லிற்றில் எய்ட் காயப்பட்ட படைவீரர்களுக்கு இன்ரநெற் மையம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது

Panangoda_Internet_Centreலிற்றில் எய்ட் வடக்கு கிழக்கில் தமிழ் சார்ந்த உதவித் திட்டங்களை மேற்கொள்ளும் அதேசமயம் தெற்கிலும் சில உதவித் திட்டங்களை முன்னெடுக்கின்றது. யூன் 22 2010ல் காயமடைந்த படைவீரர்களுக்கான இணைய மையம் ஒன்றை லிற்றில் எய்ட் ஏற்பாடு செய்து வழங்கி உள்ளது. பனாங்கொட இராணுவ முகாமில் காயமடைந்துள்ள படைவீரர்களுக்கே இந்த இணைய மையம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சியும் வழங்கப்படுகின்றது.

இதேநாள் காயப்பட்ட படைவீரர்களுக்கான பரா விளையாட்டப் போட்டிகளும் நடைபெற்றது. இதற்கு லிற்றில் எய்ட் பிரதிநிதிகளான ரி கொன்ஸ்ரன்ரைன் நிமால் காரயவாசம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு இருந்தனர்.

Panangoda Internet Centre - formal Hand Overலிற்றில் எய்ட் ஆல் வழங்கப்பட்ட உதவிகளுக்கு லெப் கேணல் போகொல்லாகமா தனது நன்றியைத் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் காயப்பட்ட படை வீரர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர்களுக்கு இது தொடர்பான மேலதிக பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.

முன்னாள் குழந்தைப் போராளிகள்லிற்றில் எய்ட் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு இசைக் கருவிகளை வழங்கியும் வெவ்வேறு உதவிகளை மேற்கொண்டு இருந்தனர். அம்பேபுச தடுப்பு முகாமில் இருந்து அம்முன்னாள் போராளிகள் பின்னர் பம்பலப்பிட்டி இந்துக் கல்லுரிக்கு மாற்றப்பட்டு இருந்தமை அறிந்ததே. http://littleaid.org.uk/sites/littleaid.org.uk/files/Ambepusse_Project_Little_Aid.pdf

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

 • DEMOCRACY
  DEMOCRACY

  இப்படிப்பட்ட உறவுகள்தான் பிளொட் இயக்கத்தின் ஆரம்பகால கொள்கையாக இருந்தது!. இலங்கை அரசாங்கத்தின் உதவியில்லாமல் உதவிகள் சாத்தியமில்லை. இதில் “வெஸ்டட் இன்டரஸ்” புகாமல் இருந்தால் சரி!. புண்பட்ட தன்னுடைய “அங்கத்திற்கு” மருந்து தடவுவதற்கு மற்ற அங்கங்களுக்கு ஒவ்வாமை ஏற்ப்படுமா என்ன?!.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  பழைய தமிழரசியல் வாதிகளும் புலிகளும் நாட்டை கூறுபோட்டு சுகம் அனுபவித்துக் கொண்டு மக்களுக்கு துன்பத்தையே கொடுத்தார்கள். இதில் நாடு சீரழிக்கபட்டதும் அல்லாமல் மேற்குலகத்திற்கு காட்டிக்கொடுக்கவும் தலைப்பட்டது.
  மகிந்தா ராயக்சாவின் துணிகர அரசியல் முடிவினாலேயே இன்று இந்தநிலை ஏற்பட்டிருக்கிறது.இல்லையேல் இன்றும் வடக்குகிழக்கின் ஏதோ ஒருபகுதியில் மரணவீடுகள் விமான குண்டுவீச்சுக்கள் கிளமோர் குண்டுவெடிப்புகள் தற்கொலைத் தாக்குதல் நடந்து கொண்டேயிருக்கும்.பாம்புக்கடியும் பட்டினிசாவும் இன்னும் பலபத்தாயிரம் பேரை காவு கொண்டிருக்கும்.

  தமிழ்மக்கள் இலங்கையை தமது தாய்நாடாகக் கொள்ளவேண்டும். எத்தனையோ தமிழ்பெண்கள் சிங்களமகனை திருமணம் செய்திருக்கிறார்!. எத்தனையோ தமிழ்மகன் சிங்கள பெண்களை திருமணம் செய்திருக்கிறார்கள்!. தமிழ்தேசிய கூட்டமைப்பின் அம்பாறை பாராளுமன்ற உறுப்பினர் பியசேனா யார் அவர் இருஇனத்திற்கும் இடையில் வந்த இலங்கைத் தீவின் மைந்தன் அல்லவா? இந்த வகையிலேயே “லிட்டில்எயிட்டின்” சேவையும் கணக்கிடவேண்டியுள்ளது.

  இராணுவவீரர் என்பவன் எமதுநாட்டின் பாதுகாவலனே!. நாட்டில் பற்றுள்ளவன் நாட்டுமக்களிலும் பற்றுள்ளவனாக இருக்கிறான்.மக்களில் பற்றுள்ளவன் இராணுவத்திலும் பற்றுள்வானக இருக்கிறான். பலபத்து வருடங்களாக விலைமதிக்க முடியாதவை கூடவிலையாக கொடுத்துவிட்டோம். பாரதயுத்தத்தின் இறுதிநாட்களான முள்ளிவாய்கால்களே நினைவுக்கு வருகிறது. இது மறக்கக் கூடியது ஒன்றல்ல. நினைவில் என்றும் இருந்து கொண்டேயிருக்கும் வன்னிவிவசாயிகள் பட்டபாட்டை எண்ணி.
  புலிஇயக்கம் எறும்பு தோலை உரித்துக்காட்டி யானையை வரவழைத்தது. இனிநாம் இதையத் தோலை உரித்துக்காட்டி ஞானத்தை வரவழைப்போம். அதற்கு “லிட்டில்எயிட்” மையப்புள்ளியாகட்டும்.

  Reply
 • தாசன்
  தாசன்

  “… இனிநாம் இதையத் தோலை உரித்துக்காட்டி ஞானத்தை வரவழைப்போம். அதற்கு “லிட்டில்எயிட்” மையப்புள்ளியாகட்டும்….”

  அப்படியே ஆகட்டும். ஆனால் இப்போது வந்த செய்தியின் படி கொழும்பில் தமிழர்களைப்பதிவு செய்யும் ‘ஞானம்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதை ‘இதயத்தோலை உடித்துக்காட்டி’ கேட்ட மேல்மாகாண திரு குமரகுருபரனுக்கு டி.ஐ.ஜி H.M.D Herath சொன்ன பதில் மேலிட உத்தரவு என்பதாக இருந்தது!

  Reply
 • தாசன்
  தாசன்

  “….இப்படிப்பட்ட உறவுகள்தான் பிளொட் இயக்கத்தின் ஆரம்பகால கொள்கையாக இருந்தது!. ….” Democracy.
  ஆரம்பகாலக்கொள்கை மட்டுமல்ல தொடர்ந்தும் இருந்தது. ஆனால் ஸ்ரீலங்கா அரசுடன் ‘தமிழர் பிரச்சினையில்’ இடது சாரிகளும் ‘கைகோர்ப்பார்கள்’ என்கின்ற் கசப்பான உண்மையை புளொட் உணர்ந்து கொண்டது. இதில் இன்று இனவாதம் கக்கும் டயான் ஜெயதிலகாவின் நட்பு வரலாறு பிரசித்தம்.

  ’….இலங்கை அரசாங்கத்தின் உதவியில்லாமல் உதவிகள் சாத்தியமில்லை…’
  இலங்கை அரசாங்கமே ‘உதவிகள்’ வேண்டுமென்று கையேந்திக்கொண்டிருக்கிறது!

  ”….இதில் “வெஸ்டட் இன்டரஸ்” புகாமல் இருந்தால் சரி!. புண்பட்ட தன்னுடைய “அங்கத்திற்கு” மருந்து தடவுவதற்கு மற்ற அங்கங்களுக்கு ஒவ்வாமை ஏற்ப்படுமா என்ன?!….”
  லிற்றில் எய்ட் ‘வெஸ்ரேன் இண்டஸ்ற்” உள்ள அமைப்பிடம் காசு வாங்கி சிறீலங்காவில் உதவி செய்கிறார்களே? ஜாதிக ஹெல, ஜே வீ பி போன்றோர் ஐ.நாவையே குறை சொல்கிறார்கள்!

  Reply