லசித் மாலிங்கவின் அபார பந்து வீச்சில் இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றி

srilanka-cricket.jpgஆசியக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்று இலங்கையில் ஆரம்பமானது. நேற்றைய முதல் நாள் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

இரவு பகல் ஆட்டமாக தம்புள்ளை ரன்கிரிய விளையாட்டரங்கில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி தலைவர் குமார் சங்ககார முதலில் துடுப்பெடுத்தாட தீர்மாணித்தார். இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 09 விக்கெட்டுகளை இழந்து 242 ஓட்டங்களை பெற்றது.

கடந்த முத்தொடர் போட்டியின் போது சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டில்சான் மற்றும் தரங்க ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். இப்போட்டியிலும் சிறப்பாக பிரகாசிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதும் தரங்க 11 ஓட்டங்களுடன் அக்தரின் பந்து வீச்சில் சல்மான்பட்டிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து டில்சானும் 18 ஓட்டங்களுடன் முஹமட் அசிப் பந்து வீச்சில் உமர் ஹமினிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ஜெயவர்த்தன மற்றும் சங்ககார ஆகியோர் நிதானமாக துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கை வழுப்படுத்தினர். இதில் சங்ககார 42 ஓட்டங்களுடன் அப்ரிடியின் பந்து வீச்சியில் உமர் ஹக்மாலிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் ஜெயவர்த்தன 54 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தன் மூலம் தனது 53 ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.

சகல துறை ஆட்டகாரரான ஏஞ்சலோ மெத்யூஸ் தொடர்ந்து தனது சிறப்பான துடுப்பாட்ட மூலம் விக்கெட் இழப்பின்றி 55 ஓட்டங்களை பெற்று தனது 5ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். மேலும் தொடர்ந்து களமிறங்கிய ஏனைய வீரர்கள் 20க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தானின் பந்து வீச்சில் நீண்டகாலத்துக்கு பிறகு அணியில் இணைந்த சொயிப் அக்தர் 3 விக்கெட்டுகளை கைப்ப்ற்றிருந்தார்.

243 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 47 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 226 ஓட்டங்களை பெற்று 16 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பாகிஸ்தான் துடுப்பாட்டத்தில் ஆரம்பமே மிகவும் மோசமான நிலையை கண்டது. இலங்கை அணி வீரர் லசித் மாலிங்கவின் அதிரடியான பந்து வீச்சால் பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டம் கண்டு போனார்கள். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஹசேன் 11 ஓட்டங்களுடனும்இ சல்மான் பட் ஓட்டம் எதுவும் பெறாது மாலிங்க பந்து வீச்சில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

அணியின் மோசமான நிலையை அறிந்து தொடர்து களமிறங்கிய அணி தலைவர் சையிட் அப்ரிடி அதிரடியாக துடுப்பெடுத்தாடி 7 ஆறு ஓட்டம் 08 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 109 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அப்ரிடியின் சதம் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கைகொடுக்கவில்லை. இலங்கை அணியின் பந்து வீச்சில் மாலிங்க சிறப்பாக பந்து வீசி 05 விக்கெட்டுகளை கைப்பற்றிருந்தார்.

இப் போட்டியில் ஆட்டநாயகனாக அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி தலைவர் சையிட் அப்ரிடி தெரிவு செய்யப்பட்டார். போட்டி முடிவினையடுத்து இலங்கை அணி 02 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Kannan
    Kannan

    லசித் மாலிங்க என்பது மாகாலிங்கம் என்பதில் இருந்து வந்ததே. சிவனை லிங்கமாக வணங்குபவர்கள் இந்துக்கள். மாலிங்க அல்லது மகாலிங்கம் என்பது பெரிய லிங்கம் என்பது பொருள். லிங்க என்பது சமஸ்கிருதச் சொல்லாகும். இங்கே வேற்றுமைகளை விட்டுவிட்டு ஒற்றுமைகளைப் பாருங்கள். இந்துக்களாக இருந்து பின் பெளத்தர்களாக மாறி பின் இந்துக்களாக மாறியவர்கள் வடக்குக் கிழக்குத் தமிழர்கள். இதற்கு இந்தப் பெயரும் ஒரு உதாரணமே.

    Reply