வேலணை வைத்தியசாலை மருத்துவமாது மரணம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வைத்தியருக்கு தமிழ் சட்டத்தரணி ஒருவரே அதி தீவிரமாக வாதாடி பிணையில் செல்ல வழிசமைத்துள்ளமை வேதனைக்குரியது என தமிழர்விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது. இது தொடர்பான செய்திக்குறிப்பொன்றை தமிழர்விடுதலைக் கூட்டணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் இரா. சங்கையா வெளியிட்டுள்ளார்.
மருத்துவமாது ச.தர்சிகாவின் மரணத்தின் சோகமும். அது குறித்த செய்திகளின் சூடும் தணியுமுன் குற்றம் சாட்டப்பட்டுள்ள வைத்தியருக்கு பிணை வழங்க வேண்டுமென யாழ்.மேல் நீதிமன்றத்தில் அதி தீவிரமாக வாதாடியுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகள் பூர்த்தியாகாத நிலையில் தமிழ் சட்டத்தரணியான இவர் கொலை சந்தேக நபரான வைத்தியருக்காக வாதாடி பிணை பெற்றுக் கொடுத்துள்ளார் என்றால் அவரின் சட்டவாதத்திறமையை எண்ணி பெருமைப்படுவதா வேதனைப்படுவதா அல்லது வெற்கித் தலை குனிவதா என்று தெரியவில்லை. எத்தனையோ அப்பாவித் தமிழர்கள் விசாரணைகள் எதுமின்றி சிறைகளில் வருடக்கணக்கில் வாடும்போது அவர்களுக்காக இந்த சட்டத்தரணி ஏன் தனது வாதத்திறமையை பயன்படுத்தக் கூடாது?
தர்சிகாவின் மரணம் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என தொலைபேசி மூலமும், நேரடியாகவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக தர்சிகாவின் தாயார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே சம்பந்தப்பட்ட வைத்தியர் தமிழ் சட்டத்தரணியின் வாதத்திறமையால் பிணையில் சென்றுள்ளார்.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
rohan
இதில் என்ன தவறு இருக்கிறது?
தமது தொழில் நெறி விழுமியங்களுக்கு இணங்க சட்டத்தரணி வாதாடியிருக்கிறார். அதிதீவிரமாக வாதாடி என்பது தேவையற்ற விளக்கம். ஒரு பணியைக் கையில் எடுத்தால் சரியாக முடிப்பது தானே சரி? எடுக்காமல் விட்டிருக்கலாம் என்பது வேறு கதைஎடுத்த பின் அரை குறையாக நடாத்த வேண்டும் என்றா கூட்டமைப்பு எதிபார்க்கிறது?
பிரக்கிராசி அப்புக்காத்து பாரம்பரியத்தில் வந்தது தானே கொங்கிரஸ், தமிழரசு, தமிழர் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு?
thiruparan
இரா.சங்கையா கோகிலாம்பாள் கொலைவழக்கில் எதிரிக்காதரவாக வாதாடியவரகள்தானே உங்கள் கூட்டணிக்காரர்.
இப்ப என்ன தொழில் போட்டியா?
Ck
பொங்குதமிழ் கணேசலிங்கத்தின் வீட்டு வேலைக்காரச் சிறுமி கணேசலிங்கத்தினால் கற்பழிக்கப்பட்ட வழக்கின் கூட்டமைப்பு ஸ்ரீகாந்தா தலைமையில் தமிழ் சட்டத்தரணிகள் தானே வாதாடி கணேசலிங்கத்தை பிணையில் விடுவித்தார்கள். அப்போது இந்த இரா.சங்கையா இந்த உலகில் வாழவில்லையா? அவரவர் தங்கள் தொழிலை செய்கின்றார்கள். அதில் தமிழர் என்ன சிங்களவர் என்ன.
shangaralingam
இந்த காலகட்டத்திலும் தமிழன் சிந்திக்காமல் இருக்கின்றான் என எண்ணும் போது விரக்திதான் முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் பின்பும் எமது உறவுகளை அழித்த மகிந்தவின் கட்சிதான் யாழ் மாநகரை ஆளுகின்றது.பாராளுமன்றத்திற்கு மூன்று உறுப்பினாகள் மகிந்தவின் கட்சிக்காராகள்தான். தமிழ் மக்களே முள்ளிவாய்காலில் எமது இனம்அழிக்கப்பட்டதற்கு அங்கீகாரம் கொடுத்துவிட்டார்கள்.பாவம் பணத்தாசைபிடித்த சட்டத்தரணி என்னசெய்வார்? ஒட்டுமொத்த தமிழாகள் அழிந்தபோதே வேடிக்கை பார்த்தவாகள் நாங்கள். ஒரு தர்சிகா செத்தால் நமக்கென்ன. தமிழனே சிந்திப்பாயா?
BC
சங்கரலிங்கத்தின் விரக்தியே தமிழன் சிந்திக்க தொடங்கிவிட்டான் என்பது தான். தொடர்ந்தும் தமிழ் மக்கள் அழிந்து தலைவரை காப்பாற்றியிருந்தால் திருப்த்தியா இருந்திருக்கும்.
பார்த்திபன்
இப்ப இரா.சங்கையா என்ன சொல்ல வாறார்? மறைமுகமாக கூத்தமைப்பிலுள்ள அப்புக்காத்துமார் எதற்கும் இலாயக்கில்லாதவர்கள் என்று ஒப்புக் கொள்கின்றாரா? இவர:கள் ரோசமுள்ளவர்களாக இருந்தால் தர்சிகாவின் வழக்கில் ஆயராகி தமது திறைமையை நிரூபிக்கலாமே?
பார்த்திபன்
BC,
மிகச் சரியாகச் சொன்னீர்கள். தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் வரை இழுத்துச் சென்று தம்மைப் பாதுகாக்க புலிகள் முயற்சித்ததையும், இதனாலேயே பல்லாயிரக் கணக்கான மக்கள் இறக்க நேரிட்டதையும் சங்கரலிங்கம் போன்றோர் கண்டு கொள்ளவே மாட்டார்கள். சமீபத்தில் எரிக் சொல்கெய்ம் விட்ட அறிக்கையைப் பார்த்தும் இவர்களுக்கு புத்தி வராமல், மற்றவர்களுக்கு புத்தி சொல்ல வெளிக்கிட்டது தான் காலத்தின் கொடுமை.
chandrabose
சங்கரலிங்கம் சொன்னதும் உண்மை. அவர் சொல்லாமல் விட்டஉண்மை முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் செத்துக்கொண்டிருந்தபோது அதை தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பில் இருந்தும் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தமிழ்த்தேசியகூட்டமைப்பு தலைவர்களுக்கும் வாக்களித்துள்ளார்கள்.
ஆக எம் இனத்தை அழித்தவர்களுக்கும அழித்ததை வேடிக்கை பார்த்தவர்களுக்கும் வாக்களித்துள்ளார்கள். இதற்கெல்லாம் காரணம் உலகத்தில் உள்ள எத்தனையோ சக்திமிக்க தலைவர்களின் பேச்சை கேட்காமல்விட்ட ஒரே மனிதன் பிரபாகரன்தான்
முள்ளிவாய்க்காலில் செத்தது தமிழன் என்றால் இந்த இரண்டு கட்சிக்கும் வாக்களித்தவர்கள் தமிழர்கள் அல்ல. வாக்களித்தவகர்ள் தமிழர்கள் எனறால் செத்தவர்கள் தமிழர்கள் அல்ல. பச்சைத்தமிழன் வாக்களிப்பில் கலந்துகொள்ள வில்லை. யாழ் மாவட்டத்தில் வாக்களித்தவர்கள் தமிழ் எழுத பேச வாசிக்க தெரிந்த ஒரு இனமே தவிர அவர்கள் தமிழர்கள் அல்ல.