தமிழ் கட்சிகள் சில பொது உடன்பாடு ஒன்றை காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் நேற்று (June 27 2010) தொலைபேசியில் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக தமது கட்சி கூடி ஆராய்ந்து முடிவெடுக்கும் என இரா.சம்பந்தன் தெரிவித்ததாகவும் தெரியவருகின்றது. இதேவேளை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் முன்னணியினரையும் இதில் இணைத்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதன் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என். டக்ளஸ் தேவானந்தா, தமிழர்விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (வரதர் அணி) சார்பில் என். சிறிதரன், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு சார்பில் எம்.கே. சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா, சிறிரெலோ சார்பில் எஸ்.உதயன், ஈரோஸ் சார்பில் பிரபா ஆகியோர் பொது இணக்கப்பாட்டிற்கான சந்திப்பு ஒன்றை கொழம்பில் மேற்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Related News: இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பொது உடன்பாடு காண்பதற்காக தமிழ் கட்சிகள் கொழும்பில் ஒன்றுகூடின.
chandran.raja
தமிழ்மக்களுக்கு “தமிழ் தேசியக்கூட்டமைப்பு” எவ்வளவு அபாயகரமானது என்பதை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா புரியவைத்துள்ளார். “முகமூடி கிழிக்கப்படும்” “முகமூடிகிழிக்கப்படும்” என்று பத்திரிக்கை இணையத்தள மூலம் அநேகர் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த முகமூடி கிழிக்கப்படுவதும் யதார்தமாவது.. அந்தகாட்சியை கண்டு தரிசித்து கொள்வதும் இங்கு தான்.
மாவை சேனாதிராஜாவின் பேச்சில்லிருந்து-“அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் டக்கிளஸ் தேவானந்தாவின் அழைப்பு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” ஆகா இதுவல்லாவா கடந்த கடந்தகால சுயபுராணங்களையும் வெளிக்கொண்டு வருகிறது. எழுபது வீத சிங்களமக்களுடன் முப்பதுவீத தமிழ்மக்கள் சகோதரத்துவ மனப்பான்மையுடன் வாழமுடியாது என்பதையல்லவா?அர்த்தப்படுத்துகிறது.
ஓம் நீங்கள் தமிழ்மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள் தான். தமிழ்மக்களின் மேட்டுக்குடியை சோந்தவர்கள் என்பதையும் நாம் அறிவோம். சேர்ந்து-கூட்டுவாழ்வுக்கு நீங்கள் உதவுபவர்கள் இல்லை என்பதையும் அறிவோம். பிரிவினைமூலமே பிடித்தமான வாழ்வை ஏற்படுத்திக் கொள்ளமுடியும் என்ற உங்கள் சிந்தையையும் அறிவோம். தனக்கு மூக்கு அறுபட்டாலும் எதிரிக்கு சகுணம் பிழையாக இருக்கவேண்டும் என்பதையும் அறிவோம். இது இப்படியிருக்க… முப்பது வருடசாக்காட்டு வெள்ளத்தில் நீந்தி கரைசேர்ந்த மக்கள் இதை பொறுமையாக இருந்து வேடிக்கை பார்ப்பார்களா? என்பதையே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
Silambu
இனிக் கூடிமுடிவெடுத்துத்தான் என்ன செய்யப்போறியள். ஏறக்குறைய எல்லாத்தையும் முடிச்சுப்போட்டீயள். இனி வெளிநாட்டிலும் பிடுங்க வெளிக்கிடப்போறியள் போலை கிடக்கு.
சந்திரன் ராஜா அப்ப தமிழ்மக்கள் முப்பது வீதம் இல்லை. நாங்கள் இப்ப 18வீதம்.