18 வருடங்களின் பின்னர் குடியமர அனுமதிக்கப்பட்ட தாராகுளம் மக்கள். தங்கள் பிரச்சனைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளனர். யாழ்.நகரத்தின் மத்தியில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த தாராகுளம் மக்கள் தற்போது அப்பகுதியில் குடியேறி வாழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் நேற்று (24-05-2010) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
அமைச்சரின் யாழ பணிமனையில் நடைபெற்ற சந்திப்பில் மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். தொடர்ந்து சுமார் பதினெட்டு வருடங்கள் அப்பகுதியில் வசிக்காத நிலையில். வீட்டு உறுதிகளை இழந்த குடியேற்றத்திட்ட உரிமையாளர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கும், சேதமடைந்துள்ள தங்கள் வீடுகளை புனரமைப்பதற்கும் உரிய உதவிகளை செய்து தருமாறு அம்மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டுக்கொண்டனர்.
இது தொடர்பாக கவனம் செலுத்திய அமைச்சர் யாழ்.பிரதேசச் செயலர் மற்றும், வீடமைப்பு அதிகாரசபையின் யாழ்.பிராந்திய உதவிப் பொது முகாமையாளர் அகியோருடன் தொடர்பு கொண்டு விபரங்களைக் கேட்டறிந்து கொண்டதுடன், தாராகுளம் குடியேற்றத்திட்ட மக்களின் கோரிக்கைகள் விரைவில் தீர்த்து வைக்கப்படும எனவும் உறுதியளித்துள்ளார்.