பளைப் பகுதியில் பாதுகாப்புக் கடமையிலீபட்டு வந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் பாம்புக் கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இவரது சடலம் நேற்றிரவு (June 15 2010) யாழ்ப்பாண மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு, மரண விசாரணையின் பின் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்காக இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
பளை இராணுவ முகாமில் ஆறாவது படைப்பிரிவில் கடமையாற்றிய பதுளையைச் சேர்ந்த ரட்ணாயக்க முதியான்சிலாகே புஸ்பகுமார (வயது 35) என்ற இராணுவ வீரரே உயிரிழந்தவராவார். தற்போது மக்கள் மீள்குடியற்றப்பட்டு வரும் பளைப் பகுதியில் பல பொதுமக்களும் பாம்புக்கடிக்கு இலக்காகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, இலங்கையில் வருடம் ஒன்றிற்கு 60 ஆயிரம் பேர் பாம்புக்கடிக்கு உள்ளாகின்றனர் என்றும் அவர்களில் 20 ஆயிரம் பேர் மட்டுமே வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக வருகின்றனர் என்றும், வருடம் ஒன்றில் 100 பேர் வரையிலானோர் பாம்புக்கடியினால் உயிரிழக்கின்றனர் என்றும் பேராதெனிய மருத்துவபீடத்தின் பேராசியர் எஸ்.ஏ.எச். குலரத்ன தெரிவித்துள்ளார்.
வி~சப்பாம்புகள் கடிப்பதனால் எற்படும் மரணங்களைத் தவிர்க்கும் வகையில் தேசிய செயற்திட்டமொன்றைச் செயற்படுத்த சகாதார அமைச்சும், மட்டுப்படுத்தப்பட்ட சூழல் மன்றமும் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் நாடு முழுவதும் விழிப்பணர்வு கருத்தரங்குகளை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. பாம்புக் கடிக்குள்ளானவர்களை உடனடியாக அரசாங்க மருத்துவமனைகளில் சேர்ப்பதன் மூலம் உயிரழப்புக்களைத் தவிர்க்க முடியும் என சுகாhதர அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
Related News:
வன்னியில் மீள்குடியேறும் மக்கள் பாம்புகளின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
பாவம் பார்த்த பாலகியையும் விட்டு வைக்காத பாம்பு – ஆனமடுவயில் நேர்ந்த பரிதாபம்