பொன்சேகாமீதான விசாரணை காலவரையறையின்றி ஒத்திவைப்பு!

sarath_fonseka-02.jpgஇராணுவச் சட்டங்களை மீறி நடந்தாரென்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான விசாரணை இன்று காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. கடற்படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள இராணுவ நீதிமன்றம் நேற்று முதன்முறையாகக் கூடியபோது அதன் விசாரணைகள் எதிர்வரும் எப்பரல் 6ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.

அதே நீதிபதிகள் தலைமையில் இன்று இரண்டாவது நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பமானபோது, ஜெனரல் பொன்சேகா சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் நீதிபதிகள் தொடர்பாக தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இதனையடுத்து நீதிபதிகள் விசாரணைகளை காலவரையறையின்றி ஒத்தி வைத்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Santhi
    Santhi

    இராணுவச் சட்டத்தை மீறினார், கீழ் வேலை செய்தோரைச் சித்திரவதை செய்தார். ஆனால், சண்டையின் போது தமிழரை மட்டும் கொல்லவே இல்லை. என்னவோ கொடுத்த எல்லாவற்றையும் எல்லோரும் திருப்பி வேண்டத்தானே வேண்டும். ஒவ்வொருவரும் வேண்டியே தீருவர்.

    Reply