வன்னியில் இறுதிக்கட்டப்போரில் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் நிகழ்வுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இன்று 17ம் திகதி வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதே வேளை, உயிரிழந்த மக்களை நினைவு கூரும் விதமாக ஆலயங்கள் தேவாலயங்களில் இன்று பூஜை வழிபாடுகளும் நடைபெறுகின்றன. வன்னியில் இறுதிக்கட்டப் போரின் போது 40 ஆயிரம் வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இது குறித்த புள்ளிவிபரங்கள் போர் முடிவடைந்து ஓராண்டு நிறைவடைகின்ற நிலையிலும் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
thurai
தமிழ் மொழியை வைத்து தமிழ் அரசியல்வாதிகள் வாழ்கின்றனரே தவிர தமிழ் அரசியல்வாதிகளால் தமிழர் வாழ்வதில்லை. இலங்கையின் 58ம் ஆண்டு கலவரத்தை கொண்டு தமிழரசுக்கட்சி முதல் கூட்டணி வரை வளர்த்தார்கள். அந்த வளர்ச்சி 83 கறுப்பு ஜீலையைத் தமிழர்களிற்குத் தந்தது. 83 கறுப்பு ஜீலை புலிகளை வள்ர்த்து விட்டது, வளர்த்துவிட்ட புலிகள் மே 18 முள்லிவாய்க்காலை தமிழ் மக்களிற்கு காட்டி விட்டு ஓடி மறைந்து விட்டார்கள்.
இப்பொ மே 18 முள்ளிவாய்க்காலை நினைவாகக் காட்டி அரசியலை வளர்க்காமலும், அடுத்த அழிவிற்கு தமிழர்களைஅழத்துச் செல்லாமலுமிருக்க தமிழராகிய நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதவசியம்.
துரை
பல்லி
இந்த காலத்தில் உயிர் நீர்த்த அனைவருக்கும் பல்லி குடும்பத்தின் அனுதாப நினைவுகள்.