திருகோணமலை மொறவேவ பகுதியில் 16 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரின் சடலம் எரிக்கப்பட்ட நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவியான இச்சிறுமி சில நாட்களாக காணாமல் போயிருந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்சிறுமி காணாமல் போன சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்திருந்தனர்.
அச்சந்தேக நபர் தடுப்பிலிருந்து தப்பிச்சென்று விட்டார் இந்நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சந்தேகநபர் தப்பிச் சென்றமைக்கு பொலிஸ் அதிகாரிகள் யாருடையதும் உடந்தை இருந்ததா என்பது குறித்து விசேட பொலிஸ் அணி ஒன்று விசாரணை நடத்தி வருகின்றது.