யாழ் குடாநாட்டு மக்களின் வருமான மட்டம் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் சிரேஸ்ட பிரதி ஆளுநர் கே.டீ. தீரசிங்க தெரிவித்துள்ளார். மானிப்பாயில் நேற்று(30-07-2010) இடம்பெற்ற சம்பத்வங்கியின் கிளை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“யுத்தம் முடிவடைந்து யாழ.குடாநாட்டு மக்கள் படிப்படியாக தங்கள் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றி வருகின்றார்கள். கடந்த முப்பது வருடங்களாக வடபகுதி மக்கள் அனுபவித்த துன்பங்களை நாம் அறிவோம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். இதற்காக மத்திய வங்கி பல திட்டங்களை செயற்படுத்தவுள்ளது” என அவர் கூறினார்.