கலைக் கப்பட்டுள்ள 6 ஆவது பாராளுமன்றம் சில விசேட விடயங்களை நிறைவேற்றும் நோக்கில் நேற்று மீண்டும் கூடிய போது திடீரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு சமுகமளித்தார்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி அலுவலகத்துக்கு சென்ற ஜனாதிபதி. அங்கிருந்து கொண்டு அவசர காலத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிக்கும் பிரேரணையை நிறைவேற்றுவதற்கான விவாதத்தை கேட்டுக் கொண்டிருந்தார்.
அதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான போசனசாலைக்கு சென்ற ஜனாதிபதி ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் சுமுகமாக பேசிக் கொண்டே பகல் உணவை உண்டார். பாராளுமன்றத்தின் உத்தியோகத்தர்களுடன் பேசவும் அவர் தவறவில்லை.