வர வேண்டும்..

    Reply
  • plendina
    plendina

    அரசியல்வாதிகள் மட்டுமன்றி, படித்தவர்களும் இம்மக்களது நன்மைக்காக குரல் கொடுக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் செயல் மிகவும் பாரட்டப்பட வேண்டியது. வன்னி மக்களின் அவலங்கள் சரியான முறையில் வெளிச்சத்திற்கு வர வேண்டும்..

    Reply
  • nantha
    nantha

    கண்டி ஒன்றும் அரேபியாவில் இல்லை. சம்பந்தப்பட்ட தமிழ் முக்கியஸ்தர்கள் கண்டிக்கு ஒரு நடை போய் உண்மை நிலையை கண்டு வர முடியாமல் உள்ளதா? அல்லது கிளிநொச்சி மக்கள் தொடர்ந்தும் வறுமையில் உழல்வது தங்கள் அரசியலுக்கு அனுகூலம் என்ற “தமிழ்” கோட்பாடா?

    அரசாங்கம் அது கொடுக்கவில்லை, இது கொடுக்கவில்லை என்று பாதிரிகள் அரசுக்கெதிராக பிரச்சாரம் செய்துகொண்டு தங்கள் கத்தோலிக்க ஆலயங்களை யார் கொடுத்த பணத்தில் கிளிநொச்சியில் கட்டி எழுப்பி திறப்பு விழா கொண்டாடுகிறார்கள்?

    யாழ்ப்பான மன்னர்களின் கோட்டை இருந்த இடத்தில் “டூரிஸ்ட்” ஹோட்டல் கட்ட புறப்பட்ட தமிழ் கோடீஸ்வரர்கள் வன்னியில் புலிகளாலும் யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆடை உற்பத்தி தொழிற்சாலையோ, விவசாய உற்பத்திக்கான கோழிக்குஞ்சு உற்பத்தி நிலையங்களையோ, மீன் பிடியை ஊக்குவிக்கும் வேறு தொழிற்சாலைகளையோ கட்ட முற்படாதது ஏன்?

    சிங்கள அரசு அனுமதி கொடுக்காது என்று வெறும் புரட்டு நியாயங்கள் சொல்லி மக்களை முட்டாள்களாக்க முயற்சிக்க வேண்டாம். ஏனென்றால் ஒரு தமிழ் முதலாளியும் மேற்கூறியபடி சிந்திக்க முயலவில்லை என்பதே உண்மை!

    Reply
  • PALLI
    PALLI

    //யாழ்ப்பான மன்னர்களின் கோட்டை இருந்த இடத்தில் “டூரிஸ்ட்” ஹோட்டல் கட்ட புறப்பட்ட தமிழ் கோடீஸ்வரர்கள் வன்னியில் புலிகளாலும் யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆடை உற்பத்தி தொழிற்சாலையோ, விவசாய உற்பத்திக்கான கோழிக்குஞ்சு உற்பத்தி நிலையங்களையோ, மீன் பிடியை ஊக்குவிக்கும் வேறு தொழிற்சாலைகளையோ கட்ட முற்படாதது ஏன்?//

    தப்புதான் தப்புதான் அதேபோல் இப்படியான வேலை திட்டங்களை அரசு முன்னெடுக்காதத்து ஏன் என தாங்கள் கேக்கபடாதா?? தாங்கள் சிங்கள தேச மன்னர்களின் நண்பர்தானே (முன்னய பின்னோட்டங்களின் நீங்க தந்த தகவல்தான்) எதுக்கெடுத்தாலும் பாதிரி பாதிரி என எழுதி என்னத்தை காணமுடியும்; கண்டி ஒன்றும் அரேபியா கிடையாது இது நந்தாவின் வாதம், அப்படியாயின் எதுக்கு இளம் பெண்கள் கண்டிக்கு??

    Reply
  • nantha
    nantha

    அரசின் திட்டங்களினால் தனியார் திட்டங்களைப் போல ஆயிரக் கணக்கில் பணம் கிடைக்காது என்று பலர் சிந்திக்கிறார்கள். அரசு கிளிநொச்சியில் விவசாய விஸ்தரிப்பு நிலையங்களை வைத்திருந்தது. வாடகைக்கு உளவு இயந்திரங்களை கூட கொடுத்து விவாசாயிகளை ஊக்குவித்தது. நம்ம தமிழ் போராட்ட சூரர்கள் அவற்றையெல்லாம் கொள்ளையடித்து நாசம் பண்ணினார்கள்.

    அவற்றை மீளவும் அரசு கொண்டு வந்துள்ளது. அங்கு போய் அறிவுரையோ உதவியோ நாடும்படி ஸ்ரீதரன் போன்ற புலிகள் சொல்ல மாட்டார்கள். அல்லது சிறு கைத்தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க உதவும் டக்லஸ் தேவானந்தாவின் அலுவலகத்தை நாடமாட்டார்கள். ஏனென்றால் இன்னமும் “தமிழ்” சோறு போடும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

    படை வருகிறது. பெண்களைக் கற்பழிப்பார்கள், புலிகளின் பகுதிக்கு ஓடுங்கள் என்று சொல்லி ஆயிரக்கணக்கான மக்களை புலிகளுக்கு அரணாக ஓட்டி சென்ற பாதிரிகளுக்கு இந்த “சின்ன” விஷயங்கள் தெரியாது என்று நம்ப வேண்டும் என்று பல்லி எதிர்பார்க்கிறார்.

    யாராவது இந்துக்கள் வன்னியில் கோவிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணியிருந்தால் பல்லி மாத்திரமல்ல பல புலி வால்களும் பெரும் கூச்சல் கிளப்பியிருப்பார்கள். ஆனால் பாதிரிகள் “கோவில்” கட்டினால் பயங்கர மவுனம் சாதிக்கும் பல்லி போன்றவர்கள் அவருடைய “பாதிரி” நண்பர்களுக்கு கொஞ்சம் உபதேசம் பண்ணினால் நல்லது.

    ஆடை உற்பத்தித் துறையில் உலகெங்கும் பெண்கள்தான் அதிகம் வேலை செய்கிறார்கள் என்ற உண்மை பல்லிக்குப் புலப்படவில்லையோ?

    Reply
  • Vishva
    Vishva

    கிளிநொச்சி யுவதிகளை தொழில்வாய்ப்பிற்காக கண்டிக்கு அழைத்துச் செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பான மேலதிக குறிப்புகள்

    கடந்த 15ம் திகதி கிளிநொச்சியில் 40 யுவதிகளை தொழில்வாய்பிற்காக கண்டிக்கு அழைத்துச் செல்ல முயற்சி எடுத்த தனியார் நிறுனத்தின் பெயர் ‘பென்குயின்’ எனத் தெரியவந்துள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகளைத் தயாரிக்கும் இந்நிறுவனத்தின் இந்த நடவடிக்கை தொடர்பான சில தகவல்களை யுவதிகளை ஏற்றிச்செல்லும் இடத்தில் வாக்குவாதங்களில் ஈடுபட்ட பொதுமக்கள் சிலரை சந்தித்துக் கேட்டபோது, அவர்களிடமிருந்து கிடைத்த தகவல்களில்-

    தமிழ்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவ்விடத்திற்கு வருவதற்கு முன்னரே பொதுமக்களில் சிலர் குறிப்பிட்ட ஆடைத்தொழிற்சாலை அதிகாரிகளுடன் விளக்கம் கேட்டதாகவும், அப்போது அவ்வாடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த சிலர் அவர்களை மிரட்டியதாகவும் தெரியவருகின்றது. அங்கு நின்ற ஒருவர் படையினரின் அடையாள அட்டையொன்றைக் காண்பித்து மிரட்டியதாகவும், அவர்களுக்ககுச் ஆதரவாக அவ்விடத்திற்கு வந்த இராணுவத்தினர் சிலர் நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் ஒரு கட்டத்தில் சமுகநிலை ஏற்பட்டு யுவதிகள் அழைத்துச் செல்லும் முயற்சியை கைவிட்ட குறித்த ஆடைத்தோழிற்சாலையைச் சேந்தவர்கள் விரைவில் 200 தையல் இயந்திரங்கைளை கிளிநொச்சிக்கு கொண்டு வந்து கிளிநொச்சியில் வைத்தே தங்களது பயிற்சிகளை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துச் சென்றனர்.

    Reply
  • nantha
    nantha

    புலி வால்கள் கிளிநொச்சியில் இன்னமும் பலமாக உள்ளனர் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு ஆதாரம். இனி இருநூறு தையல் இயந்திரங்களைக் கொண்டு வந்து தொழிற்சாலை தொடங்கினால் “சிங்களவர் கிளிநொச்சியை பிடிக்கிறார்கள் என்றும்”. தொழிற்சாலை தொடங்கா விட்டால் “பார். நாங்கள் சொன்னது போல பெண்களைக் கடத்தத்தான் வந்தார்கள்” என்றும் இன்னொரு கப்சா வெளி வரும்.

    ஆனால் “முதலுதவிப் பயிற்சி” என்று நூற்றுக் கணக்கான மாணவிகளைப் புலிகள் பிடித்துக் கொண்டு போய் “பலி” கொடுத்த நிகழ்வுகளைப் பற்றி யாரும் மூச்சு விட மாட்டார்கள்!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தமிழ்பெண்களின் கற்பிற்கு என்னமாகத் தான் குத்திமுறிகிறார்கள்?. கற்பை பறிப்பதும் கபளீகரம் செய்வதும் தமிழ்யுணர்வாளர்களுக்கு கிடையவே கிடையாது? அப்படித்தானே!. 83-ம் ஆண்டு ஜேர்மன் தொலைக்காட்சியான ஏ.ஆர்.டி க்கு போட்டி கொடுத்த நான்கு தமிழ் காவலர்களாக தம்மை காட்டிக் கொண்ட ஆசாமிகள் சொன்ன பதில்….
    ஏ.ஆர்.டி தொலைக்காட்சி பேட்டியாளர்: ஏன் நீங்கள் பதின்மூன்று இராணுவத்தை கொண்றீர்கள்?.
    தமிழ்ஆசாமிகள்: எமது நான்கு மாணவிகளை காணவில்லை. இராணுவம் தான் இவர்களை கடத்தி…. இனி எம்மால் பொறுக்க முடியாது.
    இருபத்தி ஏழுவருடங்களுக்கு பிறகும் இதே நயம்படதக்க கதைகளே! இந்த தமிழன் தனக்கு தானே புனிதங்களைப் பூசி தானே அம்பலப்பட்டு போனது தான் நடந்துமுடிந்த கதை.
    முழுமையான அர்பணிப்புடன் தம்முயிரையும் தியாகம் செய்தவர்கள் புலிப்போரரளிகள். இறந்த அவர்களின் உடலையும் நிர்வாணப்படுத்தி இணைத்தில் விட்டு ஆதாயம் தேடமுற்பட்டவர்களே இன்று கற்பைப் பற்றி கதைப்பவர்கள். இந்த போலித்தனமான முகமூடிகளை போட்டு அரசியல் நடத்திக் கொண்டிருப்பவாகள்.தமிழ்மக்களின் கடைசி எச்சமாக இருப்பவர்கள் இந்த தமிழ்-தேசிய கூட்டமைப்பினர் அதில் சிவஞானம் சிறீதரன் குறிப்பிடத்தக்கவர்.

    Reply
  • Rohan
    Rohan

    //புலி வால்கள் கிளிநொச்சியில் இன்னமும் பலமாக உள்ளனர் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு ஆதாரம். இனி இருநூறு தையல் இயந்திரங்களைக் கொண்டு வந்து தொழிற்சாலை தொடங்கினால் “சிங்களவர் கிளிநொச்சியை பிடிக்கிறார்கள் என்றும்”. தொழிற்சாலை தொடங்கா விட்டால் “பார். நாங்கள் சொன்னது போல பெண்களைக் கடத்தத்தான் வந்தார்கள்” என்றும் இன்னொரு கப்சா வெளி வரும்.//

    இயக்கங்கள் கொண்டு போன தலைமுறை ஒன்று – பின்னர் அரச இயந்திரம் பலி கொண்ட தலைமுறை இன்னொன்று – இப்போது வருவது அடுத்த சுற்று.

    இத்தனை தூரம் புலிக்குப் பின்னால் போய் அடி வாங்கிய பிறகும் – அரசும் இராணுவமும் எப்படித் தம்மைக் கையாளும் என்று தெரிந்து கொண்ட பிறகும் – சில தமிழர்கள் வாரிச் செல்லப்பட இருந்த பெண்களுக்காகக் குரல் கொடுத்திருந்தார்கள் என்றால் அது அவர்களுக்கு இருந்த பொறுப்புணர்ச்சியையும் அந்தப் பெண்களுக்கு நேர இருந்த கதி பற்றிய தெளிவையும் காட்டுகிறது.

    இப்படியான பினாத்தல்களை ஏன் செய்கிறர்களோ தெரியவில்லை. ஏதோ அரசும் சிங்கள மக்களும் தமிழர்களின் நலத்தில் அக்கறை கொண்டு உருகி வழிவதாகவும் பாசிசப் புலிகள் தான் இந்தச் சகோதர பாசத்தை அணை கட்டித் தடுத்ததாகவும் பிரசங்கம் செய்து திரிந்தார்கள். இப்போது புலி போனாயிற்று. பழைய பெரும் புலிகள் எல்லம் அரச சேவகம் செய்து பெரும் புள்ளிகளாவதில் முனைப்பாய் இருக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மைகளையும் செய்ய அரசு தயாராக இல்லை என்பது தெளிவாகியிருக்கிறது. போரை வென்று கொடுத்த சரத் பொன்சேகவை சிரமப்படுத்துவதில் அரசு காட்டும் முனைப்பு அவர்களது நோக்கத்தைத் தெளிவாகக் காட்டுகிறது.

    தமிழ்ப் பெண்களைக் காப்பதில் சில தமிழர்கள் காட்டிய அக்கறை எங்கே – அவர்களுக்கு புலித்தோல் போர்த்தவர்கள் எங்கே?

    கோத்தபாய ராஜபக்ச வடக்குத் தமிழர்கள் இன்னமும் புலிக்கு ஆதரவாகவே இருப்பதாகச் சொல்லுகிறார். தனிப்பட, நான் புலி ஆதரவாளனாக என்றுமே இருந்ததில்லை. அவர்கள் செய்த சில நல்ல விடயங்கள் என்னைத் திருப்திப் படுத்தியது உண்மைதான். ஆனால், தமிழர் நலம் விரும்புவது சில வாய்ச் சொல் வீரர்களிடமிருந்து புலி வால் என்ற பட்டத்தைத் தான் வாங்கித் தரும் என்றால் அதில் ஒன்றும் பாதகமில்லை.

    Reply
  • Rohan
    Rohan

    //தமிழ்பெண்களின் கற்பிற்கு என்னமாகத் தான் குத்திமுறிகிறார்கள்?. கற்பை பறிப்பதும் கபளீகரம் செய்வதும் தமிழ்யுணர்வாளர்களுக்கு கிடையவே கிடையாது? அப்படித்தானே!….
    இருபத்தி ஏழுவருடங்களுக்கு பிறகும் இதே நயம்படதக்க கதைகளே! இந்த தமிழன் தனக்கு தானே புனிதங்களைப் பூசி தானே அம்பலப்பட்டு போனது தான் நடந்துமுடிந்த கதை……// புல்லரிக்க வைக்கும் லொஜிக், சந்திரன் ராஜா.

    ‘கற்பு’ என்ற சொல் பயன்படுத்தப்படுவது எப்போது என்று திரியாதிருப்பது பரவாயில்லை. ஆனால், ‘புலி ஆதரவாளர்கள்’ சொல்கிறார்கள் என்பதற்காக தமிழ்ப் பெண்களை எப்பாடு பட்டாவது போகட்டும் என்று விடலாம் என்கிறீர்கள். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுதால், அதற்காக ஆடு நனைவது பற்றி மனம் வருந்தாது ஓநாய் பற்றிப் பேசுவோம் என்கிறீர்கள்.

    Reply
  • nantha
    nantha

    // இத்தனை தூரம் புலிக்குப் பின்னால் போய் அடி வாங்கிய பிறகும் – அரசும் இராணுவமும் எப்படித் தம்மைக் கையாளும் என்று தெரிந்து கொண்ட பிறகும் – சில தமிழர்கள் வாரிச் செல்லப்பட இருந்த பெண்களுக்காகக் குரல் கொடுத்திருந்தார்கள் என்றால் அது அவர்களுக்கு இருந்த பொறுப்புணர்ச்சியையும் அந்தப் பெண்களுக்கு நேர இருந்த கதி பற்றிய தெளிவையும் காட்டுகிறது.//

    ஆகா! இதுவல்லவோ பொறுப்புணர்வு. பெண்பிள்ளைகளை “சாமத்தியவீடு” முடிந்தவுடன் புலிகள் இழுத்துச் சென்றபோது இந்தப் பொறுப்புணர்வு எங்கே இருந்தது?

    அல்லது பெண்பிள்ளைகளுக்கு “முதலுதவிப் பயிற்சி” என்று சொல்லி வராவிட்டால் பரீட்சை எழுத முடியாது என்று புலிகள் மிரட்டி பெண்பிள்ளைகளை கொலைக்குக் கொடுத்த போது இந்த பொறுப்புணர்வு எங்கே போய் இருந்தது?

    புலிவால்களின் பிரச்சாரத்தில் எப்போதும் தமிழ் பெண்களின் கற்புக்குக் களங்கம் என்றுதான் அலறுகிறார்கள். இந்திய இராணுவம் கற்பழித்தது, இலங்கை இராணுவம் கற்பழித்தது என்றெல்லாம் தமிழ் பெண்களின் மானத்தையே விற்றுக் காசாக்கும் விளையாட்டை இந்த சோம்பேறிகள் விடப்போவதில்லை! உண்மையில் கற்பழிக்கப்பட்ட பெண்களை விட இந்த தமிழ் காக்கப் புறப்பட்ட செம்மல்களின் பிரச்சாரத்தால் கற்பிழந்த தமிழ்ப் பெண்கள் அதிகம் என்றே தெரிகிறது!
    புலிகள் இன்னமும் தமிழ் மக்கள் மீது சவாரி விடவே விரும்புகிறார்கள் என்பதுதான் உண்மை! கோத்தபாயா பொய் சொல்லவில்லை என்பதற்கு சான்றுகள் தேவையில்லை!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ரோகன் நீங்கள் தமிழ்பெண்கள் என்று யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று புரிகிறது. உங்கள் சிந்தனையே உங்களை காட்டிக் கொடுக்கிறது. “தமிழர்” என்ற பெயரை வைத்தே தமிழர் மேலேயே தொடர்ந்து சவாரி செய்ய முற்படுகிறீர்கள் எமது பழைய தமிழரசியல் தலைவர்களின் அரசியல் தவறுகளில் இருந்து எதையும் கற்றுக் கொள்ள முற்பட்டதில்லை. கற்றுக்கொள்ளப் போவதில்லை.

    உங்கள் நோக்கம் தமிழ்-உழைப்பாளிமக்கள் மேல் சவாரி செய்வதே!. இந்த சிந்தனை முறை காலாவதியாகிவிட்டது. இது யாருக்கும் யாரும் அடிமையாக இருக்கிற காலம் இல்லை. புதுமையை விரும்புகிறார்கள். மேலதிகமாச் சொன்னால் சொந்தக் காலில் நிற்க முயல்கிறார்கள். சீதனக்கொடுமையில் பெண்கள் மீண்டுவெளியேற வேண்டுமென்றால் அவர்கள் உற்பத்தியில் ஈடுபட்டேயாக வேண்டும். இதனால் மட்டுமே தமது பழைய உலகத்தை விட்டு சுகந்திரமாக பறக்கமுடியும். உங்கள் “இனவெறி” கருத்துக்கள் பெண்களை முற்போக்கான வழிமுறையில் வழிநடத்த உதவப்போவதில்லை. மாறாக அவர்களை ஆடுமாடுகள் போல் ஆணியடித்து தொழுவத்தில் கட்டிவைக்கவே முயல்கிறீர்கள். இதையே தலைமை ஆசிரியர்-பாராளுமன்ற உறுப்பினர்-மாஜிப்புலி சிவஞானம் சிறீதரனின் கருத்தும் உங்கள் கருத்தும். அத்துடன் அடுத்த பின்னோட்டதிற்கு உங்கள் தமிழ்மக்கள் யார்? என்பதை தெளிவுபடுத்துங்கள். மலையக மக்களையோ பெண்களையோ “பாப்பாப்பட்டி” “கீரிப்பட்டி” உள்ளவர்களை தாங்கள் தமிழ்மக்களாகவோ பெண்களாகவோ ஏற்றுக்கொண்டதுண்டா? அல்லது யாழ்பாணபெண்கள் ஆண்கள் மட்டும்தானா? உங்கள் தமிழர்கள்-தமிழ்பெண்கள்?.
    கடந்துபோன வருடங்களில் ஈழத்துமக்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் இன்னல்கள் அவலங்கள் எந்தமுற்போக்கு நாகரீகதையும் கற்றுகொள்ள முடியாத-விரும்பாத தமிழர்களால் அதுவும் புலம்பெயர் தமிழர்களினால் சுயநலமிகளால் ஏற்பட்டது என்பதை மறந்துவிடாதீர்கள்.இந்த பழைமைவாதப் போக்கே புலியாக உருவெடுத்தது. நீங்கள் “நான்புலியில்லை” என்று எத்தனைதரம் மறுத்தபோதும் அதுதான் உண்மையாகிறது. முடிந்தால் ஜெயபாலன் உங்கள் “செப்படி” வித்தை பின்னோட்டங்களை வெளிக்கொண்டுவர முடியும்!.

    Reply
  • ராவணா
    ராவணா

    தனிப்பட, நான் புலி ஆதரவாளனாக என்றுமே இருந்ததில்லை. அவர்கள் செய்த சில நல்ல விடயங்கள் என்னைத் திருப்திப் படுத்தியது உண்மைதான். ஆனால், தமிழர் நலம் விரும்புவது சில வாய்ச் சொல் வீரர்களிடமிருந்து புலி வால் என்ற பட்டத்தைத் தான் வாங்கித் தரும் என்றால் அதில் ஒன்றும் பாதகமில்லை.//

    ரோகன் அது என்ன நான் புலி ஆதரவாளனாக என்றுமே இருந்ததில்லை. அப்படி சொன்னால் தான் அதிக பலன் கிடைக்குமோ. மூளைச்சலவை செய்யப்பட்ட புலத்து புலி நீங்கள்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //அவற்றை மீளவும் அரசு கொண்டு வந்துள்ளது. அங்கு போய் அறிவுரையோ உதவியோ நாடும்படி ஸ்ரீதரன் போன்ற புலிகள் சொல்ல மாட்டார்கள். அல்லது சிறு கைத்தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க உதவும் டக்லஸ் தேவானந்தாவின் அலுவலகத்தை நாடமாட்டார்கள். ஏனென்றால் இன்னமும் “தமிழ்” சோறு போடும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். //
    டக்கிளஸ் இடத்தில் சங்கரியர் இருந்தாலும் அவர்கள் நாடுவார்கள்? இன்று டக்களஸ்சும் ஒரு சமூக நிர்வாகி; அதுக்குரிய சம்பளம் அவருக்கு கிடைக்கிறது, இந்த மக்கள் இப்படி ஆனதுக்கு அவரும் ஒரு பங்காளிதான்; ஆக நந்தா மக்களை பிச்சைகாரராக்க வேண்டாம்;

    //படை வருகிறது. பெண்களைக் கற்பழிப்பார்கள், புலிகளின் பகுதிக்கு ஓடுங்கள் என்று சொல்லி ஆயிரக்கணக்கான மக்களை புலிகளுக்கு அரணாக ஓட்டி சென்ற பாதிரிகளுக்கு இந்த “சின்ன” விஷயங்கள் தெரியாது என்று நம்ப வேண்டும் என்று பல்லி எதிர்பார்க்கிறார்.//
    சரி பல்லிக்கு எதுவும் தெரிய வேண்டாம், ஆனால் படையினர் கற்பழிக்கவில்லை என சங்கரியரை இன்று சொல்லசொல்லுங்க?

    //ஆனால் “முதலுதவிப் பயிற்சி” என்று நூற்றுக் கணக்கான மாணவிகளைப் புலிகள் பிடித்துக் கொண்டு போய் “பலி” கொடுத்த நிகழ்வுகளைப் பற்றி யாரும் மூச்சு விட மாட்டார்கள்!//
    பல்லி மூச்சு விட்டேன் ,பெரு மூச்சுவிட்டதால் அதன் பலனையும் அனுபவித்தேன்; ஆனால் நந்தா அப்போது எங்கிருந்தார் என பல்லி தெரியலாமா??

    //யாராவது இந்துக்கள் வன்னியில் கோவிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணியிருந்தால் பல்லி மாத்திரமல்ல பல புலி வால்களும் பெரும் கூச்சல் கிளப்பியிருப்பார்கள்.//
    நந்தாவுக்கு அந்த கவலை வேண்டாம்; இப்போதெல்லாம் மேலைனாடுகளில் கோவில் கட்டி அதைவைத்து வியாபாரம் பண்ணுவதுதான் நடக்கிறது வன்னியில் மக்களுக்கு அரசியல்வாதிகளில் மட்டுமல்ல கடவுளிலும் நம்பிக்கை தளர்கிறது, (ஜயோ எல்லா கடவுளும்தான் நந்தா)

    //ஆடை உற்பத்தித் துறையில் உலகெங்கும் பெண்கள்தான் அதிகம் வேலை செய்கிறார்கள் என்ற உண்மை பல்லிக்குப் புலப்படவில்லையோ?// தெரியும் ஆனால் அவர்கள் ஆடை இல்லாமல் போய்விட கூடாது என்பதுதான் என் எழுத்து,

    //ஆகா! இதுவல்லவோ பொறுப்புணர்வு. பெண்பிள்ளைகளை “சாமத்தியவீடு” முடிந்தவுடன் புலிகள் இழுத்துச் சென்றபோது இந்தப் பொறுப்புணர்வு எங்கே இருந்தது?//
    அது சரியென நாம் எல்லோரும் சொல்லியிருந்தால் இன்றும் புலி வாழ்ந்திருக்கும்; அந்த தவறை சுட்டி காட்டிய பெருமை தேசத்துக்கும் உண்டு, அன்று புலி இன்று அரசு புலியை சொல்லலாம் அரசை சொன்னால் நந்தாவுக்கு கோபம் கொப்பளிக்கும்;

    // அல்லது பெண்பிள்ளைகளுக்கு “முதலுதவிப் பயிற்சி” என்று சொல்லி வராவிட்டால் பரீட்சை எழுத முடியாது என்று புலிகள் மிரட்டி பெண்பிள்ளைகளை கொலைக்குக் கொடுத்த போது இந்த பொறுப்புணர்வு எங்கே போய் இருந்தது?//
    இவை அனைத்துக்கும் ஒரே பதில்தான் முள்ளிவாய்க்கால்; அப்படியானால் அரசும் ஒரு முள்ளிவாய்க்கால் பயணத்தை ஆரம்பித்து விட்டதோ??

    //கற்பழிக்கப்பட்ட பெண்களை விட இந்த தமிழ் காக்கப் புறப்பட்ட செம்மல்களின் பிரச்சாரத்தால் கற்பிழந்த தமிழ்ப் பெண்கள் அதிகம் என்றே தெரிகிறது!// மழைகாலம் புலிக்கு சொந்தம் அதனால் கோடைகாலம் அரசுக்குதான் உரிமை என்பது போல் நந்தா உங்கள் நாட்டாண்மை தீர்ப்பு உள்ளது;
    //இந்திய இராணுவம் கற்பழித்தது, இலங்கை இராணுவம் கற்பழித்தது //
    அப்போ அது பொய்யா?? சொல்லுங்க நந்தா?

    // ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுதால்,//றோகன்;
    இப்போ எல்லாம் ஓநாய் அழுவதுக்காகவே ஆடுகள் நனைய வேண்டி உள்ளது;

    Reply
  • Rohan
    Rohan

    //ரோகன் அது என்ன நான் புலி ஆதரவாளனாக என்றுமே இருந்ததில்லை. அப்படி சொன்னால் தான் அதிக பலன் கிடைக்குமோ. மூளைச்சலவை செய்யப்பட்ட புலத்து புலி நீங்கள்//.
    You don’t know what you are talking about. It is an utter waste of time to talk to some of the anti-Tigers. They are ‘dead Tiger beating heroes’. Good luck!

    Reply
  • nantha
    nantha

    கிளிநொச்சியில் மக்கள் பிச்சைக்காரர் ஆனதற்கு டக்ளசும் ஒரு பங்காளி என்று பல்லி சொல்வது புரியாமல் உள்ளது. ஈழம் என்ற மாயையை விட்டு வெளியே வாருங்கள் என்று டக்லஸ் சொன்னதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் “புலிவால்களுக்கே” வாக்களித்து “ஈழம் சோறு போடும்” என்று நம்பும் தமிழர்கள் உள்ளவரை “சுபிட்சம்” என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.

    அரசு என்னமோ தமிழ் பெண்களை “இழுத்துக்” கொண்டு போவதாக பல்லி ஒரு “பாதிரி” புராணம் பாடும் நோக்கம் என்ன?

    கற்பழிப்பு என்பது படையினரால் தினமும் நடத்தப்படுவது போல பல்லி கூறுவது வெறும் புலிப் பிரச்சாரமே. தமிழ் பெண்களின் கற்பைச் சூறையாடும் உரிமை “தமிழ்” இயக்கங்களுக்கு மாத்திரம் உள்ளது என்பது பல்லியின் கருத்தோ? தமிழர்கள் கற்பழிக்க மாட்டார்கள் என்று பல்லி “கியாரண்டி” கொடுக்கிறாரா?

    அரசும் முள்ளிவாய்க்கால் பயணம் என்று பல்லி எதை வைத்து சொல்லுகிறார்? மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட வேண்டாம்.

    எந்த இராணுவத்திலும் இந்த “கற்பழிப்பு” பிரச்சனைகள் வந்து சேர்வது வழக்கம். பல்லியின் கதைப்படி தமிழ் பெண்கள் என்பதற்காக அவர்களை எல்லாம் கும்பலாகப் பிடித்து கற்பழித்தார்கள் என்று பல்லி கதைப்வது நியாயமாகத் தெரியவில்லை.

    கிருஷாந்தி குமாரசாமி கற்பழிப்பு கொலை என்பவற்றில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது பல்லிக்குத் தெரியவில்லையா? அல்லது பாதிரிகள் இன்னமும் அப்படி நடக்கவில்லை என்றுதான் பல்லியின் காதில் “பரிசுத்த வேதம்” ஒதுகிறார்களா?

    பாதிரிகள் கோவில் கட்டி திறப்பு விழா செய்ததை பல்லி “கண்டுக்காமல்” விட்டது எப்படியோ?

    “பொறுப்புணர்வு” என்ற கேள்விக்குப் பல்லியின் விளக்கங்கள் பொறுப்புணர்வு இல்லாதவையாகவே உள்ளது.

    Reply
  • Ajith
    Ajith

    I had a very good experience during my recent visit to Jaffna. It is mid noon, I visited a patient in Jaffna hospital and went to the bus stand. There was no CTB buses, so I went to minibus station take the 769 bus. I had the opportunity get a seat in the bus and in few minutes times all the seats were full. Suddenly a young man got into the bus. He had some ticket books. He (a Sinhala)gave tickets to every one from front to back and then made an announcement that one of his relative (Sinhala lady)have a heart condition and ask people to give money and then moved into every seat. Every one opened their purse and gave Rs20 (Rs. 20 ticket) and then he came to me. I returned his ticket back and I don’t want that. He looked at me with anger. I smiled. There was a lady next to me who opened her purse but showing me returning the ticket cput the money back into the purse and gave the ticket back. After that no one paid. The man made a harsh look at me and went back. Then I told the passengers, any one can print tickets and do like this, so be careful about the frauds. Sinhala frauds well aware that no one will take action against Sinhala for any crime they commit against tamils.There is 100% Sinhala army and police precence in every corner of Jaffna to give protection to Sinhala. For example, the murder of the Nurse by a Sinhala doctor happened during my stay in Jaffna. The doctor is a close relative of some high ranking Navy officer. I had the opportunity to see him in Jaffna hospital when he was taken to a ward with Police and Mlitary protection. All the hospital staff and public were angry about this. Unfortunately, they are not in a position to show their anger. This is the nature of Sinhala politics in tamil homeland.

    Reply
  • பல்லி
    பல்லி

    நந்தா உன்மையில் மனம் வருந்தி சொல்லுகிறேன் உங்களுக்கு பாதிரி தவிர எதுவுமே தெரியாது? அதேபோல் பல்லிக்கு மக்கள் நலன் தவிர்ந்த எதுவுமே தெரியாது; புலி யாரையாவது இப்போது கொல்ல முடியுமானால் அதில் பல்லியும் அடங்கும்; காரணம் புலி பல்லுடன் இருக்கும் போதே அதை நான் சுரண்டி பார்த்தேன், ஆனால் நீங்களோ புலியின் பல்லு புடுங்கியபின் அதை காலால் உதைக்கிறீர்கள்?
    நந்தா;;
    பிரச்சனையை உருவாக்குவது சுலபம்; நந்தா போல்;
    பிரச்சனைகளை அமைதியாக்குவது கடினம்; பல்லி போல்;

    Reply
  • thurai
    thurai

    அஜீத், உமது அனுபவத்திற்கு முதலில் இராஜபக்சவிற்கு நன்றி சொல்லுங்கள். புலியின் காலத்தில் புலிக்கு புலம்பெயர் நாடுகளிலோ, இலங்கையிலோ பணம் கொடுக்காது விட்டால் என்ன செய்தார்கள் என்பது தெரியும்தானே. இனியாவது புலியை அழித்த அரசிற்கு நன்றி சொல்லிப் பழகுங்கோ. அதன் பின் தமிழரின் உரிமை பற்றி எல்லோரும் பேசுவோம்.

    துரை

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //ஆகா! இதுவல்லவோ பொறுப்புணர்வு. பெண்பிள்ளைகளை “சாமத்தியவீடு” முடிந்தவுடன் புலிகள் இழுத்துச் சென்றபோது இந்தப் பொறுப்புணர்வு எங்கே இருந்தது?//

    இப்படியான கருத்துகளைப் பார்க்கும் போது வேதனையாகவிருக்கின்றது. புலிகள் அன்று தவறுகள் செய்த போது புலியாதரவாளர்கள் அன்று மெளனம் சாதித்தார்கள் என்பதற்காக, இன்று அரசு செய்யும் தவறுகளை தட்டிக் கேட்பது தவறென்பது போல் தங்களின் இந்தக் கருத்து உள்ளது. அடாவடித்தனம் செய்த புலிகளுக்கு இறுதியில் என்ன நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதே புலிகளின் அடாவடித்தனங்களை இன்று மகிந்த அரசு செய்ய முனையும் போது, அன்றைய புலியாதரவாளர்கள் போல் நாமும் கண்மூடியிருந்தால் அவர்களுக்கும் எமக்கும் என்ன வித்தியாசம்?? புலிகளை எதிர்ப்பதாக எண்ணிக் கொண்டு எம் மக்களை புதைகுழிக்கனுப்ப நாமே துணை போவதாக எமது கருத்துகள் இருப்பது வருந்தத்தக்கது.

    “நல்லதை யார் செய்தாலும் பாராட்டுவோம்”, “தவறுகளை யார் செய்தாலும் தட்டிக் கேட்போம்”.

    Reply
  • nantha
    nantha

    பல்லிக்கு பாதிரிகள் செய்யும் கிரிமினல்த்தனங்கள் எல்லாம் “மனிதத்தனம்” என்று தெரிகிறது. புலிகளோடு பாதிரிகள் (இவர்கள் சாதாரண தமிழர்களல்ல) சேர்ந்து கொலை, கொள்ளை, என்று சகல கூத்துக்களையும் ஆடியுள்ளனர்.

    வத்திக்கான் என்ற மாபியா தலைமையின் கட்டளைகளை நிறைவேறும் இந்தக் கூட்டங்களுக்குப் பல்லி வக்காலத்து வாங்குவது பற்றி எனக்கு ஆச்சரியம் எதுவுமில்லை. ஏனென்றால் கள்ளக் கடத்தல் செய்யும் தேச விரோதிகள் கூட பல்லியின் டிக்ஷனரியில் “மனித” நேயம் உள்ளவர்கள் என்பது வாசகர்கள் அனைவரும் அறிந்த விஷயம்!

    பல்லியின் “மக்கள் நலன்” எவ்வளவு என்பது நன்கு புரிந்த விஷயம்!

    Reply
  • nantha
    nantha

    அஜித்தின் கதை பொய்யோ உண்மையோ தெரியாது. ஆனால் இந்த “பிச்சை” எடுப்பு தமிழர்களும் செய்கிறார்கள் என்பது எப்படித் தெரியாமல் போனது என்பதுவே ஆச்சரியம். புலிகள் ஹைவே 9 இல் “வரி” என்று ஆயிரக் கணக்கில் பிடுங்கியது பற்றி மௌனம் சாதிக்கும் அஜித் “புளுகுவதில்” மன்னன் என்றே தோன்றுகிறது.

    வவுனியா பெண்ணை பிள்ளையுடன் விட்டுவிட்டு அவளின் தற்கொலைக்கும் காரணமான தமிழ் சட்டத்தரணி பற்றி “மூடு மந்திரம்” ஜெபிக்கும் தமிழ் பற்றாளர்கள் இந்த “சிங்கள” பிச்சைக்காரர்களை விடக் கேவலமானவர்கள்!

    Reply
  • palli
    palli

    //பல்லிக்கு பாதிரிகள் செய்யும் கிரிமினல்த்தனங்கள் எல்லாம் “மனிதத்தனம்” என்று தெரிகிறது. //
    நந்தாவின் எழுத்துடன் ஒப்பிடும்போது பாதிரிகள் செயல் எனக்கு மோசமாகபடவில்லை, நந்தாபோல் எல்லாதமிழரும் இல்லை என்பது போல் ஒரு சில பாதிரிகள் போல் எல்லா கதோலிக்கரோ அல்லது பாதிரிகள் இல்லை என்பதை நந்தா புரிவதுக்கு ஏதோ ஒன்று தடுக்கிறது; அது அவரது தனி தாக்கமாககூட இருக்கலாமல்லவா??

    /வத்திக்கான் என்ற மாபியா தலைமை//
    இதை தேச நிர்வாகம் தணிக்கை செய்திருக்கலாமோ என எண்ண தோன்றுகிறது,

    //பல்லி வக்காலத்து வாங்குவது பற்றி எனக்கு ஆச்சரியம் எதுவுமில்லை.//
    பல்லிக்கும் அதில் வியப்பில்லை, காரணம் இதை சொல்லுவது நந்தா என்பதால்;

    //ஏனென்றால் கள்ளக் கடத்தல் செய்யும் தேச விரோதிகள் கூட பல்லியின் டிக்ஷனரியில் “மனித” நேயம் உள்ளவர்கள் //
    எனக்கு இந்த சத்தியம் செய்வதில் நம்பிக்கை இல்லை; ஆனாலும் நந்தா நம்பிக்கை உடையவராகதான் இருப்பார் ஆகையால் சத்தியமாக சொல்லுகிறேன் நானறிந்த கடத்தல்காரர் நந்தாவை விட 99வீதம் மனிதனேயம் உள்ளவர்கள். அதனால்தான் இன்று புலம்பெயர்தேச தமிழர் தாமும் வல்லரசுதான் என்கிறார்கள்.(பல்லியும்தான்)

    //நல்லதை யார் செய்தாலும் பாராட்டுவோம்”, “தவறுகளை யார் செய்தாலும் தட்டிக் கேட்போம்”.// பார்த்திபன்
    இதுவே பல்லியின் பயணம் பலரை போல்;

    Reply
  • BC
    BC

    புலிகளின் காலத்திலேயே இலங்கை போகாத புலி ஆதரவாளர்கள் கூட இப்போ அங்கே என்ஜொய் பண்ணுவது வெளிப்படை.நான் அறிந்தது ஒரு புலி ஆள் இன்னொருவரை கேட்டாராம் இலங்கைக்கு போய் அங்கே எல்லாம் இப்போ நல்லா இருக்கிறது என்று சொல்வதை நாங்கள் மற்றவர்களுக்கு சொல்ல கூடாது என்று.

    Reply
  • nantha
    nantha

    பல்லி “மக்கள் நலன்” என்று கப்சா விடும் வேளையில் மக்களின் நலன்களுக்குக் கொள்ளி வைக்கும் கூட்டங்களை புகழ்வது பல்லியும் அந்த கும்பல்களை சேர்ந்த ஆள் என்பதில் சந்தேகம் இல்லை.

    பல்லி எதை வைத்துக் கள்ளக்கடத்தல் கிரிமினல்களை நந்தாவுடன் ஒப்பிடுகிறார் என்பது புரியவில்லை! எந்த உலக நாகரீகத்திலும் கள்ளக் கடத்தல்காரர்களை இப்படி ” மகாத்மாகாந்தி” ஆக்கியது கிடையாது. இந்த தமிழீழம் கேட்ட பல்லி போன்றவர்களைத் தவிர. தமிழர்களின் தமிழீழம் நாறி நாத்தம் எடுத்தது எப்படி என்று படிப்பவர்களுக்குப் புரிந்திருக்கும்!

    தவறு செய்யும் கும்பல்களுக்கு வக்காலத்து வாங்கும் பல்லி எப்படி “தவறு செய்வதைத்” தட்டிக் கேட்கப் போகிறார்? தனக்கு லாபம் என்றால் எந்த அக்கிரமத்தையும் ஆதரிப்போம் என்ற யாழ்ப்பாணத்தான் பிலோசொபி துள்ளி விளையாடுகிறது.

    இதற்குள் “தணிக்கை” செய்யவில்லை என்று கூறும் பல்லி வத்திக்கானின் “மாபியா” தொடர்புகளை அறிவது நல்லது!

    Reply
  • palli
    palli

    //இதற்குள் “தணிக்கை” செய்யவில்லை என்று கூறும் பல்லி வத்திக்கானின் “மாபியா” தொடர்புகளை அறிவது நல்லது!//
    அதையும் அறிவோம் அத்துடன் நந்தாவின் முகமும் அறிவோம்

    //பல்லியும் அந்த கும்பல்களை சேர்ந்த ஆள் என்பதில் சந்தேகம் இல்லை.//
    இருக்கட்டுமே இராமாயணத்தை எழுதிய வாலி கூட ஒரு திருடந்தான் என கேள்விபட்டேன், ஆக பல்லி எந்த குழு என்னும் ஆராட்சி நந்தாவுக்கு வேண்டாம் என் கருத்தின் தவறை சொல்லுங்கள் போதும்: அந்த கும்பல்தான் இன்று மகிந்தாவின் மரியாதைக்கு உரியவர்களாம் என முன்னய மகிந்தாவின் நண்பர்கள் சொல்லுகிறார்கள்.

    // பல்லி எதை வைத்துக் கள்ளக்கடத்தல் கிரிமினல்களை நந்தாவுடன் ஒப்பிடுகிறார் என்பது புரியவில்லை!//
    உங்கள் போலியான எழுத்தை வைத்துதான்;

    //எந்த உலக நாகரீகத்திலும் கள்ளக் கடத்தல்காரர்களை இப்படி ” மகாத்மாகாந்தி” ஆக்கியது கிடையாது.//
    அவரே ஒரு கடத்தல்காரந்தான் என்பது என் அபிப்பிராயம்;

    //இந்த தமிழீழம் கேட்ட பல்லி போன்றவர்களைத் தவிர.//
    இதுவே உங்கள் ஏலாமையின் உச்ச கட்டம்; பல்லிக்கு கேள்வி கேட்டுதான் பழக்கமே தவிர இப்படியான பிரிவினை எல்லாம் நந்தாபோல் தெரியாது தெரியாது;

    Reply
  • Haran
    Haran

    //புலிகளின் காலத்திலேயே இலங்கை போகாத புலி ஆதரவாளர்கள் கூட இப்போ அங்கே என்ஜொய் பண்ணுவது வெளிப்படை.நான் அறிந்தது ஒரு புலி ஆள் இன்னொருவரை கேட்டாராம் இலங்கைக்கு போய் அங்கே எல்லாம் இப்போ நல்லா இருக்கிறது என்று சொல்வதை நாங்கள் மற்றவர்களுக்கு சொல்ல கூடாது என்று//

    இது இல்லாவிட்டால் புலிகளின் வியாபாரம் படுத்துவிடுமே இன்னமும் புலம்பெயர்நாடுகளில் புலிகளின பெயரிலும் புனர்வாழ்வு கழகத்தின் பெயரிலும் நிதி சேகரிப்பு இத்தாலி ஜேர்மன் நோர்வே நாடுகளில் நடக்கின்றதே ஆனால் காலப்போக்கில் புலம்பெயர்ந்து எல்லா தமிழர்களும் போய்வந்தபின்னு நிதிதேடி போகும்போது உதை விழும்

    Reply
  • nantha
    nantha

    மகாத்மாகாந்தியும் கடத்தல்காரன். ஆகா! இதுவல்லவோ “மக்கள் சேவை”!

    Reply
  • பல்லி
    பல்லி

    //ஆகா! இதுவல்லவோ “மக்கள் சேவை”!//
    உன்மைதான் மகாத்மாகாந்தி எப்படி உருவானார் என்பது தெரியும் வரை,

    Reply