இலங்கையில் பயங்கரவாதத்தைத் தோற்கடித்த இராணுவ வெற்றியைக் கொண்டாடும் முகமாக நாளை பொதுவிடுமுறைத் தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்தார்.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதைக் கொண்டாடுவதற்காக நாளைய தினம் விசேட ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.