எழுத்தாளர் ஊக்கவிப்பு மையம் ஆண்டு தோறும் வழங்கும் தமிழியல் விருதுக்கு படைப்பாளிகள் தங்கள் ஆக்கங்களை அனுப்பிவைக்கும் படி கேட்கப்பட்டுள்ளது. ‘தமிழியல்விருது – 2010’ இற்கே படைப்பாளிகளிடமிருந்து ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன.
இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வாழும் படைப்பாளிகள் 2009 ஜனவரி தொடக்கம், டிசெம்பர் 31வரை வெளிவந்த தமது ஆக்கங்களை அனுப்பிவைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாவல், சிறுகதை, கவிதை, குழந்தை இலக்கியம், நாடகம், அறிவியல், ஆய்வியல், வரலாறு, பழந்தமிழ் இலக்கியம், மொழிபெயர்ப்பு, இனமத நல்லறவு இலக்கியம். தொழில்நுட்பம், என பல்துறை சார்ந்த நூல்களையும், சுமார் 30 நிமிடம் வரை ஒளிபரப்பக்கூடிய குறுந்திரைப்படங்களின் இறுவட்டுக்களையும் தேர்வுக்காக அனுப்பி வைக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் 13 நூல்களுக்கும், மூன்று குறுந்திரப்படங்களுக்கும், இலக்கிய மேம்பாட்டிற்கு உரமிட்ட மூத்த படைப்பாளி ஒருவருக்கும் பொற்கிழியுடன் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும். படைப்பாளிகள் தங்கள் பெயர் முகவரி, தொலைபேசி இலக்கம் உட்பட்ட விபரங்களை குறிப்பிட்டு சுயமாக தயாரிக்கப்பட்ட விபரப்பட்டியலுடன், ஆக்கங்கள் நூல்களாயின் அவற்றின் நான்கு பிரதிகளையும், இறுவட்டாயின் இரண்டு பிரதிகளையும், இணைத்து 10.08.2010 இற்கு முன்னர் அனுப்ப வேண்டும். ஒரு படைப்பாளி எத்தனை படைப்பாக்கங்களையும் அனுப்பலாம். விருது வழங்கும் விழா இவ்வருடம் ஒக்டோபர் மாதம் நடைபெறும்.
ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : ஓ.கே.குணநாதன், மேலாளர், எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, மட்டக்களப்பு இலங்கை. தொலைபேசி- 0776041503.