கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப் பட்டிருக்கும் பகுதிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று திங்கட்கிழமை சென்று பார்வையிடவுள்ளது.12 எம்.பி.க்கள் கொண்ட குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மல்லாவி, புதுவெட்டுவான், ஐயன்குளம், துணுக்காய் ஆகிய இடங்களில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்தனர்.
அங்கு மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் துன்ப, துயரங்களையும் தேவைகள், குறைகளைக் கேட்டறிந்து கொண்டனர்.நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக யாழ்.மாவட்ட எம்.பி.மாவைசேனாதிராஜா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தெரிவித்தார்.
palli
//கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப் பட்டிருக்கும் பகுதிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று திங்கட்கிழமை சென்று பார்வையிடவுள்ளது//
நல்லது ஆனால் அதைவைத்து உங்கள் அரசியலை வளர்க்காமல் அரசிடம் கேட்டோ அல்லது கேக்காமலோ அந்த மக்களுக்கு சிறிதாவது உதவுங்கள்; அடைக்கலநாதன் இருக்கும் வீட்டின் பெறுமதி நாலு கோடிரூபா; இது இவரது வீடல்ல ஆனால் விரைவில் இந்த வீடு இவருக்கு
சொந்தமாக போவதாக தகவல், இது என் இங்கு?? என யாரும் கேக்கலாம்; உங்களுக்கு மாளிகைகள் வேண்டும்போது உங்களை தேர்வு செய்த மக்களுக்கு குடிசைகளுக்காவது ஒழுங்கு செய்யுங்கள் என்பதுக்காக ஒரு சிறிய தகவல்,