வேலணை வைத்தியசாலை மருத்துவமாது ச.தர்சிகாவின் சடலம் இன்று புதைகுழியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டு கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இன்று முற்பகல் கைதடி மயானத்தில் அவரது சடலம் ஊர்காவற்றுறை நீதவான் ஆர். வசந்தசேனன், யாழ், போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி, மனிதஉரிமை இல்லத்தின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் பொலிஸார் ஆகியோரின் முன்னிலையில் தோண்டியெடுக்கப்பட்டது. தர்சிகாவின் தாயார் உட்பட்ட உறவினர்களும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
தோண்டப்பட்ட சடலம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, பின்னர் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டது. கொழும்பில் சட்டவைத்திய அதிகாரியின் முன்னிலையில் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.