இலங்கையைச் சுற்றி காற்றமுக்கநிலை ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பையும் அதணை அண்டிய பகுதிகளிலும் இன்று காலை முதல் கடும் காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்ற நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழை காரணமாக கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது.