இந்தியா விஜயம் செய்துள்ள தமிழ்தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் நேற்று (July 7 2010) இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியையும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சந்தித்து பேச்சுவார்தைகளை நடத்தினர். இதன்போது, தமிழ்மக்கள் தங்களின் அரசியல் உரிமைகளைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி உரிய தீர்வினைப் பெற இந்தியா உதவ வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை அரசாங்கம் தமது படைக்கட்டுமானங்களுக்காக தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பு செய்வதைத் தடுக்கும் படியும் கோரப்பட்டுள்ளது. வடபகுதியில் சுமார் ஒரு இலட்சம் வரையிலான படையினர் நிலைகொண்டுள்ள நிலையில், அவர்களின் குடும்பங்களை வடபகுதியில் குடியேற்றும் திட்டத்துடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என கூட்டமைப்பு இந்தியாவிடம் தெரிவித்துள்ளது.
போரினால் பாதிப்பற்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வது, தமிழ் மக்கள் தங்களுக்கான அரசியல் உரிமைகளுடன் சுதந்திரமாக வாழ்வது என்கிற இரு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் தாம் கவனத்தில் எடுப்பதாக கூட்டமைப்பிடம் இந்திய அமைச்சர்கள் உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாகவே 50 ஆயிரம் வீடுகளைக் கட்டித்தர இந்தியா முன்வந்துள்ளதாகவம் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், மன்னார் – இராமேஸ்வரம், ஊடான கடல்வழிப் போக்குவரத்து, யாழ்ப்பாணத்திற்கான புகையிரதப் பாதை, காங்கேசன்துறை அபிவிருத்தி முதலான இந்தியாவின் கரிசனைகளுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு இந்தியாவுடன் ஒத்துழைக்கும் எனவும் கூட்டமைப்பு இந்திய அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளது.
இத்தகவல்களை இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள கூட்டமைப்பின் குழுவில் அங்கம் வகிப்பவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க கூட்டமைப்பின் குழுவினர் கடந்த ஞாயிறு (july 04 2010) இந்தியா புறப்படுவதற்கு முன்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்தார் எனத் தெரியவந்துள்ளது. ஆனால், இச்சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
indiani
நீங்கள் இலங்கை அரசின் அங்கத்தினர் இலங்கை பாராளுமன்றத்தின் உறுப்பினர் ஆனால் உங்களுக்கு ஏன் இந்திய பாராளுமன்றத்தின் உறுப்பினர்களின் உதவி தேவைப்படுகின்றது நீங்கள் இவ்வளவு காலமும் நாட்டில் என்ன செய்தீர்கள் ? ஏன் உங்களால் உங்கள் நாட்டில் உங்கள் பிரச்சினைகளை தீர்துதக்கொள்ளமுடியாது? அப்போ ஏன் பாராளுமன்னறத்திற்கு தெரிவாகினீர்கள்?
பதில் வருமா?
chandran.raja
தேசியக்கூட்டமைப்பு அரசியல் மலடுகள் அல்லது அரசியல் கோளைகள். இவர்களின் கடந்தகால வரலாறுகளே! சாட்சியங்கள்.
வன்னிக்கு போய் ஆலோசனை கேட்கப்போக வேண்டியவர்கள் வன்னி சிற்றரசு தரைமட்டமாக்கப் பட்டு நிர்மூலமாகப்பட்டதால் இந்தியா போனார்கள். நாளை நியூயோக் லண்டனில் இருந்து அழைப்பு வந்தால் இந்தியாவையும் உதாசீனப்படுத்த தயங்கமாட்டார்கள். இவர்களின் அரசியலுக்கு (ரெளடித்தனத்திற்கு) எப்பவும் ஒரு சண்டியன் தேவைப்படுவார்கள். தற்போதைக்கு இந்தியாவை சண்டியன் ஆக கையாளுவதே! இவர்களது மறைமுகநோக்கம்.
தமிழ்மக்களுக்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் எவ்வளவு அழிவுகளை ஏற்படுத்தினாரோ அதற்கு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை இவர்களது அரசியல். இவர்களையிட்டு மக்கள் நெருப்பை மடியில் கட்டிவைத்திருக்கிற விழிப்புடனையே! இருக்கவேண்டும்.
T Sothilingam
ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படியே தான் ஒவ்வொரு விடயமும் நடந்து கொண்டிருக்கிறது அந்த நிகழ்ச்சி நிரலின்படியே இந்த இந்த இந்திய விடயமாக உள்ளது இப்படியாக போய்விட்டு வந்த ரிஎன்ஏ யினர் விடும் ஒவு;வொரு அறிக்கைகளும் ரிஎன்ஏ அல்லது ரெலோ செல்வம் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகளை செய்துள்ளதாக மக்களுக்க படம் காட்டப்படுகின்றது இதுவும் தமிழ் மக்களை ஏமாற்றும் வித்தையாகவே பார்க்க முடியும்.
இன்று வரையில் ரிஎன்ஏ அல்லது ரெலோ தமிழ் மக்களின் அரசியல் தீர்வு என்ன? என்று என்ன சொல்லியுள்ளது?
அகதி முகாம்களில் உள்ள மக்களுக்கு ரிஎன்ஏ ரெலோ செய்த உதவிகள் என்ன? அறிக்கைகள் வெளிவருமா?
மக்களுக்காக ஒரு போராடிய இயக்கம் பெரிய இயக்கம் என்றெல்லாம் பெருமை பேசிய இயக்கம் ரெலோ ஒரு தொண்டர் அணியை கூட உருவாக்கவில்லை இந்த அகதி மக்களின் நிலை தொடர்பாக என்ன முன்னெடுப்புக்கள் செய்யப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துமா?
இன்னும் சில முறை நீங்கள் இந்தியாவுக்கு போய்வருவீர்கள் வந்து என்ன சொல்லுவீர்கள் என்றும் இப்போதே எழுத முடியும்
இனிமேல் மக்களுக்கு என்ன உதவிப்பணிகள் செய்வோம் எந்தக்காலப்பகுதியில் என்ன பணிகள் முடிப்போம் என்று உங்கள் பட்டியலை வெளிப்படுத்துங்கள்!! உங்களால் இரண்டு தமிழ் பிள்ளைகள் நன்மை பெற்றாலும் அது மிகப்பெரியதாகவே இன்றுள்ளதை மறந்துவிட வேண்டாம்.
மக்களுக்காக சேவையாற்றுங்கள் பாராளுமன்ற கதிரைகளுக்காகவே கூட்டணியினர் இருந்தனர் என்று குற்றம் சாட்டியே கூட்டணியைவிட மேலதிகமாக சரியாக மக்களுக்காக போராடவே ரெலோ/ ஈபிஆர்எல்எப்/ஈரோஸ்/புளொட் உருவானது அந்த கருத்தை மறந்துவிட்டால் நீங்களும் கூட்டணியா? அல்லது கூட்டணியைவிட மோசமானவர்களா?
Sampanthan
Dear Indiani
The reason TNA went to INDIA
We all Tamil political party’s TELO, EPRLF, PLOTE, EROS, ENDLF,EPDP all accept the INDO –LANKA agreement and give up the arms Strule and enter into main stream politics. Sri Lanka had not kept its promise on the Tamil problem India has a duty as the guarantor of the Indo-Sri Lanka Agreement, to get Sri Lanka to implement the 13th Amendment in full. “It’s nothing new. Sri Lanka had pledged to implement it,”
Sampanthan- London Telo branch
T Sothilingam
Be pragmatic and move on, India tells TNA July 9, 2010, 12:00 pm
by S Venkat Narayan, Our Special Correspondent
NEW DELHI, July 9: India has advised visiting Tamil National Alliance (TNA) parliamentarians to accept the current realities in Sri Lanka, to be pragmatic, to move on, and work sincerely with President Mahinda Rajapaksa’s government to find an enduring political solution to the ethnic problem.
A six-member TNA team led by R. Sampanthan arrived here on Sunday evening, met several top Indian leaders, called on Prime Minister Dr Manmohan Singh on Thursday, and flew back to Colombo tonight.
TNA MP Appadorai Vinayagamoorthy told The Island this afternoon: “We are thoroughly satisfied with our visit to India, and with our talks with the leaders and officials here.”
“The Indian government has assured us that it will work along with the TNA. Fourteen of the 18 MPs elected from the Northern and Eastern provinces belong to TNA. We are the true representatives of the Tamil people,” he asserted.
The TNA MP said: “We depend hundred per cent on India for help to find a political solution acceptable to our people. We will be happy if President Mahinda Rajapaksa gives us what India thinks is reasonable.”
Vinayagamoorthy said: “Prime Minister Dr Singh advised us to take along with us the Muslims, the upcountry Tamils and others and work unitedly with President Rajapaksa to evolve a solution to the Tamil problem. We told him we will try to do so.”
Apart from meeting Dr Singh, the TNA team called on External Affairs Minister SM Krishna, Home Minister Palaniappan Chidambaram, Finance Minister Pranab Mukherjee and met Foreign Secretary Mrs Nirupama Rao.
Sri Lankan High Commissioner to India Prasad Kariyawasam hosted a dinner for the team. Appreciating the gesture, the MPs told the envoy: “We are honoured to be invited by you. We are happy to attend your dinner as Sri Lankan parliamentarians.”
This is perhaps for the first time that the Sri Lankan high commissioner here hosted a dinner for MPs from the North and East ever since the LTTE began its bloody campaign for Eelam, a separate state for the island’s minority Tamils, in 1983.
The Island understands from people who interacted with the TNA MPs that, in the wake of the LTTE’s defeat in the so-called Eelam War IV in May last year, President Rajapaksa’s impressive re-election for a second term, and the near two-third majority that his coalition garnered in the parliamentary election early this year, the visitors appeared to be coming to terms, slowly but definitely, with the changed political realities in Sri Lanka today.
One such source told The Island: “The Indians advised them to get real and drop the rhetoric and the mindset of the 1970s and 1980s. The Sri Lanka of today is very different from what it was three decades ago. Instead of fighting amongst themselves, the island’s Tamils should now unite and negotiate a pragmatic deal with President Rajapaksa. They should work with this President because he appears to be making a sincere effort to solve the ethnic problem for good.”
Another source said the delegation conveyed to the Indians their three main concerns, namely:
1. The high-security zones in Jaffna should be cut considerably if they cannot be dismantled completely;
2. The rehabilitation and resettlement efforts should be speeded up so that the internally displaced Tamils can go back to their original homes and resume their normal lives; and
3. The extensive presence of the all-Sinhala army in the Jaffna peninsula should be reduced drastically if it cannot be removed completely.
The Tamil MPs’ Indian interlocutors and the Sri Lankan diplomats they interacted with have assured them that the Rajapaksa government is taking suitable steps to address these concerns.
The other four members of the delegation are: Selvam Adaikalanathan, Mavai Senathiraja, M. A. Sumandhiran and Suresh Premachandran.
http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=1729
Anonymous
OH YA UNTIL RAGAL GANDI GRANDSON COMES PM, THEY WILL SPEAK ALL NONSENSE AND PUBLIC STATMENTS TRY INTO STOP THIS NOW.TAMIL PEOPLE VERY SMART THEY THROUGH YOU OUT VERY SOON, WHEN WILL STOP GOING INDIA TALK THAT IS POINT TAMIL GETING START THERE OWN HEAD