முல்லைத்தீவு நீதிமன்றம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. 23 வருடங்களின் பின்னர் முலலைத்தீவு நீதிமன்றம் இயங்கத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. முல்லை அரச செயலக கட்டடத்தொகுதியில் தற்காலிகமாக நீதிமன்றம் இயங்கத் தொடங்கியுள்ளது. வாரந்தொறும் புதன் கிழமைகளில் இந்நீதிமன்றம் முல்லைத்திவில் நடைபெறும் எனவும், ஏனைய தினங்களில் வவனியாவில் செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் இந்நீதிமன்றம் மழுமையாக முல்லைத்தீவிலெயே செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.