கூட்டமைப்பினர் இந்திய மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா செல்லவுள்ளனர்.

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியா செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தாவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், எஸ்.சுமந்திரன், அ.விநாயகமூர்த்தி, மாவை சேனாதிராஜா ஆகியோர் கடந்த செவ்வாய்க் கிழமை இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது. இதன் போது இந்திய அரசுத் தலைவர்களுடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இப்பேச்சுவார்த்தைகள் எப்போது நடைபெறும் என்கிற விபரங்கள் இன்னும் முடிவாகவில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • chandran.raja
    chandran.raja

    சம்பந்தன் கோஷ்றியின் அலைச்சல் பிடித்த போதாத காலம். தேசியத்தலைவர் இல்லாததால் வந்த வினை எனக்கொள்ளவேண்டியது தான். அல்லது தேசியத்தலைவரை விட மதிநுட்பம் வாய்தவர் எனவும் கொள்ளலாம்.
    இந்திய அரசுக்கு இலங்கையரசுக்கு மற்றய தமிழ்கட்சிகளுக்கு தமிழ்மக்களுக்கு தகடு கொடுக்கிற வேலையாகவும் இருக்கலாம். கூட இருக்கிற மாவைசேனாதி அடைக்கலம் சுரேஸ் போன்றவர்களுக்கு காத்தாடி கிலுகிலுப்பை பலூன் முட்டாசு வாங்கிகொடுத்து கோடைநாட்களை ஜாலியாய் ஊர் சுற்றிவரலாம்.
    டில்லிக்கு ராசாவாக இருக்கவேண்டிய சம்பந்தன் தமிழ்மக்களுக்கு கிடைத்தது பாக்கியமே! நாங்கள்தான்-தமிழ்மக்கள் வேறு ஒன்றும் எதிர்பார்க்கக் கூடாதுதான்.

    Reply
  • பல்லி
    பல்லி

    பேசதான் போறாங்க ஆனால் பேசமாட்டாங்க எல்லாமே காலம் கடந்த மருத்துவமே கூட்டமப்பினது;

    Reply