சிகிச்சை பெறுவதற்காக மலேசியாவிலிருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை இரவு சென்னை சென்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.
சிகிச்சைக்காக பிரபாகரனின் தாயார் வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணிக்கு மலேசியாவிலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் சென்றடைந்தார். அவருடன் உதவிக்கு ஒரு பெண்ணும் சென்றுள்ளார். எனினும் அவர்கள் இருவரையும் தமிழகத்துக்குள் அனுமதிக்க மாநில பொலிஸார் மறுத்துவிட்டனர். அவர்கள் இருவரும் உடனடியாக மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே விமான நிலையத்திலி ருந்து பார்வதி அம்மாளை அழைத்துச் செல்வதற்காக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப் பாளர் பழ. நெடுமாறன் ஆகியோர் விமான நிலையம் சென்றனர்.
எனினும் விமான நிலைய நுழைவாயிலிலேயே வைகோவும், பழ. நெடுமாறனும் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பின்னர் கடுமையான வாக்குவாதத்துக்குப் பின் அவர்கள் விமான நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
palli
அவர்கள் தடுத்தது தவறுதான், ஆனால் அங்கு சிலரின் பேச்சை கேட்டு அம்மையார் சென்றது அதைவிட தவறல்லவா?? உங்க பிள்ளை அந்த அளவுக்கு எமக்கும் தமிழ்நாட்டுக்கும் உறவை பலபடுத்து உள்ளார்;
sumi
பிரபாகரனின் தாயின் பக்கவாத நோய் இன்று அரசியலாக்கப்பட்டுள்ளது. இந்த அம்மையார் இலங்கையிலிருந்து வெளியேறியதன் காரணம் என்ன? இந்தியாவில் வைத்தியம் செய்யவா.இல்லையே கனடாவில் வாழ்ந்து வரும் தனது மகளோடு சேருவதற்காகத்தானே. அதற்காகத்தானே இவர் மலேசியா சென்றார். இவரது மகள் ஏன் இவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அல்லது டென்மார்க்கிலிருக்கும் மகன் ஏன் இவரை ஏற்கவில்லை.சிகிச்சைக்காகத்தான் இலங்கையிலிருந்து புறப்பட்டால் ஏன் நேராக இந்தியா சென்றிருக்கலாமே. அல்லது இலங்கையிலேயே செய்திருக்கலாமே. பாவம் இந்த அம்மையாரில் பெத்த பிள்ளைகளுக்கே அக்கறையில்லை. வைத்தியத்திற்காக சென்றவரை வைக்கோவும், நெடுமாறனும் வரவேற்க வந்தால்?? இவர்கள் என்ன வைத்தியர்களா?- சுத்த பைத்தியர்கள். பாவம். முடியாத வயதில் இந்த அம்மா எவ்வளவு வேதனைப்பட்டிருப்பா. இப்படியும் ஒரு அரசியல் நடத்த வெண்டுமா? இதற்கு சிவஜிலிங்கமும் உடந்தையா??
santhanam
இப்படியெல்லாம் புண்னாக்கு தமிழனை பேய்காட்டலாம் என்று ஒரு குழு அலைந்து திரிகிறார்கள் அதை முறியடிக்க இன்னொரு குழு தமிழன் எங்கபோய் மண்டையை மண்ணுக்குள் தான் செருக வேண்டும்.
பார்த்திபன்
பாவம் பார்வதி அம்மா. அவரைத் தமது அரசியல் சதுரங்கத்திற்கு வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் பயன்படுத்திப் பாடாய்ப் படுத்துகின்றார்கள். இதுவிடயமாக சமீபத்தில் சிவாஜிலிங்கமும் இந்தியா சென்ற போதுதான், அங்கிருந்து அவரும் திருப்பியனுப்பப்பட்டார். மதிவதனியின் தாயார் இந்த அரசியற் சதுரங்கத்தினுள் மாட்டுப்படாததால், அவர் தனது பிள்ளைகளிடம் போய்ச் சேர்ந்து விட்டார். இலங்கையிலோ, மலேசியாவிலோ இல்லாத வைத்திய சேவையா தமிழகத்தில் கிடைக்கின்றது. சமீபத்தில் இந்தியத் துடுப்பாட்ட வீரர்கள் சிலருக்கு இலங்கையில் சிகிச்சையளிக்கப்படவில்லையா?? உண்மையில் பார்வதியம்மாவிற்கு அவரது நோய்க்கான சிகிச்சையளிக்க இலங்கையிலேயே போதிய வசதிகளுண்டு. ஆனால் வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் தமது அரசியல்க் காய் நகர்த்தல்களுக்காக அவரைப் பயன் படுத்திச் சாகடித்து, அதை வைத்தே மக்களை உசுப்பேற்றத் திட்டமிடுகின்றார்கள். பார்வதியம்மாவின் கனடா, டென்மார்க் போன்ற நாடுகளிலுள்ள ஏனைய பிள்ளைகளும் இதில் குளிர்காய நினைக்கின்றார்கள் போலும். சமீபத்தில் தனது தந்தையின் சாவில் மர்மமிருப்பதாகக் கதையளந்த டென்மார்க்கில் வாழும் பிரபாகரனின் மூத்த சகோதரர் மனோகரன், ஏன் தனது தாயாரைப் பொறுப்பெடுக்க முடியாது?? எல்லோருக்கும் தற்போதைய தேவை பார்வதியம்மாவைக் காட்டி எப்படிப் பிழைப்பு நடத்தலாமென்பதே தவிர, பார்வதியம்மா பிழைப்பது அல்ல.
thurai
ஈழத்தமிழர் என்று சொன்னாலே உலகமெங்கும் அகதிகளாக அனுமதித்தார்கள். இன்று தொப்புள்கொடி உறவே அனுமதி மறுக்கின்றது. நாடுகடந்த அரசின் தலைவர் உருத்திரகுமாரிற்கு உலகத்தமிழர் விரைவில் அதிகாரம் வழ்ங்குவார்கள். அத்ன் பின்னர் உலகமே புலத்தில் வாழ் தமிழரின் விரல் அசைந்தாலே அசையும். பொறுத்திருந்து பார்ப்போம்.
துரை
மாயா
//உருத்திரகுமாரிற்கு உலகத்தமிழர் விரைவில் அதிகாரம் வழ்ங்குவார்கள்.- துரை//
உருத்தரகுமாரிற்கு அதிகாரம் வழங்கிய பின் , அவர் ஐநாவில் பேசுவார். தமிழீழம் பெற்றுத் தருவார்.
ஆனால் ஒன்று மட்டும் உறுதி, புலத்தில் உள்ள ஏனைய புலிகளோடு , அப்பாவி புலி அனுதாபிகளையும் உருத்திரக் குமார் சிறீலங்கா அரசுக்கு காட்டிக் கொடுப்பார் என்பது மட்டும் உறுதி.
Ajith
palli:
அவர்கள் தடுத்தது தவறுதான், ஆனால் அங்கு சிலரின் பேச்சை கேட்டு அம்மையார் சென்றது அதைவிட தவறல்லவா??
Dear Palli What is wrong with refusal to entry. What is wrong with She is going to India? It is the country that allowed hundreds of armed militants to enter the county without any Visa, trained and armed including current ministers including Douglas, Karuna, Pilliyan and number of Sri Lankan military personal. It gave red carpet welcome Mr. Rajapakse as a honour for killing over 100,000 tamils within 3 years.What you expect from this regime? Don’t put the knot to her son and refusal of entry.
sumi:
இவரது மகள் ஏன் இவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அல்லது டென்மார்க்கிலிருக்கும் மகன் ஏன் இவரை ஏற்கவில்லை.
Hello Sumi, Do you evidence to say that Her daughter and son did not accept their mother. Do you think they are the people responsible for giving Visa to those countries.
பார்த்திபன்:
உண்மையில் பார்வதியம்மாவிற்கு அவரது நோய்க்கான சிகிச்சையளிக்க இலங்கையிலேயே போதிய வசதிகளுண்டு.
Mr Parthipan, Do you know why both her and her husband were kept in a secret place by honourable murderer Rajapakse until her husband’s murder.
Thurai :
நாடுகடந்த அரசின் தலைவர் உருத்திரகுமாரிற்கு உலகத்தமிழர் விரைவில் அதிகாரம் வழ்ங்குவார்கள். அத்ன் பின்னர் உலகமே புலத்தில் வாழ் தமிழரின் விரல் அசைந்தாலே அசையும். பொறுத்திருந்து பார்ப்போம்.
Dear Thurai, What is the connection between Uruthirakumar and Indian Visa.
மாயா
ஆனால் ஒன்று மட்டும் உறுதி, புலத்தில் உள்ள ஏனைய புலிகளோடு, அப்பாவி புலி அனுதாபிகளையும் உருத்திரக் குமார் சிறீலங்கா அரசுக்கு காட்டிக் கொடுப்பார் என்பது மட்டும் உறுதி.
Do you think Uruthirakumar is going to compete with you? You are very experienced on this matter and I am 100% confident that no one compete you.
மாயா
// Do you think Uruthirakumar is going to compete with you? You are very experienced on this matter and I am 100% confident that no one compete you. – Ajith on April 20, 2010 6:58 pm //
கடந்த கால வரலாற்றில் , கிட்டுவின் சாவுக்கு புலிகள் காரணமாயினர். கிட்டு கப்பலில் இருக்கிறார் என சொல்லியும் , கப்பலை இந்திய கடற்படையினர் தகர்த்தனர் என தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கமே சொல்லி அதை உறுதிப்படுத்தினார். தமிழ்செல்வனை கொன்றதும் புலிகள்தான். தமிழ்செல்வனது இறுதிக் கிரிகைகளில் கலந்து கொள்ள சென்ற ஊடகவியலாளர்கள் வன்னிக்குள் வராமல் எறிகணைகளை எறிந்து படைகளோடு மோதல் ஒன்றை உருவாக்கி தடுத்து விட்டார்கள். அவர்கள் வந்திருந்தால் அவரது சாவின் உண்மைகள் வெளியாகியிருக்கும்.
கேபீ வழியாக புலத்தின் முக்கிய தகவல்கள் அரசுக்கு கிடைத்து விட்டன. ஏகப்பட்ட சொத்துக்கள் அரசுக்கு கை மாறப்பட்டு விட்டன. அவர் கடத்தப்படவில்லை. சரணடைந்தார் என்பதே உண்மை. இலங்கையில் இருந்த பல முக்கிய உறுப்பினர்கள் , அரசுக்குள் இருந்து கொண்டே தொடர்ந்தும் பல காரியங்களை செய்கின்றனர். ஏன்? சம்பந்தர் கோஸ்டி கூட இரண்டு முகத்தோடு வேசங்களை போட்டு வந்தனர். இதுபோல முக்கிய பல உறுப்பினர்களே , ஏனையவர்களை காட்டிக் கொடுத்து வருகின்றனர். இன்று இலங்கை அரசில் உளவுத்துறையில் அதிகம் இருப்போர் புலிகளின் முக்கிய புள்ளிகளேயாகும்.
இறுதி யுத்தத்தில் சரணடைந்த 80 சதவீதமான குழந்தை போராளிகள் , இன்று சிறீலங்கா அரசோடு இணைந்து வன்னியை சல்லடை போட்டு மறைத்து வைத்திருக்கும் ஆயுதங்கள் மற்றும் ஆவணங்களை தேடி வருகின்றனர். ஆட்களையும் காட்டி கைது செய்து வருகின்றனர். முன்னர் ஏனைய இயக்கங்கள் செய்தவற்றை புலிகளே முன் நின்று செய்கின்றனர். வெளிநாடுகளில் உள்ள புலிகள் மற்றும் ஆதரவாளர்களது தகவல்கள் புலிகளது ஆவணங்களில் இருந்துதான் அரசுக்கு கிடைத்துள்ளது. அதனடிப்படையில் விமான நிலைய கைதுகளும் சில வேளைகளில் நடந்தன, நடக்கின்றன. இதுபோல தொடர்ந்து கொண்டே போகலாம்……
அன்று புலிகளுக்கு பயந்த மக்கள் பணம் கொடுத்துனர். இன்று அந்த அச்சம் இல்லை. எனவே இனியாவது அப்பாவிகள் , இவர்கள் போன்றோரது பசப்பு வார்த்தைகளில் ஏமாந்து இன்னல் பட வேண்டாம். புலிகளை நம்பிய மக்கள் , புலிகளாலும் , படையினராலும் உயிரிழந்தனர். உயிரோடு புலத்தில் இருப்போருக்கும் அதே நிலை இனி உண்டாக வேண்டியதில்லை. இவை நிஜங்கள்.
இதற்கு மேல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இவற்றை செய்ய நாங்கள் தேவையில்லை. மீதியாக இருக்கும் புலத்து புலிகளே போதும்.
NANTHA
மாயா:
உருத்திரகுமாரன் காட்டிக் கொடுப்பாரோ தெரியாது. ஆனால் உருத்திரகுமாரனைப் பிடித்துதரும்படி கோத்தபாய கேட்டுப் பல நாட்களாகிவிட்டது. அதனால்தானோ என்னவோ அந்த ஆள் கனடா பக்கம் தலை காட்டுவதில்லை. டெலிகோன்பரன்சின்க்தான் நடத்துவார். கடல் கடந்த சிலரும் பழைய ஜெயசங்கர் படங்களில் “பாஸ்” ஸ்பீக்கரில் பேச “சரி பாஸ்” என்று சண்டித்தனம் செய்வதுபோல அவருக்கு தாளம் போடுகிறார்கள்.
நாடு கடந்த கோஷ்டிகள் இப்போது பணம் சுருட்ட காரணம் ஒன்றை கண்டு பிடித்துள்ளனர். இந்த கும்பல் இலங்கையில் “பிணம்” விழுந்தால்த்தான் தங்கள் கைகளில் “பணம்” புரளும் என்று நம்புகிறார்கள்.
palli
அஜித் பல்லி எப்போதும் என்னிடம் கேக்கும் கேள்விகளுக்கு வரிக்கு வரி பதில் சொல்லுவது வளக்கம், ஆனால் உங்கள் ஆங்கிலம் எனக்கு சரியாக தெரியாது, ஒரு குத்துமதிப்பாய் படித்து விட்டு பதில் தருகிறேன், தவறாய் இருந்தால் கேள்வியை தமிழில் தரவும் ,
பார்வதி அம்மாள் இந்தியாவுக்கு போவதில் என்ன பிரசனை இது உங்கள் ஆதங்கம்: எந்த பிரச்சனையும் கிடையாது; அவர் பயணம் அரசியலாக்க படாமல் இருந்தால், ஆனால் அவரது பயணம் வைகோ நெடுமாறனுக்கு ஒரு அரசியலாக தொடர்ந்ததால் அவர் வரவில் தமிழகம் கவனம் எடுத்திருக்கலாம்; அதையும் விட எதற்க்காக மலேசியாவில் இருந்து தமிழகம் போனார்? கொழும்பில் இருந்து போயிருக்கலாமே? ஆக பார்வதியம்ம்மாள் தமிழக பயணத்தை விரும்பவில்லை; ஆனால் சிலரது வற்புறுத்தலே அவரது தமிழக பயணத்துக்கு காரனம்; இதை ஒரு பிரச்சனையாக தமிழக மக்கள் எடுக்க மாட்டார்கள் என்பது வை கோவுக்கு தெரியாதது வருத்தம்தான்,
மருத்துவத்தில் மகனை இளுக்க கூடாது என்பதும் உங்கள் கவலை, அதைதான் நானும் சொல்லுகிறேன் பார்வதி அம்மாவை மருத்துவத்துக்கு கூட்டி செல்ல இவர்கள் யார்? யாராவது ஒரு உறவு கூட்டி சென்றிருக்கபடாதா?? அஜித் வை கோவின் வீட்டில் ஒரு திருமண விழாவில் வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாளும் கலந்து கொண்டனர்; அதில் அகில இந்திய காங்கிறஸ் தலைவர்கள் பலர் வந்தனர்; அவர்கள் வரும்போது இந்த வயதானவர்கள் இருவரும் பின்பக்க கதவால் வெளியேற்ற பட்டனர், (இத்தனைக்கும் பிரபாகரன் உயிருடந்தான் இருந்தார்) என்ன காரணத்துக்காக அன்று வைகோ தனது வீட்டிலேயே மகனால் அவர்களை அவமதித்தாரோ; அதே காரணத்தை இன்று அதிகாரிகள் செய்திருக்கலாமோ என பல்லி நினைப்பது தவறா??
இலங்கையில் இருந்த அனைத்து ஜனாதிபதிகளும் இந்தியாவில் மருத்துவம் செய்துள்ளனர், இது பல்லி அறிந்தத்துதான், ஆனால் அவர்களை வைத்து இந்திய அரசியல் யாரும் பேசவில்லை என்பது புரியவில்லையா?? பலர் போனார்கள் . இல்லையென நானும் சொல்லவில்லை ஆனால் போனவர்கள் ஊரை கூட்டி செல்லவில்லை, போனார்கள் தமது வேலையை முடித்தார்கள் திரும்பினார்கள். அதை விட்டு வை கோ அங்கே முழங்க இங்கே பினாமிகள் கண்டபடி ஏச பார்வதி அம்மாள் பாதிக்கபட்டார், தமிழக எந்த பொருட்களும் ஈழதமிழர் பாவிக்க கூடாது சினிமா பாடல் கேக்க கூடாது என ஒரு சட்டம் புலிகள் போட்டனரே, அதுக்கும் போராட்டத்துக்கும் ஏதாவது சம்பந்தம் அல்லது தேவை இருந்ததா?? இப்படி நிறைய சமாசாரம் இருக்கு அஜித்; ஆனாலும் இந்த வயதான காலத்தில் அந்த அம்மையாரை தமிழகம் திருப்பி அனுப்பியது எனக்கும் கவலைதான் , இவரை விட வயதானவர்கள் கால் கை இல்லாமல் முகாம்க்களில் அவதிப்படுவதை பார்க்கும்போது இவரது பயண விடயம் எனக்கு ஒரு தேவையற்ற செயலாகவே படுகிறது;
மாயா
பார்வதியம்மாளுக்கு மருத்துவம் செய்ய வேண்டுமானால் வைத்தியாசாலைக்கு கொண்டு போனால் போதும், அதுவே அவருக்கு செய்யும் உதவி. அதை விடுத்து அவரை வைத்து அரசியல் விளையாட்டு ஆட நினைப்பது வைகோ , நெடுமாறன் போன்றவர்களது சுத்துமாத்து அரசியல் ஜாலம். பல்லி சொல்வது போல அவருக்கு , இந்தியா போக வேண்டிய தேவையிருந்திருந்தால் இலங்கையிலிருந்து , நேரடியாக இந்தியா போயிருக்கலாம். அதை அவர் செய்யவில்லை. இலங்கை அரசும் அவரைத் தடுக்கவில்லை. வெளியே வந்து விட்டார். எங்காவது நிம்மதியாக வாழ்ந்தால் அதுவே போதும். இந்தியா என்ன இவர்களது தாயகமா என்ன? இந்தியாவுக்கு எதிராக கோஸம் போட்டுக் கொண்டு , பழி சொல்லிக் கொண்டு , இந்தியாவின் காலடியில் மீண்டும் ஏன் போய் விழ வேண்டும். மகன் பிரபாகரனது சாவுக்கு காரணமான இந்தியாவுக்கு தாய் போவதற்கு வேண்டுதலா என்ன?
Ajith
Palli,
Apologies for writing in English. I am very fluent in Tamil but I am not used to the tamil fonts in the computer. I accept that this issue should not be politicised. Unfortunately, in politics it is unavoidable. For example, most of those commented (almost all) in this issue are using every article to blame LTTE for every thing because most of you all have political alliance with Sinhala racist politics.
Sri Lanka is a play ground for Indian politicians to play their games because they can’t play games with other neighbours. The game is not over yet. There are enough evidence to say that Indian politicians used Sri Lankan issue for their political purpose.
How long you all can do your mudslinging attack on LTTE and all tamil politicians who stand for freedom from Sinhala oppression. Can you all tell me a politician, or militant group that can be trusted by tamil people other than LTTE.
accu
அஜித், உங்களுக்கு அறிவு தெரிந்த காலத்தில் புலி மற்ற இயக்கங்களை எல்லாம் அழித்துவிட்டு தான் மட்டும் தனியாய் தமிழ் மக்களை ஆயுதமுனையில் அடக்கிவைத்திருந்த காலமாய் இருக்கவேண்டும். இங்கு கனடாவில் உங்களைப்போல் பலர் இருக்கிறார்கள். இது உங்களின் தவறல்ல புலிகள் இவ்வளவு காலமும் நிலைத்து நின்றதன் சூட்சுமங்களில் முக்கியமான காரணமான சகல ஊடகங்களையும் தமது துதிபாடிகளாக்கியதும் விமர்சித்தவர்களை போட்டுத்தள்ளியதுமே உங்கள் போன்றவர்களுக்கு வேறு எதுவும் அறியமுடியாது மூளைச்சலவை செய்ததுபோல் ஆக்கப்பட்டீர்கள். இன்று தம்மைக் காப்பாற்றும் முயற்ச்சியில் அவர்களை நம்பியிருந்த மக்களையே பகடைகாயாக்கி அழித்து தாமும் அழிந்தபின்னும் இன்னும் எதுவுமே விளங்காமல் பலர் ஒதுங்க சிலர் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். // blame LTTE for every thing because most of you all have political alliance with Sinhala racist politics.// இது நீங்கள் எழுதியது. புலிகள் எப்படி தம்மை விமர்சித்தவர்களை எல்லாம் சிங்கள அரசின் கைக்கூலி என்றனரோ அதே போல்தான் நீங்களும் எந்த வேறுபாடும் இல்லை.
இங்கு பின்னூட்டம் எழுதுபவர்களின் கருத்துக்கள் புரியவில்லை என்றால் ஒன்றில் நீங்கள் விளக்கம் குறைந்தவராய் இருக்கவேண்டும் அல்லது வீம்புக்கு எழுதுபவராய் இருக்கவேண்டும்.
Ajith
உங்களுக்கு அறிவு தெரிந்த காலத்தில் புலி மற்ற இயக்கங்களை எல்லாம் அழித்துவிட்டு தான் மட்டும் தனியாய் தமிழ் மக்களை ஆயுதமுனையில் அடக்கிவைத்திருந்த காலமாய் இருக்கவேண்டும்.
What a joke. If all the tamils have been kept under force by LTTE, why still Douglas or any other armed groups that work for Sinhala military cannot get the support of the tamils. Why 99% of the tamils still behind LTTE and not behind you.I know better about all the militant groups and their activities since their inception. Every militant groups had their stories. However, most of the militant groups later accepted LTTE is the only militant group that stood for the rights of the people. I know how some of the militant groups behaved like animals against tamil people during IPKF. It is the Sri Lanka government and Douglas group that killed number of Media personal, not LTTE.The whole world knows that Tamils were killed by Sinhala racist government and militants working for government. Even after the end of war why there are abductions, murders, robberies, ransom in Jaffna. Who is behind this? For you all LTTE was easy target to put the blame.
Assume that LTTE was responsible for all the problems in Sri Lanka for the past 60 years. You and Rajapakse say that LTTE is fully wiped out in Sri Lanka and all have freedom. Then why there are abductions and murders? Why media is threatened? Why still 100,000 inside camps?
What is next? What you all are going to achieve by blaming LTTE which is not present in Sri Lanka? Do you have an alternative to lead tamil people? Do you all have plans to go back to Sri Lanka to lead tamil people? What is the future of tamils? Who should rule tamils: Tamils or Sinhala? Do tamils have security from Sinhala racists? Assume that 99% of tamils cannot understand your high tech language, Can you tell in a language that could be understand by 99% of the tamils who are still believe LTTE is right.
accu
// What a joke. If all the tamils have been kept under force by LTTE, why still Douglas or any other armed groups that work for Sinhala military cannot get the support of the tamils. Why 99% of the tamils still behind LTTE and not behind you.// அஜித் இதுதான் மிகப் பெரிய joke. நீங்கள் உங்களது பாணியிலேயே எழுதுகிறீர். எனக்குப் பின்னால் ஏன் மக்கள் நிற்கவேண்டும்? நான் டக்ளஸ்இன் ஆள் என எப்படி முடிவெடுத்தீர்கள்? உங்களின் பிரச்சனையே இதுதான். புலியின் தவறை சொன்னால் உடனே மற்ற இயக்கங்கள் தவறு செய்யவில்லையா என்கிறீர்கள். சொன்னவனை உடனே எதோ ஒரு இயக்கத்தின் முத்திரையை குத்தி அந்த இயக்கம் செய்த தவறை எல்லாம் அவன்மேல் போட்டு கேள்வி கேட்கிறீர்கள். எப்படி உங்களுக்கு புரியவைக்கமுடியும்? இங்கே உங்களுக்கு ஒரு சம்பவம் சொல்கிறேன் ஏன் வேலைத்தளத்தில் புலி ஆனையறவை வென்றவுடன் ஒரு புலி ஆதரவாளர் என்னிடம் வந்து [நான் புலியை விமர்சிப்பதால்] இன்னும் பத்து நாளில் யாழ்ப்பாணம் புலிகளின் கைகளில் அதற்குபின் உமது முகத்தை எங்கே வைத்திருக்கப்போகிறீர் என்றார் நான் கூறினேன் பத்துநாள் அல்ல எப்ப புலி யாழ்பாணத்தை பிடிக்கிறதோ அன்றிலிருந்து எந்தவித அரசியலும் பேசமாட்டேன் என்று. பின் பலநாட்களின் பின் அவர் சொன்னார் அவங்கள் பிடிதிருப்பான்கள் ஆனால் இந்தியா தடுத்துவிட்டதென்று. அது உண்மையாய் இருந்தால்கூட அதை அறியாவிட்டால் அது விவேகமற்ற அரசியல் அல்லவா? அதேபோல்தான் இன்னொரு புலத்துப்புலி சொன்னது நீங்களெல்லாம் காசு கொடுக்காமல் தப்பத்தான் புலிக்கெதிராக கதைக்கிறீர்கள் என்று நான் கூறினேன் புலிகள் தமிழீழம் பெறவேண்டாம் ஏதாவது ஒரு குறைந்த தீர்வை எம்மக்களுக்கு எடுத்துத்தந்தாலே புலிகள் சமாதான காலத்தில் A9 ஆல் சென்ற வெளிநாட்டில் இருந்து வந்தவர்களிடம் தமக்கு வெளிநாட்டில் காசு கொடுக்காதவர்களாயின் அவர்களிடம் அறவிட்ட அவர்கள் வெளியில் இருந்த ஒவ்வொரு நாளுக்கும் ஒரு டொலர் படி நான் கணக்குப்பார்த்து அந்தத் தொகையை இரட்டிப்பாக்கி தருவேனென்று. பலருக்குமுன் தான் இதை கூறினேன். செய்தேயிருப்பேன். ஆனால் எனக்கு முயல் பிடிக்கிற நாயை மூஞ்சேல தெரியும்.
இன்று தமிழருக்கு வழிகாட்ட யாரிருக்கிறார்கள் எனக் கேட்டீர்கள். தெரியவில்லை. இருந்த பலரை புலிகள் அழித்துவிட்டனர். ஆனாலும் யாராவது நிச்சயம் வருவார்கள்.
thurai
அன்பின் அஜீத் உங்கள் கேள்வி உருத்திரக்குமாரிற்கும், இந்தியன் விசாவிற்கும் என்ன சம்பந்தமென்பதே.
புலிகளின் பின்னனியில்தான் நாடுகடந்த அரசாங்கமும், வட்டுக்கோட்டைத்தீர்மனமும் புலம்பெயர்நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்றன.
ஈழத்தமிழரின் ஒவ்வொரு நகர்வும் பயங்கரவாதத்தின் கண்ணோட்டத்துடனேயே இந்தியாவாலும் இலங்கை அரசாலும் பார்க்கப்படுகின்றது. ஆசியாவிலேயே பல்மிக்க அரசாங்கமான் இந்தியாவிற்கு சவால் விடுவத்ற்குத் தயாராகும் உருத்திரக்குமாரும் அவரது நாடுகடந்த அரசும் முதலில் தலைவரின் தாயாரிற்கு இந்தியாவிற்கு செல்ல அனுமதி பெற முயற்சிக்கலாமல்லவா?
எல்லாம் இவர்களின் வாயால்தான் என்பதை இன்னமும் நீங்கள் புரியவில்லையா? இவர்களா ஈழ்த்தமிழர்களிற்கு விமோசனம் பெற்ருத்தரப் போகின்றார்கள்?
இவர்களின் நடவடிக்கை ஒழித்துத் தப்பியுள்ள புலிகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து சிக்கலில் மாட்டப் போகின்றார்கள் என்பதும் புரியவில்லயா? ஒட்டு மொத்தமாகக் கூறப்போனால் நாடுகடந்த அரசு பசுத்தோல் போர்த்த புலிகளேயன்றி வேறொருவருமில்லை.
துரை
thurai
அஜீத் இன் கண்ணிற்கு விடுதலைப் புலிகள் என்பதே தெரிகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் என்றால் செய்யும் குற்ரங்களையெல்லாம் பொறுத்திருப்போம் பின்பு விடுதலையின் பின் பார்ப்போமென்றுதான் சிலர் எண்ணியிருந்தனர்.
போரில் அழிந்தது யார், போரால் வளர்ந்தவ்ர்கள் யார் என்பதை முதலில் சிந்திப்பதே நல்லது. புலத்தில் புலியை வளர்த்தோரிற்கும் தமிழரின் விடுதலைக்கும் எதுவித சம்பந்தமும் இருக்கவில்லை.
புலதில் புலிகள் தேடியது பண்த்தை, இலங்கையில் அழித்த்து தமிழரின் உயிர்களையும் உடமைகளையும். இதறகுப் பெயரா தமிழீழ விடுதலை? இப்படியான் அமைப்பின் தலைவர் தமிழரிகளிற்குத் தலைவரா?
தமிழர்களிற்கு உருமைவேண்டும்,தமிழர்களிற்குத் தமிழரை ஆழ உருமை வேண்டும். அதன் பின் ஒவ்வொரு தமிழரும் உருமையோடு வாழ்வார்களா வாழவிடுவார்களா?
புலம்பெயர்நாடுகளில் கூட தமிழரில் பிறப்பால் உயர்ந்தவ்ர் தாழ்ந்தவரென்றும், சேர்ந்து பழகக்கூடாதென்றும் நடைமுறை உள்ள போது தமிழினம் என்பது யார்? யாரிற்கு விடுதலை வேண்டும்? தமிழர்கள் விடுதலையென்னும் சொல்லை உச்சரிக்க கூடத் தகுதியுள்ளவர்களா?
தமிழ் மொழியின் பெயரால் பிழைப்புநடத்தும் கூட்டத்தினரே ஈழவிடுதலை விரும்பிகள்.தமிழரின் நலன்களில் அக்கறை கொண்டவர்களல்ல.
துரை
sumi
Ajith, there is an International Law for Family Reunification, under
Article 9, Paragraph 11.Please try to find and read.
thurai
யாழ்பாணமும், கொழும்புமே கண்டிராத பாட்டிகளெல்லாம் உலகமுழுவதும் போய்வரும்போது பார்வதியம்மாவிற்கு ஏன் இந்தக் கெதி என்று இன்னமும் அஜீத்திற்குப் புரியவில்லயா? பிரபாகரனனை பெற்ர குற்ரமே தவிர இந்தியாவின் குற்ரமில்லை.
துரை
BC
பல்லி ஆங்கிலத்தை பற்றி இப்படி சொல்லிவிட்டதினால் அவருக்கு நாடு கடந்த தமிழீழத்திற்க்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்படும் அபாயம் உள்ளது. இலங்கைக்கும் வெள்ளைகளின் நாட்டிற்கும் தான் போய் வரலாம்.
sumi
BC-உண்மையாகவே புரியாமலேயே இருக்கின்றது–நாடு கடந்த தமிழீழம் எங்கே அமையப்போகின்றது? ஊரிலுள்ள உறவுகளிடம் கேட்டால் அங்குமில்லையாம் .அப்படியென்றால் எங்கேயென்று யாராவது தெரிந்தவர்கள் கூறுங்களேன்.
PALLI
//பல்லி ஆங்கிலத்தை பற்றி இப்படி சொல்லிவிட்டதினால் //
இது எனக்கு புரியவில்லை பிசி, என்னை ஒன்றும் சிக்கலில் மாட்டிவிட மாட்டீர்களே;
palli
அஜித் உங்கள் தமிழ் அறியாமை தவறல்ல; ஆனால் அதை வைத்து உங்கள் வயது அனுபவம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது, இருப்பினும் ஈழம் பற்றி உங்கள் அக்கறைக்கு பல்லியின் வாழ்த்துக்கள்.
அஜித் நீங்கள் நினைப்பது போல் ஈழ போராட்டம் ஒன்றும் புலிகளால் தொடங்கபடவில்லை, இடையில் ரவுடிகளாய் போராட்டத்தில் வந்தவர்கள்தான் புலிகள்? ஆக இந்த புலி நினைப்பை விட்டு எமது மக்கள் நிலையை தேடுங்கள்.
எம்மை கவனிக்க புலி தவிர்ந்த யாரையாவது இனம் காட்டுங்கள்? இது அஜித், அஜித் உங்கள் வயது கோளாறு இதுதான், உன்மை என்ன தெரியுமா.? புலி தவிர்ந்த யாவரும் தகுதியானவர்கள் என்பதுதான் உன்மை; இதில் பல்லி அஜித் அடங்கும், கண்டிப்பாக புலி வராது இருந்தால் என்னால் எனது கிராமத்தை முன்னேற்றியிருக்க முடியும்; இதில் எனக்கு சந்தேகமே இல்லை; எனது கிராமத்தில் 80 வீதமானவர்களாவது பல்கலைகழகம் வரை படிக்க வேண்டும் என்பது எமது அன்றய ஆசை, ஆனால் அதை சமாதி கட்டிய பொறுப்பு புலிக்கு மட்டுமே சொந்தம்;(உதாரனத்துக்கு எனது கிராமத்தை சொன்னேன், பல கிராமங்கள் புலி இல்லாவிட்டால் நிலமை வேறு,
அஜித் பாலகுமார்(ஈரோஸ்) மிக நல்ல திறமைசாலிதான்; ஆனால் அவர் நிலமை புலியின் எடுபிடி , இவர் எப்படி புலிக்கு போனார் தெரியுமா? புலியின் தளபதிகளில் ஒருவரான சங்கர் என்பவரின் தங்கையை திருமணம் முடித்ததால் தானே தவிர வேறு ஏதும் காரணம் உள்ளதா?? புலியிடம் என்ன நிர்வாகம் இருக்கிறது?? அப்படியாயின் தலைவர் தொலைந்த பின் அடுத்த தலமை யார்?? ஈழத்தில் கேட்ட விடுதலை போய் புலத்தில் கேக்கும் ஈழம் எப்படி வந்தத்து?? சிந்தியுங்கள் புலியை திட்டுவது எமது வேலையல்ல; ஆனால் மக்களுக்காய் எழுதுவது எமது கடமையல்லவா??
இந்தியா கேம் ஆடுகிறது? தெரியுமே; ஆனால் அதை அழகு படுத்தி பார்த்து பின்பு கழுத்து வெட்டியத்தும் புலிதானே? பிறேமதாஸாவுடன் இனைந்து இந்தியாவை எதிர்த்த புலிகள் இப்போ எப்படி அவர்கள் தமிழருக்கு உதவுவார்கள் என எதிர்பார்க்க முடியும்; அதுவும் புலிதான் தமிழன்; தமிழன் தான் புலி என்னும் வேதவாக்குடன் நீங்கள் தூக்கம் இன்றி கவலைபடும் போது!!
அஜித் புலிகளிடம் யதார்த்தம் இல்லை: பல்லி போன்றோரிடம் அராசகம் இல்லை: இதை புரிந்து கொள்ள அஜித்திடம் அனுபவமும் இல்லை;
Ajith
Palli,
You have the right to have the opinion as I have about Tigers. You may thing they are “Rowdies” who came in the middle and destoryed the real struggle by some one else. I believe the Tigers honestly took the Eelam struggle. It is the people who make the decision, not you or me.
ஆக இந்த புலி நினைப்பை விட்டு எமது மக்கள் நிலையை தேடுங்கள்.எம்மை கவனிக்க புலி தவிர்ந்த யாரையாவது இனம் காட்டுங்கள்? இது அஜித், அஜித் உங்கள் வயது கோளாறு
It is not me writing about Tigers. It is you and some commentators who talk about and relate everything to Tiger. I never read or comment from you all writing other than Tigers.It is you people talk against LTTE. So, it is your responsiblity to show alternative to LTTE. I don’t want to put to your age as you put it to my guessed age. You should understand that whether you like it or not Tigers are still the people’s choice. You cannot get rid of them from people’s mind. You cannot find alternatives from those who did abductions and murders for Sinhala regimes.
அஜித் புலிகளிடம் யதார்த்தம் இல்லை: பல்லி போன்றோரிடம் அராசகம் இல்லை: இதை புரிந்து கொள்ள அஜித்திடம் அனுபவமும் இல்லை;
Palli, Tigers are not perfect but they saccificed their lives for their cuase and people accepted them as their choice.
sarujan
/நாடுகடந்த தமிழீழம் எங்கே அமையப்போகிறது?//
இது என்ன கேள்வி. நாடுகடந்துதான் தமிழீழம்.
பிரச்சினையை வலு சிம்பிளாகப் பாருங்கள். இலங்கைக்க வெளியே 10லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கான ஒரு வர்த்தக நிர்வாக அலகு. ஒரே ஒரு இடறல் இதை இலங்கையில் வாழ்கின்ற தமிழ்மக்கள் பெயரால் செய்வது. இந்த புலம் பெயர்ந்ததுகளிடம் நல்ல வாய்ப்பான சந்தை இருக்கிறது. புத்திசாலிகள் அதை பயன்படுத்துகிறார்கள். இன்னும் இந்த நிர்வாகம் தான் எதிர்வரும்காலங்களில் அந்தந்த நாட்டு தேர்தலிலும் அரசியலகட்சிகளுடன் ‘இணக்கப்பாட்டுக்கு’ வரும் வல்மைபொருந்தியதாகவும் இருக்கும். ம்..சுவாமி நித்தியப்பார்த்து பொறாமைப்படத்தான் முடியும். மச்சக்காரங்கள்..
BC
பார்வதி அம்மாள் இலங்கை திரும்பிவிட்டார். இவரை வைத்து லாபம் அடையலாம் என்று திட்டம் போட்டோருக்கு ஏமாற்றம் தான்.
KARUNA
//பாவம் பார்வதி அம்மா. அவரைத் தமது அரசியல் சதுரங்கத்திற்கு வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் பயன்படுத்திப் பாடாய்ப் படுத்துகின்றார்கள்.//
அவர்களை விட கேவலமான அரசியலை இங்கே பின்னூட்டம் விடுபவர்கள் செய்கின்றீர்கள். பிரபாகரனை பெற்ற குற்றத்திற்காக நாம் ஒரு மூதாட்டியை ந்டாத்தும் பக்குவமற்றுப் போனோமா?
மார்க்சிசம், லெனினிசம், தலித்தியம் எல்லாமே ‘மனிதநேயம்’ என்ற அடிப்படையான விடயத்தை கற்பதனாலும், பயிற்சி கொள்வதனாலுமே முடியும். அதைவிட்டிட்டு…..