வவுனியா உள்ளிட்ட பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிய நடமாடும் சேவை ஒன்று யாழ். தெல்லிப்பழை புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் இச்சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.யூ.குணசேகர, பிரதி அமைச்சர், அமைச்சின் அதிகாரிகள் இச்சேவையில் கலந்து கொள்ளவுள்ளனர். புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெற்றோர். உறவினர்கள் தங்கள் பிரச்சினைகளை இதன் பொது முன்வைத்து, அவற்றுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்.அரசஅதிபர் கே.கணேஸ் அறிவித்துள்ளார்.