மைதா னத்தில் அதிக இரைச்சலை ஏற்படுத்தும் தென்ஆப்பிரிக்காவின் பாரம்பரிய இசைக்கருவியான உவுசலாவுக்கு தடை விதிக்க ‘பீபா’ ஆலோசித்து வருகிறது.
உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவின் பாரம்பரிய இசைக்கருவியான உவுசலாவை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் எடுத்து வருகின்றனர். மைதானத்தில் இவர்கள் எல்லாம் சேர்ந்து ஊதித்தள்ளும் போது கடும் இரைச்சல் ஏற்படுகிறது என்று டி.வி.ஒளிபரப்பாளர்களும் வீரர்களும் புகார் செய்தனர்.இதனால் உவுசலாவுக்கு தடை விதிக்க ‘பிபா’ ஆலோசித்து வருகிறது.
இது குறித்து உலக கோப்பை போட்டிக் குழு தலைவர் டேனி ஜோர்டான் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் ”உவுசலா பற்றி புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் ரசிகர்களின் உற்சாகத்தை குறைக்கும் முடிவுகள் எடுப்பதில் சற்று தடுமாற்றம் ஏற்படுகிறது” என்று கூறியுள்ளார்.
BC
//மைதானத்தில் இவர்கள் எல்லாம் சேர்ந்து ஊதித்தள்ளும் போது கடும் இரைச்சல் ஏற்படுகிறது//
ரிவியில் பார்க்கும் போதே எரிச்சலை ஏற்படுத்துகிறது. நேரில் பார்க்கும் விளையாட்டுகாரர்கள், ரசிகர்களுக்கு எப்படியிருக்கும்! FIFA நல்ல முடிவு (தடை விதிக்க FIFA ஆலோசித்து வருகிறது) விரைவாக எடுக்க வேண்டும். எப்படியானாலும் பொங்கு தமிழ் இதை விட மோசமானது தான்.