யாழ். கொக்குவில் பொற்பதி வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் கணவன் மனைவி உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்றிரவு (June 27 2010) 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகனம் ஒன்றில் வந்த இனந்தெரியாத சிலர் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை வாளால் வெட்டிவிட்டு சென்றுள்ளனர்.
மண்கும்பானைச் சேர்ந்த ப.சாந்தலிங்கம், (வயது60) அவரது மனைவி (வயது 44) ஆகியோரே வாள்வெட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதே வேளை, நேற்றிரவு மது போதையினால் ஏற்பட்ட வாகன விபத்து மற்றும், குழு மோதல்களினால் காயமடைந்த 7பேர் யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.