கிளி நொச்சியில் படை நடவடிக்கைகளின்போது உயிர்நீத்த படைவீரர்களை நினைவுகூறும் வகையில் இன்று காலை அங்கு நினைவுத்தூபி ஒன்று திறந்து வைக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ இந்த வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். வடக்கு மண்ணை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்ததுபோல் வடபகுதி மக்களின் உள்ளங்களையும் படையினர் வென்றெடுக்க வேண்டும் என்று இந்த வைபவத்தில் பேசிய அவர் கூறினார்.