யாழ். குடா நாட்டு விவசாயிகளின் விளைபொருட்கள் கள்வர்களால் சூறையாடப்பட்டு வருகின்றன. யாழ். குடாநாட்டில் பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையிடும் சம்பவங்கள் ஓருபுறமிருக்க, யாழ். குடாநாட்டு விவசாயிகளின் விளைபொருட்களும் தற்போது கள்வர்களால் களவாடப்பட்டு வருகின்றன.
நீர்வேலி, கோப்பாய் பகுதிகளிலுள்ள விவசாயிகளின் அறுவடை செய்யபட்ட வெங்காயங்களை இரவு வேளைகளில் திருடர்கள் அபகரித்துச் செல்கின்றனர். விவசாயிகள் அறுவடை செய்த வெங்காயத்தை தங்கள் தோட்டக் காணிகளில் அடுக்கி வெயிலில் உலர விடுகின்ற போது திருடர்கள் அவற்றை களவாடிச் செல்கின்றனர். இதைப்போன்று ஏனைய விளைபொருட்களும் களவாடப்பட்டு வருவதாக விவசாயிகள், தோட்டச்செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
திருடர்களிடமிருந்த தங்கள் விளைபொருட்களை பாதுகாப்பதற்காக இரவு வேளைகளில் தோட்டக்காணிகளில் காவல் கடமைகளில் தங்போது விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்து வெங்காயத்திற்கு தென்னிலங்கையில் தற்போது அதிக வரவேற்பு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.