மட்டக் களப்பில் படையினரால் மீண்டும் வீதிச்சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை, கல்முனை, மற்றும் வெருகல் வழியாகச் செல்லும் வாகனங்கள் யாவும் இடைமறிக்கப்பட்டு சோதனையிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடத்தல், கொள்ளை முதலான குற்றச்செயல்கள் நடைபெற்று வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இவ்வீதிச்சோதனைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளபோதும், திடீரென மீண்டும் மேற்கொள்ளப்படும் இச்சோதனை நடவடிக்கைகளால் அவசரப்பயணிகள், அரசாங்க ஊழியர்கள் தங்கள் பயணத்தில் தாமதங்கள் ஏற்படுவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.