மே 6 1986 / மே 18 2009 : வரலாற்றை கற்றுக்கொள்ள மறுப்பவர்கள் மீது வரலாறு ஈவிரக்கம் காட்டுவதில்லை! : த ஜெயபாலன்

Sri SabaratnamPirabakaran V_LTTEஏப்ரல் 29, 1986 என்றும் போல அன்றும் தமிழர் தாயகத்தின் தலைநகரான யாழ்ப்பாணத்தில் அந்த காலைப் பொழுது மலர்ந்தது. காலைச் செவ்வானம் தமிழீழம் கேட்டு போராடச் சென்ற இளைஞர்களின் குருதியில் தோய்வதற்காய் உதித்தாக எண்ணி இருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான அடித்தளத்தையிட்ட அதே மண்ணில் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் மிக மோசமான பக்கங்கள் எழுதப்படப் போகின்றது என்பதை அறியாமலேயே தமிழ் மக்கள் விழித்தெழுந்து தத்தமது கடமைகளுக்குத் தயாராகினர்.

ஆம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பத்துடனேயே சகோதரப் படுகொலைகளும் ஆரம்பித்து விட்டது. ஆனால் 1986 ஏப்ரல் 29ல் இடம்பெற்றதே மிக மோசமான ஸ்தாபன மயப்படுத்தப்பட்ட திட்டமிடப்பட்ட கூட்டுப் படுகொலை. தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000க்கும் அதிகம் என மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு தெரிவிக்கின்றது. இவற்றைவிட ஏனைய விடுதலை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் குறிப்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் உட்படுகொலைகளிலும் சகோதரப் படுகொலைகளிலும் ஈடுபட்டிருந்தனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது எதிரி எமது இனத்தின் மீது மேற்கொண்ட இனச் சுத்திகரிப்பிற்கு எவ்விதத்திலும் குறையாமல் நாம் வளர்த்துவிட்ட விடுதலை அமைப்புகளும் எம்மை அழித்துள்ளன. தமிழீழ விடுதலை நியாயமானதா? சாத்தியமா? என்பதற்கு அப்பால் 1986 ஏப்ரல் 29லேயே எமது தமிழீழ விடுதலைக் கனவு கலைக்கப்பட்டுவிட்டது என்பதே உண்மை.

”உங்கள் கைவசம் உள்ள ஆயுதங்களை எம்மிடம் ஒப்படைத்து சரணடையாவிட்டால் உங்கள் வீடு புகுந்து உங்களையும் உங்கள் குடும்பங்களையும் சுட்டுத்தள்ளுவோம்.”
என 24 ஆண்டுகளுக்கு முன் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் தாயகம் எங்கும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கைகளை வழங்கினர். ரெலோவின்  முகாம்கள் மோட்டார் செல் தாக்குதல்களுக்கு இலக்கானது. ஆயுதங்கள் வைத்திருந்தவர்கள், ஆயுதம் தாங்காதவர்கள், நித்திரையில் இருந்தவர்கள், நோய்வாய்ப்பட்டு இருந்தவர்கள், சரணடைந்தவர்கள் என்று எவ்வித பேதமுமற்று அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இன்னும் சிலர் சித்திரவதைக்கு உள்ளாகி மக்கள் முன்னிலையில் உயிருடன் எரிக்கப்பட்டனர். தங்களை எதிர்ப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்ற பாடத்தை புகட்டுவதற்காக இவை திட்டமிட்ட முறையில் நடாத்தப்பட்டது. தமிழ் மக்கள் பயப்பீதிக்குள் தள்ளப்பட்டு வாய்மூடி மௌனிக்க வைக்கப்பட்டனர். அன்று ஒடுக்கப்பட்ட அவர்களது குரல்கள் இன்றும் ஒடுங்கியே உள்ளது. ஒடுக்குபவர்கள் மட்டுமே மாறியுள்ளனர்.

வரலாற்றுத் தவறுகளைக் கற்றுக் கொள்ள மறுப்பவர்களை வரலாறு மன்னிப்பதில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் தாம் இழைத்த வரலாற்றுத் தவறை கற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்தும் எதேச்சாதிகாரத்துடன் தங்கள் அதிகார வெறிக்கான யுத்தத்தைத் தொடர்ந்தனர்.

”தமிழீழ விடுதலை இயக்கம் அழிக்கப்பட்டு 23 ஆண்டுகள் கடந்த 2009 ஏப்ரல் இறுதிப் பகுதியில் ”புலிகளின் தலைவர் பிரபாகரன் எஞ்சியுள்ள தனது போராளிகளுடன் சரணடையாவிட்டால் அவர் தனது தலைவிதியை சந்திக்க நேரிடும்.”
என்ற எச்சரிக்கையை அப்போதைய இலங்கையின் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா பனை மரங்களில் ஒலிபெருக்கியைக் கட்டி அறிவித்தார். அவருடைய எச்சரிக்கை வெளியாகி சில வாரங்களுக்கு உள்ளாகவே  மக்களுக்குள் ஒழிந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீது இலங்கை இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதலை நடாத்தியது ஆயிரக்கணக்கான  பொது மக்கள் போராளிகள் கொல்லப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உட்பட சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைமை படுகொலை செய்யப்பட்டது. ஏனையவர்கள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

தமிழீழ விடுதலை இயக்கமோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமோ அல்லது ஆயுதம் ஏந்திய தமிழீழ விடுதலை இயக்கங்களோ அடிப்படையில் ஒரே விதமானவர்கள். இவர்கள் மக்கள் விடுதலை என்பதிலும் பார்க்க தங்கள் அதிகாரத்தை தமிழ் மக்கள் மீது நிறுவுவதற்குப் போராடியவர்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புகளின் அரசியல் மற்றும் இராணுவத் தவறுகளினால் தமிழ் மக்களே மிகப் பாரதூரமான பின்னடைவுகளைச் சந்தித்து உள்ளனர். அதனால் தமிழீழ விடுதலை இயக்கத்தை அழித்தொழித்த தமிழீழ விடுதலைப் புலிகள் அழித்தொழிக்கப்பட்டதை வரவேற்கவோ அல்லது ஒரு தவறை மற்றுமொரு தவறு மூலம் சரிசெய்துவிட்டதாகவோ கொள்ள முடியாது.

இந்த வரலாற்று நிகழ்வுகளில் இருந்து நாம் விட்ட வரலாற்றுத் தவறுகளில் இருந்து நாம் எதனைக் கற்றுக்கொண்டோம் என்பதே மிக முக்கியமானது. இவ்வளவு அனுபவங்களுக்குப் பிற்பாடும் தமிழ் சமூகத்தின் அரசியல் தலைமைகள் என்பது இன்னமும் தங்களின் அரசியல் தளத்தில் ஊன்றி நின்று தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கவில்லை. ஒருசாரார் இலங்கை அரசுடன் இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொள்ள மறுசாரார் இலங்கை அரசின் ஒடுக்குமுறையை வைத்து அரசியல் செய்பவர்களாகவே உள்ளனர்.

இலங்கை சுதந்திரமடைந்தது முதல் இன்று வரையுள்ள காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழ் மக்களுக்கு வென்றெடுத்த உரிமைகளிலும் பார்க்க அழிவுகளே அதிகம் மிஞ்சியுள்ளது. அந்த வகையில் அதற்கான காரணங்களை தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்குவதாகக் கூறிக்கொள்பவர்கள் மீளாய்வு செய்வது தவிர்க்க முடியாதது. ஆனால் அதற்கான முனைப்புகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. எதேட்சையான உணர்ச்சிகரமான கோசங்களுக்குப் பின்னால் தமிழ் மக்களை அணிதிரட்டுவது அந்த அழிவு வரலாற்றை மீள நிகழ்த்தவே உதவும்.

வே பிரபாகரனும் சிறிசபாரட்னமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இவர்களுடைய முடிவுகள் மட்டுமல்ல உமாமகேஸ்வரனது முடிவும் இவ்வாறு அமைந்ததில் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் இந்த அழிவு வரலாற்றில் இருந்து இதுவரை நாம் எதனையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதும் கற்றுக்கொள்ள மறுக்கின்றோம் என்பதும் ஆபத்தான உண்மைகள்.

ஓவ்வொரு மனிதனும் தான் விட்ட தவறுகளை ஏற்றுக்கொள்ளாதவரை அவன் அத்தவறைத் திருத்திக் கொள்ளப் போவதில்லை. இது ஒரு தனிமனிதனுக்கானது மட்டுமல்ல அமைப்புகளுக்கும் பொருந்தும். ஏந்தவொரு அமைப்பும் தங்கள் அமைப்பு விட்ட தவறுகளை ஏற்றுக்கொள்ளாதவரை அத்தவறுகளைத் திருத்திக்கொள்வதில்லை. இதுவே தமிழீழ விடுதலைக்குப் போராடிய அமைப்புகளிலும் நடந்தது. ஓவ்வொரு தடவையும் இவ்வமைப்புகள் தவறுகளைவிட்ட போது அவற்றை நியாயப்படுத்தி வந்தன. நியாயப்படுத்துவதற்கான காரணங்களைக் கண்டுபிடித்தன. துரோகிகளைச் சுட்டுக்கொல்வது என்று ஆரம்பித்து தாங்கள் காப்பாற்ற வேண்டிய மக்களையே சுட்டுக் கொல்வதில் வந்து நின்றது தமிழீழ விடுதலைப் போராட்டம். மனித அவலமும் அழிவும் எல்லையைத் தாண்டும் போது தான் சர்வதேசம் தலையிட்டு நிரந்தரமான தீர்வு கிட்டும் என்று அதற்கும் அவர்கள் ஒரு நியாயம் வைத்திருந்தனர்.

இவ்வளவு அழிவுகளின் பின்னும் மதிப்பீடுகள் எதுவும் இன்றி வரலாற்றை ஆராயாமல் மீண்டும் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறார்கள். இப்போது அவர்கள் நாட்டில் இல்லாததால் கடல் கடந்து நாடுகள் கடந்து சென்று தமிழீழம் கேட்கின்றனர். நாடுகடந்த தமிழீழம்.

மே 6ல் சரணடைந்த நிலையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரட்ணம் கிட்டு என்றழைக்கப்பட்ட அன்றைய யாழ் மாவட்ட விடுதலைப் புலிகளின் தளபதி சதாசிவம் கிருஸ்ணகுமாரினால் சுட்டுக்கொல்லப்பட்டார். மே 18ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் சரணடைந்த நிலையில் இலங்கை இராணுவத் தளபதியினால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். படுகொலைக்குப் பிற்பாடு இருவரது உடல்களுக்கும் என்ன நடந்தது என்று தெரியாது. இரு சம்பவத்திலும் கொலையாளிகள் கொலை செய்யப்பட்டவரின் வரலாற்றை அவர்களுடன் சேர்த்து எரிக்கவோ புதைக்கவோ செய்தனர். அதனால் அவர்கள் எரிக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட இடங்களும் மர்மமாகவே வைக்கப்பட்டது.

சிறிசபாரட்ணம் படுகொலை செய்யப்பட்டு கால் நூற்றாண்டுகள் ஆகின்ற போதும் அவருக்கான அஞ்சலி நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெறுகின்றது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இதுவரை எவ்வித அஞ்சலிகளும் நிகழ்த்தப்படவில்லை. அவர் இறந்துவிட்டதனை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதிலேயே அவ்வமைப்புக்குள் பிளவு ஏற்பட்டு விட்டது. ஒரு தலைவனது மரணத்தையோ வாழ்வையோ உறுதிப்படுத்தத் திரணியற்ற அமைப்பு தற்போது நாடுகடந்த தமிழீழம் பெற்றுத் தீருவோம் என்று அறைகூவல் விடுகின்றது.

உண்மைகளை ஏற்றுக் கொள்ள மறுத்த வரலாற்றைக் கற்றுக்கொள்ள மறுத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனும் தற்போது வரலாறாகிவிட்டார். 24 ஆண்டுகளுக்கு முன் வே பிரபாகரனது தலைமை மேற்கொண்ட கோரத்தனமான அழித்தொழிப்பு மீளவும் தமிழர் தாயகத்தில் நிறைவேறியது. அன்று கோரத்தனத்தை மேற்கொண்டவர்கள் இன்று அதற்குப் பலியாகி உள்ளனர். வரலாறு ஈவிரக்கம் பார்ப்பதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை தமிழர்களுக்கு உணர்த்தி உள்ளது.

தமிழ் மக்கள் மீதானது மட்டுமல்ல அனைத்து மக்களினதும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் அவை உணச்சி வேகத்தில் பழிவாங்கும் நோக்கில் அல்ல. கடந்த கால வரலாற்றைக் கற்றுக்கொண்டு வரலாற்றுத் தவறுகளைக் திருத்திக் கொண்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

108 Comments

  • TBC RADIO
    TBC RADIO

    06-05-2010 ரிபிசியின் வியாழக்கிழமை ரெலோ தலைவர் சிறீ சபாரட்னம் அவர்களின் அஞ்சலி நிகழ்வும் அரசியல் கலந்துரையாடலும்.

    தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ரெலோ தலைவர் சிறீ சபாரட்னம் மற்றும் ரெலோ போராளிகள் சகோதரப் படுகொலையின் 24வது நினைவஞ்சலி நிகழ்வும் அரசியல் கலந்துரையாடலும்.

    உயிர் அழிவுகளையும் உடமைகளையும் இழந்து நாளாந்த வாழ்க்கையில் எதிர்நோக்கின்ற எமது மக்களின் பிரச்சைனைகளை தீர்ப்பதற்கு எமது பங்கு என்ன? இது தொடர்பாக உங்களின் ஆரோக்கியமான சிந்தனைகளையும் ரீ.பி.சி எதிர்பாக்கிறது.

    இக் கலந்துரையாடலில் தேசம் இணையத்தளத்தின் ஆசிரியர்களில் ஒருவரும் முன்னாள் ரெலோ போராளியுமான ரி. சோதிலிங்கம் ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் விஸ்வலிங்கம் சிவலிங்கம் ரிபிசியின் ஜேர்மனி அரசியல் ஆய்வாளர் ஜெகநாதன் ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாட உள்ளனர்.

    மாலை 8மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்

    கலையக தொடர்புகளுக்கு: 00 44 208 930 4826 மற்றும் 00 44 7817063682

    Reply
  • sam
    sam

    அஞ்சலி நிகழ்வுக்கு அழைப்பு

    தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தனது முதலாவது தலை முறைத் தலைமைகளை தெற்கின் இன வெறிக்கு இரை கொடுத்தது. ரெலோ தனது இரண்டாவது தலைமுறைத் தலைமையையும் நூற்றுக்கணக்கான போராளிகளையும் வடக்கின் பயங்கரவாதத்திற்கு காவு கொடுத்தது. இன்று, எமது மனங்களில் என்றும் அழியாத சிறீயண்ணாவையும் மற்றும் போராளிகளையும் புலிகளின் பாசிச அரசியலில் முதற்காலடி நரவேட்டை ஆடிய 24 வது வருட நினைவேந்தும் நாள்.

    1986 ஏப்ரல் 26ல் புலிகள் ரெலோ மீது பிரகடனப்படுத்தப்படாத யுத்தமொன்றை தொடுத்தார்கள். பத்து நாட்கள் நீடித்த பாசிசத்தின் முதற் பயிற்சிப் பட்டறை நூற்றுக்கணக்கான ரெலோ போராளிகளையும் சில பொது மக்களையும் பலியெடுத்து, மே 6ம் நாள் எமது தலைவர் சிறீ சபாரட்னம் கொலையுடன் முடிவுக்கு வந்தது.

    மறைந்த எமது தலைவர் சிறீ சபாரட்னம் ஏனைய போராளிகள் மற்றும் பொது மக்கள் அனைவரையும் நினைவேந்தும் இந்நாளில் அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரையும் பங்குபெறுமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.

    (இவ்வருட வீரமைந்தர் தினத்தை வரும் சனிக்கிழமை 2010, மே. 8ம் திகதி Mark platz 9, 2540 Grenchen, Switzerlandஇல் நினைவேந்த உள்ளோம். அந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் அனைவரும் இந் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.)

    வீரமைந்தர் தினம்

    காலம் : 08 மே, 2010, சனிக்கிழமை

    இடம் : Mark platz- 9
    2540-Grenchen
    Switzerland

    பாண்டி:சுவிஸ்:0041789051095
    சேகர்: சுவிஸ்: 0041783057684
    வசி : சுவிஸ்: 0041793399316
    செல்வா:சுவிஸ்:0041794037783
    தர்மு: சுவிஸ்: 0041795447406
    நேசன் :சுவிஸ் :0041783075224

    E-Mail:telo.org@gmail.com

    Reply
  • sen
    sen

    TBC கலந்துரையாடல் மிகவும் முக்கியமான விடயமாக கருதுகின்றேன். இதனை ஒழுங்கு செய்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

    1980 களின் மத்தியில் ஐரோப்பாவில் விசேடமாக ஜெர்மனியில் இயக்கங்களுக்கு பின்னால் இளையோர் அள்ளுப்படுவத்ட்கு பிரசாரம் செய்யப்பட்டது. இதில் முன்னணியில் அதுவும் ஆரம்பத்தில் புலிக்கும் பின்னர் TELO விற்கும் முகவராக விளங்கியவர் திரு. அழகலிங்கம் அவர்கள். இவர் TELO தலைவர் திரு ஸ்ரீ சபாரத்தினம் ஜெர்மனிக்கு வந்து கூட்டங்கள் நடத்துவதற்கு ஒழுங்குகள் செய்தவராவர்.

    தற்போது இவர் EPDP சார்பாக ஓரிரு சந்தர்பங்களில் டக்லஸ் தேவானந்தாவின் மொழிபெயர்பாளராக இருந்தாலும் இவரது கருத்தினை கேட்பதற்கு விசேடமாக ஐரோப்பாவில் நிறைய அரசியல் ஆர்வமுடையோர் இருக்கின்றனர். இவரையும் இந்த கலந்துரையாடலில் அழைக்கும்படி வேண்டுகின்றேன்

    Reply
  • santhanam
    santhanam

    தமிழ் வலியை அச்சாக்கி கொண்டுவந்ததிற்கு ஜெயபாலனிற்கு நன்றி.

    Reply
  • s.shanthan
    s.shanthan

    இந்தக் கட்டுரையை எழுதிய ஜெயபாலனுக்கு மிக்க நன்றிகள். உங்கள் பணி தொடர நாங்கள் தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்.

    Reply
  • KARUNA
    KARUNA

    சரியான கட்டுரை ஜெயபாலன்!
    ஒருவரும் மக்களுக்காக போராடவில்லை. அதிகார வெறியில அழிந்தது முழுக்க தமிழினம் மட்டுமே!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இது சென்னின் முழுமையான உண்மையல்ல.சிறீ சபாரத்தினம் ஜேர்மனி ழுழுக்க கூட்டம் நடத்துவதற்கு வரவில்லை. குறிப்பிட்ட சிலரைத்தவிர அவர் வரவு ஓரளவு ரகசியமாகவே இருந்தது. 1985 காலப்பகுதியிகுதியில் ஸ்ரூட்காட் நகரில்லிருந்து அழகலிங்கம் வாசு தலைமையில் ‘எண்ணம்’ என்ற மாதஇதழ் வெளியிடப்பட்டது. அதன் பெயரிலேயே சிறீ அழைக்கப்பட்டார். ரகசியமாக நடத்தப்பட்ட அந்த கூட்டத்தில் இருபது பேருக்குமேல் இருக்காது. பிரான்ஸ்சிலிருந்து மூன்று பேர் கலந்து கொண்டார்கள். அதில் இருவர் இன்று உயிருடன் இல்லை. ஒருவர் சபாலிங்கம் மற்றவர் உமாகாந்தன்.

    சிறீசபாரத்தினதிடம் கலந்துரையாடல் நடத்தி ஒரு பேட்டியாக “எண்ணம்” இதிழில் வெளியிட்டது மட்டும்தான் நடந்த விஷயம். வேறு ஒன்றும் நடக்கவும் இல்லை. கூட்டம் நடத்தவும் இல்லை. அன்றுதான் நான் முதல்முதலாக சிறீயைக் கண்டேன்.பல விஷயங்கள் கதைக்கப்பட்டதில் இன்றும் பசுமையாக ஞாபகம் இருக்கும் ஒரு விஷயம் இது தான்….
    அமைச்சரையே விமானத்தையோ கடத்தி அல்லது பயணக்கைதியாக வைத்திருந்து சிறையில் இருந்த தங்கத்துரை குட்டிமணியை தாங்கள் மீட்பதற்கு திட்டம் தீட்டிதாகவும் அதற்கு சின்னசின்ன சுடுபாடுகளை கொஞ்சக்காலத்திற்கு நிறுத்தி வைக்கும் படி பிரபாகரனை கேட்டதாகவும் அதற்கு” எனக்கு அரசியல் தெரியாவிட்டாலும் மாபியா வேலைசெய்தாவது இராணுத்திற்கு பாடம் படிப்பிற்பேன் என்ன காரணம் கொண்டும் எதையும் நாம் நிறுத்தப் போவதில்லை” என பிரபாகரனிடமிருந்து பதில் வந்ததாகக் கூறினார்.

    இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டன இன்று. பலவற்றை பார்த்து கேட்டும் அறிந்து விட்டோம்.எல்லோரிடமும் சரியும் பிழையும் நிறையவே இருக்கிறது. சிறீ சபாரத்தினம் கொலைசெய்யப்பட்டு இருபத்திநான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன.புலிகள் பல படைகளைவைத்து உலகத்திற்கு பிரபலியமாக தெரிந்தார்கள். ஆனையிறகு முல்லைதீவு சமர்களை நடத்தினார்கள். எவ்வளவோ மக்கள்பறி கொடுத்தார்கள். உயிர்பலி இட்டார்கள். ஆனால் சிறீதலைமையில் நடந்த முறிகண்டி சாவகச்சேரி தாக்குதல்களில் ஒரு பொதுமகனும் பலி கொடுக்கப்படவில்லை என்பதுதான் ஆச்சரியத்திற்குரிய விஷயம்.

    Reply
  • NANTHA
    NANTHA

    ஸ்ரீ சபாரத்தினம் பெரிய அரசியல் மேதாவியல்ல. அவருக்கும் குட்டிமணிக்கும் இருந்த தொடர்பு “கள்ளக்கடத்தல்” மாத்திரமே. பருத்தித்துறையில் அவரது சகோதரரின் “மருந்துகடைக்கு” கடத்தி வரப்பட்ட குங்குமபூ, அபின் போன்றவற்றை குட்டிமணியும், தங்கத்துரையும் விற்றுக்கொண்டிருந்தனர். அந்த கடத்தல் சிநேகிதம் ஊடாகவே பிரபாகரனும் உதயமாகினார்.

    டெலோ இயக்கத்தினரும் தமிழ்ப் பற்றுக் கொண்டு துடிக்கவில்லை. ஆலாலசுந்தரம், உடுவில் தர்மலிங்கம் ஆகிய இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் இந்த டெலோ “போட்டுத்தள்ளியது” எந்த வீட்டு அரசியலுக்கு என்று இது வரையில் தெரியாது. ஆலாலசுந்தரம் ஸ்ரீ சபாரத்தினத்தின் உறவினர். டெலோவும் அந்நியர்களின் “கைப்பாவைகள்” என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.

    கள்ளக்கடத்தலை தொழிலாகக் கொண்ட தங்கதுரையும், குட்டிமணியும் தங்களின் “தொழில்” பாதிப்பினால் போலீசாரைக் கொன்றனரே ஒழிய. அந்தக் கொலைகளுக்கு “தமிழ் விடுதலைச் சாயம்” பூசுவது சுத்த அபத்தம்!

    இந்தியாவுக்கு ஆதரவு என்பதனைத்தவிர டெலோவுக்கும் புலிகளுக்கும் எதுவித வேறுபாடும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆயினும் செல்வநாயகத்தின் மகன் சந்திரகாசனோடும், சீஐஎ எஜன்ட் என்று அறியப்பட்ட எ ஜே வில்சனோடும் இவர்கள் வைத்திருந்த தொடர்பு இவர்களும் ஒரு “வெளிநாட்டு” கூலிப்படை என்பதையே உறுதிப்படுத்தியது.

    யுஎன்பி அரசின் காலத்தில் நடந்த திம்பு பேச்சு வார்த்தைகளுக்கு அப்போதைய அமைச்சர் கப்டன் செனவிரத்னவின் செயலாளராகவிருந்த சத்தியேந்திரா டெலோ இயக்கத்தினரை பிரதிநிதித்துவம் செய்த வேடிக்கைகள் “தமிழீழ” கூத்தை அப்போதே அம்மணமாக்கி இருந்தது.

    Reply
  • sen
    sen

    ஜெயபாலனின் இந்த கட்டுரை வழமைக்கு மாறானது.

    மிகவும் சரியான முறையில் தமிழ் இயக்கங்களின் நடைமுறைகளை ஆய்வு செய்திருந்தாலும், இந்த இயக்கங்கள் என்ன வர்க்க அடித்தளத்திலும், முன்னோக்கிலும் உருவமைக்கப்பட்டன என்பதனை சொல்லவில்லை. ஒரு அரசியல் போக்கின் நடைமுறைகள் அதனது வேலைத்திட்டத்தில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது.

    ஜெயபாலன் எழுகின்றார் “தமிழீழ விடுதலை இயக்கமோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமோ அல்லது ஆயுதம் ஏந்திய தமிழீழ விடுதலை இயக்கங்களோ அடிப்படையில் ஒரே விதமானவர்கள். இவர்கள் மக்கள் விடுதலை என்பதிலும் பார்க்க தங்கள் அதிகாரத்தை தமிழ் மக்கள் மீது நிறுவுவதற்குப் போராடியவர்கள்” இது அவரது மிகவும் சரியான கணிப்பீடு.

    அடுத்த வரியில் தொடர்கின்றார் “தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புகளின் அரசியல் மற்றும் இராணுவத் தவறுகளினால் தமிழ் மக்களே மிகப் பாரதூரமான பின்னடைவுகளைச் சந்தித்து உள்ளனர்.” இது முதலாவது வரியுடன் முரண்படுகின்றது. தங்களது அதிகாரத்தை தமிழ் மக்கள் மீது நிறுவுவதற்கு போராடியவர்கள் எப்படி மக்கள் சார்பான அரசியல், இராணுவ நடைமுறைகளை முன் வைக்க முடியும்?. இவர்களது வேலைத்திடம் தாங்கள் சார்ந்து இருந்த தமிழ் முதலாளித்துவ தட்டுக்களின் நலன்களை பாதுகாக்க மட்டுமே இருந்தன. இது பிறப்பில் இருந்தே ஒடுக்கப்பட மக்களின் நலன்களுக்கு எதிரானது. இவர்களது அரசியலும், இராணுவமும் தமிழ் மக்களின் பின்னடைவிற்கு பொறுப்பானது,தனிய பிழைகள் மட்டுமல்ல.

    TELO இயக்கத்தின் அங்கத்தவர்களை காட்டுமிராண்டி தனமாக கொன்று குவித்ததின் காரணத்தை இந்த கட்டுரை “தங்களை எதிர்ப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்ற பாடத்தை புகட்டுவதற்காக இவை திட்டமிட்ட முறையில் நடாத்தப்பட்டது. தமிழ் மக்கள் பயப்பீதிக்குள் தள்ளப்பட்டு வாய்மூடி மௌனிக்க வைக்கப்பட்டனர். அன்று ஒடுக்கப்பட்ட அவர்களது குரல்கள் இன்றும் ஒடுங்கியே உள்ளது. ஒடுக்குபவர்கள் மட்டுமே மாறியுள்ளனர்.” என்று தெரிவிக்கின்றது இது இந்தக் கட்டுரையின் இன்னுமொரு பிரதானமான கருத்து.

    புலிகளின் காட்டுமிராண்டி தனத்தின் சிகரமாக இருந்த இந்த நிகழ்வு ஏன், எப்படி நடக்க முடிந்தது. இதற்கான விடையினையும் இந்தக் கட்டுரை பின்வருமாறு தொட்டுகாட்டுகின்றது, “வே பிரபாகரனும் சிறிசபாரட்னமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்” இவர்கள் மட்டுமல்ல இந்த இயக்கங்களின் தலைவர்கள் அனைவருமே ஒரே மாதிரியானவர்கள். இவர்களுள் யாருக்காவது பிரபாகரனுக்கு கிடைத்த சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் வேறுமாதிரியாக நடந்து கொண்டிருக்க முடியாதவர்கள். இது தனிமனித குணாம்சம் என்பதிலும் பார்க்க இவர்களது அரசியலில் இருந்து புறப்படுகின்றது.

    புலிகளின் இராணுவ பலமும், ஒழுங்கு செய்யும் முறையும் அத்துடன் பிரபாகரன் உட்பட்ட தலைமையின் காட்டுமிராண்டிதனமான தனிமனித பண்புகளும் தமிழ்மக்கள் மேல் அதிகாரத்தினை நிறுவுவதற்கு வழிவகுத்தன. ஆனால் இந்த முறைகள் மட்டும் புலிகளின் தோல்விக்கு வழி வகுக்க இல்லை. புலிகளிடம் நவீன ஆயுதங்கள் இருந்தும் புலிகள் ஏன் தோல்வியடைந்தனர் என்பதற்கு அவர்களது அரசியல் தான் பிரதானமான காரணமாகின்றது. தோல்வியடைந்தது தமிழ் ஈழம் என்ற கோரிக்கையும் அதனை அடைவதற்கான அரசியல் சிந்தனையும் ஆகும்.

    தமிழ்மக்கள் வெளிநாடுகளில் நாடுகடந்த அரசு என்ற புலிகளின் அரசியல் தொடர்சி, தீவில் TNA வின் இரண்டும் கெட்டான் அரசியல் இரண்டினையும் நிராகரிக்க வேண்டும். அது மட்டுமல்ல இவர்களுக்கு போட்டியான EPDP , TMVP , PLOT வகையறாக்களையும் நிராகரிக்க வேண்டும். இவர்களின் நோக்கம் தமிழ் மக்கள் மீதான அதிகாரத்தினை கைப்பற்றுவதற்கான எதனையும் செய்யும் அரசியலாகும்.

    இது தான் தமிழ் மக்கள் படிக்க வேண்டிய வரலாற்று பாடம்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தங்கத்துரை குட்டிமணிதான் இலங்கையில் பிடிபட்ட முதலாவது கள்ளக்கடத்தல்காரர் அல்ல. இதற்கு முன்பு எத்தனை கள்ளக் கடத்தல்காரர்கள் பிடிபட்டதும் நீதிமன்றத்தில் இனப்பற்றேடு உரையாற்றினார்கள் நந்தா. கூறமுடியுமா? குட்டிமுதாளித்துவ சிந்தனைகள் இப்படிதான் தோன்றி பரிதாபகரமான முறையில் தோல்வியடைகின்றன. புத்தகத்தில் படிப்பதிலும் பார்த்து வரும்காலச் சந்ததிக்கு நேரடி அனுபவத்தை தந்தார்கள் என்பதில் அவர்களுக்கு ஒரு கெளரவத்தை கொடுக்க வேண்டும் அல்லவா? அல்லது பத்மநாபா சிறீ நயவஞ்சக முறையில் கொலப்பட்டதை நியாப்படுத்துகிறீரா? நந்தா.

    Reply
  • vanthiyadevan
    vanthiyadevan

    dear nantha
    if you like mr pirabhakaran you can go and stay with him or live with him in heven for that i can do the arrangements even in europe or usa but do not try to match or undermine sri anna with the thamileela thaesiya thuroki pirabhakaran if you have guts come for an open meeting

    Reply
  • chandran.raja
    chandran.raja

    திரு.சென் உங்கள் கருத்தில் எனக்கொரு குழப்பம் உண்டு. “நாடுகடந்த அரசு” என்பது புலிகளின் அரசியல் தொடர்ச்சி. தீவில் தமிழ் கூட்டமைப்பு இரண்டையும் நிராகரிக்கவேண்டும்”. இதை நான் முற்றுமுழுதாக எந்தவித மறுப்பும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளுகிறேன். அடுத்து வருகிற கருத்தோ! ஈ.பி.டிபி ரி.எம்.வி.பி புளொட் போன்ற வகையறாக்களையும் நிராகரிக்கச் சொல்லுகிறீர்கள். இவர்கள் ஒரு சில ஆண்டுகாலங்களுக்கு முன்பு கொலை கடத்தலில் சம்பவங்கள் அடாவடித்தனம் போன்றவற்றில் ஈடுபட்டவர்கள் தான் மறுப்பதற்கு இல்லை. ஆனால் இவர்கள் இன்று ஜனநாயகமுறையை ஏற்று கொண்டவர்கள் அல்லவா? நடந்து முடிந்த இருதேர்தல்களையும் அமைதியாக நடத்துவதற்கு முடிந்தயளவு உதவியவர்கள் அல்லவா?

    பயங்கரவாதம் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருந்த நாட்டில் ஜனநாயக வழியை ஏற்று வருபவர்களை அரவணைத்து செல்வதே ஜனநாயகப் பண்பாகும். இல்லையே திரும்பவும் அவர்களை பயங்கரவாத சேற்றில் மூழ்படிப்பதற்கே வழிகோலும். இந்த வகையிலேயே நான் குழப்பமாக இருக்கிறேன் அல்லது முரண்படுகிறேன். இவர்களையும் நிராகரித்துவிட்டால் அந்த வெற்றிடமான இடத்தில் யாரையிட்டு நிரப்புவது? இது ஏதோ நடைமுறையை அணுகாத “கற்பனைபாத்தி” போல் உள்ளது இல்லை. வளர்ந்து வரும் உலகப்பொருளாதர நெருக்கடி இதற்கெல்லாம் விடைகாணும் என கருதுகிறீர்களா?……தயவுசெய்து தெளிவுபடுத்தவும்.

    Reply
  • BC
    BC

    ஜெயபாலனின் கட்டுரையுடனும் குறிப்பாக (ஆயுதம் ஏந்திய தமிழீழ விடுதலை இயக்கங்களோ அடிப்படையில் ஒரே விதமானவர்கள். இவர்கள் மக்கள் விடுதலை என்பதிலும் பார்க்க தங்கள் அதிகாரத்தை தமிழ் மக்கள் மீது நிறுவுவதற்குப் போராடியவர்கள்) நந்தாவின் கருத்துக்களோடும் உடன்படுகிறேன்.

    Reply
  • Ajith
    Ajith

    வரலாறு ஈவிரக்கம் பார்ப்பதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை தமிழர்களுக்கு உணர்த்தி உள்ளது.
    If it is true, how come Sinhala racists continue to massacring over 200,000 tamils since 1958. Will Rajapakse and its agents face the same fate? The Indian establishment which planned and implemented its genocidal war against tamils along with Sinhala racism. Unfortunately, tamils youths were falllen into the consipracy. It is the slavery attitude and behaviour of some of the tamils who worked as agents of Sinhala race was behind the seen still functioning against tamil freedom.

    Reply
  • NANTHA
    NANTHA

    சந்திரன்:
    குட்டிமணி, தஙத்துரை போன்ற முழு நேரக் கள்ளக் கடத்தல் கோஷ்டிகள்தான் “அரசியல்” பேசத் தொடங்கியவர்கள். மற்றைய கள்ளக் கடத்தல் கும்பல்கள் அரசியல் பேசவில்லை. இதனால்த்தான் கோழி கள்வெடுத்தவனுக்கு மரண தண்டனை கொடுத்த இயக்கங்கள் கள்ளக்கடத்தல் செய்தவனையும், வெளினாட்டுக்கு அனுப்புகிரேன் என்று கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்களையும் ஒன்றும் செய்யவில்லை.

    உழைக்கும் வர்க்கத்தின் எதிரிகளான கள்ளகடத்தல்காரர்களை சரித்திரநாயகர்களாக்க முயல்வது முட்டாள்த்தனம்.

    தஙத்துரையை “தேசபிதா” என்றார்கள். நாலு கடத்தல் மூன்று கொலைகள் செய்தால் “தேசபிதா” ஆகலாம் என்ற சூட்சுமம் மற்றைய தமிழர்கள “முட்டாள்கள்” என்ற நினைப்பில் சொல்லப்பட்டதாகும்.

    மகாத்மா காந்தியை இந்தியாவின் “தேசபிதா” என்கிறார்கள். கள்ளக்க்டத்தல்காரனான தஙத்துரையயும் “தேசபிதா” என்றால் அதனை நம்பும் அளவுக்கு தமிழர்கள் முட்டாள்கள் அல்ல!

    பத்மனாபாவை கொன்றவர்கள் துணைபோனவர்கள் இன்று தலைவர்கள்.

    சபாரத்தினத்தின் டெலொ இயக்கம் என்பதும் எந்த “அரசியலும்” இல்லாது வெறும் “சண்டிதனத்தில்” மாத்திரம் நம்பிக்கை வைத்திருந்தவர்கள்.

    Reply
  • NANTHA
    NANTHA

    வந்தியத்தேவன்:
    புலிக்கூண்டுக்குள்ளே இருந்து புலிகளை விமர்சித்து எதிர்த்து எழுதிய எனக்கு உங்கள் “மிரட்டல்” ஒன்றும் புதிதல்ல.

    எனது எழுத்துக்களை படித்துவிட்டு எழுதினால் நல்லது

    மேலும் சபாரத்தினம் எனது உறவுக்காரன். அந்த வகையில் ஒரு பரிதாபம் மாத்திரம் உண்டு! சாவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னால் எனது முற்றம் வழியாக ஒடிய சபாரத்தினத்தை “அந்த திசையில் ஒடாதே. உங்கள் கதை முடிந்துவிடும்” என்று நான் எச்சரிக்கை செய்த போது “எஙளுக்கு” எல்லாம் தெரியும் என்று ஒடி தனது “பொது அறிவை”க் காட்டிய சபாரத்தினத்துக்காக பரிதாபப்படுகிறேன்.

    எனது அரசியல் கருத்துக்களுக்கு பதில் எழுத முடியாமல் “புலி”ப்பாணியில் மிரட்டல் விட்டு தமாஷ் பண்ண வேண்டாம். புளித்துப்போன விஷயம்!

    Reply
  • logan
    logan

    //கள்ளக் கடத்தல்காரனான தஙத்துரை ஸ்ரீ சபாரத்தினம் குட்டிமணி பிரபாகரன் பத்மனாபா பாலகுமார். கடத்தல்காரனான தஙத்துரையயும் “தேசபிதா” “தமிழ் விடுதலைச் சாயம்” பூசுவது சுத்த அபத்தம்! “வெளிநாட்டு” கூலிப்படையே என்பதையே உறுதிப்படுத்தியது. சபாரத்தினத்தின் டெலொ இயக்கம் என்பதும் எந்த “அரசியலும்” இல்லாது வெறும் “சண்டிதனஇயக்கம்//நந்தா

    யார் போராளி யார் மனிதன் யார் கெட்டவன் எல்லோரும் எப்படி போராட்டத்ததை ஆரம்பித்திருக்க வேண்டும் என்பதன் முழுவிபரமாக எழுதினால் நல்லது

    அமிர்தலிங்கம் தானே பிரபாகரனை வைத்து சுந்தரத்தை கொலை செய்தாகவும் ஆலால சுந்தரம் கூட்டுறவுச்சங்கத்தில் மோசடிகளில் பெண்களில் சேட்டைகள் என்றெல்லாம் புளொட்டின் நந்தாவில் முகாமில் பெண்களடன் சேஷ்டைகளில் மக்கிய புளொட் உறுப்பினர்கள் பிரபாகரன் பெண்களை கடத்தியே கலியாணம் செய்தார் உமா ஊர்மிளா சங்கர் ராஜி இந்திய உளவாளி சிறிசபா இந்திய உளவாளி நந்தா தயவு செய்து முழுமையாக எழுதவும் எது சரி ஏனெனில் நான் எந்த இயக்கத்தவர்களையும் கூட்டணியையும் காங்கிரஸ்ஜையும் கூட நம்பவில்லை.

    பதில் எழுதுங்கள்

    Reply
  • BC
    BC

    Logan – //கள்ளக் கடத்தல்காரனான தஙத்துரை ஸ்ரீ சபாரத்தினம் குட்டிமணி பிரபாகரன் பத்மனாபா பாலகுமார். கடத்தல்காரனான தஙத்துரையயும் “தேசபிதா” “தமிழ் விடுதலைச் சாயம்” பூசுவது சுத்த அபத்தம்! “வெளிநாட்டு” கூலிப்படையே என்பதையே உறுதிப்படுத்தியது. சபாரத்தினத்தின் டெலொ இயக்கம் என்பதும் எந்த “அரசியலும்” இல்லாது வெறும் “சண்டிதனஇயக்கம்//நந்தா
    லோகன், ஸ்ரீ சபாரத்தினம் , பிரபாகரன், பத்மனாபா, பாலகுமார் கடத்தல்காரர்கள் என்று நந்தா சொல்லவில்லையே!!

    Reply
  • thurai
    thurai

    எல்லோருமாக தமிழரில் நல்லவர்களே இல்லை எல்லோரும் கெட்டவர்கள் என்னும்போது, எழுதும் நாங்கழும் கெட்டவர்களே. முதலில் நாங்கள் ஏதாவது பிறருக்காக நன்மைகள் செய்துள்ளோமா,செய்யாவிடினும் நன்மை செய்யும் நோக்கமுண்டா என்பதை முதலில் கவனத்தில் கொள்ளவேண்டும்.

    தமிழரால் தாழ்த்தப்பட்ட தமிழரா, அல்லது தாழ்த்திய தமிழரா உயர்ந்தவர்கள் என்பதை உலகின் முன் நீதிக்கு வைத்தால் தமிழரில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை உலக்ம் அறியும்.

    துரை

    Reply
  • sen
    sen

    1. ஸ்ரீலங்கா அரசு பாரம்பரியமாக ஒரு இனவாத அரசு, அரச பயங்கரவாதம் இனவாத ஆட்சியினை பாதுகப்பத்ட்கு ஆயுதமாக பாவிக்கப்படுகின்றது. சிங்கள முதலாளித்துவத்தின் எல்லா கன்னைகளும் இனவாதத்தினை அரசியல் முன்னோகாக கொண்டவை. தற்போது மகிந்த குடும்பத்தின் ஒரு வியாபார நிறுவனம் போல் நாட்டின் அரசியல், பொருளாதார, இராணுவ நடவடிக்கைகள் நடாத்தப்படுகின்றன. இந்த ஆட்சியினை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து அரசியல் அதிகாரத்தினை தங்கள் கையில் எடுக்கும் வரை தீவின் உழைக்கும் மக்களுக்கு பூரண சுதந்திரம் இல்லை.

    2. தமிழ் முதலாளித்துவத்தின் அனைத்துக் கன்னைகளும் தீவின் உழைக்கும் மக்களுக்கு எதிரானவை. தமிழ் மக்களின் மேல் அரசியல் அதிகாரத்தினை நிலை நிறுத்துவதற்காக தங்கள் சார்ந்திருக்கும் முதலாளித்துவ தட்டுகளின் சார்பில் இயங்குபவர்கள். அரசுக்கு எதிர் என்று சொல்கின்ற TNA , LTTE இன் மிச்சம் மீதிகள், அரசிற்கு ஆதரவான EPDP , TMVP , மதில் மேல் இருக்கும் ஏனையோர் அடித்தளத்தில் ஒரே நோக்கில் செயல் படுகின்றனர். இவர்களுக்குள் இருக்கும் குத்துவெட்டுக்கள் தீவின் உள்ளூர் முதலாளிகளுக்கும், பல தேசிய முதலாளித்துவதிட்கும் எந்த கோணத்தில் எப்படி அடிபணிவது என்பதாகவே இருக்கும். இந்த குத்துவெட்டுக்கள் எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்ப்படுத்தும். தமிழ் மக்கள் இவர்கள் அனைவர் தொடர்பாகவும் எச்சரிகையாக இருக்கவேண்டும். இவர்களை நிராகரிப்பதன் மூலம் தமிழ் உழைக்கும் மக்கள் தீவின் அனைத்து ஒடுக்கப்பட மக்களுடன் இணைந்து போராட தயாராக வேண்டும்.

    மேலெழுதிய இரண்டு நிபந்தனைகளை மட்டுமே நான் இதுவரை இங்கே எழுதிய கருத்துக்களும், இனிமேல் எழுத இருப்பவையும் தன்னுள் கொண்டிருக்கும்.

    மறைந்த அல்லது மறைந்தும் மறையாத அல்லது உயிரோடு இருகின்ற எந்த ஒரு தேசிய இயக்கத்தின் தலைவருக்கு தேவாரம் பாடவோ அல்லது வசை பாடவோ நான் தயாரில்லை.

    இதனை பிரசுரிப்பதோ அல்லது இது தொடர்பான ஏனையோரின் கருத்துக்களை பிரசுரிப்பதோ “தேசம் நெட்” ஆசிரியர்களின் முடிவுக்கு உட்பட்டது. இந்த இரண்டு அடித்தளங்கள் தொடர்பாக எதாவது சமசரமோ அல்லது விட்டுகொடுப்போ எனது பக்கத்தில் இருந்து எந்த நிலைமைகளிலும் எதிர்பார்க்க முடியாதது.

    ஆதலால் எனது கருத்து தொடர்பான விமர்சனங்களுக்கு பதில் எழுதுவதா அல்லது இல்லையா என்பதனை நான் மட்டுமே தீர்மானிகின்றேன்

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நந்தா!.உங்கள் கருத்துக்களை பின்னோட்டங்களை ஊன்றிக் கவனித்து வருபவனிநானும் ஒருவன்.எப்படி ஆர்வமகா படித்த போதிலும் இறுதியில் ஒருமனச் சோர்வை கவலையை ஏற்படுத்தும். காரணம் உங்களுடை இறுதிமுடிவுகள் ஒரு இனக்கலவரத்தையோ ஒரு மதக்கலவரத்தையோ தூண்டிவிடுவதற்கு துணைபோவவை.

    இறுதியில் இயக்கங்களை பற்றி உங்கள் கருத்துகளை முன்வைக்க தொடங்கியுள்ளீர்கள்.ரெலோ இயக்கம் கள்ளக்கடத்தல் இயக்கம் என முத்திரையும் குத்துகிறீர்கள். என்னிடம் ஒரு கேள்விதான் உள்ளது. அதற்கு நீங்கள் பதில் சொல்லமுடியுமா?.
    அரசியல்வாதிகள் கள்ளக்கடத்தல்காரர்களாக மாறும் போது கள்ளக்கடத்தல்காரர்கள் அரசியல்வாதிகளாக மாறக்கூடாதா? மேதாவிகள் கொலை செய்பட்டதும் மேதாவிகள் நாட்டைவிட்டு புறப்பட்டு போனதும் நாட்டையிருக்கிறவன் தன்னை மேதாவியாக காட்டிக் கொள்வதில் தப்பில்லை. ரெலோவை பற்றிய உங்கள் அபிப்பிராயமும் எதிர்வினையாக புலிகளை பாதுகாக்கவே துணைபுரியும். இதுவே எனது ஆதங்கம்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    திருவாளர் சென் அவர்களே!.
    அரசியல் அதிகாரத்தை யார் கையில் எடுப்பது?.
    இரண்டாவது மக்கள் என்று யாரை சொல்லுகிறீர்கள்?
    தமிழ்இனத்தையா? சிங்களஇனத்தையா? தொழிலாளிவர்கத்தையா???
    திருவிழாவில் முட்டாசு பலூன் காத்தாடி ஐஸ்கிறீர் விற்க முற்படாதீர்கள். கருத்துகளை கருத்துக்களாக வெளிப்பட முயற்சியுங்கள். வர்க்கஉறவுள்ள இந்த சமூகத்தில் ஒரு பாமரமனிதனின் அடிப்படை தேவையான உணவு உடை உறைவிடம் என்ற தேவைகளை பாதுகாப்போம் என்ற தேவைகளில் இருந்து எழட்டும் புதிய கருத்துகள்.

    Reply
  • NANTHA
    NANTHA

    சந்திரன்:
    உங்கள் கேள்விகள் சில நடைமுறை அசாத்தியங்கள் பற்றி எளுந்துள்ளதாகவே கருதுகிறேன்.

    கள்ளக்கடத்தல்காரர்கள் அரசியல்வாதிகள் அல்ல. அவர்கள் அரசியல் வாதிகளால் உபயோகப்படுத்துபடுபவர்கள். அந்த நேர்மையற்ற அரசியல்வாதிகளின் முறையற்ற உறவுகள் கள்ள கடத்தல்காரர்களையும் “தலைவர்: அந்தஸ்த்துக்கு உயர்த்திவிட்டதுதான் எங்கள் தமிழரின் அழிவுக்கும் நெறிகெட்ட போக்குக்கும் காரணங்களாகாப் போயுள்ளன.

    உலகத்தின் எந்தநாட்டுச் சட்டங்களும் கள்ளக்கடத்தலை இதுவரையில் நியாயப்படுத்தவில்லை.நாகரீகமான தொழிலாகவும் அங்கீகரிக்கவுமில்லை.

    புலிகளின் வளர்ச்சியில் கள்ளக்கடத்தல் கணிசமான பங்கை வகித்துள்ளது. இலங்கை அரசின் கடல்படையின் விரிவாக்கம் இந்த கள்ளக்கடத்தல்களை முறியடித்துள்ளது. புலிகளின் வீழ்ச்சியில் கள்ளக்கடத்தல்காரர்களின் அழிவும், தோல்வியும் பிரதான பாத்திரம் ஏற்கின்றன.

    1970களில் சீன அரசிடமிருந்து வாங்கப்பட்ட “வீரயா”, “சூரயா” என்ற கடல்படைக் கப்பல்கள் கள்ளகடத்தல்காரர்களின் நூற்றுகணக்கான வள்ளங்களுக்கு ஜலசமாதி கட்டின. இந்த “இழப்புக்கள்”தான் குட்டிமணி, தஙக்த்துரை போன்ற கள்ளக்கடத்தல்காரர்கள பாதித்த விடயங்கள். அந்த அரசின் மீது இவர்களுக்கு வந்த வெறுப்பு பின்னர் அதே அரசின் அரசியலோடு வெறுப்புக் கொண்ட பிரக்கிராசிகளையும் “கூட்டணியாகியது”. இதனைத் தவிர கள்ளக்கடத்தல்காரர்களுக்கு எற்பட்ட “தமிழ்” பிரச்சனை”என்ன?

    தற்செயலாக ஈழம் கிடைத்திருந்தால் “கள்ளக்கடத்தல்” தொழிலை என்ன செய்வதாக உத்தேசம் இருந்தது? அதிகளவு கள்ளகடத்தல் செய்பவர்களுக்கு “தேசாபிமானி” என்று ஏதாவது மெடல்கள் கொடுக்க உத்தேசித்திருந்தார்களா?

    “மேதாவிகள்” ஏன் ஓடினார்கள் என்பதைக் குறிப்பிடாது விட்டது ஏன்?

    என்னுடைய கருத்துக்கள் இனக்கலவரம், மதக்கலவரம் என்பனவற்றைத் தடுப்பதற்கான எச்சரிக்கைகளே ஒழிய தூண்டுபவைகள் அல்ல.

    மேதவிகளைத் துரத்திய மேதாவிகள் இலங்கையில் செய்த மேதாவித்தனங்கள் உழைக்கும் மக்களை முள்கம்பி வேலிகளுக்குப் பின்னால் கொண்டு சென்றன என்பதை அறிந்திருந்தும் உங்களின் அபிப்பிராயம் வேதனையானது.

    வெளினாடுகளுக்கு ஓட்டம் பிடித்த டெலொ இயக்கத்தினர் இன்று “புலிகளோடு” ஐக்கியமாகி வருவதை அவதானிக்க முடிகிறது. கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற “கலாச்சார” விழுமியங்கள் அவர்களின் ஐக்கிய உடன்பாடுகளுக்கு காரணங்களாக இருக்கலாம்!

    Reply
  • பல்லி
    பல்லி

    //புலிக்கூண்டுக்குள்ளே இருந்து புலிகளை விமர்சித்து எதிர்த்து எழுதிய எனக்கு உங்கள் “மிரட்டல்” ஒன்றும் புதிதல்ல. //
    என்ன பெயரில் எதிலே (ஊடகமோ அல்லது பத்திரிகையோ) அதையும் சொன்னால்தானே புரியும்;

    //சாவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னால் எனது முற்றம் வழியாக ஒடிய சபாரத்தினத்தை “அந்த திசையில் ஒடாதே. உங்கள் கதை முடிந்துவிடும்” என்று நான் எச்சரிக்கை செய்த போது “எஙளுக்கு” எல்லாம் தெரியும் என்று ஒடி தனது “பொது அறிவை”க் காட்டிய சபாரத்தினத்துக்காக பரிதாபப்படுகிறேன்.//

    இதில் உன்மை இருப்பதாய் எனக்கு தெரியவில்லை; ரெலோ இறுதி யுத்தம் ஒரு மிளகாய் தோட்டத்தில் நடந்ததாயும் அதில் பல தோழர்களுடன் சிறி இருப்பது தெரிய வந்தபோது புலிகளால் சுற்றி வளைக்கபட்டு நேரடி மோதலில் தான் சிறி இறந்ததாக சொன்னார்கள். அந்த நேரத்தில் புளொட் அமைப்பு உதவி தருவதாக கேட்டபோது சிறி தனது பல தோழர்கள் இறந்து விட்டனர்; இந்த நிலையில் நான் தப்புவது நியாயம் இல்லை; ஆகவே முடிந்தவரை போராடி மடிகிறேன் என சொன்னாராம், ஆனால் பொபி (யாழ் மாவட்ட தளபதி) அதை ஏற்று கொள்ள வில்லையாம்; சிறியருக்கு வெளிபாதுகாப்பு கொடுத்த பொபி தப்பியதும் புலிக்கு இலகுவாக சிறியின் இடத்தை அழிக்க உதவியதாக பின்னாளில் பொபி தமிழகத்தில் சொல்லி கவலை கொண்டார்; பொபியுடன் தமிழகத்தில் மூன்று முறை சந்தித்து பேசியுள்ளேன்; ரெலோ வளர்ச்சிபற்றியும் அதன் வீழ்ச்சி (அழிவு) பற்றியும்: அதில் இரண்டிலும் தனது பங்கு உண்டு என பரிதாபமாய் சொல்வார், அதேபோல் தங்கதுரை கடத்தல் செய்ததாய் நான் கேள்விபடவில்லை, ஆனால் குட்டிமணி தான் பாட்டுக்கு கடத்தல் தொழில் செய்து வந்தார் ஆனால் அவரை அதை கெடுத்து இயக்கத்தில் அழைத்து இறுதியாய் கண்ணயும் தோண்டி கொல்ல வைத்த பெருமை யாரை சேரும்??

    Reply
  • Pandiyan
    Pandiyan

    நண்பர் சந்திரன்ராஜா அவர்களுக்கு!
    நீங்கள் நன்றாக திரிக்கப்பழகி விட்டீர்கள். நான் ரெலோவில் இருந்தபோது செந்தோழர் அழகலிங்கம் அவர்களின் ஊரவன் என்பதால் ஜேர்மனியில் இருந்து திரும்பிய சிறிசபா அழகலிங்கம் ரெலோவிற்கு பத்திரிகை நடத்துவதற்காக அதாவது ராஜகுருவாக (பாலசிங்கம் போல) செயற்பட வரவிருப்பதாக என்னிடம் சிறிசபா என்னிடம் கூறினார். ஆனால் நீங்களோ ஏதோ ஒரு காரணத்திற்காக செந்தோழரின் ஆளுமையை குறைத்து மதிப்பிட்டு புதுக்கதை புனைய முயற்சிக்கிறீர்கள்.

    புலிகளின் பத்திரிகைகள் எல்லாத் தாக்குதலுக்கும் பிரபாகன் தலைமை தாங்கினார் என பீலா விடுவது போல சாவகச்சேரி, முறிகண்டி தாக்குதலை சிறிசபா இந்தியாவில் இருந்து நடத்தினார் என கூறுவது அத்தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர்களை அவமானப்படுத்துவது போல உள்ளது. சிறிசபா திட்டமிட்டு இலங்கை சென்று நடத்திய தாக்குதல் சமாதானம் பேச வருமாறு கூறி யாழ். வைத்தியசாலையில் தாஸ் குழுவினரை சுட்டு வீழ்த்தி ரெலோவின் அழிவிற்கு வழி சமைத்ததேயாகும்

    நண்பர் நந்தாவிற்கு!
    நீங்கள் கூறியவற்றில் பல விடயங்கள் நான் ஏற்றுக் கொண்ட போதும் குட்டிமணி சிறிசபா …போன்ற ரெலோ தலைமைகள் மேல் மிகக் கடுமையான விமர்சனம் எனக்குண்டு. ஆனால் அதற்காக மனித நேயமிக்க தன்னலமற்ற ஏனைய ரெலோ போராளிகளை சுட்டுக் கொல்வதற்கு புலிகள் யார்? இங்கு எழுதப்பட்ட விடயம் அதுவே! ஆனால் நீங்கள் குட்டிமணி அப்படி சிறிசபா இப்படி என கூறுவதன் மூலம் அப்படுகொலை சம்பவங்களை மறைக்கப் பார்க்கிறீர்கள். முதலில் புலிகள் செய்த இந்தக் கொடூரங்களை ஏற்றுக் கொள்ளப்பழகுங்கள். இலங்கை அரசும் பிரபாகனும் அவரது நாற்பது திருடர்களும் பிழை என்பதை வைத்து ஏராளமான நல்ல போராளிகளையும் அப்பாவி பொது மக்களையும் கொன்று குவித்தது. இதையே நீங்கள் புலிகள் ரெலோவிற்கு செய்தவற்றை பிரதியீடு செய்கின்றீர்கள்.

    பாண்டியன் தம்பிராஜா.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நந்தா! கள்ளக்கடத்தல் என்பது என்ன? அரசாங்க சட்டதிட்டங்களுக்கு மீறி நடக்கப்படுவதே கள்ளக்கடத்தல். கள்ளக்கடத்தல்காரன் உபயோகமான பொருளைத்தானே மக்களுக்கு கொண்வந்து கொடுக்கிறான். பயன் இல்லாத பொருள் விற்பனை படுவது இல்லையோ?….
    சிறீயின் வாழ்க்கைவரலாறு வேதனைக்கு உரியது. குறுகிய காலத்தில் அவரின் சாதனையும் ஈடுஇணையில்லாதது. எதையும் இனியும் யாரும் நிவர்த்தி செய்யமுடியததே தோழர் சிறீ சபாரத்தினம் என்ற உயர்ந்தமனிதன். இந்த ஒரு தனிமனிதன் பின்னே ஒருஇனத்தின் ஒருபகுதி மக்கள் அவன் பின்னே திரண்டு அவன் கட்டளையை ஏற்று பின் தொடர்ந்தார்கள்.. சதியில் முறையடிக்கப்பட்டது: இதுவே கடந்தகால வரலாறு. புரிய முடியாதவர்கள் புரிய முற்படாதீர்கள்.

    பல்லி! சிறீயை பாதுகாப்தற்கு திசையை காட்டினாராம் நந்தா இதுவே யாழ்பாணபுத்தி என்பது. இது சீதை போன திசையை காண்பிக்கவில்யையா சடாய்வு. புரட்சிகரமாக கதைத்போதிலும் எமது உழ்வினைஎம்மை தொடர்ந்து வருகிறதே என்பதே உண்மை.
    பாண்டியன் தம்பிராஜா நான் ஏதாவது சினிமாபடத்தை எடுத்தால் கவுண்டமணி செந்தில் இடத்திற்கு உங்களைத்தான் சிபாரிசு செய்து வைத்திருக்கிறேன்.

    Reply
  • NANTHA
    NANTHA

    பல்லி,
    அடுத்ததாக சிறியுடன் ஓட்டம் பிடித்துக் கொண்டிருந்த போபியும், யக்கொவாவும் எப்படி உயிர் தப்பினார்கள் என்று யாருக்கும் தெரியாது. யகோவா இப்போது கனடாவில் புலிகளுடன் அலைவதை கண்டிருக்கிறேன். மிளகாய் தோட்டத்தில் சமரும் நடக்கவில்லை. வேறு டெலோ ஆட்களும் சாகவில்லை. ஸ்ரீ சபாரத்தினம் தனியனாக புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டது உண்மை. செத்த பிரேதத்துக்கு கிட்டன் தலையில் வெடி வைத்த காட்சியும் மனதில் உண்டு. மயானத்தில் சடலத்தை டயர் போட்டு கொளுத்திய காட்சி வரை பார்த்தவர்கள் இருக்கிறார்கள்.

    பாண்டியன்:
    புலிகளுக்கு நான் எங்கும் எப்போதும் “வக்காலத்து” வாங்கியது கிடையாது என்பதை முதலில் நீங்கள் உணர்ந்து கொள்வது நல்லது. மேலும் டெலோ இயக்கம் புலிகளை எங்கும் விமர்சித்து தாங்கள் உத்தமர்கள் என்று நிலை நாட்டியது கிடையாது. இரு கோஷ்டிக்கும் ஒரே எஜமானர்கள் என்ற உண்மை தெரியாமல் நீங்கள் இருப்பதும், அந்த எஜமானர்கள் புலிகளைத் தங்கள் உபயோகத்துக்கு ஆதரித்து வந்து முள்ளி வாய்க்கால் வரை கொண்டு சென்றார்கள் என்பதும் உண்மை.

    “இந்திய ஆதரவு” கோஷ்டிகள் அனைத்தையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதுக்கு அமையவே டெலோவும் புலிகளால் அழிக்கப்பட்டனர். டெலோவுக்கும், புலிகளுக்கும் கொள்கையளவில் எந்த வேறுபாடும் இருக்கவில்லை!

    Reply
  • பல்லி
    பல்லி

    //புலிகளின் பத்திரிகைகள் எல்லாத் தாக்குதலுக்கும் பிரபாகன் தலைமை தாங்கினார் என பீலா விடுவது போல சாவகச்சேரி, முறிகண்டி தாக்குதலை சிறிசபா இந்தியாவில் இருந்து நடத்தினார் என கூறுவது அத்தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர்களை அவமானப்படுத்துவது போல உள்ளது. // பாண்டியன்

    இது ஒரு சரியான விளக்கம் கிடையாது; ஒரு அமைப்பின் செயல்பாட்டுக்கு (நல்லதோ கெட்டதோ) அதன் தலமைதான் பொறுப்பு; அதன்படிதான் புலி பிரச்சனைகள் அனைத்துக்கும் தவறான தலமைமீது எமது விமர்சனம் வருகிறது; பாண்டியன் நிலைபடி பார்த்தால் பிரபாகரன் மிக நல்லவர்; காரனம் அவர் எந்த தாக்குதலுக்கும் போனதில்லை யாரையும் கொன்றதும் இல்லை எனலாம்; (அது சரியாகுமா) அதேபோல் ரெலோ தாக்குதல் அனைத்துக்கும் சிறியரின் தலமையே கரனம்; அழிவுக்கும்தான்; ஆனாலும் தனது போராளிகளுடன் தானும் உயிர் விட்டதால் அவர் ஒரு உன்மையான போராளி என்பதனை நிருபித்துள்ளார், அவர் தப்பிபோக நினைத்திருந்தால் கண்டிப்பாக போய் இருக்க முடியும்; சிறியர் நான் அறிய விட்ட தவறு தாஸ் படுகொலைதான், இது மிக தவறான விடயம்; ஆனால் இந்த இயக்க பிரிவு ரெலோவுக்கு மட்டும் சொந்தம் இல்லை;

    புலியில்; பிரபா, மாத்தையா; கருனா;
    பின்பு, கருனா;பிள்ளையான்;
    புளொட்டில்; உமா; தீப்பொறி; ராஜன்;
    ஈ பி ஆர் எல் எவ் ; பத்மநாபா; தோழர்:
    ஈரோஸ்சில்;பாலகும்லார்; பிரபா ;அளகிரி;
    ரெலா ;கூச்:செந்தில் ;காந்தன்;
    இப்படி பலதை சொல்லலாம்:
    ஏன் அரசை பாருங்கள் போருக்கு முன் நண்பனாய் சம்மந்தியாய் வலம்வந்த மகிந்தாவும் சரத்தும் இன்று ஈரான் அமெரிக்கைவிட முறுகல் நிலையில் இருக்கினமே; ஆக சிறி மட்டும்தான் இப்படியான முட்டாள் முடிவை எடுத்தாரா?? அதையும் விட தாஸ்சின் கொலையில் சிறி மட்டுமல்ல பிரபாகரன்; பத்மநாபா, பாலகுமார் கொண்ட ஒன்றுபட்டு செயல்படுவோம் அமைப்பே தாஸால் இந்த ஒற்றுமைக்கு பங்கம் வரலாம்
    என சிறியருக்கு அறிவுரை சொன்னதாக தகவல்கள் அன்று கசிந்தன; எது எப்படியோ தாஸ்சின் விடயத்தில் சிறியர் செய்தது மன்னிக்க முடியாத குற்றமே; அதேபோல் சந்திரா சொல்வது போல் சிறிக்கு ஒரு தலமைக்கு உரிய அனைத்து தகுதியும் உண்டு; (அரசியல், ஆயுதம்)

    நந்தா சிறி தனிய கொல்லபடவில்லை என்பது எனது கருத்து யாராவது இதன் விபரம் சொல்லட்டும், பொபி சில காலத்துக்கு முன்பு தமிழகத்தில் நோயால் அவதிப்பட்டி காலமானார், இது சில தளங்களிலும் வந்தத்து, பொபியால் தப்ப முடியுமாயின் ஏன் சிறியரால் தப்ப முடியாமல் போனது,?? இங்கேதான் சந்திராவின் எழுத்தின் அர்த்தம் புரிகிறது நிதானமான தலைவன் சிறி என்பது, அதேபோல் ரெலோ உறுப்பினர் மட்டுமா புலியுடன் இனைந்தனர்; இல்லையே; பாலகுமாரை பாருங்கள்,, புளொட்டின் தளபதி ஒருவர் புலி சலீமுக்கு பின்பு மன்னாரின் புலி தளபதியாய் வலம் வந்தார்(பெயர் நினைவில்லை) இன்றய நாடுகடந்த அரசின் தேர்தல் குழுவில் உள்ள சின்ன பொடி யாரு?ஏன் தோழரே மறைமுகமாக புலிக்கு உதவுவதாக குற்றடாட்டுக்கள் உண்டு, கூட்டமைப்பில் புலிக்காய் பேசி எம்பியாய் வலம்வந்த வேறு இயக்க உறுப்பினர்கள் இன்று புலிக்கு எதிராய் பேசி வெற்றி பெறவில்லையா? இன்னும் சொல்லலாம்;;

    Reply
  • NANTHA
    NANTHA

    இவ்வளவு நாளும் “ஒரு இடதுசாரித்தனத்தை” காட்டிக் கொண்டிருந்த சந்திரன் ராஜா இப்போது “பல்டி” அடிக்கிறார். இருபத்திநாலு வருடங்களுக்கு முன்னர் இவர் எங்கிருந்தார் என்பது புரியவில்லை! டெலோ இயக்கத்துக்கும் இடதுசாரி சிந்தனைக்கும் என்ன சம்பந்தம் என்பது யாருக்காவது புரிந்தால் எழுதுங்கள்!

    ஒரு பகுதி மக்கள் போனார்களாம்! அப்படியா? அதில் ஒரு ஆள்த்தான் செல்வம் அடைக்கலநாதன்! கள்ளக்கடத்தலுக்கு வக்காலத்து வாங்கும் முதல் ஆள் சந்திரன்தான்! நல்லகாலம் புலி இந்த டெலோவை ஒழித்துவிட்டது. இல்லையென்றால் தமிழரின் தேசிய “தொழில்” என்ற அந்தஸ்தை டெலோ கள்ளக்கடத்தலுக்கு கொடுத்து தமிழர்களின் மானத்தை வாங்கியிருப்பார்கள்!

    நாகரிக உலகத்தில் கள்ளகடத்தல் “தேச விரோதமான” தொழிலாகவே கருதப்படுகிறது என்பதை சந்திரன் உணராமல் “தொழிலாள-விவசாயி” சித்தாந்தங்களை எழுதி என்ன சாதிக்க முனைகிறீர்கள்?

    இலங்கையில் மிளகாய் விலை கொடி கட்டிப் பறந்த போது இந்த கள்ளக் கடத்தல்காரர்கள் மிளகாயையும் இந்தியாவிலிருந்து கொண்டு வந்து யாழப்பாண விவசாயின் வயிற்றில் கை வைத்தார்கள். சந்திரன் ராஜாவின் பார்வையில் “அபினும்” மக்கள் உபயோகிக்கும் சாதனமாகவே அவருக்குத் தெரிகிறது. அபின் மாத்திரமல்ல, சகல போதைப் பொருட்களும் இந்த கள்ளக் கடத்தல்காரர்களின் கைவரிசைதான்!

    தாங்கள் தப்பினால் போதும் என்று ஓட்டம் எடுத்த டெலோ இயக்கத்தினர் இன்று “ஸ்ரீ சபாரத்தினத்துக்கு” மாலை சூட்டுவது வெறும் முதலை கண்ணீர் ஒழிய வேறொன்றுமில்லை. ஸ்ரீ சபாரத்தினம் கொல்லப்பட்டு அடுத்த நாள் புலிகள் வீடு வீடாக டெலோ இயக்கத்தினரைத் தேடியபோது பரிதாபப்பட்டு சிலரை மறைத்து வைத்து அவலப்பட்ட நந்தாவின் செயலை நீங்கள் பாராட்ட தேவையில்லை.

    நந்தாவும் ஐ. சண்முகலிங்கமும் பல கிழக்கிலங்கை டெலோ உறுப்பினகளை மற்றைய இயக்க முகாம்களுக்குள் பத்திரமாக சேர்த்த கதைகள் பல டெலோ இயக்கத்தினருக்குத் தெரிய முடியாது. ஏனென்றால் புலியை கண்டவுடன் “தன்னுயிர் சக்கரை” என்று ஓட்டம் பிடித்த யாழ்ப்பாணத்து டெலோ காரர்கள் எங்கே மற்றவர்களைக் கவனிக்கப் போகிறார்கள்? இப்போது “ஸ்ரீ அண்ணாவுக்கு” முதலை கண்ணீர் விடுகிறார்கள்.

    ஏராளமான கிழக்கிலங்கை தமிழ் வாலிபர்கள் புலிகளால் நரவதை செய்யப்பட்டனர். யாழ்ப்பணத்தில் சோடா கொடுத்து புலிகளை ஆதரித்த பலர் இன்று “மனித உரிமை” பற்றிப் பேசுகிறார்கள்.

    டெலோ என்று சொத்து சேர்த்தவர்கள் பலர் இன்று இந்தியாவில் வீடுகள், வாசல்கள் என்று குஷியாக இருக்கிறார்கள். கனடாவில் ஒரு சிலர் வட்டி, வீடு, வாசல், கடை, சீட்டு என்று ஜமாய்க்கிறார்கள். இவர்களுக்கு “ஸ்ரீ அண்ணா” ஒரு வரப்பிரசாதம்தான்!

    Reply
  • பல்லி
    பல்லி

    நந்தா இடதுசாரிகள் எப்படி இருக்க வேண்டும்? தயவுசெய்து விளக்கம் தரவும்; ஆனால் தாங்கள் ஒரு வலதுசாரி என்பதுபோல் அல்லவா இருக்கு
    இந்த முன்னோட்டம்;

    Reply
  • thurai
    thurai

    ஒருவன் இடதுசாரியாக அல்லது வலதுசாரியாக இருக்கலாம், வாதிடலாம்.

    துரை

    Reply
  • தமிழ் வாதம்
    தமிழ் வாதம்

    யார் எழுதும் வரலாற்றில் யார் கற்றுக் கொள்வது?

    கிட்டனுடன் நின்ற நந்தா எழுதுகிறார்……..
    ‘செத்த பிரேதத்துக்கு(அதென்ன செத்த பிரேதம் )கிட்டன் தலையில் வெடி வைத்த காட்சியும் மனதில் உண்டு.’

    இராணுவத் தளபதியுடன் சென்ற ஜெயபாலன் எழுதுகிறார்……..
    ‘மே 18ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் சரணடைந்த நிலையில் இலங்கை இராணுவத் தளபதியினால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார்.’

    மனித பேரழிவிற்கான ஆயுதம் சதாமிடம் இருக்க, ஈராக் அழிந்து போகிற வரலாறு ஈவிரக்கம் காட்டட்டும் முதலில்.

    Reply
  • santhanam
    santhanam

    சின்னமென்டிஷ் கொலைக்கு பொபியை காப்பாற்றி இந்தியாவிற்கு அனுப்பியது தான் முக்கிய காரணம் கிட்டு செய்த அடாவாடிகளை போல சிங்களவர் செய்யவில்லை

    Reply
  • பல்லி
    பல்லி

    தமிழர் போராட்டத்துக்கு தேவையானவை யாவும்(அறிவு தவிர்ந்த) புலிகளிடம் இருந்தபோது நாம் ஒரு முள்ளிவாய்க்காலை பார்த்தது போல்தான் ஈராக்கின் பரிதாபமும்:

    Reply
  • பல்லி
    பல்லி

    //நல்லகாலம் புலி இந்த டெலோவை ஒழித்துவிட்டது. //
    ஆக நந்தா புலி ரெலோவை அழித்தத்தை ஏற்றுகொள்கிறார்;

    // கள்ளக்கடத்தலுக்கு வக்காலத்து வாங்கும் முதல் ஆள் சந்திரன்தான்! //
    ஆனால் நந்தா புலம்பெயர் தேசத்துக்கு வந்த 90 வீதமானவர்களை நீங்கள் சொல்லும் அந்த கடத்தல்காரர்தானே கொண்டு வந்து விட்டார்கள்? இன்று வரை அதை அவர்கள் பல இன்னலுக்கு மத்தியிலும் செய்கிறார்கள். அதை அவர்கள் தொழிலாய் செய்தாலும் பலருக்கு சேவையாகவல்லவா படுகிறது, கடத்தல் என்பது உயிரை பயணம் வைத்து செய்யும் தொழில், அது தவறோ சரியோ அதை விமர்சிக்க எனக்கு விருப்பம் இல்லை;

    //ஏராளமான கிழக்கிலங்கை தமிழ் வாலிபர்கள் புலிகளால் நரவதை செய்யப்பட்டனர். யாழ்ப்பணத்தில் சோடா கொடுத்து புலிகளை ஆதரித்த பலர் இன்று “மனித உரிமை” பற்றிப் பேசுகிறார்கள்// இது நந்தா!!!!//நல்லகாலம் புலி இந்த டெலோவை ஒழித்துவிட்டது. //இதுவும் நந்தாவே, ஆக அந்த பலரில் ஒருவர் நந்தா??

    //நந்தாவும் ஐ. சண்முகலிங்கமும் பல கிழக்கிலங்கை டெலோ உறுப்பினகளை மற்றைய இயக்க முகாம்களுக்குள் பத்திரமாக சேர்த்த கதைகள் பல டெலோ இயக்கத்தினருக்குத் தெரிய முடியாது. ://
    அப்படியாயின் சின்னமெண்டிஸ்சிடம் நீங்கள்தான் பொபியை கொண்டுபோய் பாதுகாத்தீர்களா?? அதுசரி நீங்கள் எந்த முகாமில் ரெலோ உறுப்பினர்களை சேர்த்தீர்கள். ,,??

    //தன்னுயிர் சக்கரை” என்று ஓட்டம் பிடித்த யாழ்ப்பாணத்து டெலோ காரர்கள் //
    பல்லிக்கு தெரிய 150 பேருக்கு மேல் யாழ் ரெலோ தோழர்கள் கொல்லபட்டனர் ஓடவில்லை; எதுக்காக நந்தாவுக்கு இந்த பிரிவினை வாதம்;

    //அடுத்த நாள் புலிகள் வீடு வீடாக டெலோ இயக்கத்தினரைத் தேடியபோது பரிதாபப்பட்டு சிலரை மறைத்து வைத்து அவலப்பட்ட நந்தாவின் செயலை நீங்கள் பாராட்ட தேவையில்லை//
    நந்தா உன்மையில் நீங்கள் யார்?? உங்கள் கற்பனை கண்ணதாசனை விட மேலானவை, நீங்கள் இல்லாத சம்பவமே ஈழத்தில் இல்லைபோல் உள்ளது இதுக்கு மேலும் உங்களை நான் வம்புக்கு இழுக்கவில்லை;

    Reply
  • santhanam
    santhanam

    கருவறுத்தவர்களிடம் நாம் கருத்து எழுதுகிறோம் அன்று தமிழ்ஈழம் என்ற கனவுடன் சென்ற போரளிகளை வல்லரசுகளின் கைபொம்மையாக செயற்பட்ட தலைமைகளே இவர்களது அழிப்பிற்கும் அடுத்தவனிடம் சராணகதிக்கும் பொபி உயிர்பிச்சை புளொட்டிடம் கேட்டது அதன் பரிகாரம்தான் அது புலிதான் முக்கியகாரணம் போரளிகள் உயிர்வாழ்வுக்கு சிங்களஆமியிடம் அனைத்து இயக்கபோரளிகளும் பிச்சை எடுப்பதற்கு. ஐரோப்பாவில் இன்றையநிலைக்கு ……..

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ஜே.ஆர். ஜெயவர்த்தன காலத்தில் பெரிய இனக்கலவரம் நடைபெறுகிறது. இந்த இனகலவரம் முன்புநடந்த இனவரத்திலும் பார்க்க விசேஷம் என்னவென்றால் இதில் ஆயுதப்படையும் அரசியல்வாதிகளும் எனக்கு கிடைத்த தகவல்களின் படி ஜே.வி.பியும் பட்டியல்போட்டு கடைகளை ஸ்தாபனங்களைத் தேடித்திரிந்தார்கள் என்பது. அதாவது ஐக்கியதேசிய கட்சியே மறைமுகமாக முன்நின்று நடத்தியது. இங்குதான் பூட்டிய சிறைக்குள் ரெலே தலைவர்கள் கொடுரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். இந்த காலப்பகுதியே சிறீசபாரத்தினம் தலைமையில் போராட்டம் ஒரு புதியவேகத்துடன் உத்வேகம் பெறுகிறது. சோம்பிகிடந்த இயக்கங்கள் துளிர்விடுகின்றன. தனிநாட்டு கோஷங்கள் வலுவடைகின்றன.

    இளைஞர்களின் துடிப்புக்கு எது கள்ளக்கடத்தல் இயக்கம்? எது கள்ளக்கடத்தல் இல்லாத இயக்கம் என பேதம் பார்த்தது கிடையாது. அரசே! சட்டத்தை மதியாதபோது எவன் கும்குமப்பூகடத்தினான் எவன் அபின் கடத்தினான் எனவா? இளைஞர்கள் பார்ப்பார்கள்? அப்படியென்றால் அந்த அரசின் அனுமதி பெற்று அல்லவா துப்பாக்கியையும் வெடிகுண்டுகளையும் நாட்டுக்குள்
    கொண்டுவரவேண்டும்? அப்படியென்றால் ஆயுதப்போரரட்டமே நடந்திருக்காது அல்லவா? ஆகவே இயக்கப் போராட்டங்களை கள்ளக்கடத்தலுடன் தொடர்பு படுத்தி கதைப்பதே தவறானது.

    நந்தா! என்னை நான் என்றும் இடதுசாரி என்று முத்திரை குத்திக்கொண்டது கிடையாது. இடதுசாரிகட்சிகளும் இயக்கங்களும் எது இடதுசாரி? என்பதை பற்றி முடிவெடுக்க முடியாமல் திணறுகின்றன. சீனாவும் ரஷ்யாவும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. ஏகாதிபத்தியத்தின் முதாளித்துவத்தின் வீச்சுக்கள் போட்டி பொறாமைகள் முன்னெப் பொழுதைவிட வலுக்கூடியதாகவே இருக்கின்றன. இந்த உலகம் ஒரு கிறிகிஸ்தான் ஒரு ஏதென்ஸ் உடன் நின்றுவிடப் போவதில்லை வரலாற்று சக்கரம் மிகவும் வேகமாகவே சுழலஆரம்பிக்கின்றன. 1945 ஆண்டுக்கு பிறகான முதாளித்தவசெழிமை ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் கனவுப் பொருள்ளாகிவிட்டது. யூரோநாணயத்தின் பெறுமதி கேள்விக்குறியாகிக் கொண்டே போகிறது. வேலையில்லா திண்டாட்டம் சமூநலவெட்டுக்கள் பணத்தைச்சேமியுங்கள் போன்றவை ஒவ்வொரு நாட்டு அரசாங்கத்தின் குரல்வளையும் நெரிக்கின்றன ஒவ்வொருநாட்டு தொழிலாளிவர்க்கமும் இதை அமைதியாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இந்த நிகழ்வு ஒவ்வொரு நாட்டு தொழிலாளர்களையும் சரவெடி போன்ற போராட்டங்களுக்கே இட்டுச்செல்லும்.அதிலிருந்தே இடதுசாரிகளும் தலைமைகளும் தோன்றுவார்கள்.

    விவாதங்கள் வாசகர்களை வளர்த்து விடுவதாகவே அமையவேண்டும். திசைமாறி விவாதங்கள் போவது கவலைக்குரியது. இது நுhல்பந்தை இழுத்த பூணை கடைசியில் தனது கால்லில் சிக்குப்பட்டு அவதிப்படுவது போல் வந்துவிடக்கூடாது. இறுதியாக ஒன்று நந்தா! தலைகீழாக நின்று பார்த்தாலும் மற்றவர்கள் “பல்டி” அடிப்பது போல்தான் தெரியும். ஒருமுறை நேராக நின்றுபார்க்கவும்.

    Reply
  • BC
    BC

    கள்ளக்கடத்தலை ஒரு தொழல் மாதிரி கௌவுரவம் கொடுத்து பல்லி எழுதியது அதிர்ச்சியாக உள்ளது.

    Reply
  • பல்லி
    பல்லி

    //கள்ளக்கடத்தலை ஒரு தொழல் மாதிரி கௌவுரவம் கொடுத்து பல்லி எழுதியது அதிர்ச்சியாக உள்ளது.//
    பிசி நான் அந்த தொழிலை மரியாதை கொடுத்து எழுத இல்லை, ஆனால் நான் அவர்கள் உதவியுடந்தான் புலம்பெயர்ந்தேன், அதனால் எனக்கு அவர்களை விமர்சிக்கும் அருகதை இல்லை; அதைதான் சொல்லியுள்ளேன், ஏறிய ஏணியை உதைப்பது தவறு; நாம் புலியை எதிர்ப்பது கூட ஒரு அதே தொழிலை போன்றதுதான்; காரணம் காலத்தின் கட்டாயம் நாம் புலி தமிழராய் இருந்தால் கூட அதே தமிழர் நலன்சார்ந்து விமர்சிக்க வேண்டி உள்ளது, கடத்தலில் பலவகை உண்டு; ஆனால் நந்தா சொன்னவர்களின் கடத்தல் எனக்கு தவறாக படவில்லை; பலருக்கு பல்லியின் எழுத்து அதிர்ச்சிதான்; ஆனால் அது பிசிக்கு வரகூடாது; என்னை பொறுத்த மட்டில் என்றும் யதார்த்தத்தை மட்டுமே நம்புவேன்;

    //சீனாவும் ரஷ்யாவும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. //
    சந்திரா உங்களிடம் இருந்து இப்படியான யதார்த்த வார்த்தைகள் வருவது வரவேற்க்கதக்கது, காரணம் நீங்கள் ஓரு புத்தக பிரியர்(வாசிப்பு) அதனால் உங்கள் தகவல்கள் அங்கீகரிக்கபடும் அல்லவா?

    Reply
  • T Jeyabalan
    T Jeyabalan

    1. இப்பகுதியில் பல்வேறு புதிய விடயங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. பின்னூட்டகளத்தின் மிக முக்கிய அம்சம் பல்வேறு மூலைகளிலும் மூளைகளிலும் மறைந்துள்ள தகவல்களைப் பொதுத் தளத்திற்கு கொண்டுவருவது. ஆனால் அவற்றின் உண்மைத் தன்மையையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்துவது கருத்தினைப் பதிவு செய்பவருடைய பொறுப்பும் கூட. தயவு செய்து கருத்தாளர்கள் அதனைக் கவனத்திற்கு எடுக்கவும்.

    2. கள்ளக்கடத்தல் பற்றிய ஒரு விவாதமும் இப்பகுதியில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. நடைமுறையில் உள்ள அத்தனை விடயங்களுக்கும் இது சரியான நடவடிக்கை என்றோ இது பிழையான நடவடிக்கை என்றோ வரையறையை ஏற்படுத்த முடியாது. நாம் வாழ்கின்ற உலகம் கறுப்பு வெள்ளையானது அல்ல. அதில் பல வர்ணங்கள் உண்டு. வர்ணங்களைத் தெளிவாக வரையறுக்க முடியாத பகுதிகளும் உண்டு.

    தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தொடர்புபட்டவர்கள் சிலர் அல்லது பலர் கள்ளக்கடத்தலுடன் சமூகவிரோதச் செயல்களுடன் தொடர்புபட்டதால் அந்த அமைப்பையோ அல்லது ஒட்டுமொத்தமாக போராட்டத்தையோ கள்ளக்கடத்தல் போராட்டம் என்று நிறுவுவது மிகத்தவறான வாதம். இது காகம் கறுப்பு நிறம் என்பதற்காக கறுப்பானதெல்லாம் காகம் என்று வாதிடுவதற்கு ஒப்பானது.

    தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்களில் கள்ளக் கடத்தல் செய்யாத போதைப் பொருள் கடத்தாத> சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடாத ஒரு அமைப்பை யாரால் ஆவது இனம்காட்ட முடியுமா?

    3. ரெலோ அமைப்பு ஒன்றும் புனிதமான அமைப்பு அல்ல. அதற்காக அவ்வமைப்பை அழிப்பதற்கு புலிகளுக்கு அந்த உரிமையை யார் வழங்கியது. ரெலோவைக் காட்டிலும் புலிகள் எவ்வளவு புனிதமானவல்கள்? மேலும் ரெலோ அழிக்கப்பட்ட முறை மிக மோசமானது. ஒரு எதிரி இராணுவம் கூட அவ்வளவு இழிவான முறையில் நடந்துகொண்டிராது. ரெலோவின் தலைமை மட்டும் அழிக்கப்படவில்லை அதன் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கூட சுட்டுக்கொல்லப்பட்டனர். இவ்வாறான அழித்தொழிப்புக்களை எக்காரணத்திற்காகவும் ஆதரிப்பது நாம் வரலாற்றைக் கற்றுகொள்ளத் தயாரில்லை என்பதனையே மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

    4.”தன்னுயிர் சக்கரை” என்று ஓட்டம் பிடித்த யாழ்ப்பாணத்து டெலோ காரர்கள்”
    இவ்வாறான குறிப்புகள் அடிப்படையிலேயே மிக மோசமானவை. ரெலோக்காரர்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு ஜீவராசிக்கும் தன்னுயிர் சக்கரையே. தன்னுயிரை நேசிக்காத ஒருவன் பிற உயிரையும் துச்சமென மதிப்பதற்கே வாய்ப்புகள் அதிகம்.

    புலிகளால் கொல்லப்பட்டவர்களில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ரெலோ போராளிகளே அதிகம் அதற்குக் காரணம் தன்னுயிரைக் காப்பாற்றிய ரெலோப் போராளிகள் அல்ல. அவர்களைக் கொன்ற புலிகளே முதற்காரணம். ஏனையவை
    அ. வெளி மாவட்ட போராளிகளுக்கு ஓடித் தப்புவதற்கு யாழ் மாவட்டத்தின் ஒழுங்கைகளும் வீதிகளும் தெரிந்திருக்கவில்லை. மறைவிடங்களும் தெரிந்திருக்கவில்லை.
    ஆ. இப்பொராளிகளுடைய பெற்றோரும் உறவுகளும் யாழ் மாவட்டத்தில் இல்லாததால் அவர்கள் சென்று புகலிடம் தேட வீடுகள் இருக்கவில்லை.
    இ. தங்களுக்கு தெரியாதவர்களுக்கு புகலிடம் கொடுக்க யாழ் மாவட்ட மக்கள் பயந்தனர். ரெலோவை பாதுகாப்பவர்களும் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்ற எச்சரிக்கை ஒலிபெருக்கிகள் மூலம் விடுக்கப்பட்டது. ரெலோ போராளிகளை பாதுகாக்க முற்பட்டவர்கள் அச்சுறுத்தப்பட்டனர்.
    ஈ. ஏப்ரல் 29இல் ரெலோ மீதான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஆனால் ரெலோ உறுப்பினர்கள் அது ஏதோ ஒரு இடத்தில் நடக்கின்ற சிறிய சச்சரவு என்றே நம்பினர். ரெலோவின் தகவல் தொடர்பு பூச்சியம் ஆகவே இருந்தது. அதனால் முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.

    இவ்வாறான காரணங்களே ரெலோ போராளிகளில் மாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனைய போராளிகள் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்தது.

    5. வட்டுக் கோட்டையில் படுகொலை செய்யப்பட்ட ரெலோ போராளிகள் கரைநகரில் இருந்து சிரிபி பஸ்களில் வந்திறங்கிய பல நூற்றுக்கணக்கான மக்களால் தங்கள் ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பல்வேறு பகுதிகளிலும் இறந்த ரெலோ போராளிகள் கரைநகரிலேயே இறுதி அஞ்சலியுடன் தகனம் செய்யப்பட்டனர். தப்பிய போராளிகள் இம்மக்கள கூட்டத்தால் காப்பாற்றப்பட்டு காரைநகரில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    6. வட்டுக்கோட்டையில் கொல்லப்பட்ட ரெலோ போராளிகள் குறைந்தது நால்வராவது வட்டுக்கோட்டை செம்பாட்டம் தோட்டம் என்ற குறிச்சியில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கொல்லப்பட்ட போது அவர்கள் இயக்கத்தில் இணைந்து சிலநாட்களே ஆகி இருந்தது. கண்நோயால் பாதிக்கப்பட்டும் இருந்தனர். சங்கரத்தை பத்திராளி கோயிலுக்குச் செல்லும் வீதியில் உள்ள வீட்டின் விறாந்தையில் படுத்திருந்தவர்கள் அப்பகுதிப் பொறுப்பாளர் பிரகாஸினால் அல்லது அவரது தலைமையில் படுகொலை செய்யப்பட்டனர். பிரகாஸின் மிக நெருங்கிய நண்பர் மலரவன் தற்போது லண்டனிலேயே உள்ளார். பிரகாஸின் முத்த சகோதரர் புளொட் உறுப்பினர்.

    7. ஆகவே ”தன்னுயிர் சக்கரை” என்று ஓட்டம் பிடித்த யாழ்ப்பாணத்து டெலோ காரர்கள்” என்று பாதிக்கப்பட்டவர்களையே நையாண்டி பண்ணுவது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    த ஜெயபாலன்.

    Reply
  • NANTHA
    NANTHA

    ஸ்ரீ சபாரத்தினம் ஆட்களின் அரசியல் யாருக்கும் தெரியாது. பகிரங்கமாக அவர்களும் அரசியல் பேசியது கிடையாது. துவக்கு, இராணுவத்தின் மீது தாக்குதல் என்பன அரசியல் கொள்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் தேவைப்படும் விவகாரங்கள். முதலில் துவக்கு, பின்னர் அரசியல் என்பது மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதைவிட அவர்களின் நலன் சார்ந்த நடவடிக்கையே தவிர வேறொன்றுமில்லை.

    வெளிநாட்டு அரசியல் நலன்களுக்காக உள்ளூரில் உள்ள “ஊசிப்” பிரச்சனையை “உலக்கையாக்கி” அந்நியர்களுக்கு லாபம் காட்டியதை வரலாறு நிரூபித்துள்ளது. ஆனால் நஷ்டப்பட்டவர்கள் யார்?

    ஜே ஆர் ஜெயவர்த்தனவின் அரசியலை புரிந்து கொள்ளாது அந்த ஜே ஆர் ஜெயவர்த்தனாவுக்கு ஆதரவு கொடுக்கும் மேற்கு நாடுகளின் ஆட்களாக செயல்படும் தமிழரிடம் “ஆலோசனை” பெற்றவர்களே எங்கள் இயக்கங்கள்.

    அப்பொழுதே அமெரிக்க ஆள் என்று அறியப்பட்ட ஏ.ஜே. வில்சன் அடிக்கடி இலங்கைக்கு கனடாவில் இருந்து வந்து “வட்டமேசை” அரசியல் தீர்வு என்று சதுரங்கம் ஆடிய வேளைகளில் எனக்கும் எனது நண்பர்களுக்கும் எழுந்த கேள்வி ” இந்த ஆள் யார்? எதற்காக இப்போது வருகிறார்? அதுவும் தமிழில் படிப்பிக்க முடியாது என்று நாட்டை விட்டு ஓடியவருக்கு என்ன வேலை?” என்பவைகளே. அப்போது “அவர் தமிழர்களுக்காக பேச வருகிறார்” என்று அமிர்தலிங்கத்தில் இருந்து சகல தமிழ் “பண்டிட்டுக்களும்” ஆரவாரித்தார்கள். ஆனால் வில்சன் தமிழுக்கும் வரவில்லை, தமிழருக்காகவும் வரவில்லை என்பதை ஒரு சிலரே புரிந்து கொண்டனர். வில்சனால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு எப்போதும் ஒரு அமெரிக்க சார்பான தலைமையை இலங்கையில் வைத்திருக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது. சிங்களவர்களின் வாக்குகள் எப்போதும் UNP அரசுக்கு கிடைக்கும் என்றும் அதனை நிரந்தரமாக்க சிங்கள-தமிழ் கலவரம் எப்போதும் உதவும் என்பதே ஜேஆர் அரசினாலும் அமெரிக்க சார்பு விட்பன்னர்களாலும் எதிர் பார்க்கப்பட்டது. 1983 கலவரம் திட்டமிடப்பட்ட கலவரம். அதற்குத் துணைபோனவர்கள் “புலிகள்”.

    தமிழர்களிடையே “அரசியல்” பேசுபவர்களைவிட “சுத்தமான” காட்டு மிராண்டிகளும். கிரிமினல்களுமே அந்த தேவைகளுக்கு அருமையானவர்கள் என்ற கணக்கீட்டின் அடிப்படையிலேயே மற்றைய இயக்கங்களுக்கெல்லாம் “சமாதி” வைக்கப்பட்டது. அமெரிக்க/பிரிட்டிஷ் வெளிநாட்டுக் கொள்கைகள் எப்போது இந்தியாவுக்கு எதிரானவையே. யுஎன்பி தொடக்கம் நம்ம “விடுதலை” வீரர்களும் அந்த இந்திய எதிர்ப்பை “கபக்” என்று பிடித்துக் கொண்டது என்னுடைய சந்தேகத்தை மாத்திரமல்ல பல இடதுசாரிகளினதும் சந்தேகங்களை ஊர்ஜிதம் செய்தது.

    இந்திய இராணுவம் தலையிட்டு அமெரிக்க எதிர்ப்பு அரசான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசை ஜேவீபி பயங்கரத்திலிருந்து காத்தது போல மீண்டும் நடக்காதிருக்க இந்தியாவைத் தலையிட்டு “முடிவு” காண வேண்டும் என்று சொல்லிவிட்டு இந்தியா “போர்” படையாக வராது “சமாதானப்படையாக” வரவழைத்து இந்தியாவின் “மூக்கை” உடைப்பதில் அமெரிக்காவும் ஜேஆரும் வெற்றி கண்டனர். அதன் பின்னர் சகல இந்திய ஆதரவு சக்திகளும் படிப்படியாக புலிகளால் அழிக்கப்பட்டனர். இந்த அழிப்பில் கத்தோலிக்க/கிறிஸ்தவர்கள் புலிகளுக்கு பக்கபலமாக செயல்பட்டனர். இந்தியாவின் ஒவ்வொரு சமரச முயற்சிகளும் அழிக்கப்பட்டன.

    திம்பு பேச்சுக்குப் போனவர்களில் இந்த டெலோ இயக்கத்தை யார் பிரதிநித்திதுவம் செய்தார்கள்? ஜேஆர் ஜெயவர்த்தனவின் தொழில் அமைச்சரான கப்டன் செனவிரத்னவின் செயலாளரான நடேசன் சத்தியேந்திரா என்பவரே. டெலோ இயக்கம் அப்போதே அம்மணமாகிப் போனது. இந்த சத்தியேந்திராவும், அன்டன் பாலசிங்கமும் அந்த பேச்சு வார்த்தைகளை குழப்பி அடிப்பதில் காட்டிய தீவிரத்தை இப்போது நினைவு கூர்வது நல்லது. இந்தியா இலங்கைப் பிரச்சனையில் தலையிடக் கூடாது என்பதாகவே இந்த இயக்கங்கள் நடந்து கொண்டனர்.

    அவர்களின் கணக்குகள் தென்னிலங்கையில் சந்திரிகாவின் வரவோடு தகர்ந்து போயின. அதன் பின்னர் அதே மேற்கு நாடுகள் அவசரம் அவசரமாக “புலிகளைப்” பாதுக்காத்து வைக்க “சமாதான” உடன் படிக்கைகள், அரசியல் தீர்வு என்றெல்லாம் படையெடுத்து “புலிகளுக்குச்” சர்வ” சுதந்திரமும் உள்ள “வன்னியை” கொடுத்தனர். ஆனால் அங்கிருந்தும் “புலிகள்” இந்திய ஆதரவுச் சக்திகளை ஒழிப்பதில் மும்முரமாகி ஆயிரக்கணக்கில் தமிழர்களைக் கொலை செய்தனர். சிங்களவர்களை பயமுறுத்த குண்டு வெடிப்புக்கள் செய்யப்பட்டன. புலிகள்தான் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்பதிலிருந்து புலிகளை அழிக்க முடியாது என்பது வரை பரப்புரைகள் செய்யப்பட்டன. புலிகளுக்கு துணையாக நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ அமைப்புக்கள் என்ஜிஓ க்கள் முகாமிட்டனர். நோர்வேயின் உதவியுடன் வன்னியை ஒரு பலமான இராணுவக் கேந்திரமாகக முயற்சிகள் மேற்கொண்டனர்.

    ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் “மூளைகள்” இந்த முயற்சிகளை கவனத்தில் கொண்டதுடன் “புலிகள்” தமிழரின் நல்வாழ்வுக்காக இயங்கவில்லை யாரோ ஒரு வெளிநாட்டுக்காவே இயங்குகிறார்கள் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    அப்போதே இந்த ஈழம், புலி என்பவற்றை ஒழித்துக் கட்டும் பணிகளும் தொடங்கப்பட்டன. சாம, தான, பேத, தண்டம் என்பது வெற்றி கண்டது. அவர்களின் வெளிநாட்டு எஜமானர்கள் இரகசியமாக புலிகளுக்கு உதவினாலும் பகிரங்கமாக எதனையும் செய்ய முடியாது திண்டாடிப் போனார்கள். அதன்னல்த்தான் தற்போது “இலங்கையை” வழிக்குக் கொண்டு வர “போர்” குற்றங்கள் என்றும் ஒரு சரடு விடுகிறார்கள்.

    அமெரிக்கா லத்தீன் அமெரிக்க நாடுகளில் வளர்த்து விட்டுள்ள “பயங்கரவாதிகளை” இந்த நேரத்தில் நினைத்துப் பார்ப்பது நல்லது.

    இன்று ஒபாமா ஜனாதிபதியாகினாலும் அமெரிககா ரீகன் காலத்து வெளிநாட்டு கொள்கையையே பின்பற்றுகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    நந்தா உங்களுக்கு தமிழ் மக்கள் பிரச்சனையோ அல்லது இயக்கங்கள் வரலாறோ துளி கூட தெரியாது என்பது ஒருசில பின்னோட்டத்தில் நிர்பணமாகிவிட்டது; இதுக்கு பின்னர் அமெரிக்காவில் ஓபாமா ரீகனின் எச்சில் தட்டில்தான் சாப்பிடுகிறார் என்னும் ஏமாளிதனம் எதுக்கு; திம்பு பற்றி கூட உங்களுக்கு தெரியுமா. அடேங்கப்பா?
    சிலரது பின்னோட்டம் தகவல் தரும்; சிலரது முன்னோட்டமே தலையிடி வரும்; இதில் உங்களது??

    Reply
  • Londonboy
    Londonboy

    நந்தாவுக்கு கிற்ஸ்தோ போபியா இருக்கும் போல இருக்கின்றது. நல்லதொரு ஐயரிடம் காட்டி வேப்பிலை அடித்தால் தான உந்த வருத்தம் மாறும்.

    Reply
  • santhanam
    santhanam

    உண்மைகள் உறங்குகின்றன ஆனால் பொய்களைப் புனைந்து உண்மைகளைத் திரித்துக் காட்டி அவை உலக உலாவருகின்றன இது தமிழ் சாதியின் விதியோ அல்ல நாகரிக வளர்ச்சியற்ற சமூகமா.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    எமது எழுத்தும் சிந்தனையும் எமது இனத்திற்கும் உழைப்பாளி வர்கத்திற்கும் சொந்தமானது. இந்த விவாதங்களும் அதற்காகவே நடத்தப்படுகிறது. இதில் சின்னவன் பெரியன் வென்றவன் தோற்றவன்என யாருமே பெருமைப் படமுடியாதே!. எல்லாப் பெருமைகளும் இறைவனுக்கே என்பார்கள். எல்லா புகழும் எமது இனத்திற்காக வர்கத்திற்காக இருக்கட்டும்.

    திரு. ஜெயபாலன் உங்கள் ஏழாவது பந்தி…தன்னுயிர் சக்க…..என்ற வாசகத்திற்காக தலைவணங்குகிறேன். இத்தகைய உணர்வையே நான் தேசம்நெற் வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

    Reply
  • sen
    sen

    1 . நந்தாவின் கருத்துக்கள் இந்தியாவில் BJPஇன் வேலைத்திட்டத்துடன் சார்பானது. இந்து மேலாதிக்க வாதம் ஏனைய மதங்கள் தொடர்பான விசேடமாக இந்தியாவில் முஸ்லிம்கள் தொடர்பாக கொண்டிருக்கும் நிலைப்பாட்டுடன் ஒன்றுபடுகின்றது. ஏனைய மதங்களுக்கு எதிராக இருந்தாலும் உள்ளடக்கத்தில் உழைக்கும் மக்களுக்கு எதிரான பாசிச கருத்துக்களை உள்ளடகியிருகின்றது. இவருடன் வாதம் செய்வதை நான் நிராகரிக்கின்றேன். இது மிகவும் ஆபத்தானது.

    2 . [[ Pandiyan on May 9, 2010 10:06 pm
    நான் ரெலோவில் இருந்தபோது செந்தோழர் அழகலிங்கம் அவர்களின் ஊரவன் என்பதால் ஜேர்மனியில் இருந்து திரும்பிய சிறிசபா அழகலிங்கம் ரெலோவிற்கு பத்திரிகை நடத்துவதற்காக அதாவது ராஜகுருவாக (பாலசிங்கம் போல) செயற்பட வரவிருப்பதாக என்னிடம் சிறிசபா என்னிடம் கூறினார்.]]

    வ.அழகலிங்கம் அரசியல் கோமாளித்தனதிட்கு விசேடமாக ஜெர்மனியில் பெயர் எடுத்திருந்தாலும் கூட இந்தக்கருத்து தமிழ் சினிமாப்படத்தின் நகைச்சுவை காட்சிக்கு பொருத்தமான அம்சங்களை உள்ளடக்கி இருக்கவில்லை. அழகலிங்கம் இங்கு இதுவரை இந்த்க்கருக்துக்கு மறுப்பு கூறாமல் விட்டாலும் இந்த கருத்து உண்மை என்று நிபந்தனையுடனோ அல்லது நிபந்தனை இல்லாமலோ ஏற்றுக்கொள்வது கடினம்.

    அழகலிங்கம் எண்பதுகளில் ஜெர்மனியின் Stuttgart நகர் பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் ஒருவித மதிப்பினை எடுத்திருந்தவர். புலிகளின் அன்றைய பிரதிநிதியுடன் ஒரே அறையில் வாழ்ந்த இவர் புலிகளின் அரசியல் ஆலோசகராக விளங்கினர். தன்னை ஒரு இடதுசாரி என்று கூறிக்கொண்ட இவர் அரசியல் வளர்ச்சி இல்லாத தமிழர்கள் மத்தியில் சிவப்பு பூசிய தேசிய வாதத்தினை புலி ஒரு முற்போக்கான இயக்கம் என்ற பெயரில் அந்த நாட்களில் வலியுறுத்தினர். ஏதாவது கேள்வி கேட்பவர்களை ” தம்பி, அப்பு உவன் CIA எல்லோ ” என்று வாயடைக்கப் பண்ணுவது இவரது விசேட பண்பாக இருந்தது.

    புலிகளின் ஆலோசகராக இவர் எண்பதுகளின் மத்தியில் இருந்தே செயற்படவில்லை அதற்கான காரணம் என்ன என்பதை புலிகள் வழமை போல் சொல்லவில்லை இவரும் இன்றுவரை எழுத்தில் வெளியிடவில்லை. பின்னர் “சர்வதேச சம்பந்தக்குழு” என்ற பெயரில் “எண்ணம்” என்ற பத்திரிக்கை வெளியிடப்பட்டது.

    இந்த பத்திரிகையின் முழு நோக்கமும் இடதுசாரி வார்த்தை ஜாலங்கள் மூலம் ஒரு இடதுசாரி தமிழ் தேசிய இயக்கத்தினை ஆரம்பிப்பது அல்லது தலைமை கொடுப்பது. இன்று திரும்பியும் இந்த பத்திரிகையின் பழைய பிரதிகளை வாசித்தல் இந்த நோக்கம் மிக துல்லியமாக தெரியும்.

    ஸ்ரீ சபாரத்தினம் எண்ணம் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியினை மீண்டும் ஒருமுறை வாசித்தால் அழகலிங்கதின் “எண்ணம்” இதை நோக்கி சென்று கொண்டிருந்தது என்பதை விளங்கிக்கொள்ள முடியும். பாலசிங்கம் பாணியிலான ஒரு ஆலோசகராக அல்லது ராசகுருவாக இவர் செயற்பட விரும்பியிருந்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

    எண்ணம் குழு ஏன் பிரிந்தது என்ன அரசியல் முரண்பாடுகள் இருந்தன என்பது தொடர்பாக எழுத்தில் தெரிந்த அளவில் வெளியிடப்படவில்லை. எண்ணம் பத்திரிகையின் ஆசிரியர் / வெளிய்ர்ட்டளர் என பத்திரிகையில் பிராசுரிக்கப்பட்ட மகாதேவா EPRLF உடன் இணைந்தது தான் காரணம் என அந்த நாட்களில் வதந்திகள் உலவின. வதந்திகளை முடிவுக்கு வந்து விட்டன ஆனல் அரசியல் கேள்விகள் என்ன என்பது தெளிவுபடுத்த படவில்லை.

    அழகலிங்கம் ஒரு பட்டதாரி, மொழி வளம் நிறைந்த, நிறைய வாசித்த ஒரு மனிதன். உலகத்தில் முதலாளித்துவம் நெருக்கடியில் இருக்கின்றது, எல்லாம் உடைந்து கொட்டுண்ன்னப்போகுது. அப்பு உவங்களுக்கு ஒண்டும் தெரியாது என்று அடியடா பிடியடா என்று விபரமாக கதைததின் பின்னர் இந்த நெருக்கடியில் இருந்து தப்புவதற்கு டக்ளசின் கரங்களை பலப்படுத்துவது தான் வரலாறுத் தேவை என்று முடிப்பார்.

    இவரின் அரசியல் அன்றும் இன்றும் தன பின்நின்றுகொண்டு முகவர்களை முன்னிறுத்துவதில் தான் தங்கி இருக்கிறது. புலியில் தொடங்கி எண்ணம் பத்திரிக்கை மூலம் TELO வினை அரவணைத்து பின்னர் PLOT உடன் தேன்நிலவு நடாத்தி இன்று EPDP இன் மொழிபெயர்பாளராக இருக்கின்றார். இந்தப்பாதை இனி எப்பிடியும் தொடரலாம் இவர் மட்டும் இப்படி ஒரு பயணத்தினை மேட்கொள்ளவிலை. புலியின் அழிவிற்கு பின்னர் புலி எதிட்பு வேலைத்திட்டத்தின் தர்க்கரீதியான முடிவும் இது தான்.

    Reply
  • NANTHA
    NANTHA

    ஜெயவர்த்தனவின் ஆள் சத்யேந்திரா எப்படி டெலோவுக்கு திம்பு பேச்சாளராகினார்? அது அறியாமல் நடந்த ஒரு விஷயமா? சிவாஜிலிங்கத்தையாவது அனுப்பியிருக்கலாமே?

    Reply
  • பல்லி
    பல்லி

    நந்தா சந்தானம் சொன்னது போல் உன்மைகள் உறங்கும் போது பொய்கள் குத்தாட்டம் போடும்; இப்படிதான் இருக்கு உங்கள் கருத்துக்கள், உங்களிடம் பல கேள்வி கேட்டோம், ஆனால் எதுக்கும் பதில் இல்லை, ஆனால் ஏதோ சொற்பொழிவு போல் உங்கள் வண்டி ஓடுகிறது, திரும்பவும் கேக்கிறேன் புலிக்கெதிராய் எழுதியதாய் சொன்னீர்களே? அது எங்கே எப்போது? நீங்கள் ரெலோவில் காப்பாற்றியவர்கள் இப்போதும் உங்களுடன் தொடர்பில் உள்ளனரா? சிறி உங்கள் வீட்டின் வழியாக ஓட காரணம் என்ன? உங்களுக்கு ஏன் இந்த பிரிவினைவாதம்.?
    உங்கள் பிரிவினை வாத விபரம்?? (நீங்கள் எழுதியவையில்)
    மலையாளி
    புங்குடுதீவார்
    கதோலிக்கர்
    கள்ள கடத்தல்காரர்
    ரெலோவினர்
    இப்படி பலவை சொல்லலாம்; போறபோக்கில் இலங்கை தமிழர் நந்தா குடும்பம் மட்டுமே என தமிழக சுப்பிரமணிய சுவாமி போல் எழுதினாலும் நாம் ஆச்செரியபட முடியாது, அழகலிங்கத்தை பற்றி நாம் சொன்னால் சத்தியேந்திராவின் கெடுகுடி கேக்கிறியள். சந்தானம் சொல்லுகிறார் பொபியை சின்ன மெண்டிஸ்தான் காப்பாற்றியதாக; அதை நானும் கேள்விபட்டேன்(புளொட்டென) ஆனால் உங்கள் வாதம் உங்கள் சொல்லை கேட்டிருந்தால் சிறி மடிந்திருக்கமாட்டார் என்பதுபோல் இருக்கு;

    சந்தானம் ஒரு விடயம் கேள்விபட்டேன் உன்மை தெரியாது; புலிகள் ரெலோவை அடிக்க முடிவு செய்ய சிந்தித்தபோது பிரபாகரன் புளொட்டால் புலிக்கு ஏதும் ஆபத்து வராதா என கேட்டதாயும் அதற்கு பாலா அண்ணர் கண்டிப்பாக வரும் அதனால் சமயம் பார்த்து தொடங்கலாம் என தனது கடமையை (ஆலோசகர்) செய்தராம்; பின்பு புளொட் அமைப்பு தளமகாநாட்டுக்கு அனைத்து மாவட்ட தலமைகளையும் யாழ் அழைத்த போது இதை சரியான நேரமாக பயன்படுத்தும்படி பாலா சொன்னதாகவும் இந்த தகவலை புளொட்டின் தொலைதொடர்பு தோழர்கள் ரெலோ தோழர்களிடமும் தமது தலமையிடமும் சொன்னதாகவும் தகவல் உண்டு, இதில் உன்மை பொய் எனக்கு தெரியாது: ஆனால் எனக்கு சொன்னவர் மன்னார் மாவட்ட கழக முக்கிய பொறுப்பில் இருந்த நபர், சந்தானம், மாயா இதில் உங்களுக்கு ஏதாவது தெரியுமா??

    Reply
  • santhanam
    santhanam

    புளொட்டிற்கும் புலிக்கும் நீண்டகால பகை ஒன்று உண்டு அவர்ளிறகுள் வேவு விடயத்தில் இருபகுதியும் போட்டி சுழிபுர கொலை உண்மையில் வேவு பிரிவினர்தான் அவர்கள் புளொட்டின்உட்கொலைகளிற்கு காரணமும் புலிகளால் அனுப்பபட்ட உளவாழிகள் என்ற சந்தேகத்தில்தான் பலகொலைகள் நடந்தேறியன ஆனால் இரண்டு பகுதிக்கும் ஒருவரை ஒருவர் அழிப்பிற்கு சந்தர்ப்பம் பார்த்தது உண்மை ஆனால் ரெலோவை அழிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை ஆனால் பல்லி நீங்கள் ஒன்றை ஆய்வு செய்தீர் என்றால் நான்கு இயக்கம் 1985ல் இந்தியாவில் ஒன்று சேர்ந்தபோது புளொட்டைவெளியில் தான்விட்டார்கள் பின்பு 2002ல் அரசியல்கட்சிகள் ஒன்றுசேரும்போதும் புளொட் வெளியில் அதற்கு சித்தாத்தன் தனக்கு விருப்பம் தன்னை ஏன் விட்டார்கள் தனக்கு பதில் தரவில்லை என்று 2002ல் பி பிசியில் போட்டி கொடுத்தவர் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை.

    Reply
  • NANTHA
    NANTHA

    சென்:
    உஙகளுக்கு BJP பற்றி சரியாகப் புரியவில்லை என்றே எண்ணுகிறேன்.

    தவிர கத்தொலிக்க பாதிரிகளுக்கு ஈழம் எதற்காக தேவைப்பட்டது என்பதை விளக்குங்கள். அதன் பின்னர் இந்துக்களுக்கு எதிரான பாதிரிகள், வத்திக்கன் பற்றி எழுதலாம்!

    Reply
  • thurai
    thurai

    //தவிர கத்தொலிக்க பாதிரிகளுக்கு ஈழம் எதற்காக தேவைப்பட்டது என்பதை விளக்குங்கள்//நந்தா

    புலம்பெயர் தமிழர்களிற்கு மேல்நாடுகள் பணத்திற்கும், இந்துக்குருக்களிற்கு தொழிலிற்கும் எப்படியோ, தமிழீழம் கிடைத்திருந்தால் பாதிரிகளின் நிலமையும் இருந்திருக்கலாம்.

    துரை

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நான் நினைக்கிறேன் நந்தா. வத்திக்கான் பாதிரிகள் பிரைச்சனைகளை முதலாளித்துவ பிண்ணனி வைத்தே புரியவைக்க முடியும் என்று. இல்லையேல் அர்த்தம் இல்லாத பலகோடிமக்களின் பகைமைக்கும் வெறுப்புக்கும் ஆழாகவேண்டிவரும். அதுமட்டுமல்ல எந்தப் போராட்டத்தையும் வெற்றிக்கு இட்டுச்செல்ல முடியாது. இதுவும் எனது தாழ்மையான கருத்துத்தான். ஆனபடியால்….. முடிவு உங்கள் பக்கம்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //பல்லி நீங்கள் ஒன்றை ஆய்வு செய்தீர் என்றால் நான்கு இயக்கம் 1985ல் இந்தியாவில் ஒன்று சேர்ந்தபோது புளொட்டைவெளியில் தான்விட்டார்கள் //
    சந்தானம் எனக்கு நந்தா போல் ஒரு குத்துமதிப்பாய் எழுத வராது; அதனால் நண்பர்கள் சொல்லும் கருத்தை இங்கு பத்கிவிடுகிறேன்; சரி பிழையை நீங்கள் (நணபர்கள்) சரி செய்யுங்கள். 1984ல் இயக்க ரீதியாக பார்த்தால் புளொட்டின் தோழர்களின் எண்ணிக்கயில் 10 வீதம்தான் மிகுதி 05 இய்க்கங்களும்; (டெலொ;ரெலா; ஈபிஆர்எல்எவ்; ஈரோஸ், புலி, )அதனால் இந்தியாவுக்கு எப்போதும் ஒரு நிலை இருந்தது தன்னை மீறி தமிழ் இயக்கங்களொ அல்லது இலங்கை அரசோ செயல்பட கூடாது, அதுக்கான சிலவேலை திட்டங்களில் ஒன்றுதான் பத்மநாபா; பிரபாகரன்; பாலகுமார்; சிறி தோழில் கை போட்டு போட்டோ எடுத்ததும்; புளொடிடம் ரெலா அடைக்கலம் ஆகியதும்; இது 1984ல் மிக பிரபல்யமான விடயம்;

    இந்திரா காந்தியுடன் நேரடி பேச்சு வார்த்தையில் உமா மட்டுமே பேசும் தன்மையை கொண்டிருந்தார், ஆனாலும் இந்திய ராணுவத்தின் நேரடி ஆயுத பயிற்ச்சியான டெல்லி பயிற்ச்சியில் பங்கு கண்டதில் அதிகமானவர்கள் (520 சரியோ எனக்கு தெரியாது) ரெலோவே கொண்டிருந்ததாம்; அடுத்த நிலையில் புளொட் இருந்ததாம்; ஆனாலும் புளொட் பல இந்திய ராணுவ அதிகாரிகளை (சேகர் வாத்தி உட்பட) தமது முகாமுக்கு நேரடியாகவே அழைத்து பயிற்ச்சி கொடுத்தார்களாம்; இத்தனையையும் நான் ஏன் சொல்லுகிறேன் எனில் சிறி புலியால் கொல்லபட்டதால் அவரது திறமையையோ அல்லது செயல்பாடுகளையோ யாரும் குறைத்து எடை போடகூடாது என்பதுக்காகவே, நான் சொல்லும் விடயங்கள் அனைத்தும் அறிந்தைவைதான், தவறாயின் திருத்தி கொள்ளவும் ,

    Reply
  • santhanam
    santhanam

    // உமா மட்டுமே பேசும் தன்மையை கொண்டிருந்தார், ஆனாலும் இந்திய ராணுவத்தின் நேரடி ஆயுத பயிற்ச்சியான டெல்லி பயிற்ச்சியில்? //
    இதில் முக்கியபங்கு அமிரதலிஙகம் மாணவர்பேரவை தலைவர் சத்தியசீலனிடம் கொடுத்து அனுப்பட்ட கடிதம் தான் யு.பியில் பயிற்சி அழிக்க காரணம் இக்கடிதம் தமிழ்நாட்டில் எம்யிஆர் ரிடம் கையளிக்கபட்டதாக நான் கேள்விபட்டேன் அதன் பின்புதான் விசாவில்லாது தமிழ்நாட்டில் போரளிகள் உலாவர அனுமதிக்கபட்டார்கள் உமாடெல்லியிடம் கதைக்கும் அதிகாரமிருக்கவில்லை அதை அமிர்தலிங்கம்தான் கையாண்டார் உமாவிற்கு மொறிசியஷ் சென்றபோது செங்கம்பள வரவேற்பு வழங்கபட்டது உண்மை. சேகர் வாத்தி தோழர்கள் மத்தியில் தான் ஒரு நக்சலைட் போரளி என்று சொல்லிதான் பயிற்சி கொடுத்வர் ஆனால் உமாவும் சந்ததியும் முற்றுமுழுதான இந்திய எதிர்வாதிகள் அவர்களை பயன்படுத்ததான் யோசித்தவர்கள் அதனால் அவர்களது ஆயுதகப்பலையும் பறித்தவர்கள்.

    Reply
  • NANTHA
    NANTHA

    சந்திரன்:
    வத்திக்கான் அல்லது கத்தோலிக்க பாதிரிகள் கூட்டம் எந்தக் காலத்திலும் “தொழிலாள” வர்க்க சிநேஹிதர்களாகவோ தொழிலாளர் புரட்சிகளின் பங்காளிகளாகவோ இருந்தது கிடையாது. முதலாளித்துவத்தின் எடுபிடிகளாகவே இருந்து வருகின்றனர். வத்திக்கான் எந்த நாட்டினதோ, இனத்தினதோ விடுதலைக்கு ஆதரவு கொடுத்தமைக்கான சான்றுகள் கிடையாது.

    இரண்டாம் போப் ஜோன் போல் அமெரிக்க CIA யுடன் இணைந்து செயல் பட்டதாக தொலைக் காட்சிகளில் கூறியிருப்பது கவனிக்கத் தக்கது.

    அப்படியிருக்க இலங்கையில் கத்தோலிக்க பாதிரிகள் உலகம் அறியப்பட்ட கொலைகாரர்களும், பயங்கரவாதிக்களுமான புலிகளோடு பகிரங்கமாக இயங்கியதன் / இயங்குவதின் நோக்கம் என்ன? வத்திக்கானுக்கும் “தமிழுக்கும்” என்ன சம்பந்தம்?

    இடதுசாரி கொள்கைகளை ஆதரிப்பவராகவே உங்களைக் கருதுகிறேன். இடதுசாரிகளினது அல்லது கம்யூனிசத்தின் எதிரிகள் என்று உள்ளவர்களின் பட்டியல்களை படியுங்கள் உண்மை புரியும். தவிர ரஷ்யாவிலும் சீனாவிலும் புரட்சிகளின் போது இந்த கத்தோலிக்க/கிறிஸ்தவ மதவாதிகள் யார் பக்கம் நின்றார்கள் என்பதையும் உற்று நோக்குவது பலன் தரும்.

    Reply
  • NANTHA
    NANTHA

    //புலம்பெயர் தமிழர்களிற்கு மேல்நாடுகள் பணத்திற்கும், இந்துக்குருக்களிற்கு தொழிலிற்கும் எப்படியோ, தமிழீழம் கிடைத்திருந்தால் பாதிரிகளின் நிலமையும் இருந்திருக்கலாம்.//

    தமிழர்கள் புலம் பெயர்ந்தது இந்த “ஈழ” நாசம் தொடங்கிய போதுதான். ஆயினும் இந்துக்களை விட பாதிரிகளுக்கு “லாபம்” அந்த “ஈழப்” போராட்டத்தில் என்ற உண்மையை கூறியதற்கு நன்றி!

    Reply
  • Pearl Thevanayagam
    Pearl Thevanayagam

    Tamil insurgency as we all know is the result of Tamil polticians’ failure to address the grievances of the Tamil youth and in particular those ostracised for their caste.

    Power corrupts; absolute power corrupts absolutely and truth is the casualty in any war.

    Pirabakaran is no saint but he alone managed to hold onto a semblance of leadership albeit with authoritarianism since at least 1983.

    Various miliant Tamil groups were annihilated by the LTTE leader but whether the LTTE wanted to be the one and only supreme leadership for Tamils or whether in its own conscience thought the other groups were involved in crimes such as drug-smuggling, abductions and rape among others ergo they needed to be taught a lesson.

    The brutal murders of Sri Sabaratnam, Uma Maheswaran and many of their cadres are not forgotten nor forgiven.

    The LTTE paid a huge price but the innocent civilians numbering 100,000 or more paid a larger price leaving behind widows, widowers, orphans andthose maimed both physically and psychologically.

    This is indeed a tragedy by any standards.

    ow we need to learn from the four decade war which brought the North and East to the knees and allowed Sinhala supremacy to reign during these horrendous times.

    Are we still going to fight over who is right and who is wrong. We need to move on and work towards achieving the rights of Tamils as equal citizens in our country. Or we could revert back to divisions, divisive politics.

    The choice is yours.

    Reply
  • NANTHA
    NANTHA

    சிவராம் பற்றிய தொடரைக் காணோம். ஜெயபாலன், கொன்ஸ்டன்டயின் சொன்ன அடையாள அட்டையின் பிரதியை எனது ஈ-மெயில் விலாசத்துக்கு அனுப்பலாம். ஆயினும் தேசம்நெட்டுக்குள் “புலி” வால் தெரிகிறது!

    Reply
  • thurai
    thurai

    //தமிழர்கள் புலம் பெயர்ந்தது இந்த “ஈழ” நாசம் தொடங்கிய போதுதான். ஆயினும் இந்துக்களை விட பாதிரிகளுக்கு “லாபம்” அந்த “ஈழப்” போராட்டத்தில் என்ற உண்மையை கூறியதற்கு நன்றி!//நந்தா

    உலகமுழுவதும் இந்துக்கோவில்கழும் பிழைப்புகழும் தொடங்க வழிகாட்டிய ஈழ்ப் போரையும் தம்பி பிரபாவையும்
    கடவுளாக பெரும்பான்மை இந்துக்கள் புலம்பெயர்நாடுகளில் கருதுவதில் தப்பில்லையே.

    துரை

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நந்தா இருவர் கருத்தும் ஒன்று தான் என்பின்னோட்டத்தை இன்னுமொரு முறைகவனியுங்கள். வத்திக்கான் பாதிரிகள் பிரச்சனையை முதாலிளித்துவ பிண்னணியை வைத்தே புரியவைக்கவேண்டும். அர்த்தம் ஒன்றுதான் தந்திரோபாயங்களில் தான் வெறுபடுகிறது. இந்த உலகத்தில் சகல நடவடிக்கைகளும் பொருளாதார அடித்தளத்தைக் கொண்டுதான் செயல்படுகிறது என்பதில் தங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது என்று நினைக்கிறேன். கடந்த காலங்கள் மதக்கொள்கைகளே அரசாங்கத்தின் கொள்கையாக இருந்திருக்கிறது. உதாரணத்திற்கு பிரித்தானிய புதிய பிரதமர் மகாராணிடம் போய் முதல் ஆசிர்வாதத்தையும் சம்மதத்தையும் கேட்டவேண்டியாக உள்ளது. இது மத அதிகாரம் முதாலித்தவ ஜனநாயக அரசியல்லிருந்து விட்டுப்போக வில்லை என்பதேயே காட்டுகிறது

    முதாளித்தவம் உலகரீதியாக அழியும் போது வத்திக்கானும் பாதிரிஉலகமும் அழிந்தே தீரவேண்டும். முதாளித்துவம் அழிவதற்கான வாய்ப்பு வசதிகள் வரலாறுக் காரணிகள் உழைப்பாளர் பக்கம் இருக்கும்போது…இந்த வத்திக்கான் பாதிரிகள் கூட்டத்தை தூக்கிநிறுத்தி அதை நம்பியிருக்கிற கோடானகோடி அப்பாவிமக்களின் பகமையைச் சம்பாரித்துக் கொள்ளுவான்.ஏன்?. இது நாம் போகும்வழியை நெடுந்தூரம் ஆக்கிவிடும்.ஆகவோ முரண்பாடு தந்திரோபாயம் பற்றியதே! திரும்பவும் வருகிறேன். மறுஉலகத்தைப் பற்றியே மறுபிறப்பை பற்றியோ எமக்கும் உமக்கும் நம்பிக்கையை இல்லை. இதை எத்தனை தொழிலாளிக்கு விவசாயிக்கு உடனடியாகப் புரியவைக்கமுடியும். போர்குணம்யுள்ள தொழிலாளி உரியகாலம் வந்ததும் எம்மைவிட பின்தங்கி வேகம் குறைந்திருக்கிற சக்கரத்தை அதிவேகத்தோடு ஓடப்பண்ணுவார்கள் என்பதே என்கருத்து. ஆகவே பகைவன் என்பவன் யார்? வத்திகானும் பாதிரி கூட்டமா? முதாலித்துவமா?? இருவருமே பகைவர்கள் தான். யார்ரைத் தேர்ந்தெடுப்பதில் என்பதில் தான் பிரச்சனை. முதாலித்தவம் சர்வதேச ரீதியாக ஒழிக்கப்படும்போது வத்திக்கான்-பாதிரிகூட்டமும் அழியும். ஒரு சாத்தானின்- கெட்டபிசாசுவின் கால்கையாக மதங்கள் செயல்படுகிறதென்றால் அதன் உயிராக முதாலித்துவம் செயல்படுகிறது.

    Reply
  • sam
    sam

    நந்தா
    விடிஞ்சால் பொழுதுபட்டால் அஜித் சொல்கிறார் தேசம் புலிக்கெதிர். ஆகவெ இலங்கை அரசாங்கத்துக்காக வேலை செய்யிறாங்கள் எண்டு. நீங்களோ புலிவால் தெரியுதென்கிறீங்கள். இதுமட்டுமா எனக்குத் தெரிய தேசம் புளொட் எண்டாங்கள். காரணம் ஜெயபாலன் அண்ணன் புளொட்டாம். பிறகு தேசம் ரெலோ எண்டாங்கள். காரணம் சோதிலிங்கம் முந்தி ரெலோவிலை இருந்தவராம். ஈபிடிபிக்கு சப்போட் பண்ணுறாங்கள் எண்டாங்கள் அப்பப்ப கனசாயம் பூச பார்த்திருக்கிறேன். ஆனால் எனக்குத் தெரிய நந்தாதான் புலிச்சாயம் தேசத்துக்குப் பூச பார்க்கிறேன்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…இந்திரா காந்தியுடன் நேரடி பேச்சு வார்த்தையில் உமா மட்டுமே பேசும் தன்மையை கொண்டிருந்தார்,….//

    இதையே எமக்கு புளொட் பிரச்சாரப்பிரிவினர் ‘பெருமையாக’ சொல்வார்கள். உமா புத்திசாலி இந்திரா காந்தியுடன் நேரடி தொலைபேசித்தொடர்பு கொள்ளும் திறன் மட்டுமல்ல அணிசேரா மாநாட்டில் பார்வையாலர் அந்தஸ்து கொடுக்கப்பட்ட ஒரே ஒரு இயக்க ஆள் அவர்தான். ஆனால் ‘தம்பி’ மூலையில் இருந்து வெறும் கொமிக்ஸ் புத்தகங்கள் வாசிப்பவர். இதை நம்பி நாமும் அடுத்த லெவலில் ‘பிரச்சாரம்’ செய்த ‘இன்பமான’ நினைவுகளைக் கிளறி விட்டீர்களே பல்லி!

    Reply
  • BC
    BC

    //இந்திரா காந்தியுடன் நேரடி பேச்சு வார்த்தையில் உமா மட்டுமே பேசும் தன்மையை கொண்டிருந்தார்//
    ஒரு நாட்டின் பிரதமரின் நிலை இந்த அளவுக்கு இருந்ததா என்று யோசித்தேன்!

    Reply
  • NANTHA
    NANTHA

    Sam:
    தேசம் நெட் “சிவராம்” பற்றிய தொடரை எதற்காக “திடீரென்று ” அமுக்கியது? அதில் நான் எழுதிய கேள்விகள் “ஒரு” புலிவால்” என இப்போது நான் அனுமானிக்கும் கொன்ஸ்டண்டயின் என்பவரது கருத்துக்கள் பற்றியதே அந்த தொடரை “தேசம் நெட்” நிறுத்தியுள்ளதற்கான காரணம் என்றும் நம்புகிறேன்!

    எனது நம்பகத்தன்மை பற்றி “விசாரித்த” ஜெயபாலன் எனது கேள்விகளுக்குப் பதிலளிக்காது அந்த விவாதத் தொடரை நிறுத்தியதன் மூலம் இவ்வளவு காலமும் கட்டிக் காத்த “சுதந்திரம்”, “நேர்மை”, “பத்திரிகை சுதந்திரம்” என்பனவற்றை கைவிட்டுள்ளதாகவே விசனப்படுகிறேன்!

    Reply
  • NANTHA
    NANTHA

    சந்திரன்:
    இங்கிலாந்தில் “எழுதப்பட்ட” அரசியல் அமைப்பு எதுவும் கிடையாது. இலங்கை போன்ற நாடுகளில் அரசியல் யாப்பு ஒன்று உண்டு. அது இங்கிலாந்தில் இல்லை என்பதைத் தெரிந்து கொள்வது நல்லது.

    இங்கிலாந்தின் மதம் “அங்கிலிக்கன்” கிறிஸ்தவம் ஆகும். எலிசபெத் மகா ராணி இங்கிலாந்தின் அரசுக்கும் தலைவர், அதேநேரத்தில் அங்கிலிக்கன் மத பீடத்துக்கும் தலைவர்.

    பாதிரிகளின் கொடுமைகளை சுட்டிக்காட்டினால் “பகைமை”யை சம்பாதிக்க நேரிடும் என்கிற உங்களின் கருத்து உடன்பாடுள்ள கருத்து அல்ல. முதலாளித்துவத்திலிருந்து உலகம் விடுபடு முன் பாதிரிகள் இலங்கையை ஒரு வழி பண்ணிவிடுவார்கள்.

    கத்தோலிக்க/கிறிஸ்தவர்கள் அவர்களின் தலைமைகள் ஈழம் என்று புகுந்து உள்ளதை நீங்கள் விமர்சிக்காமல் விடுவது உழைக்கும் மக்களின் விடுதலை அல்லது போராட்டத்தை நசுக்க உதவுவதாகவே கருதுகிறேன்! தவிர வத்திக்கானும், இங்கிலாதும் “நேசமுள்ள” கிறிஸ்தவ தலைமைகள். அவர்கள் இலங்கை மக்களுக்கு மதத்தினூடாக கலவரங்களையும், மரணங்களையும் விளைவிப்பார்கள். இது வரலாறு. இது மட்டுமில்லை வத்திக்கான் இலங்கை அரசை விட பணபலமும் ஆட்பலமும் கொண்ட ஒரு கூட்டம் என்பதையும் நீங்கள் உணர வேண்டும்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    முதாலித்துவ ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களா? வத்திக்கான் பாதிரிகள் எதிர்ப்பு போராட்டங்களா?? இனி வெற்றிபெறும். உழைப்பாளி வர்க்கத்திற்கு நன்மை பயக்கும் என்பதை வரப்போகும் காலங்கள் தான் பதில் சொல்லவேண்டும். வத்திக்கான் பாதிரிகள் போராட்டமான-உங்கள் போராட்டத்திற்கு எனது முதல்எதிர்ப்பை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
    இதுப்படியான சிந்தனைப்போக்கு உழைப்பாளிமக்களின் ஐக்கியத்தை குலைத்து மதப் பிரிவுகளை ஒன்றோடு ஒன்று மோத விடுவதற்கே இட்டுச் செல்லும். இறுதியில் ஏகாதிபத்தியங்கள் தங்கள் வெற்றியை இலவுகாக சம்பாரித்துக் கொள்வார்கள். மேற்கொண்ட நான் எதையும் விவாதிக்க விரும்பவில்லை. உங்கள் அடையாளமும் நிரூபிக்கப்பட்டு விட்டது. நீங்கள் உங்கள் பாதையில் முன்னேறவும். அதை தடுத்து நிறுத்துகிற உரிமையும் எமக்குண்டு.

    Reply
  • பல்லி
    பல்லி

    //இங்கிலாந்தில் “எழுதப்பட்ட” அரசியல் அமைப்பு எதுவும் கிடையாது. இலங்கை போன்ற நாடுகளில் அரசியல் யாப்பு ஒன்று உண்டு. அது இங்கிலாந்தில் இல்லை என்பதைத் தெரிந்து கொள்வது நல்லது.//

    ஜயோ மகாராணியையும் விட்டு வைக்கவில்லையா??

    Reply
  • பல்லி
    பல்லி

    //ஒரு நாட்டின் பிரதமரின் நிலை இந்த அளவுக்கு இருந்ததா என்று யோசித்தேன்!//
    என்னால் அந்தளவுக்கு உமாவை குறைவாக எடைபோட முடியவில்லை; திறமைசாலிகள் அனைவரும் வெற்றி கொள்வார் என்பது இல்லையே;

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…என்னால் அந்தளவுக்கு உமாவை குறைவாக எடை போட முடியவில்லை; திற்மைசாலிகள் அனைவரும் வெற்றி கொள்வார் என்பது இல்லையே;….//
    இந்திராகாந்தியுடன் தொலபேசி உரையாடல், அணிசேரா மாநாட்டில் பார்வையாளர் அந்தஸ்து…..அதே நேரத்தில் ‘வங்கம் தந்த பாடம்’. குறவாக எடை போட முடியாது தான்!

    Reply
  • தமிழ் வாதம்
    தமிழ் வாதம்

    பல்லி!
    “என்னால் அந்தளவுக்கு உமாவை குறைவாக எடை போட முடியவில்லை; திற்மைசாலிகள் அனைவரும் வெற்றி கொள்வார் என்பது இல்லையே;”

    நீங்கள், இயக்கப் பிரச்சாரப் பிரிவின் செய்திகளை உள்வாங்கி இந்தக் கருத்தாடல் இட்டீர்களா? அல்லது வெறும் உமாபுராணமா?

    எனக்குத் தெரிந்து, ஒழுங்கமைக்கப்பட்ட கெரில்லா அமைப்பின் தலைவராக இருந்து,தனிமனித பலவீனத்தால் அந்த அமைப்பை சிதைத்து,தெருத்தெருவாக இயக்க்ம் தொடங்க வழியமைத்த உமாவின் இயக்க வாழ்வு கொழும்பில் தொடங்கி அங்கேயே முடிந்தது.

    இதில் மற்றய தலைமைகளுக்கு இல்லாத உமாவின் தனித் திறமையென்ன?

    விளக்க முடியுமா?

    Reply
  • palli
    palli

    //வங்கம் தந்த பாடம்’. குறவாக எடை போட முடியாது தான்!//
    சாந்தன் வங்கம் தந்த பாடத்துக்கும் உமாவுக்கும் என்ன தொடர்பு?; நான் முன்பே சொல்லிவிட்டேன்; திறமைசாலிகள் அனைவரும் வெற்றி கொள்வதில்லை;

    //உமாவின் இயக்க வாழ்வு கொழும்பில் தொடங்கி அங்கேயே முடிந்தது.// தமிழ் வாதம்
    பரவாயில்லையே ஆனால் தேசியதலை துனைக்கு எத்தனை ஆயிரம் மக்களையும் பலி கொண்டு சென்றது, ஆனால் உமா துனை பிணம் எதுவும் இன்றி…… விடுங்க தமிழ்வாதம் என்னை இப்படி எடக்கு மடக்காய் கேக்கலாமா?? நானும் அதே பாணியில் பதில் சொல்லுவேனே,

    Reply
  • தமிழ் வாதம்
    தமிழ் வாதம்

    பல்லி!
    புகழாரத்திற்கு ஆதாரம் தருவதை விட்டு, சேதாரக் கணக்குக் காட்டுவது அபச்சாரம்.

    ஒண்டாப் போனாத் திறமை, ஒண்டடியாப் போனா மறுமை என்பதை விட்டு உண்மைகளை எழுதப் பழகுவோம்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…ஆனால் உமா துனை பிணம் எதுவும் இன்றி……//

    அதுதானே துணைதேடி சுவிசில் கணவன் மனைவி கொலை வரை சென்றது இல்லையா? பின்னர் மீண்டு வந்து மாணிக்கதாசனில் நின்று சித்தார்த்தன் சுடலையில் இருந்து செத்த வீட்டு அன்றே கொழும்புக்கு ஓடியதால் தவிர்க்கப்பட்டது.

    Reply
  • பல்லி
    பல்லி

    // உண்மைகளை எழுதப் பழகுவோம்.//
    தமிழ்வாதம் இதுவே எனது நிலை; ஆனால் நான் பலதடவை சொல்லியுள்ளேன் நான் எழுதுபவை அறிந்தவைதான், என் அனுபவங்கள் அல்ல, ஆனாலும் நான் விபரம் அறிபவர்கள் தங்களை போராட்டத்தில் ஆரம்ப காலத்தில் ஈடுபடுத்தியவர்கள்? அவர்கள் யாரையும் புகழ்பாடவோ அல்லது தூற்றவோ தேவையற்றவர்கள்; சிறி நந்தாவின் வீடால் ஓடியதை கேள்வி கேக்காமல் ஏற்றுகொள்ளும் நீங்கள் நான் அறிந்தவைகளை சொல்லும் போது அதுபற்றி என்னை கூண்டில் ஏற்றுவது சரியாயின் என்னால் இப்படிதானே எழுதமுடியும், அதையும் விட நான் உமா பற்றி மட்டும் பின்னோட்டம் விடுபவன் அல்ல, கம்பேக்கர் புகழ் பரமேஸ்வரன் வரை எழுதியுள்ளேன்,கட்டுரை எதுவோ அதன் படிதான் பின்னோட்டம் இட முடியும்;

    உண்மையை எழுத பழகுவோம் அப்படியாயின் சேது பற்றி எப்படி எழுதமுடியும் என்பதை தாங்கள் சுட்டி காட்டவும், இதே சேதுவுடன் நான் இதே தேசத்தில் வாதம் செய்துள்ளேன், (நேரம் இருக்கும் போது பாருங்கள்) வேலைக்காரிக்கு பிள்ளை பிறந்தது என எழுதினால் மார்க்ஸ்ச கருத்து, ஆனால் நாம் யதார்த்தத்தை எழுதினால் அவதூறா? அதேபோல் நான் உமாவின் திறமையைதான் இங்கே சொன்னேன்; ஆனால் அவரது செயல்பாடுகள் எவ்வளவு கேவலம் என்பது பல தடவை பலருடன் பல்லியும் சொல்லியுள்ளேன், தமிழ் புகழாரம் யாருக்கும் பாதிப்பு இல்லை சேதாரம் அதுதான் சேதாரம் என நீங்களே சொல்லிவிட்டீர்களே;

    //இதில் மற்றய தலைமைகளுக்கு இல்லாத உமாவின் தனித் திறமையென்ன?//
    இது என் கருதல்ல நண்பரின் கருத்து, இன்றும் அவருக்கு மட்டுமே ஈழத்தில் நினைவு தூண் உள்ளது,

    Reply
  • பல்லி
    பல்லி

    //அதுதானே துணைதேடி சுவிசில் கணவன் மனைவி கொலை வரை சென்றது இல்லையா? பின்னர் மீண்டு வந்து மாணிக்கதாசனில் நின்று சித்தார்த்தன் சுடலையில் இருந்து செத்த வீட்டு அன்றே கொழும்புக்கு ஓடியதால் தவிர்க்கப்பட்டது.//
    சாந்தன் எனது பின்னோட்டத்துக்கான பதில் இதுவாக எனக்கு படவில்லை, ஆனாலும் தகவலுக்கு நன்றி,

    Reply
  • Sentha
    Sentha

    24வது ஆண்டு நினைவுஅஞ்சலி -06.05.2010- அமரர் சிறீ சபாரெத்தினம்!! (தலைவர் -தமிழீழ விடுதலை இயக்கம் TELO) -அறிவித்தல்
    .www.athirady.info/2010/05/09/73189?xsid=dffg546sdf4g5sdf456g4fg5h4d465f5g

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…சிறி நந்தாவின் வீடால் ஓடியதை கேள்வி கேக்காமல் ஏற்றுகொள்ளும் நீங்க….//

    பல்லி,உங்களையும் நந்தாவையும் ஒரே தட்டில் வைத்து நோக்கும் அளவுக்கு நாம் என்ன விபரமற்றவர்களா? நந்தாவுக்கு ஜே.ஆரே கடிதம் காட்டியவர் (பாதிரிகள் காந்தீயம் பற்றி எழுதிய பெட்டிசன்) , கெயர் நிறுவனத்தில் பிஸ்கற் டிலிவரி பொறுப்பாகச் செய்தவர், ….இந்த லிஸ்ற் நீண்டு சிறிக்கே கைகாட்டிக்காப்பாற்ற முனைந்தவர், பின்னர் மட்டக்களப்பில் ரெலோக்காரை மற்ர இயக்க முகாம்களுக்குள் விட்டு காப்பாற்றியவர். ஏடு தொடக்குதலுக்கெதிராக பாதிரிமுன்னர் சென்று எதிர்ப்பு கோசமிட்டவர்!

    //… கம்பேக்கர் புகழ் பரமேஸ்வரன் வரை எழுதியுள்ளேன்,..//அவரும் வழக்குப் போட்டிருக்கிறாராமே?

    //….இன்றும் அவருக்கு மட்டுமே ஈழத்தில் நினைவு தூண் உள்ளது…// நினைவுத்தூண் எல்லாம் சித்தார்த்தன் எடுக்கும் முடிவில்தான் தங்கி இருக்கிறது என்பது நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை பல்லி.

    Reply
  • naanee
    naanee

    மன்னிக்க வேண்டும் நான் இடைகிடைதான் வாசிப்பதால் சிலவேளைகளில் சில தலைப்புகளை தவறவிட்டு விடுவேன்.
    உமாவைப் பற்றி-
    தமீழிழம் எடுக்க முடிந்திருந்தால் அது உமாவின் தலமையாலே தான் முடிந்திருக்கும் என இப்பவும் நான் நம்புகின்றேன்.இந்திரா காந்தியுடன் போனில் கதைப்பதென்பது பொய்க்கதை. பார்தசாரதியுடன் நல்ல தொடர்பு இருந்தது அதனால் இந்திரா காந்தியையும் ஒருமுறை சந்தித்தார். ஏன் நான் அவரின் தலமைத்துவத்தை மெச்சுகின்றேன் என்றால் ஒரு நாடு அமைப்பதற்கு என்ன தேவையோ அதை பல கோணங்களிலும் செய்து கொண்டிருந்தார். தானே பலரை நேரில் போய் சந்தித்ருந்தார். நான் பின்னர் அவருடன் திரிந்த காலங்களில் அனேக இந்திய அரசியல் வாதிகளுக்கு அவரை ஏற்கனவே தெரிந்திருந்தது. அவரில் நல்ல அபிப்பிராயமும் வைத்திருந்தார்கள். புளொட்டில் நடந்த உட் கொலைகள் பின்னர் வெளிச்சத்திற்கு வர அவர் முழுப் பொய் பேசுபவராக மாறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. தோழர்களுக்கு மத்தியில் அவருக்கு இருந்த விசுவாசமூம் குறைய தொடங்கி விட்டது. அதை எல்லம் மீறி தான் வெற்றி பெறுவார் என நினைத்தார் முடியாமல் போய்விட்டது.

    திம்புவிற்கு பாலசிங்கம் போகவில்லை. சத்தியேந்திராவும் இரண்டாம் கட்டத்திற்குத்தான் வந்தார். இந்தியாவில் டெலோ சந்திரகாசனின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. டெலோ ஒரு ஆமி மாத்திரமே. இதை சிறீயே பல இடங்களில் சொல்லி இருக்கின்ரார். திம்பு பேச்சுவார்த்தைக்கு போன அனைவரையும் நான் சந்தித்தேன். உமாவும், பிரபாவும் ஏர்போட்டிற்கு வரவில்லை. அமிர், சிவா,சமபந்தர் உட்பட மற்றைய இயக்கத் தலைவர்களும் வந்திருந்தார்கள். பத்மநாபாவும் சிறீயும் கை கோத்தபடியேதன் கன நேரம் நின்றார்கள். இவர்களை இயக்க ஆட்களை ஏற்றுவதற்கு சிலர் துணைக்கு வந்திருந்தார்கள் கூட்டணி மூவரும் தனிய முழுசிக் கொண்டு நின்றார்கள். நான் பாவங்கள் என்று அவர்களுடன் போய் கதைத்துக் கொண்டிருந்தேன். ஏற்கனவே அவர்களை டெல்கியில் சந்தித்த பழக்கம் இருந்தது. உமாவை பற்றி பின்னர் முடிந்தால் விளக்கமாக எழுதுகின்றேன்

    Reply
  • BC
    BC

    //வேலைக்காரிக்கு பிள்ளை பிறந்தது என எழுதினால் மார்க்ஸ்ச கருத்து ஆனால் நாம் யதார்த்தத்தை எழுதினால் அவதூறா? //
    வேலைக்காரிக்கு பிள்ளை பிறந்தது என எழுதியதிற்கு மார்க்ஸ்சிய ஆட்கள் தான் இது அவதூறு என்று கோபபட்டனர். நீங்கள் அவதுறு செய்யவில்லை. இந்திய பிரதமர், நேரடி பேச்சு வார்த்தை, உமா என்பது யதார்த்தமாக இல்லை.

    Reply
  • NANTHA
    NANTHA

    சந்திரன்:
    பாதிரிகள் என்கிற “முதலாளித்துவ” ஏஜண்டுகள் தொழிலாளர் சக்தியை சிதைப்பதில் வெற்றி கண்டிருக்கிறார்கள். இனிமேல் நீங்கள் எந்த “தொழிலாளர்” புரட்சியை பாதிரிகளோடு ஐக்கியமாகி எதிர்பார்க்கிறீர்கள்?

    மதவாதிகளான பாதிரிகள் அரசியலில் புகுந்து விளையாடுவது சரி என்று படும் உங்களுக்கு, மற்றைய மதப் பிரிவினர் அரசியல் செய்வது “எந்த” வகையில் கலகத்தை உண்டாக்கும்? அப்படி கலகம் வரும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் “பாதிரிகளை” இந்த தமிழ் பிரச்சனையில் இருந்து ஒதுங்கச் சொல்லுங்கள்!

    வத்திக்கானின் முதாளித்துவ ஏஜண்டுகள் “அரசியல்” என்கிற பெயரில், தொழிலாளர் எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பு ஆகியவற்றை செய்து கொண்டிருப்பது தெரியவில்லையா?

    Reply
  • பல்லி
    பல்லி

    //இந்திரா காந்தியுடன் போனில் கதைப்பதென்பது பொய்க்கதை. பார்தசாரதியுடன் நல்ல தொடர்பு இருந்தது அதனால் இந்திரா காந்தியையும் ஒருமுறை சந்தித்தார்//

    மிக மிக உன்மை இதைதான் எனது நண்பர்களும் சொன்னார்கள். ஆனால் அப்போது எஸ்டிஎஸ் ம் கூட இருந்ததாகவும் அதன் பின்பு கழகம் மத்திய அரசின் கட்டுபாட்டில்தான் இயங்கியதாகவும் அதுவே அவர்களது ஆயுதம் பறிமுதலாக காரணம் எனவும் சொன்னார்கள். (நன்றி தகவலுக்கு)

    //புளொட்டில் நடந்த உட் கொலைகள் பின்னர் வெளிச்சத்திற்கு வர அவர் முழுப் பொய் பேசுபவராக மாறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. தோழர்களுக்கு மத்தியில் அவருக்கு இருந்த விசுவாசமூம் குறைய தொடங்கி விட்டது. அதை எல்லம் மீறி தான் வெற்றி பெறுவார் என நினைத்தார் முடியாமல் போய்விட்டது::// தொடருங்கள் நடந்தவை தெரியவரட்டும்:

    Reply
  • thurai
    thurai

    //பாதிரிகள் என்கிற “முதலாளித்துவ” ஏஜண்டுகள் தொழிலாளர் சக்தியை சிதைப்பதில் வெற்றி கண்டிருக்கிறார்கள்.//நந்தா

    இதேபோல இந்துக்கள் என்பவர்கழும் தமிழரிடம் புகுந்து தமிழரின் ஒற்ருமையை சிதைத்திருக்கின்றார்கள். அல்லாவிடில்
    தமிழன் ஓர் இனமென்றில்லாமல் சமயங்கழும், சாதிகழும் பாதிரிகள் தமிழரிடம் வருமுன்பே தோன்றிவிட காரணமென்ன?

    சிதறிப்போய் உள்ள ஈழதமிழினம் முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என்பதைப் பற்ரி பேசுமுன் மனித நேயத்தையும், மனிதபண்பாட்டையும் முதலில் அறிவதே நல்லது.

    துரை

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    நந்தா எந்தக் காரணத்திற்காகவும் விவாதங்களை நாங்கள் முடிவுக்குக் கொண்டுவருவதில்லை. பொதுத்தளத்தில் நடந்த விவாதத்திற்கு உங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஆதாரங்களை ஈமெயிலில் அனுப்ப முடியாது. அவை தேசம்நெற்றில் பிரசுரமாகும்.

    த ஜெயபாலன்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நந்தா! மா வியாபாரம் செய்தால் காத்தடிக்கிறது. உப்பு வியாபாரம் செய்தால் மழை பெய்கிறது என்கிறது யப்பானிய பழமொழி. எந்த வித சூழ்நிலைகள் சாதகமாக இருக்க வேண்டுமோ அந்த நேரத்தில் காரியம் ஆற்றுவதே சிறந்தது. சமயோக புத்தி. இல்லையா?.
    மதங்கள் எல்லாமே முதாலித்துவத்துக்கு ஆற்றிய பங்குகள் அளப்பரியது. இதன் வரிசையில் முதல் இடத்தை வகிப்பது கிறீஸ்தவ மதமே.
    அவர்கள் எமது நாட்டிற்கு வரும்போதுஎமது நாடு எம் கையில் இருந்தது. வந்தவர்கள் கையில் “பைபிள்” இருந்தது. வந்தவர்கள் கண்களை மூடிக்கொண்டு தியானிக்க கற்றுத் தந்தார்கள். நாமும் கற்றோம். கண்களை திறந்து பார்த்த போது பைபிள் எங்கள் கையில் இருந்தது. நாடு அவர்கள் கையில் இருந்தது. இந்த வாசகம் சில பத்து ஆண்டுகளுக்கு முன்பாக ஆபிரிக்காவில் இருந்து வந்தது. இன்று தமிழ்மக்கள் கடந்த இருபத்தைந்து ஆண்டுகள் பெற்ற துன்பங்களை எந்த வித சலனமும் இல்லாமல் அந்ததுன்பங்கள் தொடர வேண்டும் என விளக்கம் கொடுத்து கொண்டிருக்கிறாரே இந்த இமானுமேல் அடியார் அவரும் ஒரு கிறீஸ்தவர்தான்.

    ஆசைதான் துன்பத்திற்கு காரணம் என்று சொன்னவன் புத்தன் புத்தர். அந்த சமயமே பூநகரி குண்டுவீச்சில் சவஅடக்கத்தின் போது பதினெட்டு மாதங்கள் உள்ள பிள்ளை துண்டாக வெட்டுப்பட்ட கைகளையும் அந்த சிசுவின் நெஞ்சில் வைத்து இமைக்கிரிகைகள் செய்த காட்சிகளை பார்த்தோம்.

    யாரும் முற்போக்காக சிந்திக்கும் மனிதன் எதை தேடுவது!. எதை அடைவது!!. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதையா? திருவள்ளுவர். தொழிலாளவாக்கத்திற்கு தாய்நாடுமில்லை தந்தைநாடுமில்லை என்பதான மாக்ஸின் கண்டுபிடிப்பையா?

    செல்வம் எங்கிருந்து தொடங்கிறது? அமெரிக்காவில்லிருந்தா? தங்கத்தில் இருந்தா?? அல்லது ஏதோ ஒரு வளமான நாட்டில்லிருந்தா? இல்லவே இல்லை. உழைப்பில்லிருந்தே செல்வம் தொடங்குகிறது. சுரண்டலில் இருந்தே கொள்ளையடிக்கப் படுகிறது. இந்த விதியை கடைசியாக பிரகடனப்படுத்தியவர் உலகமுதலாளிகளே அதற்கு தலைவை வகித்தவர்கள் யுத்தம் முடிந்த தறுவாயிலும் ஒருமணி நேரத்தில் இரண்டு லட்சம் யப்பானியரை காவு கொடுத்த அமெரிக்க மூலதனமே. இதெல்லாம் யாருடைய செயல்பாடு? ஒரு மதத்திலையோ இனத்திலையோ ஒரு நாட்டிலையோ குற்றம் சாட்டிவிட முடியுமா? அமெரிக்கமக்கள் உட்பட.

    ஆகவே நந்தா! இனிமேலாகுதல் மதங்கள் இனங்கள் நாடுகளை குற்றஞ்சாட்டுவதை நிறுத்திவிடுங்கள். உள்ள பிரச்சனை சுரண்டுபவனுக்கும் சுரண்டப்படுபனுக்கும் உள்ள பிரச்சனையே! தொழிலாளிவர்கத்திற்தும் மூலனதனத்திற்கும் அதன் செயல்பாடுகளுக்கும் உள்ள பிரச்சனையே. அதன் ஒரு பகுதியே நீங்கள் சொல்லுகிற மதம். கிறீஸ்தமதம். இந்த மாக்ஸியவாதிகளின் பலம். ஸ்தாபனம் ஒன்று மட்டுமே! அது இன்று பலவற்றாலும் கூர்மை மங்கி வசைகளாலும் ஏச்சுபேச்சுகளாலும் கூர்மை மங்கி துருப்பிடித்துப் போய் இருப்பதை வரப்போகும் சூறாவளிகளும் சுனாமிகளும் மேலும் கூர்மையாக்கி தொழிலாளி வர்க்க ஐக்கியம் என்ற வாளுக்கு புது ஒளி வீச்சை கூர்மையைக் கொடுக்கும்.

    Reply
  • NANTHA
    NANTHA

    ஜெயபாலன்:
    எதிர்பார்த்த பதில்தான். ஆனால் “விவாத தொடரையே” அமுக்கி விட்டு அதற்கான காரணத்தினையோ பதிலையோ தராது விடுவது முதுகில் புண் உள்ள பலர் “தேசம்நெட்” இல் உள்ளனர் /நடத்துகின்றனர் என்பதே ஆகும்.

    அது இயக்க தோஷத்தின் விளைச்சல். கடந்த 30 ஆண்டுகளில் நடந்துள்ள விபரஙளை உங்களால் இதய சுத்தியுடன் பேசவோ அங்கீகரிக்கவோ முடியாது திண்டாடும் போது, இலங்கை மக்களுக்கு எதனைச் சாதிக்க முற்படுகிறீர்கள்?

    சந்திரன்:

    தொழிலாளர்கள் பற்றிய “அறிவுரைக்கு” முன்னர் பாதிரிகளுக்கு ஈழம் எதற்குத் தேவைப்பட்டது என்பதை சொல்லிவிட்டு உங்கள் கருத்துக்களை தொடருங்கள்!

    Reply
  • thurai
    thurai

    //சந்திரன்: தொழிலாளர்கள் பற்றிய “அறிவுரைக்கு” முன்னர் பாதிரிகளுக்கு ஈழம் எதற்குத் தேவைப்பட்டது என்பதை சொல்லிவிட்டு உங்கள் கருத்துக்களை தொடருங்கள்!//நந்தா

    புலம்பெயர்நாடுகளில் எதற்கு இந்துக்கோவில்கழும், தமிழ் கடைகழுமோ அதே போல்தான். இந்துக் கோவில்களால் புகலிடம் கொடுத்த நாட்டுக்காரரை விட புகலிடம் தேடிய கோவில் உருமையாளர்களிர்கே பயன்அதிகம். இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட வட இந்தியர் தமிழரின் உருமைக்காக குரல் கொடுக்காவிட்டாப்போல் தமிழ் இந்துக்களையும் இந்து மதத்தை புறக்கணிக்க சொல்லலாமா? புலிப்பால் குடித்தவர்களை எப்படி
    மாத்த முடியாதோ அதே போல்தான் மதங்களின் பாலைக் குடித்தவர்கழும் இதில் இந்து, கத்தோலிக்கமென்னும் பேதத்திற்கே இடமில்லை.

    சமய விவாதம் வீண்வாதம்.

    துரை

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பாதிரிகள் மட்டுமா? ஈழம் கேட்டார்கள் 70-80 ஆண்டுகாலப் பகுதிகளில் முப்பத்தைந்து லட்சம் தமிழ்மக்களின் விருப்பமும் ஈழமாகத்தான் இருந்தது. ஊடக வேலை பார்த்ததாக சொன்னீர்களே நந்தா!. இதை நான் சொல்லியா தெரியவேண்டும் தமிழர்கூட்டணி எங்கிருந்து வந்ததாக உத்தேசம். புலிகளுக்கு அடுத்த விசுவாசிகளாக பாதிரி கூட்டம்தான் மேற்குலகத்தின் சுரண்டலுக்கு கொள்ளையடிப்புக்கு துணை போவதாக இருக்கிறார்கள். மேற்குலத்தின் அதிகாரம் ஆசியாவில் எடுபடவில்லை என்றால் பாதிரிகூட்டத்தின் தொழிலுக்கே வில்லங்கம் வந்துவிடும். இதற்காக எல்லா கிறீஸ்தவர்களையும் பாதிரிகளையும் ஒரே தராசில் எடைபோடுவது தவறு. அப்படியென்றால் பாதிரிகள் எல்லாம் தமிழர்களா? தமிழர்கள் எல்லாம் பாதிரிகளா? மூக்கை எப்படி தொடுவது என்பதில் தான் பிரச்சனையே இருக்கிறது. நீங்கள் காட்டும் வழி இமானுவேல் அடிகளார் காட்டும் வழியை விடமோசமானவை. இந்த வழி புலிகள் காட்டியவழிகளுக்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல நந்தா.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    அடேல்வ் கிட்லர் யூதமக்களை எதிரியாக கண்டதும் பிரபாகரன் சிங்களமக்களை துரோகியாக கண்டதும். நந்தா கிறீஸ்தவத்தையும் பாதிரிகளையும் ஈழமக்களது கடந்த காலதுன்பங்களுக்கு காரணம் என குற்றம் சாட்டுவதும் நீளம் அகலம் எடை என்பவற்றில் ஒரே மாதிரியானவயே. பாசிஸம் இப்படியான மக்கள் விரோத பண்புகளில் இருந்தே முளைவிடுகின்றது. காலாவதியாகிப் போகிற முதாளித்துவ அமைப்பு முறைகளில் இருந்தே இவர்களுக்கு பிராணவாவு கிடைக்கிறது.மற்றைய இனத்தை நேசிக்காதவன் தன்னித்தையும் நேசிக்கமாட்டான். முஸ்லீம்கள் பலாத்காரமாக வெளியேற்றபட்டபின் பத்தொன்பது வருடங்களுக்கு பிறகு இதன் உண்மையை வன்னி-முள்ளிவாய்கால்களில் கண்டோம். நந்தாவுக்கு இருக்கிற வெறுப்பும் பாஸிசம் உருவாதற்கான வெறுப்பே. நந்தாவுக்கு எந்த சந்தர்பத்தையும் வாசகர்கள் அனுமதிக்கக்கூடாது.

    Reply
  • பல்லி
    பல்லி

    //அவரும் வழக்குப் போட்டிருக்கிறாராமே?:://
    ஜயய்யோ பல்லி அவருக்கு சாதகமாய்தான் எழுதினேன்; என்னமாய் மிரட்டுறாங்கப்பா.

    Reply
  • naanee
    naanee

    “இதில் மற்றைய தலமைகளுக்கில்லாத உமாவின் தனித் திறமையென்ன”

    இந்தியாவில் தலைமறைவாக இருந்த இயக்கங்களை இந்திய அரசின் அணுசரணையுடன் தமிழ்நாட்டில் ஒரு நாட்டின் விடுதலைக்காக போராடும் இயக்கமென முதலமைச்சராலேயே சொல்லவைத்தது.

    சர்வதேச அங்கீகாரத்திற்காக டெல்கியில் அலுவலகம் போட்டது மாத்திரமில்லாமல் பல வெளிநாட்டு தூதுவர்கள்,அரசியல்வாதிகள்,இந்திய அரசியல்வாதிகளென என தானே நேரில் சந்தித்தது.

    மொரீசியஸ்,அல்ஜீரியா போன்ற நாடுகளுக்கு அரச அங்கீகாரத்துடன் சென்றது.

    ஆயுதப் போராட்டத்தை எப்பவும் இரண்டாம் பச்சமாகவும் சர்வதேசத்தின் அங்கீகாரமே முக்கியமென ஒரு சமூக விஞ்ஞானக் கல்லூரி நிறுவி அதில் தமிழ்நாட்டு பேராசிரியர்களாலும், பத்திரிகையாளர்களாலும், கொம்னியுஸ்டுக்களாலும் வகுப்பெடுத்து ஒரு சிலரையாவது சர்வதேச கருத்தரங்குகளில் பங்கு பெறவைக்க முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றது.

    தமிழீழம் தான் தீர்வு, இல்லையெனில் எது சிறந்த தீர்வாக இருக்கலாமென வேறும் சில தீர்வுகளை (பிற நாட்டில் இருப்பவைகள் போன்று )பரிசீலிக்கலாம் என இலங்கைக்கு இந்தியாவூடாக அழுத்தம் கொடுத்தது.

    ஜே.ஆர் “ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு வந்தால் உமாவுடன் காலிமுகத் திடலில் ஒரே மேடையில் பேசத் தயாரென” அப்பவே பண்டாரி மூலம் சொல்லவைத்தது.

    ஆயுதப் போராட்டத்தை தெற்கில் ஒரு குழப்பத்தை ஏர்படுத்திய பின்னரே தொடங்க வேண்டுமென அதற்காக சில முன் ஏற்பாடுகளை ஆரம்பித்திருந்தமை.

    இன்னமும் எவ்வளவோ எழுதிக் கொண்டு போகலாம். எத்தனை இரவுகள் மொட்டை மாடியிலும் ,நிலவில் புல் வெளியிலுமிருந்து இந்தக் கதைகளைக் கதைத்தோம். எல்லாம் கனவாகிவிட்டது. ஓர் இரவு நான் விம்பிள்டன் பைனல் நேர்முக வர்ணணை வானொலியில் கேட்டுக் கொண்டிருந்தேன். என்ன காதுக்க ரேடியோவோட கிறிக்கெட்டொ என்று கேட்டார் இல்லை டென்னிஸ் என்றேன் தமீழீழம் வர ஸ்போட்ஸிற்கு நல்ல முக்கியத்துவம் கொடுக்க வேணும் அதுவும் எவ்வளவோ காலமாக மனதிற்குள் கிடக்கு என்றார்.

    மனுசன் நல்ல மனுசன் தான் திறைமைசாலிதான் யாரை எங்கு வைக்க வேண்டும் எனத் தெரிந்தவர் தான், .கெட்டிக்காரத்தனத்தை ஊக்கிவிப்பவர்தான் தான் உலக அரசியல், ராஜதந்திரம், மனிதர்களின் பலம் பலவீனம் அனைத்துமும் அறிந்த ஒரு சராசரி மனிதனிலும் மேலான அறிவுள்ள நான் எனது தந்தையாருக்கு அடுத்து நம்பிக்கையும் மதிப்பும் வைத்த ஒரே நபர்.
    கடைசியில் தோற்றார் ஏன்? அதையும் அவருடன் கதைத்தேன் தோற்க முதல்.
    நாளை தொடரும்

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //..ஜயய்யோ பல்லி அவருக்கு சாதகமாய்தான் எழுதினேன்; என்னமாய் மிரட்டுறாங்கப்பா….//

    நீங்கள் சாதகமாய் எழுதியதல்ல இ்ங்கே பிரச்சினை. தான் ‘ஹம்பேகர்’ சாப்பிட்டவர் எனச் சொல்லி தனக்கு அவதூறு விளைவித்ததாக பொலிசார்/ பத்திரிகைகள் மீதே! வழக்கு உங்களுக்கெதிராக அல்ல பயம் வேண்டாம்.

    Reply
  • தமிழ் வாதம்
    தமிழ் வாதம்

    வெறும் புகழாரங்கள்தான் பெரும் சேதாரங்களுக்கு வழிவகுத்தது. தலைமைகளின் திறமை என்பது வெற்றியில் மட்டுமல்ல,அடுத்த தலைமையை உருவாக்குவதிலும் நிர்ணயம் செய்யப்படுகிறது. தலைமைகள் மறைந்து போனபின் நிர்மூலமாக்கப்பட்ட அமைப்புகளைத்தான் நாம் கண்டு கொண்டது. கதாநாயகர்களை, கடவுள் வழிபாடுகளை ஏற்படுத்திக் கொண்டதுதான் நமது வரலாறு.

    மதவெறியர்களின் வாதமும், ரசிகர் மன்ற கருத்தோட்டங்களும், எதையும் மாக்சிஸ சமன்பாட்டுக்குள் வரையறுக்க முயல்கையும்தான் நமக்குப் பழக்கப்பட்டவை. இல்லாததை, பொல்லாததை எழுதி “எல்லாம் எனக்கே தெரியும்” என்ற மமதையும்தான் எம்மிடம் மிஞ்சியுள்ளது. இவற்றை எல்லாம் கடந்த வாழ்வு முறை இருப்பதை நாம் அறிந்து கொண்டால் வழிமுறைகள், தானே கதவுகளை உங்களுக்காக திறந்து விடும்.

    Reply
  • NANTHA
    NANTHA

    சந்திரன்:
    பாசிசம் என்னவென்று தெரியாமல் எழுதியிருக்கிறீர்கள். பாசிசத்தை ஆதரிக்கும் பாதிரிகளை பாதுகாக்க முற்படும் நீங்கள் தொழிலாளர் என்று அரசியல் சரடு விடுகிறீர்கள். ஹிட்லரும் தேசிய சோசலிசம் என்று பதவிக்கு வந்த பயங்கரவாதி. அதே ஹிட்லருக்கும் வத்திக்கன் ஆசீர்வாதம் கொடுத்த வரலாற்றை படித்தால் நல்லது. இத்தாலியின் பெனிட்டோ முசோலினிக்கு எதிராக வத்திக்கன் எங்கும் பேசியது கிடையாது.

    எனவே நீங்கள் “பாசிசம்” என்று என்மேல் பாய்வது வினோதமான செயலாகவே படுகிறது. இந்த நூற்றாண்டு முடிவதற்குள் இலங்கையையும், இந்தியாவையும் கத்தோலிக்க நாடுகளாக்குவதாக போப் கூறியிருப்பதை அறியாமல் சண்ட மாருதங்கள் செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்!

    தமிழ் பாதிரிகளுக்கு “ஈழம்” தேவை. அப்போது சிங்களப் பாதிரிகளுக்கும் அது உடன்பாடானதா?

    ஊடகத் துறையின் தொடர்புகள்தான் எனது கருத்துக்களுக்குக் காரணம் என்பதையும் தெரிவிக்கிறேன்.

    Reply
  • nallurkantha
    nallurkantha

    It is very unfortunate the Jaffna tamils were inffluenced by smugglers like Thangathurai,Prabhahran and others from the VVT kingdom.The problem was Tamils(jaffna) had good education facilities in jaffna and thereafter good employment.They dont have an intelleactual base.Their higher education was a qualification for big dowry.Very empty crowd.Communal politics was their attraction.End result is disaster and suffering.Tamils have damaged themselves and the country at large.We are a unrealistic crowd.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    // இவற்றையெல்லாம் கடந்த வாழ்வுமுறை இருப்பதை அறிந்து கொண்டால் வழிமுறைகள் தானே கதவுகள் உங்களுக்காக திறந்து விடும் // தமிழ் வாதம்.
    ஜெயபாலன் உட்பட ஆலாப் பறந்தடித்து நாம் எல்லாம் நாய்க்கடி பூணைக்கடி என புடுங்குப்பட்டு அல்லல்பட நீங்கள் வழிதெரிந்த உண்மை-கதவுகளை ஏன் மூடிவைத்திருந்து வஞ்சகம் பண்ணுகிறீர்கள் தமிழ்வாதம்?
    கொஞ்சம் தான் மனமிரங்கி பொதுச்சேவையாக எண்ணி நீங்கள்கண்ட ஞானத்தை தேசம்நெற் வாசகர்களுக்கும் போதிக்க கூடாதா? போகிறவழிக்கு உங்களுக்கு புண்ணியம் மாகுதல் கிடைக்கும் அல்லவா!. அல்லது எங்களையெல்லாம் காவிதரித்து கமண்டலம் ஏந்தச் சொல்லுகிறீர்களா?.

    Reply
  • BC
    BC

    தமிழ் வாதத்தின் கணிப்பு சரியானது.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    எப்படி சரியானது. நிவிர்த்தி செய்வது உங்கள் கடமையல்லவா? பி.சி சொன்னால் தானே! நாம் மேற்கொண்டு முன்னேறமுடியும். சறுக்கல் பதிலை முன்மொழியாதீர்கள். ஏற்கவே உங்கள் பதில் கழுவின மீன்னுக்கள் நழுவின மீன்னதான்.

    Reply
  • vetrichelvan
    vetrichelvan

    In 1983 , uma anna met indra gandhi along with former srilankan collecter mr. vigneshwar raja arranged by dr.alexander

    Reply
  • BC
    BC

    நான் குறிப்பிட்டது எங்களை பற்றி தமிழ்வாதத்தின் கணிப்பு பற்றியது. அவர் கருத்துக்களுடன் முழுமையாக உடன்படுகிறேன். அவரே அதற்க்கு வழி சொல்லியும் உள்ளார். கதாநாயகர்களை, கடவுள் வழிபாடுகளை ஏற்படுத்திக் கொண்டது தொடக்கம் ரசிகர் மன்ற கருத்துக்கள், இல்லாததை பொல்லாத எழுதுவது, எல்லாம் எனக்கே தெரியும் என்ற மமதை, எதையும் மாக்சிஸ சமன்பாட்டுக்குள் வரையறுக்க முயல்வது இவற்றையே செய்து கொண்டிருக்காமல் இவற்றை எல்லாம் கடந்த வாழ்வு முறை இருப்பதை புரிந்து கொள்ளுதல். அப்படி புரிநது கொண்டு கட்டுரை ஜெயபாலனும் எழுதுகிறார் என்பது எனது கணிப்பு

    Reply
  • chandran.raja
    chandran.raja

    மாக்ஸிய சமன்பாடு என்பது இனம் குலம் கோத்திரம் சாதி நாடு கண்டம் எல்லாவற்றையும் தாண்டி ஒருமனிதனுக்கு தேவையான உணவு உடை உறைவிடம் போன்றவற்றை முதல் உரிமைப்படுத்தி வெளிவருவதே! மாக்ஸியம்.
    மனிதனைக்கு தேவையானவையை மனிதன் கொள்ளையிடுகிறான் என்பதே விபரிப்பதே மாக்ஸியம்.
    மனிதனை மனிதன் பட்டினி போடுகிறான் யுத்தத்திற்கு தூண்டிவிடுகிறான் என்பதே மாக்ஸியம்.
    மனிதன் இனம் மதம் மொழி நிறம் என்ற வேறுபாடுகள் இருந்த போதிலும் அவர்களின் தேவைகள்-அடிப்படைத்தேவைகள் என்றும் மாறதவையாக ஒரேமாதிரியாக இருப்பவை என்பதை பிரகடணப்படுத்துவதே மாக்ஸியம்.
    ஒரே தட்டில் சாப்பிடவும் ஒரேபாயில் படுத்துறங்கவும் என்பதை பிரகடபடுததுவதே மாக்ஸியம்.
    அதற்கு சில விதிகளையும் விதிக்கிறார்.இந்த உலகம் வர்கங்களாக பிளவு பட்டிருக்கிறது.சோம்பறியும் ஊதாரித்தனமான உலகத்தின் 98 எட்டுவீதமான உரிமைகளையும் தன்வசப்படித்தியிருக்கிறது.

    உலகத்தொழிலாளர்ககே! ஒன்று படுங்கள். உற்பத்தியை உங்கள் கையில் எடுங்கள் ஆதாயத்திற்காக இல்லாமல் மனிததேவைகளுக்காக உற்பத்தி செய்யுங்கள் என்பதை பிரகடனப்படுத்துவதே மாக்ஸியம்.
    தமிழ்சமூக இன்று மயங்கிப் போய்யுள்ளது.குஷ்புக்கு கோவில் கட்டுதல் கட்டவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்வது. புது சினிமாபடத்திற்கு கிடாய் வெட்டுவது வன்னிப்பேரவலங்கிளை விபரத்து இன்னொரு யுத்தத்திற்கு தயார் செய்வது போன்றவே நம் கண்னெதிரே கண்டுகொண்டுள்ளோம்.
    எமக்கு ஒரு ஸ்தாபனம் தேவை அதன் ஊழியராக நாம் இருப்போம் என்பதை கிஞ்சித்தும் கவலைப்பட்டார் இல்லை. ஆகவே. இனி என்ன செய்வது?. மாக்ஸியத்தில் குறை கண்டு கொள்வதில் உங்கள் மிகுதிக் காலங்களை கழிக்கப் போகிறீர்களா? இல்லை. பொருள் உணர்ந்து ஓதப்போகிறீர்களா?

    Reply
  • naanee
    naanee

    தனிநபர் வழிபாடு வேறு ஒருவரின் திறமையை ஒப்புக்கொள்வது வேறு. பலர் சேர்ந்து ஒரு விளயாட்டை விளயாடினாலும் அணிதலைவவரினது திறமையும் வெற்றிக்கு மிக முக்கியம். இதை பாராட்டுவதில் எந்த தவறுமில்லை.

    உமா பற்றி இன்னும் சில. இவர் வெறுமன பிரபா, சிறீ நாலு பேரை சுட்டுவிட்டு தலைவராக வரவில்லை. இயக்கத்திற்கு வர முதலே இளஞர் பேரவையிலும் கூட்டணியிலும் தொடர்பிருந்ததால் ஒரு அரசியல் பின்னணி இருந்தது. அதைவிட காந்தீயம் அமைபில் இருந்து நடைமுறையிலும் சில செயற்திட்டங்களை செய்து காட்டியிருக்கின்றார்.

    அந்த நேரத்தில் இளஞர்கள் சினிமா, விளையாட்டு என பொழுதுபோக்கிக் கொண்டிருந்த காலத்தில் காந்தியம் என்ரொருஅமைப்பில் இணைந்து மக்களுக்காக வேலை செய்வதென்பது பெரிய விடயம்.

    வெற்றிச்செல்வன் சொல்வது சரி.இந்த அலெச்சாண்டர் பின்பு இங்கிலாந்தில் இந்திய தூதுவராக இருந்தார். வெற்றி நீர் டெல்கியில் இருந்த வெற்றியா?அவராயின் தொடர்புகொள்ள ஆவலாக இருக்கின்றேன்.

    Reply
  • பல்லி
    பல்லி

    // வெற்றி நீர் டெல்கியில் இருந்த வெற்றியா?அவராயின் தொடர்புகொள்ள ஆவலாக இருக்கின்றேன்.//
    மிக கஸ்ற்றமான வாழ்வோடு தமிழகத்தில் இருக்கிறார்; ஒருகாலத்தில் டெல்லியில் கொடிகட்டி பறந்த அதே வெற்றிதான், கழகதோழர் பலர் இன்றுவரை சென்னையில் மிக ஏழ்மை வாழ்வை வாழ்கின்றனர்; அதில் வெற்றியும் ஒருவர், ஜெயபாலன் உங்களுக்கும் அவருக்கும் தொடர்பு இல்லையா; இல்லையாயின் அவரது தொடர்பை தேடி தருகிறேன் ; எனது நண்பரும் வெற்றியும் நண்பர்கள்? (கழக தோழர்கள்)

    Reply
  • பல்லி
    பல்லி

    //உமா பற்றி இன்னும் சில.//
    ஆயுத பயிற்ச்சி பெற்றவர் எனவும் சொல்லுகிறார்கள் உன்மையா?

    Reply
  • vetrichelvan
    vetrichelvan

    yes , same delhi vetrichelvan , i like to contact with my old friends. jeyabalan know very well me. my email address is vetri23@gmail.com.

    Reply
  • naanee
    naanee

    பல்லி நீர் ஏன் என்னை ஜெயபாலன் என்று நினைத்தனீர். நான் என்ன குறுந்தாடி வைத்துகொண்டு கவிதையா எழுதித் திரிகின்றேன்.
    சங்கிலியையும், மாணிக்கத்தையும் மன்னித்தாலும் அறிவுக்கடல்களென்று தங்களை காட்டிக் கொண்ட சிலர் கழகத்தை சீர்திருத்த முன்வராமல் கடைசிவரை பொய்யிற்கும் அராஜகத்திற்கும் துணை போனது கொடுமையிலும் கொடுமை. துணை போனார்கள் என்பதை விட மவுனம் காத்தார்கள். ஏதோ அது ஒரு டிப்பாட்மென்ட் தாங்கள் வேறு டிப்பாட்மென்ட் என்றது மாதிரி. கேட்டால் பயமென்பார்கள். பிறகேன் ஆயுத போராட்டத்திற்கு வெளிக்கிட்டு வந்தனீர்கள்.

    நன்றி வெற்றி. உம்முடன் தனிப்பட தொடர்பு கொள்கின்றேன். டெல்கியில் ஒரு சாலையில் குருதுவாரா ராகப் கஞ் என நினைகின்றேன் உமா, நீர், நான் மூவரும் நடந்து போகும்போது ஜெயபாலன் எதிர் பக்கத்தில் வந்தார். அப்போ உமா சொன்னார் இவனெங்க இங்க வந்தான், பாருங்கோ எங்களை கடந்து கொண்டு தெரியாத மாதிரி போகப் போகின்றானென்று அதுதான் நடந்தது. கவிஞர் எப்பவும் கற்பனைல் தான் நடப்பார். இப்போது யாரெனத் தெரியுமென நினைக்கின்றேன்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //பல்லி நீர் ஏன் என்னை ஜெயபாலன் என்று நினைத்தனீர்.//
    இல்லை நான் நோர்வே ஜெயபாலனை சொல்லவில்லை
    தேசம் ஜெயபாலனைதான் சொன்னேன்; ஆனால் இருவரும் வெற்றியின் நண்பர்கள்தான், ஆனால் பல்லி ஒரு தேவைக்காய்; (இயக்கமல்ல) டெல்லிக்கு போன போது(1984) வெற்றி உதவினார்; அதனால் எனக்கு வெற்றியை தெரியும்; அதேபோல் அந்த காலத்தில் வெற்றியால் உதவி பெற்ற தனி நபர்கள் பலர்; வெற்றிக்காய் சிலர்; (முஸ்த்தப்பா, தம்பி அம்பன், பரம்; சிங்கம்; மனேச்சர் , போதுமென நினைக்கிறேன்) ஆக பல்லியின் புள்ளி இரு நண்பர்களை இனைய வைத்துள்ளது; இதுதான் பல்லி; அதேபோல் குரும்தாடி ஜெயபாலன்(நோர்வே) இப்போ புலியாமே??

    Reply
  • பல்லி
    பல்லி

    //நானே; //
    அதுதான் நீங்கள் யார்தானோ என உங்கள் தோழர்கள் கேக்கிறார்கள். மாயாபோல் இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாது சொல்லலாமே; டெல்லிவரை சென்றதால் விடயம் பல தெரிந்தவராய் இருக்ககூடுமல்லவா??

    Reply
  • Naane
    Naane

    எழுதுவதை வைத்து யாரெனெ கண்டுபிடிக்க முடியாவிட்டால் போராடத்திற்கு வந்ததே வேஸ்ட். மாயா யாரென்று நான் எழுதும் போது உடன் புரிந்து கொண்டேன்

    உமாவின் தகமைகள் பற்றி பக்கம் பக்கமாக எழுதிவிட்டு அப்படியாயின் ஏன் தோத்தார் எனவும் எழுத வேண்டும். இதில் இரண்டு விடயங்களுண்டு. ஒன்று நான் நேரே கண்டது, அனுபவித்தது. மற்றது நம்பகமான தோழர்கள் சொன்னது.

    புலியில் இருந்து பிரிந்து புளொட் உருவானதால்,பிரபாவை பற்றி நன் கு அறிந்திருந்தமையினால் அத்துடன் சுந்தரத்தை கொலை செய்திருந்ததாலும்,

    இந்த மூன்று காரணிகளும் புளொட்டை ஒரு புலிக்கெதிரான என்பதைவிட, புலியை ஒரு உமாவை எந்நேரமும் கொலை செய்ய முயலும் ஒரு இயக்கமாகவே பார்த்துவந்தார்கள். இதனால் பயிற்சிக்கு வரும் அனைவரிலும் ஒரு புலி உளவாளியோ என சந்கேகம் இருந்து வந்தது. அதுவும் முக்கியமாக சுந்தரத்தின் கொலையால் பாதிப்படைந்த பல மாதகல், சுளிபுரம் தோழர்கள் ஓரளவிற்கு எவரையுமே நம்ப தயாராகாத நிலையிலேயே இருந்தர்கள். அதைவிட புளொட் என்றால் தங்கடைதான் என்ற நிலைபாடு. (புலி தங்கடை என்று வல்வெட்டித்துறையார் நினைத்தது மாதிரி) .அதை விட புலி, புளொட் பிரிவால் உமாவுடன் வந்தவர்களெல்லாம் மிகுந்த விசுவாசிகளாக வேறு இருந்தார்கள்.

    83 கலவரத்துடன் பெருந்தொகையான உறுப்பினர்களை சேர்த்த புளொட் அவர்களை பயிற்சியை கொடுத்து சில பொறுப்புக்களை கொடுத்ததே ஒழிய முக்கிய தீர்மானங்கள் எடுக்கும் நிலையில் அதே பழைய உறுப்பினர்களே இருந்தார்கள்.
    மீதி நாளை

    Reply