சர்வதேச விசாரணை நடத்துவதற்கான அவசரம் எதுவும் இல்லை: கெஹலிய

kahiliya.jpgஇலங் கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதால் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதற்கான அவசரம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
யுத்தத்தின் பின்னரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ள நிலையில், நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உமைகள் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை தொடர்பாக சர்வதேச விசாரணை அவசியம் என்று வலியுறுத்தியதை அடுத்தே ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • rohan
    rohan

    அவசரம் என்றாரா அவசியம் என்றரா?

    ஒரு குழுவை அழைத்து தமது நேர்மையைக் காட்டலாமே?

    Reply
  • NANTHA
    NANTHA

    நவனீதம் பிள்ளை முன்னர் போரைநிறுத்தி புலிகளை காக்க முற்பட்டு மூக்குடைபட்டவர். புலிகளின் பிரச்சாரத்தை அப்படியே அறிக்கையாக வாசித்து அசடு வழிந்தவர். யூஎன் என்றால் “சர்வ” வல்லமை படைத்தது அல்ல.

    புலிகள் போன்ற மோசமான கொலைகாரர்களை அழித்தது மனித உரிமைக்கு எந்த வகையில் சம்பந்தம்?

    நவனீதம் பிள்ளை ஈராக் ஆப்கானிஸ்தானுக்கு போய் வேலை செய்யலாம்!

    ஆயுதம் விற்பனை செய்யும் கும்பல்கள் “மனித உரிமை” என்கிறார்கள்!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    1945 ம் ஆண்டு யுத்தம் முடிவுற்றவேளை ஒரு சில பணமுதலைகளுக்கு மேலும் முதலைகள் ஆவதற்கு ஒரு உலக ஒழுங்குமுறை தேவையாக இருந்தது. அதற்கு பல அமைப்புகளை ஏற்படுத்தினார்கள். இந்த பத்தில் ஒன்றே ஐ.நாடு சபையும். பஞ்சம் பசி யுத்தம் என்றால் அது “அது உன் தலைவிதி” ” ஆண்டவனின் கிருபை” போன்ற வார்த்தைகள் புழக்கத்தில்-நடைமுறையில் ஏன்? உலகச் சட்டமாகவும் ஆக்கப்பட்டது.
    இன்று உலக ஒழுங்கமைப்பு அல்லது சமநிலை காலியாகிவிட்டது. ஐரோப்பிய அமெரிக்கரை விட ஆசியாவிலேயே இதற்கு விசுவாசமானவர்களை தேடிப்பிடிப்பதும் உரையாற்ற மேடைக்கு தள்ளிவிடுவதும் உசிதமானதுஎன கண்டுகொண்டதே இந்த முதலாளித்துவ அமைப்பு.
    நவநீதம்பிள்ளை ஆசியாவையும் ஆபிரிக்காவையும் ஒன்றிணைக்கிற நல்ல சுங்கான். விடுமா?மனிதத்தை விலை பேசி வாங்கிய முதளைகள் அல்லது மூலதனம். நவனீதம்பிள்ளைகள் உரைகள் எல்லாம் நன்றிக்கடனுக்கு ஓப்பானதே. வாங்கிய சம்பளத்திற்கு உரை நிகழ்த்துகிறர். இதில் எதை நாம் பகிர்ந்துணரப் போகிறோம்?.

    Reply
  • Ajith
    Ajith

    புலிகள் போன்ற மோசமான கொலைகாரர்களை அழித்தது மனித உரிமைக்கு எந்த வகையில் சம்பந்தம்?
    Mr Nantha,
    Lasatha is not a LTTE. He was murdered because he exposed the corruption of Rajapakse. Don’t you think the murder should be punished. Hundreds of Sinhala journalists were murdered, unlawfully abducted by Rajapakse. Can you tell how many murders Rajapakse has to do to consider him as a terrorist.

    Reply