வடக்கில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு சிமெந்து பக்கற்றுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு குடும்பத்திற்கு எட்டு பக்கற் என்கிற அளவில் இவை வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 45ஆயிரத்து 415 குடும்பங்களுக்கு 3 இலட்சத்து 63 ஆயிரத்து 385 சிமெந்து பக்கற்றுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மீளக்குடியமர்த்தபட்ட குடும்பங்களுக்கே இவை வழங்கப்பட்டுள்ளன. இச்சிமெந்து மக்கற்றுக்கள் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டவை என்பதும், அப்பக்கற்றுக்களில் இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்பு என பொறிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மீள்குடீயெற்றத்திற்கான இந்தியாவின் உதவியைப் பெற்றுக்கொண்டிருந்தனர். இந்திய அமைச்சர் ப சிதம்பரம் 50 000 மீள்குடியேற்ற வீடுகளை அமைப்பதற்கான உதவிவை நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கே வழங்கப் போவதாகவும் அறிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த உதவித்திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்த சிமெந்துப் பக்கற் வழங்குவது இடம்பெறுவதாக அறியமுடிகிறது. வீடுகட்டுவதங்கான ஏனைய பொருட்களும் கட்டம் கட்டமாக வழங்கப்படும் எனவும் அறிய முடிகிறது. மீள்குடியேற்ற வீடமைப்பிற்கான இந்திய உதவி பொருட்களாகவே வழங்கப்படும் எனவும் தெரியவருகின்றது.