கண்டி மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காதர்ஹாஜியார் பாராளுமன்றத்தில் தனித்துச் செயற்பட முடிவுசெய்துள்ளதாக நம்பகமாகத் தெரியவருகின்றது. கட்சித் தலைமையுடன் ஏற்பட்டுள்ள கருத்து மோதல்கள் காரணமாகவே அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. கட்சியில் அவர் வகித்த தேசிய முஸ்லிம் அமைப்பாளர் பதவி உட்பட ஏனைய பதவிகளை அவர் ஏற்கனவே இராஜினாமாச் செய்துள்ளமை இங்கு நினைவூட்டத்தக்கது.