யாழ்ப் பாணத்தில் இம்முறை வெசாக் பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது,
‘யாப்பா படுனை தஹம் அமாவை’ என்ற தொனிப்பொருளில் இம்முறை பாரிய அளவில் வெசாக் கொண்டாட்டத்தை நடத்துவதற்கு யாழ் பாதுகாப்பு படைகளின் தலைமையகம் திட்டமிட்டுள்ளது. பயங்கரவாதத்தை முடிவுக்குக்கொண்டு வந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக வெசாக் பண்டிகை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று 27ம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த வெசாக் பண்டிகை எதிர்வரும் 30ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம், கோட்டை, துரையப்பா விளையாட்டரங்கு மற்றும் யாழ். நூலகம் ஆகிய பிரதேசங்கள் உள்ளடங்கிய பகுதி விசேட வெசாக் வலயமாக பிரகடனப்படு த்தப்பட்டுள்ளது. பல்வேறு ஜாதக கதைகளை விவரிக்கும் தோரணங்கள், வெசாக் கூடுகள், தான சாலைகள் என்பன நிர்மாணிக்கப்பட்டு ள்ளதுடன் தமிழில் பக்தி கீதங்களை இசைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.