யாழ்ப் பாணத்திலுள்ள வெளிச்ச வீடுகள் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமலுள்ளதால் மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தினர் தெரிவித்துள்ளனர்.
யாழ். குடாக்கடலில் உள்ள வெளிச்ச வீடுகள் கடந்த பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாமல் உள்ளதாகவும், போர் முடிவிற்கு வந்ததன் பின்னரான சூழலில் தற்போது இரவு வேளைகளிலும் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வெளிச்ச வீடுகள் சீரமைக்கப்படாமையால் கடலில் இரவுப் பொழுதுகளில் மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.