யுத்தத் திற்குப் பின்னரான நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஜப்பானிய அரசாங்கம் தொடர்ச்சியாக ஒத்துழைப்புகளை வழங்குமென்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷி தெரிவித்தார்.
இதற்கமைய இந்த வருடத்தில் மொத்தமாக 39 பில்லியன் யென்களை நிதியாக வழங்குவதாக அவர் குறிப்பிட்டார். அரசாங்கத்துடன் முழு அளவில் ஆலோசனைகளை நடத்தியே இந்த நிதியை வழங்குவதாகவும், தனிப்பட்ட குழுவுக்கோ, சமூகத்துக்கோ அன்றி நாட்டின் தேசிய நலனையும் தேவைகளையும் கருத்திற்கொண்டே உதவுவதாகவும் அகாஷி கூறினார்.
வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு மாத்திரமன்றி தென்பகுதி தேவைகளைப் பூர்த்தி செய்யவும் ஜப்பான் ஒத்துழைக்குமென்றும் ஜப்பானிய விசேட தூதுவர் குறிப்பிட்டார். ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள யசூசி அகாஷி நேற்றுக் காலை (16) வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் வெளிவிவகார அமைச்சில் அவருடன் கூட்டாக செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டார்.
சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை நீண்டதூரம் பயணித் துள்ளதாகக் கூறிய அகாஷி, நல்லிணக்கக் குழு அமைத்துள்ள மையை வரவேற்பதாகக் கூறினார். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத் துவதற்கான செயற்பாடுகளுக்கு ஐக் கிய நாடுகள் சபையின் பங்களிப் பினைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக வெளிவிகார அமைச்சர் பீரிஸ¤டன் கலந்துரையாடியதாகவும் அகாஷி குறிப்பிட்டார்.
சுகாதாரம், கல்வி, உட்கட்ட மைப்பு துறைகளை மேம்படுத்தி ஜப்பானிய அரசு தொடர்ச்சியாக ஒத்துழைப்புகளை நல்குமென்று தெரி வித்த அவர், சந்திப்புகள், விஜயங் களை முடித்துக்கொண்டு எதிர்வரும் 20ஆம் திகதி இறுதி செய்தியாளர் மாநாட்டை நடத்தி மேலதிக விபரங்களை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.
20ஆவது தடவையாக இலங்கைக்கு வந்துள்ள யசூஷி அகாஷியுடன் ஜப்பானிய தூதுக் குழுவினரும் வருகை தந்துள்ளனர்.