அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடிப்பதற் கான பிரேரணை 68 மேலதிக வாக்குகளால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
பிரேரணைக்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
தமிழ்க் கூட்டமைப்பு, ஐ. தே. க, ஜனநாயக தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன. ஐ. தே. க எம்.பி. ஏ. ஆர். எம். ஏ. காதர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்.