நேற்று (Jnue 6 2010) மிருசுவில் பகுதியில் எற்பட்ட விபத்தொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். ‘தினக்குரல்’ பத்திரிகையின் அச்சு இயந்திர இயக்குநரான, யாழ்ப்பாணம் இளவாலையை வசிப்பிடமாக் கொண்ட பேரம்பலம் ஜெயசந்தர் (வயது 32) என்பவரே விபத்தில் பலியானவராவார்.
மிருசுவில் ஏ-9 விதியில் இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இவரது மோட்டார் சைக்கிலும், இலங்கைப் போக்குவரத்து பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலேயே இவ்விபத்து எற்பட்டது. பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் வீதிப் போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்ற போதும். வீதிகளில் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் உட்பட அனைத்து வாகனங்களின் சாரதிகளும் அவற்றைக் கவனக்குறைவாக செலுத்தி வருகின்றமையை அவதானிக்க முடிகிறது.