தற்போது மீளக்குடியமர்த்தப் படுவதற்காக எஞ்சியுள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் முல்லைத்தீவுப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலிகள் தம்மிடமிருந்த அனைத்து மிதி வெடிகளையும் இப்பகுதியிலேயெ புதைத்துள்ளனர் எனவும். இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தள்ளார். இதன் காரணமாகவே மக்களை அப்பகுதிகளில் மீள் குடியமர்த்துவது தாமதமாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்பகுதிகளில் மிதிவெடிகளை அகற்றுவதற்கு 1200 இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும், முழுமையாக மதிவெடிகள் அகற்றப்படாமல் மக்கள் அங்கு மீள்குடியமர்த்தப்பட மாட்டார்கள் எனவும் ஊடகவியலார்கள் எவருக்கும் அப்பகுதிகளுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாதெனவும் தெரிவித்தள்ள அவர், நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களை ஊடகவியலாளர்கள் சென்று பார்வையிடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.