வர்த்தகர்களிடமிருந்து பணம் வசூல்; 5 உத்தியோகத்தர்கள் வேலை நீக்கம்

வர்த்தகர்களிடம் சட்ட விரோதமாக பணம் வசூலித்த குற்றத்திற்காக நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஐந்து உத்தியோகத்தர்கள் உடனடியாக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி ஐவரையும் உடனடியாக வேலை நீக்கம் செய்யுமாறு கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அதிகார சபைத் தலைவர் ரூமி மர்சூக்கைப் பணித்துள்ளார். மேற்படி ஐவரும் அநுராதபுர மாவட்டத்தின் பதவிய சிறிபுர, பராக்கிரமபுர மற்றும் கெப்பித்திகொல்லாவ பகுதிகளில் வர்த்தகர்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலித்துள்ளனர்.

இவர்களை பதவிய பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையின் உத்தியோக த்தர்கள் என்பது உறுதி செய்யப்பட்ட பின் அதிகார சபை அவர்களை வேலை நீக்கம் செய்துள்ளது. இவர்கள் வவுனியாவிலுள்ள நுகர்வோர் விவகார அதிகார சபைக் கிளையில் பணிபுரிந்தவர்களாவர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • pahee
    pahee

    இதுபோல அம்பாரை பகுதியில் பல திமிங்கலங்கள் கிடக்கின்றன. மாவட்ட நிர்வாகம் தொடங்கி கிராம நிருவாகம் வரை. எப்படி தப்புவணத என்று மக்கள் மட்டுமல்ல உத்தியோகத்தர்களும் தவிக்கிறார்கள். இதனையும் உரியவர் காதுக்கு போட்டால்
    நாளை
    நல்லது நடக்கும்..
    எல்லாருக்கும்…….
    எப்பவும்….
    முடியுமா?

    Reply