முகாம்களிலுள்ள மக்களை பார்க்க தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அனுமதி மறுப்பு! : விஸ்வா

Wanni_IDP_Campவவனியா ‘மெனிக் பாம்’ முகாமிலிருக்கும் மக்களை பார்வையிட தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். நேற்றுக் காலை (22-05-2010) கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அதன் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் செட்டிக்குளம் ‘மெனிக்  பாம்’ முகாமிற்குச் சென்ற போது அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை எனவும், சுமார் ஒரு மணி நேரம் முகாம் நுழைவாயிலில் காத்திருந்து விட்டு திரும்பிச்செல்ல நேரிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகதிகளுக்குச் சென்று அம்மக்களுடன் நேரடியாக உரையாடி பிரச்சினைகளை  அவதானித்தும் வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று வவுனியாவில்  இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களிலுள்ள மக்களைப் பார்வையிட அங்கு சென்றனர். ஆனால், முகாமின் உள்ளே செல்ல பாதுகாப்புத்தரப்பினரால் அனுமதி மறுக்கப்பட்டது.

தாங்கள் கொழும்பிலிருந்த புறப்படுவதற்கு முன்பாகவே வவுனியா முகாம்களைப் பார்வையிடுவது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியதுடன், ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்கவிடம் தொலைபேசியில் உரையாடியதாகவும் குறிப்பிட்ட சம்பந்தன் தாங்கள் அங்கு செல்வதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது என லலித் வீரதுங்க தங்களிடம் வாய்மொழியாக உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.  வவுனியா முகாமிலுள்ள அதிகாரிகள் உள்ளே செல்ல அனுமதி மறுத்தயடுத்து சம்பந்தர் உடனே ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபொது, அரை மணிநேரத்தில் தாம் பதிலளிப்பதாகக் கூறினார். அரை மணி நேரத்திற்குப் பின்னர் அவருடன் தொடர்பு கொண்ட போது, தொலை பேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதை லலித் வீரதுங்க தவிர்த்ததாகவும் கூட்டமைப்பினர் தெரித்துள்ளனர்.

இதே வேளை, இது குறித்து ஊடகத்துறை அமைச்சர் கருத்தத் தெரிவிக்கையில் இடம்பெயர்ந்த மக்களின் நலன்புரி முகாம்களுக்குச் செல்லும் போது முன்னனுமதி பெற வேண்டும் எனவும், ஆனால், கூட்டமைப்பினர் அவ்வாறு எதனையும் பெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். முகாமிற்குள் செல்வது குறித்து ஏற்கனவே ஒரு நடைமுறை உள்ளது. பாதுகாப்பு அமைச்சருக்கு அறிவித்து அது தொடர்பான அனுமதியைப் பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

36 Comments

 • Sampanthan
  Sampanthan

  TNA asks the government to continue food rations for the Northern IDPs

  Sri Lanka’s Tamil National Alliance (TNA) has called on the government to extend the validity of ration cards issued to the internally displaced persons (IDPs) living in welfare camps in Vavuniya. The TNA had made this request since there are widows and disabled people among the IDPs in the Northern camps. The request follows a visit by several TNA parliamentarians led by its parliamentary group leader R. Sampanthan to the camps in Vavuniya yesterday (21). TELO Leader and TNA Wanni District parliamentarian Selvam Adikalanathan has noted that the government had announced its decision to stop the food rationing for the IDPs from next month, while the people living in these camps were facing so many problems. Adikalanathan has further observed that the people did not have houses to live in or a livelihood and has therefore requested the government to continue with the food rationing.

  Reply
 • ram
  ram

  வவுனியா முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் உண்மையான நிலைமைகள், பிரச்சினைகள் வெளியுலகுக்கு தெரிவதை தடுக்கும் நோக்கில் எம்மை அகதி முகாம் மக்களை சந்திக்கத் தடைவிதித்திருக்கலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு உதயனுக்குத் தெரிவித்தார்.

  வவுனியா மே23
  வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா “மனிக் பாம்’ முகாமில் தடுத்துவைக்கப் பட்டிருக்கும் தமிழ்அகதிகளைச் சந்திக்கவென, நேற்று அங்கு சென்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் பன்னிரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கதவடைப்புச் செய்யப்பட்டது. “பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவின் பிரகாரம் எவரும் முகாமுக்குச் செல்லமுடியாது” என்று வன்னிப் படைகளின் தளபதி கைவிரித்து விட்டார். இந்த விவரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னர் மாவை சேனாதிராசா நேற்றிரவு உதயனுக்குத் தெரிவித்தார்.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  முகாம்களில் அடைபடுவதற்கு புலிகளின் முதுக்குபின் இருந்து பல காரியங்களை ஆற்றியிருக்கிறார்கள் இந்த தேசியக் கூட்டமைப்பினர். இவர்கள் சும்மா ஒரு போடுதடிகள்தான். இவர்கள் அந்த அவலப்படும் மக்களை பார்வையிடாது போனால் ஏதும் பெரிதாக குறைவந்துவிடப் போவதில்லை. சிலவேளைகளில் பார்வையிடாமல் இருப்பதே அந்த மக்களுக்கு பலன் தருவதாகயிருக்கும்.

  சம்பந்தன் தலைமையிலான இந்த கோமாளிகளுக்கு எப்படி தமிழ்மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இருக்கும் பிரச்சனைகளை இந்த அகதிகளை வைத்து எப்படி? சூதாடமுடியும் என்பதே. ஜனநாயகரீதியில் தெரிவுசெய்யப்பட்டார்கள் என்பது உண்மையே. இது ஒருசார் தமிழ் மக்களின் பிற்போக்கு தனத்தையே வெளிப்படுத்துகிறது.

  2009 மேமாதம் 19 ம் திகதிவரை தாம் என்ன செய்தோம் என்ற பட்டியலை அந்த அகதிமுகாம் மக்களுக்கு எடுத்துச் செல்வார்களா?.

  Reply
 • sinna 16
  sinna 16

  //ஜனநாயகரீதியில் தெரிவுசெய்யப்பட்டார்கள் என்பது உண்மையே. இது ஒருசார் தமிழ் மக்களின் பிற்போக்கு தனத்தையே வெளிப்படுத்துகிறது.// நல்லா.முற்போக்கு.

  Reply
 • Sampanthan
  Sampanthan

  இனப்பிரச்சினைக்கான தீர்வுக்குரிய கரிசனையை இந்தியா காட்ட வேண்டும் : ததேகூ _
  வீரகேசரி நாளேடு 5/24/2010 8:33:41 AM

  தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தரத்தீர்வு தொடர்பில் சர்வதேச நாடுகள், விசேடமாக இந்தியா தனது கரிசனையை உரியமுறையில் வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு வெளிப்படுத்தினால், அதனை பரிசீலிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு இலங்கை தள்ளப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

  தீர்வுத்திட்டங்கள் இதுவரைகாலம் சறுக்கிச் சென்றமைக்கு பிரதான காரணம், இனவாத சிந்தனையேயாகும் என்று கூறியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சர்வதேச மும் இந்தியாவும் சரியானமுறையில் அழுத்தங்களை பிரயோகிக்குமானால் இனவாத சிந்தனைகள் களையப்படுவதுடன் தீர்வுக்கான வழியும் பிறக்கும் என்றும் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்து.

  இலங்கை இந்திய உடன்படிக்கையை மீண்டும் அமுல்படுத்துமாறும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் இந்திய ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியிருப்பதாக சிங்கள ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

  இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

  “தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு முற்றுப் பெறாதிருப்பதற்கும் தசாப்த காலங்களாக அது இழுத்தடிக்கப்பட்டு வருவதற்கும் இனவாத சக்திகளின் போக்குகளே காரணமாக அமைந்திருக்கின்றன.

  இலங்கை இந்திய உடன்படிக்கையின் பிரகாரம் அது சீரான முறையில் முன்னெடுக்கப்பட்டிருக்குமானால் பிரச்சினை இன்றைய அளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்காது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

  அதில் உள்ளடக்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்களை இனவாதம் கொண்ட பெரும்பான்மைக் கட்சிகள் வலுவாக எதிர்த்து வருகின்றன.

  தமது சிந்தனைகளை நியாயப்படுத்துகின்ற வகையில் தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் இனவாத அமைப்புக்கள் அதிகாரப் பகிர்வுடனான தீர்வு என்ற விடயத்தில் சிங்கள மக்களிடத்தில் இனவாதத்தை விதைத்து வருகின்றன.

  சம உரிமையே தேவை

  ஜே. வி. பியும் இவ்விடயத்தில் அதே போக்கைக் கடைப்பிடித்து வருகின்றது.

  தமிழ் மக்களைப் பொறுத்தவரை பெரும்பான்மை சமூகத்திற்கு வழங்கப்படுகின்ற உரிமைகள், சலுகைகளையே கேட்டு நிற்கின்றனர்.

  பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாதிருப்பதற்கு விடுதலைப் புலிகளும் யுத்தமும் மாத்திரமே இதுவரையில் காரணங்களாக முன்வைக்கப்பட்டு வந்தன. ஆனாலும் யுத்தம் நிறைவடைந்து புலிகள் அழிக்கப்பட்டதாகக் கூறி ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டது.

  இந்தச் சந்தர்ப்பத்திலாவது இனப்பிரச்சினைக்கான தீர்வு கிட்டி விடும் என்று எதிர்பார்த்த ஒட்டுமொத்த மக்களும் ஏமாற்றத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் தற்போது இலங்கை இந்திய ஒப்பந்தத்தை மீண்டும் முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தரப்பில் வலியுறுத்தியிருப்பதானது வரவேற்க வேண்டிய விடயமாகும்.

  இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயத்தில் உலக நாடுகள் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றன.

  இந்நிலையில் உலக நாடுகள் விசேடமாக அண்டைய நாடாகவும் தமிழர் பிரச்சினையில் உரிமையுடன் தலையிடக் கூடிய நாடாகவும் இருக்கின்ற இந்தியாவின் வலியுறுத்தல்கள், அழுத்தங்கள் மேலெழுந்த வாரியாக அல்லாது பலமானதாக அமையும் பட்சத்தில் அதிலிருந்து இலங்கை அரசாங்கத்தினால் விடுபடக் கூடியதாக இருக்காது. மாறாக அந்த அழுத்தங்களுக்கு ஆட்பட்டே தீர வேண்டிய நிலை ஏற்படும்.

  நல்ல தீர்வே வேண்டும்

  எனவே வரலாற்று ரீதியாக ஏமாற்றப்பட்டு வருகின்ற எமக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். அதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பும் உந்து சக்தியும் மிகமிக அவசியம் என்பதுடன் இனியும் அரசாங்கம் இனவாதிகளின் கருத்துக்களை கவனத்திற் கொள்ளாது ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்த எதிர்காலத்திற்கு துணையாக அமையும்.

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் நாம் இனவாதப் போக்கை கடைப்பிடிக்கவில்லை. எமது மக்களின் உரிமைக்கும் சுதந்திரத்துக்கும் பெரும்பான்மை சமூகம் அனுபவிக்கின்ற அந்தஸ்து எமக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதற்கான குரலாகவே நாம் இருக்கின்றோம்.

  எனவே அரசாங்கம் என்ற வகையில் இழுத்தடிப்புகளுக்கு முன்னுரிமை வழங்காது இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஏற்ற வழிவகைகளை உருவாக்க வேண்டும என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது.

  இவ்விடயத்தில் ஜனாதிபதியின் பங்கு அளப்பரியது என்பதை நினைவுபடுத்துவதற்கும் விரும்புகின்றோம்” என்றார்.

  Reply
 • palli
  palli

  பிற்போக்கோ அல்லது முற்போக்கோ சரிதான்; முதலில் வயிற்றுபோக்கு வராத அளவுக்காவது முகாமில் சுகாதாரம் இருக்கா??

  Reply
 • sumi
  sumi

  ஏதோ இப்போதுதான் தமிழ் மக்கள் அகதிகளாகி முகாம்களில் வாழ்வது போலல்லவா இருக்கின்றது விடயம். ஏன் 1983ல் இருந்து அகதிகளாக வாழ்ந்து வந்த மக்களை எந்த தமிழ் பாரழுமன்ற உறுப்பினராவது சென்று பார்த்து ஆறுதல் கூறியுள்ளாரா? ஏன் இந்திய ராணுவம் இலங்கையிலிருந்து வெளியேறிய பின்பு அநேகமான மக்கள் அகதிகளாகி முகாம்களில் வாழ்ந்து வந்த காலங்களில் இந்த கூட்டமைப்பு எங்கே போயிருந்தது, அல்லது என்னதான் செய்தது புலிகளுக்கு வால் பிடித்ததைத்தவிர?
  இப்போது மட்டும் என்ன அவ்வளவு கரிசனை. ஆடு நனைகின்றதாம் என ஓனாய் அழுகின்ற கதைதான் இதுவும்.பக்கா சுயநலவாதிகள்.

  Reply
 • Pandiyan
  Pandiyan

  கூட்டமைப்பின் அரசியல் பற்றி ஆயிரம் விமர்சனம் எமக்குண்டு. இங்கே செய்தியில் குறிப்பிடப்பட்டது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைப் பற்றியே. எனவே அது பற்றி சில கருத்துக்களை வைப்போம். முகாம்கள் திறந்து விடப்பட்டு விட்டன மக்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அவர்கள் தான் வேறு உதவிகள் இல்லாதபடியால் முகாமை விட்டு போகின்றார்கள் இல்லை. எல்லோரும் போய் பார்க்க கூடியதாக உள்ளது. பருப்பு போன்ற உணவுப் பொருட்கள் மலை குவித்து விடப்பட்டுள்ளது என்றெல்லாம் பலரும் வக்காலத்து வாங்குகிறார்கள். ஆனால் கூட்டமைப்பினரை மாத்திரம் உள்ளே விடமாட்டார்களாம்.

  தென்னிலங்கையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எனது அருமைச் சகோதரர்களுக்கு ஐம்பதாயிரம் கொடுக்கப்படுவதாக மந்திரி பெளசி கூறுகிறார். தானே குண்டை வீசி அகதியாக்கி விட்ட வன்னி சகோதரர்களுக்கு இருபத்தையாயிரமே வழங்கப்படுகிறது. சந்திரன்ராஜா அவர்களே இது நியாயமா?

  காணாமல் போனோர் மற்றும் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் போராட்டம் பற்றிய செய்திக்கு அட ஒருவர் கூட பின்னூட்டம் விடவில்லை. பந்து சரியாக போட்டுத்தந்தால் தானோ சிக்ஸர் அடிப்பீர்கள் தோழரே!

  ” ஒருசார் தமிழ் மக்களின் பிற்போக்கு தனத்தையே வெளிப்படுத்துகிறது.”

  இந்தக் கருத்தானது நாங்கள் சொல்லும் நபருக்கே வோட்டுப் போட வேண்டும் என்ற புலிப்பாணி அரசியலையே காட்டுகின்றது. தென்னிலங்கை மக்களும் 77 ல் ஏகாதிபத்தியங்களின் அடிவருடி ஜெயவர்த்தனாவுக்கு ஏகோபித்த வாக்கைப் போட்டது மட்டுமல்ல ரொஸ்கியவாதிகளான என்எம் பெரேரா கொல்வின் ஆர் டி சில்வா போன்றோரை தோற்கடித்ததற்காகவோ அல்லது நிக்கரகுவாவில் டானியல் ஒட்டோவாவையோ முதல் தேர்லில் தோற்கடித்தற்காகவோ நாம் அந்த மக்களை பிற்போக்குவாதிகள் என கூறக் கூடாது.

  Reply
 • NANTHA
  NANTHA

  இன்று முகாம்களில் உள்ளவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் நிலங்களில் புலிகள் புதைத்துள்ள கண்ணீ வெடிகளை நீக்கிய பின்னரே அவர்கள் மீள் குடியேற்றம் செய்யப்படுவர்.

  பாணடியனுக்கு முகாம்களை விட்டு வெளியேறும் மக்களுக்கு ஐம்பதாயிரம் ரூபா சென்ற ஆண்டு தொடக்கம் வழங்கப்படுவது தெரியாமல் இருப்பது புதினமானதுதான்.

  சம்பந்தன் கோஷ்டிக்கு இந்த “அகதிகள்” பிரச்சனை திடீர் என்று எப்படி வந்தது?

  Reply
 • BC
  BC

  முகாம்களை விட்டு வெளியேறும் மக்களுக்கு அரச உதவி கிடைக்கிறது என்பதையே வெளியே தெரியாதபடி அமுக்கிவிடுவார்கள். இலங்கை பொருட்களை புறக்கணிக்கும் படி பிரசாரம் செய்கிறார்கள். மக்களை கவருவதற்காக மிக கீழ்த்தரமான முறையில் பிரசாரம் தமிழர்களின் கலாசார காவலர்களாக தங்களை சொல்லி கொள்பவர்களால் செய்யபடுகிறது. இலங்கை பணம் இல்லாமல் முகாம்களில் உள்ள மக்கள் வெளியேறிய மக்கள் துன்பபட்டால் தமிழீழ பிரசாரத்திற்கு உதவியாக இருக்கும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  பாண்டியன்! அரசியல் முதிர்ச்சியை பற்றி கூறுவதாகயிருந்தால் சிங்களமக்களைவிட தமிழ்மக்கள் வெகுவாக பின்தங்கியே நிற்கிறார்கள். தமிழ்மக்களுக்கு தமிழ்மக்களின் போராட்ட முறையே அவர்களுக்கு அழிவை ஏற்படுத்தியது. நான் புலிப் போராட்டத்தைத் தான் சொல்லுகிறேன். இவர்களைப் பற்றி போதுமான வரை கதைத்தும் விமர்சித்தும் விட்டோம்.மேலும் இதைப்பற்றி கதைப்பது அலுப்பு சலிப்பு ஏற்படுவதற்கே வழிவகுக்கும்.

  நவீனகாலத்திற்கு சங்கஇலக்கியங்களும் கட்டடப்பொம்மன் கதைகளும் நாளாந்த வாழ்கைக்கு அரசியலுக்கு உதவுவதில்லை. இது இன்னும் நிலைமையை மோசமாக்குவதே!. யதார்தமில்லாத கற்பனையில் மெருகூட்டப்பட்டவையே. இதை தொடர்ந்து வந்ததே தமிழரசுகட்சி கூட்டணி மக்களை அழிவுக்கு கொடுத்து சாகஸங்கள் நிகழ்திக்காட்டிய புலிகளும் கூத்தைப்பும். கூத்தமைப்புக்கு சீர்யுடையில்ல. சயினட்கட்டுவதில்லை. கையில் நவீனஆயுதம் இல்லை. அவ்வளவுதான் வித்தியாசம்.

  இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இடதுசாரிகளைப் பார்த்து புலிகள் கேட்டார்கள். நீங்கள் கையில் மட்டையை வைத்து அணிவகுப்பு செய்தீர்கள் நாங்கள் நவீன ஆயுதத்துடன் எதிரியை தளத்தில் நின்று போராடி எதிரியை கதிகலங்கப் பண்ணுகிறோம். இன்று……? இந்த இடிமுழக்கத்தில் ஓடிவந்தவர்கள் தான் பத்துலட்சத்திற்கு மேற்பட்ட புலம் பெயர்தமிழர்கள். புலத்தைப் பொறுத்தவரை இவர்கள் இங்கு மலிவான கூலிகளே.
  இதில் பெரும்பான்மையாவர்கள் கஷ்ரப்பட்டு வேலைசெய்து உழைப்பவர்களே வேலைக்கு போய்வந்தால் பத்து இராணுவம் செத்தால் ஒருஇயக்கம் அழிக்கப்பட்டால் இன்று துரோகி சுடப்பட்டால் நாளைக்கு வேலைக்கு போகிற தென்பை பெற்றுவிடுவார்கள். இதைத்தான் ஒருசார் தமிழன் என்றேன்.

  ஒருலட்சத்திற்கு மேல் நடந்த லண்டன் ஊர்வலத்தில் யாராவது மக்களை விடுவிக்கச் சொல்லி பிரபாகரனுக்கு எதிராக கோஷம் வைத்தார்களா?
  இவர்களைத்தான் ஒருசார்தமிழன் என்றேன். நல்லூர் அருகாமையில் சுற்றுலாதுறை கட்டிடங்கள் வரக்கூடாதாம். புனிதம் கெட்டுவிடுமாம். யார் புனிதத்தைப்பற்றி கதைப்பது? கந்தன்கருணைக் கொலைகள் எங்கு நடந்தது. திலீபன் மரணம் எங்கு நடந்தது?. இதை பிரோகிப்பவர்களைத்தான்
  ஒருசார் தமிழன் என்றேன்.

  சிங்களவர் யாழ்பாணத்தை ஆக்கிரமித்துவிட்டார்களாம். தமிழன் உலகம் முழுக்க வீடுகட்டி கோவில்கட்டி அரசு அமைக்கலாம். சிங்களமகன் தன்னாட்டுக்குள் போய் தரிசனம் செய்து தெருவில் சமைத்துண்டு சந்தோஷம் கொண்டாட உரிமையில்லையா? இது என்ன நியாயம்?? இவர்களைத்தான் ஒருசார் தமிழர் என்றேன். தற்போதைக்கு இது போதுமானவை எனக் கருதுகிறேன் பாண்டியன்.

  Reply
 • பல்லி
  பல்லி

  //பந்து சரியாக போட்டுத்தந்தால் தானோ சிக்ஸர் அடிப்பீர்கள் தோழரே! // pandiyan
  இல்லை பந்து (தகவல்) சரியான முறையில் எமக்கு கிடைத்தால் மட்டுமே றன் எடுக்க சிந்திப்போம்; முறை கேடாய் சிக்ஸ்சர் அடிக்க புறப்பட்டு(தங்களை போல்) அவுட்டாக நாங்க என்ன ஆரம்ப ஆட்டகாரரா?? அதுசரி எம்மை சிக்ஸ்சர் அடிக்கவில்லை என ஏங்கும் நீங்கள் சில ரன்னாவது எடுக்க முயலகூடாதா?? எப்போ பார்த்தாலும் வந்த வேகத்தில் அவுட் ;

  Reply
 • thalaphathy
  thalaphathy

  பொதுவாக ஒரு நாட்டில் என்னென்ன சட்டதிட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன என்பவைபற்றி அந்நாடுகளில் சட்டத்தரணிகளாகவுள்ளவர்களுக்கு நன்கு தெறிந்திருக்க வேண்டும். இல்லாவிடில் இவர்களுக்கு சட்டத்தரணிகள் என்று பட்டம் கொடுத்த பல்கலைக்கழகங்களுக்கே பெரிய அவமானம். தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்த வகையில், அதன் தலைவர் திரு சம்பந்தன் உட்பட சில பாராளுமண்ற உறுப்பினர்கள் பிரபல சட்டத்தரணிகளே. இவர்களுக்கு இலங்கையில் என்னென்ன சட்டங்கள் நடைமுறையில் உள்ளன என்பதுபற்றி சாதாரணமானவர்களைவிட கூடுதலாகவே தெரியும், ஏனனில் இவர்கள் பலவருடங்களாக பல சட்டமூலங்களுக்கான வாக்கெடுப்பில் கலந்துகொண்டவர்கள்.

  வவுனியா அகதிமுகாம்களுக்கு உட்செல்வதற்கு என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென சம்பந்தன் ஐயாவிற்கும் அவரது குழுவினருக்கும் நன்கு தெரியும். இவைகள் தெரிந்திருந்தும் இவர்கள் வேண்டுமென்றே இந்த நடைமுறைகளை பின்பற்றவில்லை, காரணம் இவர்களுக்கு இந்த முகாம்களுக்கு உட்செல்வதற்கு உள்ளூர விருப்பமில்லை எனனில் அங்குள்ள மக்கள் இவர்கள்மீது தாக்குதல் மேற்கொண்டுவிடுவார்கள் என்ற அச்சமே. இதையே இணக்க அரசியலுக்கு தயாரக இருக்கிறோம் என்று சிலகாலமாக சொல்லிக்கொண்டிருக்கும் திரு. சம்பந்தன் ஐயா, அரசு தங்களுக்கு அனுமதி தரவில்லையென தமிழ்மக்களுக்கு புலுடா விடுவதும், தமிழ்மக்களை அரசிற்கு எதிராக திருப்பமுனைவதும்.

  இது ஒரு நல்ல கூத்து அமைப்பு என்பதும் இவர்கள் தமிழ்மக்களின் தலையில் இவ்வளவு காலமாக மிளகாய் அரைப்பதும் இப்போது அணைவருக்கும் புரியுமென நினைக்கிறேன்.

  Reply
 • rohan
  rohan

  “சிங்களவர் யாழ்பாணத்தை ஆக்கிரமித்துவிட்டார்களாம். தமிழன் உலகம் முழுக்க வீடுகட்டி கோவில்கட்டி அரசு அமைக்கலாம். சிங்களமகன் தன்னாட்டுக்குள் போய் தரிசனம் செய்து தெருவில் சமைத்துண்டு சந்தோஷம் கொண்டாட உரிமையில்லையா? இது என்ன நியாயம்?? இவர்களைத்தான் ஒருசார் தமிழர் என்றேன். தற்போதைக்கு இது போதுமானவை எனக் கருதுகிறேன்” என்கிறார் சந்திரன் ராஜா

  பெட்டிக்கடை வைத்த தீவுத் தமிழன் சரி தெருவையே விலைக்கு வாங்கிய மேட்டுக் குடித் தமிழன் சரி சொந்த முயற்சியில் தான் இலங்கை முழுவதும் போனான். வாங்கிய கடை சரி காணி சரி சொந்தக் காசில் தான் வாங்கினான்.
  புலம் பெயர்ந்த தமிழன் கூட கோயிலைக் கொம்பனியாய்க் கட்டினாலும் சரி கிட்டங்கியில் கட்டினாலும் சரி சொந்தக் காசில் தான் செய்தான். இருந்தவர்களைத் துரத்தி விட்டோ ஆயுதம் ஏந்திய காவலர்களுடனோ செய்யவில்லை. நியாயமான முறையில் காணி பெற்று கட்டிவிட்டுப் போகட்டுமே.

  தங்களுக்கு இது புரியவில்லையா? எது போதுமானது எனக் கருதுகிறீர்கள்?

  Reply
 • chandran.raja
  chandran.raja

  சொந்தகாசில் ஆயுதம்வாங்கி சொந்த இனத்தை சுட்டான் சொந்தகா ல் சொந்தஇனத்தை பரதேசியாக அலையவிட்டான் என ஏன் கூறவில்லை ரோகன்? அதையும் சேர்த்து சொந்த இனத்தின் போராட்ட வரலாற்றை எழுத வேண்டியது தானே!?. அதைதானே புலம்பெயர்நாட்டில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

  Reply
 • thalaphathy
  thalaphathy

  சரி, இவர்கள் எல்லா நடைமுறைகளையும் ஒழுங்காக பேணியும், அரசு இவர்களை முகாமிற்குல் செல்ல அனுமதிக்கவிலையென்றால், இவர்கள் அரசிற்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் வழக்கை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருக்கலாமே? அல்லது இன்னுமொருதரம் ஒழுங்கான நடைமுறைகளுடன் அந்த முகாம்களுக்கு செல்ல முயற்சித்திருக்கலாமே? – இந்த இரண்டுவிடயங்க்களையும் ஏன் இவர்கள் செய்யவில்லை?

  Reply
 • தமிழ் வாதம்
  தமிழ் வாதம்

  தலைப்புச் செய்திக்கும்,தரப்படும் பின்னோட்டத்திற்கும் உள்ள தொடர்பினை எவ்வாறு முடிச்சுப் போடுவது?
  விளங்க மறுப்பவர்களை,விளங்க இயலாதவர்களை என்னவென்று சொல்வது?

  ஒடுக்கும் பேரினவாதம் பற்றி புகழ் பாடுகிற சங்கப் புலவர்களுக்கு,வதை முகாம்கள் கண்ணில்படுமா?
  சட்டத்தையும், நடைமுறையையும் போட்டு குழப்புவர்கள் நல்ல தளபதிகளாக உருவாக முடியுமா?
  “ஐம்பதாயிரம் ரூபா” என்கிற அட்சய பாத்திரம்,எந்தக் கையேந்திபவனில் உருவி,எத்தனை பேருக்கு கொடுத்தான் மன்னன் மகிந்தா என்பதையும் சங்கப் புலவர்கள் பதியட்டும். மன்னனின் பொன்முடிச்சுகளின் வலிமை பெரியது தான். ஆனால் மனிதனாக சிந்திக்கும் திறன் அதை விட வலியது.

  Reply
 • thalaphathy
  thalaphathy

  தமிழ்வாதம்,
  கூத்தமைப்பினர் பார்த்த மற்றும் பார்க்காத இடங்களையும் மக்களையும் நான் ஏற்கனவே நேரடியாக சென்று பார்த்துவிட்டுத்தான் இங்கு பின்னூட்டம் எழுதுகிறேன். எனது வாதம் யதார்தமானதும் கற்பனைக் கலப்பற்றதுமாகும்.

  Reply
 • pandiyan
  pandiyan

  இது வரை வெளிவந்து நான் அறிந்து கொண்ட செய்திகளின்படி காணி உறுதி உள்ளவர்களுக்கு இருபத்தையாயிரம் ரூபாவும் காணி உறுதி இல்லாதவர்களுக்கு ஐயாயிரம் ரூபாவும் வழங்கப்படுகிறது என அறிந்துள்ளேன். நண்பர் புதியவனும் ஒரு சந்திப்பில் இத்தகவலை தெரிவித்திருந்தார். தவறாக நான் கூறியிருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்.

  அரசு தரப்பில் விடப்படும் குறை குற்றங்களை சுட்டிக்காட்டுவதன் மூலமே மக்களுக்கு சரியான உதவிகள் சேவைகள் போய் சேரும். அதை விடுத்து இவற்றை மறைப்பதன் மூலம் பிரபாகரன் ஆரம்பத்தில் பிழை விடும் போது கேட்காமல் இருந்து பிரபாகரன் விஸ்வரூபம் எடுத்தது போன்ற நிலை எமக்கு வந்து விடும்.

  கடந்த ஞாயிறு 16.05 10 ல் தாய் தகப்பனற்ற குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு வன்னியில் உள்ள முக்கிய அதிகாரி ஒருவருடன் (அவரது பாதுகாப்புக் கருதி பெயர் விபரங்களை குறிப்பிட விரும்பவில்லை. தேவையெனில் ஜெயபாலனிடம் தெரிவிக்கிறேன்.) பேசிய பொழுது அவர் சொன்ன எண்ணிக்கை ஒரு உதவி அரசாங்க அதிபர் பகுதியில் மாத்திரம் கிட்டத்தட்ட 600 குழந்தைகள் தாய்; தகப்பன் அற்று இருப்பதாக கூறினார். எனவே போரின் கோரத்தையும் எவ்வளவு பேர் கொல்லப்படடிருப்பார்கள் என்பதையும் உங்கள் அனுமானத்திற்கே விட்டு விடுகிறேன். மேலும் இங்கிருந்து பணம் அனுப்பிய போது அதை வன்னியில் பெற்றுக்கொள்ள கூட முடியவில்லை. ஏனெனில் வங்கிகள் இரண்டு நாட்கள் மட்டுமே திறந்திருக்கின்றன என கூறுகின்றனர்.

  கடந்த திங்கள் 17.05.10 தருமபுரம் பகுதியில் கொண்டு சென்று விடப்பட்ட மக்களுக்கு பரந்தன் எம்பிசிஎஸ் இனர் அரிசியும் பலாக்காயும் சேர்த்து அவிக்கப்பட்ட புளிக்கஞ்சி போன்ற ஓரு உணவை சொப்பிங் பைகளில் போட்டு கொடுத்தார்கள். தயவு செய்து பட்டு சேலையுடன் அகதிகளை பார்க்கப் போகும் உயரதிகாரிகள் இதை கவனிக்கவும்.

  Reply
 • Ajith
  Ajith

  Mr Chandran Raja,
  I understand you are an expert on Sri Lankan law and order system. I would like travel to Sri Lanka and to visit “Menic refugee camp”. Can you let me know under what law a a member of parliament has to obtain permission from the Secrtary of Defence to visit to a refugee camp. Is this law applicable to every one including your President. Is it the same law that is applicable to visit prisons? If you have clearly understood what Sampanthan said (not in this news item) that Gotapaya Rajapakse ordered the army chief not to allow TNA MPs. Do you think that the chief of army did not know the law of the country.
  Mr Nantha: When Rajapakse appointed you as the spokesperson for the Sinhala government. Even President Rajapakse or honourable minister Muraleetharan didn’t mention Rs 50,000. Do you mean rest of the Rs 45,000 has been paid to you or that muslim minister. I can remember you and Rajapakse maintained that there were only 70,000 people were inside Mullaitive before killing 100,000 between January and May 2009. Then it raised to 300,000.

  Reply
 • NANTHA
  NANTHA

  இங்கு “எழுதுபவர்கள்” அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று எழுதுகிறார்கள். இவர்களுக்கு இலங்கயில் தொடர்பு கொள்ள யாரும் இல்லை.

  முகாம்களை விட்டு வெளியேறுபவர்கள் 50,000 ரூபா உதவி பெறுவது சென்ற வருடம் தொடக்கம்நடை பெறும் சாதாரண விடயம்.

  5,000, உறுதியில்லை என்ற விடயங்கள் படு பொய்கள். இவற்றை அவிழ்த்துவிடுபவர்கள் அரசுக்கெதிரான கும்பல்களே தவிர வேறொன்றுமில்லை.

  அங்கு நிலம் இருப்பவர்களே வெளியேறாமல் இருக்கிறார்கள். ஏனென்றால் அரச உதவியுடன் வீடுகள் அமைக்கும் வரை காத்திருக்கிறார்கள்.

  இங்கு எழுதுபவர்கள் அரசினை “சாட” வேண்டும் என்றுநினைக்கிறார்களே தவிர அங்குள்ள மக்களின் அவலங்களை வைத்து “ஒரு” அரசியல் பண்ணவும் ஆசைப்படுகிறார்கள்.

  Reply
 • தமிழ் வாதம்
  தமிழ் வாதம்

  தளபதி!
  பா.உ.க்கள், அன்னியர்கள் யாரும் போக முடியாத இடத்தில், புகுந்து வந்தது பெருமைதான். அதற்காக பின்னோட்டம் விடாதீர்கள். உண்மைகளை வெளிக்கொணருங்கள். உதவிகள் செய்ய ஒருங்கமைப்பு செய்யுங்கள்.

  Reply
 • Ajith
  Ajith

  Suresh Premachandran, MP who visited to Vanni clearly stateed that those who were released from the camp to their villages were given just Rs. 5000 by UN along with ten tins to erect tents. All the houses of these people were completed by the Sinhala military. Can you provide any evidence to prove that state is building houses for those who don’t have land.

  These are the people who lived over 3 years under constant bombing and shelling by the Sinhala state and denied food and medicine. You know that Sinhala states since 1948 never made any compensation to those affected by the directly and indirectly by Sinhala mobs, thugs, military and politicians. Not even a sinhala thug was produced in a court for a murder or robbery since independence.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  தமிழ்வாதத்தை கீழ்த்தரமாக பிரச்சார நடவடிக்கைளில் ஈடுபடுபவர்களில் ஒருவராகவே பார்க்க முடிகிறது. அன்னியர் என்பவர் யார்? எவர்??
  பா.உ. அன்னியர்களா? இலங்கையில் பிறந்தவன் இலங்கைக்கு அன்னியமானவனா? திமிரும் கெளரவ பிரச்சனைகளுமே தமிழ்மக்களுக்கு வினையாக வந்துமுடிகிறது. முதலில் ஒரு அரசாங்கத்தில்லுள்ள சட்டங்களை மதிக்கப் பழகவேண்டும். அனுமதியெடுத்தே முகாமுக்குள் நுழையமுடியும் என்கிறது சட்டம். அனுமதியில்லாமல் “என்னைவிடு நான்போக” என்றால் எப்படி? அனுமதி எடுத்தார்களா? இல்லையா?? என்பதற்கே விடைகாணவேண்டும்.

  இனவாதக் கருத்துக்களைப் பரப்பி மக்களை மாயைவலைக்குள் வீழ்திட முயற்சிக்காதீர்கள். பாண்டியன்! 84-85 காலப்பகுதி பேர்ளின் அகதிகள் முகாமில் ஒருதொகை தமிழ் மக்களும் ஆசிய ஆபிரிக்கமக்களும்.அந்த சாப்பாட்டையும் அரைவாசி தின்றும் அரைவாசி கொட்டியும் அவர்களுக்கும் பேச்சுத்தான். “அரைஅவியலான சோறும் அவிச்சஇறச்சி உப்புமில்லை புளியுமில்லை. இதை மனிசன் தின்பானா?” ஜேர்மன் அரசாங்கத்திற்கும் பேச்சு! இலங்கை அரசாங்கத்திற்கும் பேச்சு!! அப்படியென்றால்…..?

  Reply
 • BC
  BC

  அவர்கள் முகாமை வதை முகாம் அல்லது திறந்தவெளிச் சிறைசாலை என்று தான் பிரசாரத்திற்காக குறிப்பிடுவார்கள். கூட்டமைப்பின் ஆதரவுடன் புலிகளினால் துன்பபட்டு மிகவும் நொந்து போன மக்கள் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் பொங்கல் விழாவை மிக சிறப்பாக கொண்டாடியுள்ளனர் என்றால் உண்மை நிலையை உணரலாம் தானே!
  சந்திரன் சொன்ன மாதிரிதான் நடந்தது அங்கே பேர்லினில் இருந்த எனது நண்பர் சொன்னதன்படி ஜேர்மனியை திட்டி கொண்டே இறச்சி சோறு மட்டுமல்ல சீசையும் வெளியே கொட்டுவார்களாம் பெட்டி பாலையும் ஊற்றுவார்களாம்.

  Reply
 • தமிழ் வாதம்
  தமிழ் வாதம்

  மேலெழுந்தமான வாசிப்புகள், கீழ்த்தரமான பிரச்சாரமாக தள்ளாடிப் போவது அசாதாரணமான விடயமல்ல. மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருப்பது தவிர்க்கவியலாதது சேணக் குதிரைகள் ஓட்டியின் சாட்டைக்கு நடைபவனி செய்யட்டும். மகிந்தவின் பஞ்சசீலக் கொள்கை கற்பனாவாதக் கம்யூனிசமாகக் கருக்கட்டுகிறது. பொய்,மெய் என்பது சாடமாடையாய் எழுதுகிறதல்ல. வதை முகாம்களை யார், எவ்வாறு பார்க்கலாம் என்கிற சட்டம் அல்லது நடைமுறை எது என்பதை போய் வந்தவர்கள் பொழியலாந்தானே. அள்ளிக் கொடுக்கிற அரசின் பவிசுகளைப் பற்றி, அரசவர்த்தமானி அறிக்கை, அரச அதிகாரிகளின் அறிவிப்பு என கூலிக்கு மாரடிப்போர் சங்கம் கொண்டரலாந்தானே. இதை விட்டுட்டு என்னத்தை எழுதி, என்னத்தைக் கிழிப்பானேன்.

  இங்கே யாரும் இனவாதம் பேசத்தேவையில்லை. வரலாறு மட்டும் ரோகணத்தின் கெமுனு, விஜேவீரா, மகிந்த, கொதபாய என்று மீள மகாவம்சம் எழுதட்டும்.

  சிறிலங்கா சட்டமாகக் கிழித்திரூக்கும் சிங்கள பவுத்த பேரினவாதம் இதுதான்.
  9. The Republic of Sri Lanka shall give to Buddhism the foremost place and accordingly it shall be the duty of the State to protect and foster the Buddha Sasana, while assuring to all religions the rights
  Articles 10 and 14(1)(e).
  18.[(1)] The Official Language of Sri Lanka shall be Sinhala.

  இதை அறியாத் தமிழரின் பிற்போக்குத்தனத்தை, வைத்து முற்போக்குத்தனம் பண்ணுவது பேரவலமே.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  இன்னும் ஐம்பது வருடங்கள் சென்றாலும் தமிழன் என்ற சொல் கேள்விகுறியாகவே இருக்கும். வரும் காலத்தில் தமிழன் என்றால் “இரத்தம் குடிக்கிற அட்டை” என்றும் பொருள் படும் என அகராதியில் சேர்க்கப் படலாம். இந்த இனத்தை சேர்ந்தவர்கள் தாம்வாழ மவுசுகாட்ட எதையும் செய்யத் துணிந்தவர்கள். இவர்களுக்கு இன்னொரு இனத்தை குறைகாண என்ன உரிமையிருக்கிறதது?.

  அகதிகள்-முகாம் என்றுமே அகதிகள் முகாம்தான். வவுனியா அகதிகள் முகாமில் தங்களுக்கு இருந்த மேலதிகமான பருப்பு மா வகைகளை விற்று வேறுபொருள்களை வாங்கிப்போவதை பார்க்க கூடியதாக இருந்தது என்று பத்திரிக்கைகள் எழுதின. லண்டன் பி.பி.சி யும் ஒலிபரப்பியது. இப்படியான குறைநிறைகள் ஒருபுறம் இருக்க….. புலம் பெயர்நாட்டில்லிருந்து கொண்டு யாருடைய கையைக்காலை பிடித்தாவது 1.4 மில்லியன் பெறுமதியான மருந்துவகைகளை சேகரித்து தமிழ்மக்களுக்கு அனுப்ப”தேசம்நெற்” ஆல் முடியுமென்றால்.. தமிழன் பெயரில் இரண்டு சகாப்தற்கு மேலாக உலகம் முழுக்க கிளைவைத்திருந்த தமிழ்உணர்வாளர்களால் என்னத்தை செய்யமுடிந்தது.

  பத்து பவுண்ஸ் கொடுத்து புலிக்கொடிவாங்கியவர்கள்.. விற்றவர்கள் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று பிரபாகரனை காப்பாற்றி அமெரிக்கா அனுப்பி வைக்க ஊர்வலம் போனவர்கள். என்ன கள்ள நோக்கத்துடன் செயல் பட்டார்கள் என்பதை புரிந்து கொள்வது ஒன்றும் கஷ்ரமான காரியம் அல்ல.

  தமிழன் என்றபெயரில் தமிழனைவைத்து பிழைப்பு நடத்திற கூட்டமே!.இந்த கூட்டம் கப்பல் வியாபாரத்திலிருந்து கடலையாபாரம் வரை தமது ஆதிக்கத்திற்குள் வரவேண்டுமென்று இரவுபகலாக கனவுகாண்பவர்கள். மக்கள்கடை நகைகடை டெலிபோன்காட் பெற்றேல் நிரப்பும் நிலையங்கள் உள்ள கோவில்களை எல்லாம் ஒன்றுதிரட்டி வருமானங்களையெல்லாம் ஒன்றுதிரட்டுகிற “ஒருங்கிணைப்பு குழு” போன்றவகைள் எல்லாம் தமிழன்பெயரிலே நடந்தேறியது. இது எப்படி மே 19 இரவுடன் மாயமாக மறைந்தது.

  சுனாமிநிதிக்கு தமிழ்மக்கள் மட்டும் பணம் கொடுக்கவில்லை. பாடாசாலை மாணவர்கள் தெருத்தெருவாக இறங்கி பணம் சேர்த்து ரி.ஆர்.ஓ க்கு பணம் அனுப்பி வைத்தார்கள். உலகம் முழுக்க சேகரிகப்பட்ட பணம் பில்லியன் கணக்கிலையே கணக்கு வைக்கக்கூடியது ஒன்று (எனதுமகன் மட்டும் உண்டியல் குலுக்கி சேகரித்த காசு 700 யூரோ) இதற்கு ரசீத்தும் வந்து சேரவில்லை. பொறுப்பாளராக இருந்த ரெஜியையும் காணவில்லை. ஆகமொத்தத்தில் தமிழன்என்ற பெயரை இணைப்பதால் மட்டுமே சுகபோக வாழ்வை அனுபவிக்க முடியும் என கருதுகிறீர்கள். இல்லையா?

  தமிழ்வாதம் அவர்களே!. அயர்ந்து தூங்கினால் கட்டியவேட்டியையும் உருவிக்கொண்டு போகிற இனம் தமிழ் இனம். தாயும் பிள்ளையும் மழையில் நனைந்தாலோ குளிரில் விறைத்தாலோ திண்னையில் அடைக்கலம் கொடுக்கமுடியாத சாதித்தடிப்பும் மனவக்கிரமும் கொண்ட இனம் தமிழ்இனம். யுத்தச் சகதியில் மீண்டுவந்து கொண்டிருக்கிறார்கள் என்ற நினைவுகள் இல்லாமல் விமர்சனங்களை வைக்கிறீர்கள். உங்களுக்கு தேவையானது யுத்தமும் அவலமுமே!. சிங்களஅரசாங்கத்துடன் எப்படியாவது சிண்டுமுடிந்து நாட்டை அவலத்திற்கு தள்ளிவிடுவதே நோக்கமாக இருக்கிறீர்கள்.
  சாவகச்சேரி மாணவன் கபிலத்நாத் கொலையில் கூத்தமைப்பு எவ்வளவு பங்குவகித்தது என்பதை இதன் பிண்ணனியை புரிந்தவர்களுக்கே விளங்கிக் கொள்ள முடியும். ஆகவே இனத்தின் பெயரைச் சொல்லி அதாவது தமிழன் பெயரை சொல்லி வாழ்வுநடத்துவது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

  இந்த சுயநலமிகள் ஒரு இனத்தின் பெயரை விலைபேசி விற்றுவிட்டார்கள். இதில் தமிழ்வாதத்திற்கும் பங்கு வேண்டுமா?. நாங்கள் சிங்களமக்களுடன் ஐக்கியப்பட்டு வாழமுடியும் என்கிறோம். நீங்கள் வாழமுடியாது என்கிறீர்கள். இதுவே! முரண்பாடு.

  Reply
 • NANTHA
  NANTHA

  புத்தர் இந்துக்களுக்கு விரோதியுமல்ல. அன்னியருமல்ல. புத்த கோவில்களில் இந்துக் கடவுள்களுக்கும் இடமுண்டு. அதேநேரத்தில் மத சுதந்திரம் மற்றவர்களுக்கும் உண்டு.

  இங்கிலாந்தில் “கிரிஸ்தவ” மதம் மாத்திரமே அரச மதம். “தமிழ்” வீரர்கள் இந்து சமயத்துக்கும் சம உரிமை என்று இங்கிலாந்தில் கேள்க்காது மவுனம் காப்பது ஜனனாயகம் என்று அர்த்தம் கொள்ளலாமா?

  1956 ஆம் ஆண்டு அரசகரும மொழிச்சட்டத்தின்படி அரச அலுவலகங்கள் தமிழிலும், சிங்களத்திலும் தொடர்புகளை வைத்திருக்க வேண்டும். அதனை “திரிபுபடுத்தி” அரசியல் செய்த செல்வனாயகம் கோஷ்டி இன்றைய அழிவின் மூல கர்த்தாக்கள். அரச அலுவலகங்களில் இன்றும் துருப்பிடித்து கிடக்கும் தமிழ் தட்டச்சு இயந்திரங்கள் அதற்கு சாட்சி.

  எனவே சட்டங்கள் பற்றி கதைப்பதிலும் பார்க்கிலும் இருக்கும் சட்டங்களை “அமுல்” படுத்தும்படி கேட்பதே நியாயம்!

  Reply
 • Rohan
  Rohan

  You know that Sinhala states since 1948 never made any compensation to those affected by the directly and indirectly by Sinhala mobs, thugs, military and politicians.

  இல்லை – இது உண்மை இல்லை! அரச பணியின் போது கொல்லப்பட்ட சிலருக்கு சில இலட்சம் ரூபாக்கள் வழங்கப்பட்டது உண்மையே. இது பிந்திய எண்பதுகளில் நடந்த கதை.

  Reply
 • Rohan
  Rohan

  “In front of our own eyes, and inside our premises, the army was touching a young girl…so what would happen if we are also not there” one Catholic sister asked me when I met her in the Vanni.

  இது பாதிரிகளின்பொய்ப் பிரசாரமாக இருக்குமோ என்னவோ?

  http://www.groundviews.org/2010/05/26/vanni-in-the-year-after-war-tears-of-despair-and-fear/

  “சாவகச்சேரி மாணவன் கபிலத்நாத் கொலையில் கூத்தமைப்பு எவ்வளவு பங்குவகித்தது என்பதை இதன் பிண்ணனியை புரிந்தவர்களுக்கே விளங்கிக் கொள்ள முடியும்.” என்கிறார் சந்திரன் ராஜா.
  கூட்டமைப்புக்கும் இக்கொலைக்கும் என்ன தொடர்பு? பின்னணி தெரியாதவர்களுக்குக் கொஞ்சம் விளக்கினால் நல்லது.

  “ஆகவே இனத்தின் பெயரைச் சொல்லி அதாவது தமிழன் பெயரை சொல்லி வாழ்வுநடத்துவது கேள்விக்குறியாகவே இருக்கிறது.” என்கிறார் சந்திரன் ராஜா.
  தாம் என்ன சொல்ல வருகிறேன் என்றும் அவர் விளக்கினால் நல்லது

  Reply
 • தமிழ் வாதம்
  தமிழ் வாதம்

  தன்னையும், தன் இனத்தையும் அதிகேவலமாக பார்க்கும் மனிதர்களால் இன்னொரு இனத்துடன் சேர்ந்து வாழ முடியாது, ….. .வரலாற்றின் பாடங்களை கற்றுக் கொள்ளாதவர்கள், முன்னோக்கி செல்ல முடியாதவர்கள். கருத்துகளை வாசித்து, கிரகித்து கொள்ளுகிற அறிவுதான், தெளிந்த நியாயங்களை பரிமாறிக் கொள்ளவும் இயலும். மந்திர உச்சாடனங்களைத் தவிர்த்து, மனிதனாக சிந்திக்க முயல்வோம்.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //….(எனதுமகன் மட்டும் உண்டியல் குலுக்கி சேகரித்த காசு 700 யூரோ)….//

  கொஞ்ச நாட்களுக்கு முன்னால் வேறொரு தலைப்பில் 400 அல்லது 500 என நீங்கள் எழுதியதாக ஞாபகம்!

  ’கூத்தமைப்புக்கு’ என்ன ‘புண்ணாக்கு’ தொடர்பு என கொஞ்சம் எழுதுங்கள் நாமும் படிக்கலாமல்லவா?

  Reply
 • BC
  BC

  //இது பாதிரிகளின்பொய்ப் பிரசாரமாக இருக்குமோ என்னவோ? //

  தமிழர்களுக்குள்ள அதீதமான மதம், வன்முறை மீதான நாட்டத்தை பாவித்து சிறப்பாக மத பிரசாரத்தை பின்னியெடுக்கிறார் Ruki .
  ஆண்டவரே இவர்களிடம் இருந்து அப்பாவி தமிழர்களை காப்பாற்றுங்கோ!

  Reply
 • பல்லி
  பல்லி

  //இங்கு “எழுதுபவர்கள்” அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று எழுதுகிறார்கள். இவர்களுக்கு இலங்கயில் தொடர்பு கொள்ள யாரும் இல்லை. //
  இவர் மட்டும் யுத்தத்தால் பாதிக்கபட்டு வன்னி முகாமில் இருக்கிறார், அதனால் சுட சுட தகவல்கள் தருகிறார்,

  Reply
 • rohan
  rohan

  “1956 ஆம் ஆண்டு அரசகரும மொழிச்சட்டத்தின்படி அரச அலுவலகங்கள் தமிழிலும், சிங்களத்திலும் தொடர்புகளை வைத்திருக்க வேண்டும். அதனை “திரிபுபடுத்தி” அரசியல் செய்த செல்வனாயகம் கோஷ்டி இன்றைய அழிவின் மூல கர்த்தாக்கள்.”என்று சொல்கிற நந்தா,தாமே
  “எனவே சட்டங்கள் பற்றி கதைப்பதிலும் பார்க்கிலும் இருக்கும் சட்டங்களை “அமுல்” படுத்தும்படி கேட்பதே நியாயம்!” என்றும் சொல்கிறார்.

  அவரது அபிமான பண்டாரநாயக்க மற்றும் ராஜபக்ச் குடும்பங்கள் கேட்காமலே செய்திருக்க வேண்டிய விடயம் அல்லவா இது? வன்னியில் ஆயிரக் கணக்கில் பள்ளிகள் கட்டிய பெருமக்கள் அல்லவா அவர்கள்?

  Reply
 • NANTHA
  NANTHA

  தமிழில் தமிழர்கள் படிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்த பண்டாரனாயக்காவிற்கு “நம்ம தமிழ்” சூரர்கள் யாரும் இதுவரையில் நன்றி செலுத்தியதாக வரலாறு இல்லை. யாழ் பலகலைக் கழகம் தந்த அவர் மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கும் அதே கதி. ஐநா சபையில் தமிழ் பேசிய ராஜபக்ஷவுக்கும் அதே கதி.

  ஆனால் கள்ளக்கடத்தல்காரர்களையும் அன்சாம் கிளாஸ் சயிக்கிள் திருடனையும் “தேசபிதா”, மேதகு, தேசிய தலைவர் என்று துதிபாடும் கூட்டங்கள் இப்போதைக்கு திருந்த மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.

  புதுக்குடியிருப்பிலிருந்து வீட்டு வேலைக்கு கொண்டு வந்த சிறுமியை “கற்பழித்த” பொங்கு தமிழ் கணேசலிஙகம் என்ற “தமிழ்” பேராசிரியர் பற்றி யாரும் அலட்டிக் கொள்வதில்லை. சில வேளைகளில் “தமிழ்” பற்று “கூடியவர்” தமிழ் பெண்களைக் கற்பழிக்க “சகல” உரிமையும் உள்ளவரோ?

  Reply