அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் டி.எம். ஜயரத்னவால் முன்வைக்கப்பட்ட இப்பிரேரணை இரண்டு தினங்கள் விவாதிக்கப்பட்ட பின்னர் இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதற்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐ.தே.கவும் எதிர்த்து வாக்களித்தன. ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் காதர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது