”நடிகர்கள் இலங்கைக்கு பயணிக்க முடியும்.” – தென்னிந்திய நடிகர் சங்கம் தீர்மானம்

Sarathkumar_Actorஇந்திய நடிகர், நடிகைகள் தொழில் ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியாகவோ இலங்கைக்கு பயணிக்க முடியும். இந்நிலையில் “அவர்கள் அவ்வாறு செல்வதைத் தடுக்க முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று நேற்று சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. (இது பற்றி வெளியான செய்தியும் விவாதமும் : அசின் அரசியல் – அரசியல்ரீதியில் சரியா? (Political Correctness) – அசினின் யாழ்-வன்னி விஜயமும் நடிகர் சங்கத்தின் U turn உம் )

இதேவேளை சினிமாவில் ஏற்படும் இலாப நஷ்டங்களுக்கு நடிகர்களிடம் நட்டஈடு கோர முடியாது என்றும் இந்தக் கூட்டத்தின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் நேற்று சென்னையிலுள்ள நடிகர் சங்க வளாகத்தில் கூடியது. இதில் நடிகர், நடிகையர் இலங்கைக்கு செல்வது உள்ளிட்டவை தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்துக்கு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். நடிகை அசின் இலங்கை சென்றார். இப்போது நடிகர் கருணாஸ் இலங்கை செல்கிறார். இந்திய கலைஞர்கள் இலங்கை செல்லக்கூடாது என்று தமிழுணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இவர்களின் இலங்கை பயணத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.

பிரபல கதாநாயகர்கள் நடித்த படங்கள் தோல்வி அடைந்தால் அந்த கதாநாயகனிடம் பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி தியேட்டர் அதிபர்கள் கேட்கும் நிலையும் இருக்கிறது. இதற்கு என்ன முடிவு செய்யப்போகிறது நடிகர் சங்கம் என்ற கேள்வி எழுந்தது. பரபரப்பான இந்த சூழ்நிலையில் சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கக் கூட்டம் கூடியது.

இந்த வருடத்துக்கான பொதுக்குழு கூட்டம், சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க கட்டடத்தில் நேற்று காலை நடந்தது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ராதாரவி, துணைத்தலைவர்கள் விஜயகுமார், மனோரமா, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • thurai
    thurai

    ஜிரிவி யில் ஈழத்தமிழரின் மானம், ஓர்மம் என கூறி புலம் பெயர் மக்களிடையே இனத்துவேசத்தை வளர்த்து வாழுவோர், முன்னோடியாக இனிமேல் இந்திய சினிமா நாடகங்களையும், நடிகர், நடிகைகள் வரும் விளம்பரங்களையும் புறக்கணிப்பர்களெனெ எதிர்பார்ப்போம்.

    துரை

    Reply
  • கந்தையா
    கந்தையா

    வெளிநாட்டுப் புலிகள் எல்லாம் மகிந்தாவுடன் கை குலுக்கப் போகலாம். பிசினஸ் பற்றிக் கதைக்கலாம். சேர்ந்திருந்து சாப்பிடலாம். ஆனால் இந்திய நடிகர்கள் போவதுதான் பிரச்சினை என்று அனல் பறக்க கதைப்பினம். சீமான் வைகோ தீக்குளிச்செண்டாலும் தங்கட எதிர்ப்பைக் காட்டலாமே

    Reply
  • BC
    BC

    தமிழ்நாட்டில் இருந்துகொண்டே சும்மா பேசுவதை விட, அறிக்கை விடுவதை விட இலங்கைக்கு சென்று தமிழர்களுக்கு உதவலாமே என்று அசின் போட்ட அடிதான் இவர்களின் இந்த தீர்மானத்துக்கு காரணம். புலம் பெயர் மக்களிடையே உள்ள புலி ஆதரவாளர்களினால் இந்திய சினிமா, நாடகங்கள் இல்லாமல் ஒரு நாள் இருக்க முடியாது. புறக்கணிப்பு அது இது என்பது எல்லாம் வெறும் மிரட்டல்.

    Reply