முதற் கட்டமாக கிளிநொச்சி நகரத்திற்கும் நகரத்தை அண்டியுள்ள சில கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதும், இன்னமும் குறிப்பிட்டவாறு மின்சாரம் வழங்கப்படவில்லை என்பதை கிளிநொச்சிப் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்த்த போது புரிந்து கொள்ளக்கூடிதாகவுள்ளது. கிளிநொச்சி நகரில் ஏ-9 பாதைக்கு அண்மையாகவுள்ள வணிக நிறுவனங்கள் சிலவற்றிக்கே தற்போது மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய பகுதிகளுக்குள் மின்சார இணைப்புகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றதே தவிர இன்னமும் மின்சாரம் வழங்கப்படவில்லை. ஒரு பிரதேசத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையான தேவை மின்சாரம் என்பது தெரிந்த விடயமே. ஆனால், அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வது மிக முக்கியமானது என்பதும் பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.