கொழும்பு மாநகரசபை கலைப்பு

cmc.jpgகொழும்பு மாநகரசபை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண முதல் அமைச்சர் இந்த அறிவிப்பை  நேற்று விடுத்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகரசபை கலைக்கப்பட்டதும் அதன் நிர்வாகம் விசேட ஆணையாளரொருவரின் கீழ் கொண்டுவரப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபைத் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவுடனான சுயேச்சைக்குழு வெற்றியீட்டி அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்த போதிலும் மிகக் குறுகிய காலத்துக்குள் அதன் நிர்வாகம் குழப்பகரமான நிலைக்குத்தள்ளப்பட்டதையடுத்து மாநகர சபையைக் கலைக்காமல் நிர்வாகத்தை இடைநிறுத்தி விசேட தலைமை அதிகாரியின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *